பக்கங்கள்

வெள்ளி, 5 ஜூலை, 2019

உண்மை இராமாயணம் (4)

20.3.1948  - குடிஅரசிலிருந்து

சென்ற வாரத்  தொடர்ச்சி

சீதை:- சரி! தாங்கள் காட்டுக்குப் போகிறீர்கள். அப்புறம் என் சங்கதி என்ன?

இராமன்:- உன் சங்கதி எனக்குச் சிறிது சந்தேகமாகத்தான் இருக்கிறது.

சீதை:- என்னைப் பற்றித் தங்களுக்குச் சந்தேகம் என்ன?

இராமன்:- என்ன சந்தேகம் என்றால் கைகேயி உன்னை இங்கு விட்டு விட்டுப் போகச் சம்மதிக்கிறாளோ, அல்லது நீயும் காட்டுக்குப் போய்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்துவாளோ என்னமோ தெரியவில்லை. அது தெரிந்த பிறகுதான் உன் விஷயம் முடிவு செய்ய வேண்டும். என்னுடைய எண்ணம் என்ன என்றால் கைகேயி ஆட்சேபிக்காவிட்டால் நீ இங்கிருந்து என் தாயாரைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். பரதனுக்குத் திருப்தியாய் நடக்க வேண்டும். மற்றும் வேறு காரியம் என்ன நடக்கின்றன என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

சீதை:- நாதா! கைகேயியால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை எனக்கும் கொடுக் கப்பட்டது தான். நானும் கூடவே வருகிறேன்.

இராமன்:- சரி. நீயும் காட்டிற்குப் புறப்படத் தயாராகுக! அங்கு இந்த அலங்காரத்துடன் நகை துணிமணிகளுடன் செல்லக்கூடாது. அவற்றை எல்லாம் பிராமணர்களுக்குக் கொடுத்து விடு! வீட்டில் வைக்க வேண்டாம்! கைகேயி ஏன் அனுபவிக்க வேண்டும்? அவைகளை எல்லாம் பிராமணர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் நாம் மறுபடியும் இங்கு வர தந்திரங்களைச் செய்வார்கள்.

சீதை:- (மகிழ்ச்சியோடு) அப்படியே செய்கிறேன்.

காட்சி: 27 அநேக பிராமணர்கள் கூட்டம், காட்சி முடிகிறது.  சீதை அந்தப் பிராமணர்களை வணங்கி நகைகள், அநேக பண்டங்கள் ஆகிய வைகளைக் கொடுக்கிறாள், (காட்சி முடிகிறது).

தீ மிதிப்பதில் தெய்வீகத் தன்மை எங்கே?


27.03.1948 - குடிஅரசிலிருந்து...

நாகை மாரியம்மன் திருவிழாவில் நடைபெற்றுவரும் தீ மிதிப்பது தெய்வீகத் தன்மையில்லை என்பதை விளக்கத் தோழர் மு. சிவசங்கரன் கருப்புடையுடன் மூன்று முறை அமைதியாக நெருப்பின்மீது நடந்து காட்டினார்.

பச்சை மட்டையால் தீயைப் பக்குவமாக அடித்துப் பரப்பிவிட்டால் யார் வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உண்மையை மக்கள் தெளிந்தனர்.

- விடுதலை நாளேடு, 5. 7. 19