பக்கங்கள்

புதன், 4 ஏப்ரல், 2018

இராமன் ‘பிராமணர்களை’த்தான் தொழுதான் பிரம்மா- சிவன்- விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கும் மேலானவன் பிராமணனாம்!

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆய்வுரை



சென்னை, மார்ச் 30-  அவதாரப் புருஷன் என்று சொல்லப் பட்ட இராமன் தொழுதது பிராமணர்களைத்தான். காரணம், பிரம்மா, சிவன், விஷ்ணு என்று கூறப்படும் மும்மூர்த்திகளுக்கும் மேலானவன் பிராமணனாம் - இதனை எடுத்துக்காட்டுடன் விளக்கினார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

23.3.2018 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம்’’ என்ற தலைப்பில் நடை பெற்ற  ஆய்வு சொற்பொழிவில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

‘‘புரோ லிம் புரோ லோ’’

புத்தகத்தின் தலைப்பு ‘‘புரோ லிம் புரோ லோ’’ என்பதே. புத்தகத்தின் முன்னுரையில்  இந்திய இராமாயணத்தைத் தழுவியது என்று குறிப்பிடப்படவில்லை. கம்போடிய இலக் கியத்தை அறிய உதவும் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால், முன்காலத்தில், துசாராட் என்ற மன்னன் அயுக்கா கிங்டம் ஆண்டதாகச் சொல்லப்படுகிறது. இராம யாணக் கதை நாயகன் ராமன் இங்கு இளவரசன். லிம், புரோ லிம் என்று குறிப்பிடப்படுகிறான். இராவணன் புரோ லோ என்று சொல்லப்படுகிறான். இராவணன் கதையைத் தழுவியபோதும், கதையில் மாற்றங்கள் உள்ளன.
அனுமன் பல பெண்களைத் திருமணம் செய்கிறான்

உதாரணமாக பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்ததாகச் சொல்லப்பட்ட அனுமன் பல பெண்களைத் திருமணம் செய்கிறான் இக்கதையில்.

ஆக, இவ்வாறு வடமொழி இராமாயணத்தைத் தழுவிய இக்கதை இருக்கிறது. கம்போடிய கெமுரு மொழியில் இது எழுதப்பட்டு இருக்கிறது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் பேராசிரியராக இருந்த மணவாளன் அவர்கள், ‘‘இராம காதை யும் இராமாயணங்களும்’’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். அது ஒரு ஆய்வுப் புத்தகம்.

யாரையும் புண்படுத்துகிறார் என்று சொல்ல முடியாது; அது ஒரு ஆய்வு உரை. அந்த ஆய்வு உரையில் ஒரு பெரிய பட்டியலையே கொடுத்திருக்கிறார்.

பட்டியல் தனியே காண்க.

அவர் ஆய்வுப்படி கொடுத்திருக்கப் பட்டியல் 48 அய் குறிப்பிட்டு இருக்கிறார். அதற்குமேல் ஒரு 8 அய் சேர்த்து 56.

‘‘The Collected Essays’’


அதேநேரத்தில், இதே என் கைகளில் இருப்பது ‘‘ஜிலீமீ சிஷீறீறீமீநீtமீபீ ணிssணீஹ்s’’ ஷீயீ   கி.ரி.ஸிணீனீணீஸீuழீணீஸீ  என்பவர் எழுதியது.


வட அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாவட்டத்திலுள்ள சிகாகோ பல்கலைக் கழகத்தில், கன்னட பகுதியில் படித்து விட்டுச் சென்ற தமிழாய்ந்த அறிஞர் அவர். அவர் பிறப்பில் கன்னட பார்ப்பனர்.

அங்கே தமிழ்த் துறையில்தான், ஜார்ஜ் ஹார்ட் போன்ற வர்களுடைய வழிகாட்டுதலில், அவருக்கு நெருக்கமாக இருந்த உணர்வாளர், பெரிய ஆய்வாளர். அண்மையில் அவர் அகால மரணமடைந்து விட்டார். நீண்ட காலம் வாழ்ந்து இருக்கவேண்டிய நண்பர் அவர். அவர் எழுதிய பல ஆய்வுகள் இருக்கிறது.

300 இராமாயணங்கள்

அதில் Three Hundred Ramayanas, Five Examples and Three Thoughts on Translation  என்று சொல்லி, இராமாயணத்தை உலகம் முழுவதும் தேடிப் பார்த்தால், 300 இராமாயணங்கள் இருக்கின்றன என்று அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

தந்தைபெரியார்அவர்கள்,பலஆண்டுகளுக்குமுன்பே, 1928 ஆம் ஆண்டிலேயே இராமாயண ஆராய்ச்சியை ஆரம்பித்துவிட்டார், காங்கிரசில் இருந்தபொழுதே. ஆனால், குடிஅரசு வந்த பிறகு, மிக எளிமையாக ‘‘இராமாயண பாத்திரங்கள்’’ என்ற தலைப்பில், ஒவ்வொருவரின் பாத்திரங் களையும் அழகாக, வால்மீகி இராமாயணத்தில் உள்ளபடி என்று. வடநாட்டிற்கு அய்யா சென்றபொழுது அதைத்தான் True Ramayana  என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எடுத்துச் சென்றோம். அதைத்தான், உத்தரப் பிரதேசத்தில் உள்ளவர் ‘சச்சி இராமாயண’’ என்கிற தலைப் பில் இந்தியில் மொழி பெயர்த்தார்.

புரட்சியை மட்டுமல்ல, மிரட்சியையும் உண்டாக்கியது

அது பெரிய புரட்சியை உருவாக்கியது; புரட்சியை மட்டுமல்ல, மிரட்சியையும் உண்டாக்கியது என்பதுதான் மிக முக்கியம்.

பெரியார் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில், நானும், புலவரும் அந்தப் புத்தகத்தை விற்பனை செய்து கொண்டிருந்தோம்.

அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு அம்மா, அந்த புத்தகத்தை கையிலிருந்து பிடுங்கி, இராமனைப்பற்றி, சீதையைப்பற்றி சொல்கிறீர்களே என்று அந்தப் புத்தகத்தை கிழித்தெறிந்தார்.

அப்போது பிற்காலத்தில், இந்திரா காந்தியை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற ராஜ் நாராயணன் அவர்கள் மேடையில் அமர்ந்திருந்தார். இந்த அம்மையாரின் செய்கையைப் பார்த்த அவர், அங்கிருந்து இறங்கி வந்து, அந்த அம்மையாரைப் பிடித்து இழுத்து வந்து, மேடையில் அமர வைத்து, ‘‘அவர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேள்; ஆத்திரப்படாதே! அவர் சொல்வதால், உன்னுடைய இராமன் ஓடிவிடமாட்டார்’’ என்றார்.

பெரியாருடைய ஆய்வு இருக்கிறதே, மிக எளிமையாக, தெளிவாக சொல்லியிருக்கிறார். எனவேதான், நடந்த கதை யல்லவே, அதைபற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்கலாம்.

ஜாதியைக் காப்பாற்றுகின்ற முயற்சிகள்

அந்தப் பாத்திரம், அந்தப் பாத்திரத்தினுடைய விளைவு - அதனுடைய தாக்கம், அதனுடைய பின்னணி - ஆரிய - திராவிடர் போராட்டம் - ஜாதியைக் காப்பாற்றுகின்ற முயற்சி கள் - பெண்களைக் கொச்சைப்படுத்துகின்ற மனுதர்மத்தி னுடைய தத்துவம் - இவை அத்தனையும் இருப்பதுதான் அதனுடைய அடிப்படை.

அய்யா சொல்கிறார்,

இராமாயணம் நடந்த கதை அல்ல. அதன் காலமே சுத்தப் புரட்டு. இராமாயணம் ‘‘திரேதாயுகத்தில்’’ நடந்தது என்பதாகும்.

திரேதாயுகத்திற்கு உண்டான வருஷம் 12 லட்சத்து 96 ஆயிரம்தான். ஆனால், அந்த யுகத்தில் இராவணன் 50 லட்சம் வருடங்கள் ஆண்டு இருக்கிறான் என்பது இராமா யணக் கதையின்படி உள்ள செய்தியாகும்.

13 இலட்சம் வருடத்திற்கு உள்பட்ட ஒரு யுகத்தில் நடந்த செய்கை. 50 இலட்சம் வருடம் நடந்ததாக இருக்க முடியுமா?

நான்கு யுகமும் சேர்ந்தாலே மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான் ஆகின்றன என்றார் தந்தை பெரியார்.

60 ஆயிரமாவது மனைவியை சந்திப்பதற்கு எத்தனை வருஷம் ஆகும்?

பெரியார் அவர்கள் எல்லாவற்றிற்கும் கணக்குப் போடு வார்; தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்று எழுதி வைத்திருந்தார்கள்; பெரியார்தான் கேட்டார், 60 ஆயிரம் மனைவிகள் என்றால், என்ன அர்த்தம்; 20 ஆயிரம் பேர் இருந்தாலே ஒரு முனிசிபாலிடியாயிற்றே! தசரசன் மூன்று முனிசிபாலிட்டியல்லவா வைத்திருக்கிறான். தசரசன், முதல் மனைவியை சந்தித்துவிட்டு, 60 ஆயிரமாவது மனைவியை சந்திப்பதற்கு எத்தனை வருஷம் ஆகிறது என்று கணக்குப் போட்டுப் பார்த்து சொன்னார் தந்தை பெரியார்.

இது நடைமுறைக்கு ஒத்துவருகின்ற விஷயமா? அவன் தான் புளுகினான் என்றால், உன்னுடைய அறிவு எங்கே போயிற்று? அதைக் கேட்கவேண்டாமா? என்றார்.

இராமாயணம் நடந்த கதை அல்ல என்பதற்கு என்ன உதாரணம் என்றால், ஒருவர் 56 இராமாயணம் என்று சொல்கிறார். கம்பராமாயணம் என்பது கன்னட நாட்டில்.  அதிலும் ராமனுக்குத் தங்கைதான் சீதை.

இதனுடைய அடிப்படை என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், பார்ப்பனர்களை உயர்த்துவதுதான்.

பிறக்காத கடவுள்களுக்கு எப்படி பிறந்த நாள் கொண்டாட முடியும்?

இராமாயணம் நடந்த கதையல்ல என்றாலும், இன்றைக்கும் ஏன் இராமாயணத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள்? இன்றைக்கும் ஏன் ராமநவமி கொண்டாடுகிறார்கள்?
பெரியார்தான் கேட்டார், பிறக்காத கடவுள்களுக்கு எப்படி பிறந்த நாள் கொண்டாட முடியும்? என்று.

கிருஷ்ணன் எப்பொழுது பிறந்தான் - கோகுலாஷ்டமி யிலாம்.

பக்தர்கள் எவ்வளவு முட்டாள்தனமாகவும், முரண்பாடா கவும் இருக்கிறார்கள் என்றால், வீடு திறப்பு விழாவினை இந்தத் தேதியில் வைத்துக் கொள்ளலாமா? என்றால்,
கூடாது, கூடாது, அஷ்டமி, நவமி வருவதால், அது கெட்ட நேரம் என்கிறார்கள்.

ராமன் பிறந்த கதைப்படி, கிருஷ்ணன் பிறந்த கதைப்படி - திராவிடர் கழகத்துக்காரன் அவர்கள் பிறந்த நேரத்தை கெட்ட நேரம் என்று சொன்னால், அது நியாயம்.
பெரியார் பிறந்த நாளையோ, அம்பேத்கர் பிறந்த நாளையோ, காமராசர் பிறந்த நாளையோ நாம் கெட்ட நேரம் என்று சொல்வோமா?

பெரியார்தான் சொன்னார்,

பக்தி வந்தால் புத்தி போய்விடும்;

புத்தி வந்தால் பக்தி போய்விடும்

என்பதற்கு உதாரணம் இதுதான்.

சரி பிறந்தான் என்று சொன்னாலும், பிறகு எப்படி அவ தாரம்? பத்து அவதாரங்களில், ராமன் ஒரு அவதாரம். அவதார் என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு, மேலே இருந்து கீழே இறங்குதல் என்று அர்த்தம்.

ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி வால்மீகி இராமாய ணத்திற்கு முன்பே, பல இராமாயணங்கள் இருந்திருக்கின்றன. செவி வழி செய்திகள்.

அதற்குப் பிறகுதான் வால்மீகி இராமாயணம் வந்தது என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்று.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்கூட ஒருமுறை அழகாக கேட்டார், அவதாரமாக இருந்தால், பிறந்திருக்க முடியாது; அப்படி பிறந்திருந்தால், அது எப்படி அவதாரமாக இருக்க முடியும்? என்று.

சந்திரசேகர பாவலர்

இராமாயண ஆராய்ச்சியில் அத்தனை காண்டங்களையும் தொகுத்திருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள். பெரும் புலவர்களை வைத்து செய்திருக்கிறார். சந்திரசேகர பாவலர் அவர்களை வைத்தும் செய்திருக்கிறார்.

இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், சட்டை அணிய மாட்டார். காது தொங்கிக் கொண்டிருக்கும். அவர் பெரிய புலவர். இவர் சந்திரசேகர பாவலர் என்கிற புனைப் பெயரில் தொடர்ந்து எழுதிக்கொண்டு வந்தார் குடிஅரசு இதழில் எல்லா காண்டங்களையும்பற்றி.

அவர் மறைந்தாலும், அவருடைய நூற்றாண்டு விழா வினை நாவலரை வைத்து நாங்கள் நடத்தினோம். அவர் மகன் முத்துசாமி அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பேராசிரியராக இருந்தார்.

தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு, அன்னை மணியம்மையார் இருந்தபொழுது, ஒருமுறை சந்திரசேகர பாவலர் அவர்கள், எங்களைப் பார்க்க வந்தார். நெற்றியில் விபூதி பட்டை போட்டு, சட்டை அணியாமல், ஒரு துண்டை போட்டுக்கொண்டு, வேட்டி அணிந்துகொண்டு வந்திருந்தார்.

நம்முடைய காவலர் இவரைப் பார்த்துவிட்டு, யாரோ இவர் எதிரி போல இருக்கு என்று நினைத்து, எங்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

அவர் உடனே காவலரிடம், ‘‘யோவ், நான் வந்திருக்கிறேன் என்று சொல்’’ என்று சொல்ல,

வெளியில் என்ன சத்தம் கேட்கிறதே என்று நினைத்து, நான் வெளியில் வந்து பார்த்தேன்.

என்னைப் பார்த்ததும் அவர், ‘‘அய்யா நான் இ.மு.சு. என்றார்.

உடனே நான், இவர் இந்த உருவத்தில்தான் இருப்பார் என்று அய்யா சொல்லியிருக்கிறார். உடனே நான் அவரை ‘‘அய்யா வாருங்கள்’’ என்று உள்ளே அழைத்துச் சென்றேன்.

அவரை அழைத்து, பெருமைப்படுத்தினோம்; அவர் அன்னை மணியம்மையாரையும் சந்தித்துவிட்டுச் சென்றார்.

ஆய்வாளர்கள் எழுதியதைத்தான்....

அப்படிப்பட்ட ஒரு ஆய்வறிஞர் அவர். அவர் எழுதிய பாலகாண்டத்தில், இராமன் பிறப்பு என்று வருகின்றபொழுது,

வங்காளத்தில் இருக்கக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள், அசுவமேத யாகத்தைப்பற்றியும், ஹோதாக்கள் என்பவர்கள் எப்படி பிறந்தார்கள் என்பதைப்பற்றியும், குதிரையை மூன்று துண்டாக வெட்டினார்கள் என்பதைப்பற்றியும், புத்திரகாமஷ் யாகம் என்னவென்றால், பெண்களை வைத்துக்கொண்டு அதனைப் படிக்கவே முடியாது.
அது ஒரு காட்டுமிராண்டி கால சிந்தனை - அன்றைக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை போலிருக்கிறது.

இதைப்பற்றி ஆய்வுகள் செய்தபோது நண்பர்களே, இதைக் கொச்சைப்படுத்தவோ அல்லது நாங்களாக இதனை சொல்லவில்லை. ஆய்வாளர்கள் எழுதியதைத்தான் எடுத்து சுட்டிக்காட்டினோம்.

Ramayana Vimarsa

அதோடு இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

இது மிக நீண்ட காலத்திற்கு முன் எழுதப்பட்ட அமிர்தலிங்கம் அய்யர் என்பவர், இராமாயண ஆய்வாளர்களில் மிக முக்கியமானவர்.

பரமசிவ அய்யர் என்பவர் ஒரு பெரிய ஆய்வாளர்;  அமிர்தலிங்கம் அய்யரின் மைத்துனராவார்.

அந்த அமிர்தலிங்கம் அய்யர் அவர்கள் எழுதிய Ramayana Vimarsa  என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

அந்தப் புத்தகத்தில்,

I dedicate this work  to the memory of my  elder brothers T. Sadasivier and T Paramasivier  Whom I loved and  revered as my Guroos...

டி.சதாசிவ அய்யர் அவர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜாக இருந்தவர். அதற்குப் பிறகு  Hindu Religious Endowment Board  தலைவராக இருந்தவர். 
இந்தப் புத்தகத்தை யார் வெளியிட்டது என்று சொன்னால், தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த திண்டுக்கல் ஏ.பாலசுப்பிரமணியம் அவர்கள்தான். சட்டமன்ற உறுப்பினராகவும் போட்டியிட்டவர் இவர்.

அத்துணை பேரும் கையொப்பமிட்டு...

அமிர்தலிங்கம் அவர்களுடைய படத்தையும் போட்டு வெளியிட்டார்கள். முன்னுரையில், அத்துணை பேரும் கையொப்பமிட்டு இருக்கிறார்கள்.

Our special thanks are due to the Vijaya Printers Madurai for having helped us I'm placing this book before the public

A. Kalahasti

A. Sundaram

A. Balsubramaniam

A. Sivaraman

A. Natarajan

A. Srinivasan

இதில் ஒருவர்தான் திண்டுக்கல் ஏ.பாலசுப்பிரமணியம். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு செயலாளராக இருந்தவர். இவருடைய தந்தையார் எழுதிய Ramayana Vimarsa   என்கிற புத்தகத்தில், ராமன் எப்படி பிறந்தான்? என்பதையும், எப்படிப்பட்ட யாகம் நடந்தது? என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

It is the sarga where a full description  of the Aswamedha sacrifice is given. It shows the thorough knowledge Valmeeki had of the sacrificial rituals. Even in this a second sloka has been interpolated to bring in Rsyasrnga. The ceremonials seem to go on for many days. Nearly 300 animals are sacrificed preliminary to that of the horse. As soon as the rituals are over each day, grand feasts are given to all. And after the feasts, various assemblies are held. Music and dancing, Vedic  chantings and philosophical disputations are held in different halls. It may not be useful to go into all the details of the ceremonies. But most important was, where Kausalya as the chief  queen after worshipping and propitiating the horse kills it (sloka 33) (Kripanaihi visasasha enam thribhi paramaya muda) and in the night Kausalya lay with the horse to fulfill her duty.

இதன் தமிழாக்கம் வருமாறு:

அசுவமேத யாகம்பற்றி முழு விவரத்துடன் கூறப்பட்ட பதிவு இது,   வால்மீகி ராமாயணத்தில் இந்த பலிபற்றிய பல பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வால்மீகி இராமாயணத்தின் இரண்டாவது சுலோகமான ரசயசர்னக-வில் கூறியிருப்பதாவது:

பல நாட்கள் நடத்தப்படும் அசுவமேத யாகத்தில் பல கால்நடைகள் பலியிடப்படும். முக்கியமாக குதிரைகள், தினசரி பலியிடப்படும். குதிரைகள் மாமிசத்துடன் தடபுடலான விருந்துகள் நடைபெறும். முக்கியமாக இந்த விருந்துகள் படைக்கப்படுவதற்கு முன்னால், சிறிது உபவாசம் இருக்கவேண்டும். அந்த உபவாசத்தில் இசை இசைக்கப்டும், அதற்கேற்றாற்போல் நாட்டியமாடுவார்கள். அதற்கேற்ற மாதிரி மந்திர உச்சாடனைகள் உண்டு. இராமாயணத்தில் தசரதனின் மனைவியான கவுசல்யா உடன் இருந்த குதிரை கொல்லப்படும் இடம்தான் இந்த யாகத்தில் மிகவும் முக்கிய அம்சமாகும். (கிருபாளானி ஏனம் தரபை பரமய முத) ஸ்லோகம் 33. கவுசல்யா முழு இரவும் ஆண்மை மிகுந்த அந்தக் குதிரையுடன் கூடியிருந்தாள். அது அவளது கடமையுமாகும்.

தசரதனின் மற்ற இரண்டு மனைவிகளும் யாகத்தில் இருந்த மதகுருமார்களின் கட்டளைப்படி தனித்தனியே இருந்த இரண்டு குதிரையோடு கூடினர், முதல் நாள் இந்தக் கூடல் முடிந்த பிறகு, குதிரையின் ஆண்குறி இருக்கும் அடிவயிற்றுப் பாகத்தை ஆண்குறியோடு வெட்டி தீயிலிட்டு பொசுக்குவார்கள்.

அதில் என்ன சுலோகம் சொன்னார்கள் வடமொழியில் என்று யாருக்காவது தெரியவேண்டும் என்றால், சிவானந்த சரசுவதி அவர்கள் எழுதிய ‘‘ஞானசூரியன்’’ புத்தகத்தில் சமஸ்கிருதத்தோடு எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

தாய்மார்களை, பெண்களை  வைத்துக்கொண்டு அந்த சுலோகங்களைப் படிக்கவே முடியாது.

சிவானந்த சரசுவதி அவர்கள் திராவிடர் கழகத்துக்காரர் அல்ல; அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். சமஸ்கிருத புலவர் அவர். ஞானசூரியன் என்ற புத்தகத்தை அவர் எழுதியிருந்தார். அந்த காலத்திலேயே தந்தை பெரியார் அவர்கள், நாலாணவிற்குப் போட்டார். வ.உ.சி., மறைமலையடிகள், திரு.வி.க., ஆர்.கே.சண்முகம் போன்றவர்கள் அந்த நூலைப் பாராட்டியிருக்கிறார்கள்.

மேலும் அந்த Ramayana Vimarsa நூலில் குறிப்பிட்டுள்ளவை என்னவென்றால்,

Then the other two queens were also directed by the priests to lie with the  horse. After the first day they opened the abdomen of the horse  and cutting out a portion of the peritonial membrane they fried it  on fire and Dasaratha smelt it and then the 16 chief priests  cut the  horse and roasted them in the fire (Note-in the Aithareya Brahmana  the animal is clearly allotted among the 16 chief priests and the Yajamana, to be carried away by them and eaten). Thus the Aswamedha ends with the 46th sloka. Then in the last 2 slokas, 59 and 60 it is forged that Dasaratha requested Rayasrnga to do what was necessary to perpetuate the family. According to Aswamedha rituals, the king having become impotent to procure children or being steriie towards his wives, gets children produced on his wives by the priests who take the place of the horse which is sacrificed.

But the later day Brahmans whose ideas of sexual morality had changed did not like that their hero should have been born, as it were, illegitimately, introduced the ‘Payasa’ story. 

இதன் தமிழாக்கம் வருமாறு:

குதிரையின் ஆண்குறி தீயில் பொசுங்கும் வாசனையை தசரதனை நுகரச் சொல்லி மதகுருமார்கள் மந்திரம் ஓதுவார்கள். அதன் பிறகு குதிரையின் இதர உடல் பாகங்களை தீயில் வெட்டி எறிந்து பொசுக்குவார்கள்.    குதிரையின் வெந்துபோன செழுமையான பாகங்களை 16 மூத்த மதகுருமார்களுக்கு சாப்பிடக் கொடுப்பார்கள்.  இவ்வாறு நடக்கும் அசுவமேத யாகம் தொடர்ந்து பல நாட்கள் நடக்கும். இப்படி நடக்கும் கொடூர யாகம்பற்றியும், அசுவமேத யாகத்தின் முடிவு பற்றியும் இராமாயணத்தின் சுலோகம் 46-இல் வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.

கடைசி 2 சுலோகங்களான 59 மற்றும் 60 சுலோகங்களில் அஸ்வமேத யாகத்தின் சில விதிமுறைகள் தசரதனுக்காக தளர்த்தப்பட்டுள்ளது. இதில் தசரதனும், அவனது மனைவிகளும், பிள்ளைகளும், மதகுருமார்களுடன் சேர்ந்து யாகத்தில் கொல்லப்பட்ட அசுவத்தை (குதிரையை) சாப்பிடுவார்கள். பிற்காலத்தில் குதிரையுடன் கூடச் சொல்லும் அசிங்கமான பாலியல் செயல்கள், யாகத்தில் அவித்த கால்நடைகளை சுவைத்து உண்பது போன்றவை தெய்வதீனச் செயலாகவும் புனிதமாகவும் கருத்தப்பட்டது. படிக்காத, சிந்தனையற்ற மக்கள் இந்தக் கதைகளை புனித நிகழ்வுகளாக பாவிக்கத் துவங்கிவிட்டனர்.

இவை அத்தனையும் பின்னால் நுழைக்கப்பட்டது பாயாச தியரி என்பதை அமிர்தலிங்க அய்யர் எடுத்துச் சொன்னார்.

பாயாசம் குடித்தால் 

அது கருப்பைக்குப் போகுமா?

சாதாரண அறிவு உள்ளவர்களுக்குக்கூட தெரியும் - பாயாசம் குடித்தால், அது எங்கே போகும்? நேரே குடலுக்குப் போகும்; இரைப்பைக்குப் போகும். கருப்பைக்கு எங்கேயாவது போகுமா?

பாயாசம் குடித்ததால்தான் கருதரித்தார்கள் என்கிறார்கள். யாருக்காவது பாயாசம் கொடுத்துப் பாருங்களேன், கருத்தரிக்கிறார்களா? என்று.

ஆகவே, இது முழுக்க முழுக்க காட்டுமிராண்டித்தனம் என்பதை அவர்களே உணர்ந்து கொண்டார்கள். இது ஒரு அருவருக்கத்தகுந்தது என்று.

அதனால் என்ன செய்தார்கள்? ஒரு பொய்யை சமாளிப்பதற்கு, இன்னொரு கற்பனையைக் கொண்டு வந்து போடவேண்டும் என்கிற அளவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஆகவே, நண்பர்களே மணி 8.30 மணியாகிவிட்டது. இதுதான் நான் குறித்த நேரம். இந்தக் காலகட்டத்தில், இதோடு நிறுத்திவிடுகிறோம். ராமாயணத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டால், நரகத்திற்குப் போய்விடுவோம்.

அங்கேதான் நிறைய பேர் இருப்பார்கள்; கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் சொன்னதுபோன்று, சீர்திருத்தம் செய்வதற்கு அதுதான் மிகவும் வசதியான இடம்.
27 ஆம் தேதி இந்தக் கூட்டம் தொடரும்

ஆகவே, உங்களுடைய அனுமதியோடு இதோடு நிறுத்திக் கொள்கிறேன். நீங்கள்எல்லாம் விரும்பினீர்கள் என்றால், இதனுடைய தொடர்ச்சியாக 27 ஆம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறும்.

நிறைய விஷயங்கள் இருக்கிறது; ஒரு பகுதிதான் வந்திருக்கிறது. பெண்கள் பகுதி, சீதை, இராமாயணத்தில் என்ன கொடுமைகள் போன்ற ஆதாரபூர்வமான பல செய்திகளை எடுத்துச் சொல்லவிருக்கிறேன்.

துளசிதாஸ் ராமாயணத்தில்...

மறைமலையடிகளார், கம்பன் செய்த துரோகத்தைப்பற்றி எழுதியிருக்கிறார். துளசிதாஸ் ராமாயணம் ஏன் ராமனை உயர்த்திப் பிடிக்கிறது என்றால், துளசிதாஸ் ராமாயணத்தில், புருஷ உத்தமன் என்று அவரைக் காட்டுகிறார்கள்.

இதைத்தான் கம்பன் பாடியிருக்கிறான்.

அதில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால் மிக முக்கியமாக,

கடவுளைத் தொழவில்லை இராமன்; பிராமணர்களைத்தான் தொழுதான். ஏனென்றால், சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் மேலானவர்கள் யாராவது இருக்கிறார்கள் என்றால், அவர்கள்தான் பிராமணர்களாம். ஆகவே, பிராமணர்களைத் தொழுவதுதான் மிக முக்கியம்.

கடவுள் யாருக்குக் கட்டுப்பட்டவர் என்றால், பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவர்!

தெய்வாதீனம் ஜகத் சர்வம்

மந்த்ராதீனம் து தெய்வதம்

தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்

தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்

மந்திரம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் யாருக்குக் கட்டுப்பட்டவர் என்றால், பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவர்.

இந்தத் தத்துவம், மனுதர்ம தத்துவம் - இதை ராமாயணத்தில் அப்படியே உள்ளே வைத்திருக்கிறார்கள். அதை துளசிதாஸ் இராமாயணத்தில் சொல்லியிருக்கிறார்கள். அதையே கம்பன் பாடியிருக்கிறான்.

ஆகவே, இந்தச் செய்திகளை அடுத்தக் கூட்டத்தில் தொடருவோம்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! ஒழிக மூடநம்பிக்கை!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.





-  விடுதலை நாளேடு, 30.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக