பக்கங்கள்

ஞாயிறு, 13 மார்ச், 2016

சிறீராமனும் கவுதமப் புத்தரும்


ப.கோவிந்தராசன்
BE,MBA,MA(History) MA(Linguistics)
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தல் சாதி மத பேதமின்றி எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சம உரிமை உணர்வுக் கொள்கைக்கு உலகில் முதன் முதலாக வித்தட்டவர் கௌதமப் புத்தர் ஆவார். இதனை விளக்கப் புத்தரைப் பற்றி சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இங்கே தரப்படுகன்றது.
1.அவரது (புத்தரது) மிகச் சிறந்த போதனைகளில் ஒன்றாக விளங்குவது---- எல்லா மனிதர்களும் சமம் என்பது ஆகும். எந்த ஒரு தனி மனிதனுக்கும் உயர்வு தரும் சிறப்பு சலுகைக் கொடுக் கப்படவில்லை -_- புத்தர் பிராமணர் களுக்கும் (அர்ச்சகர்கள்) மற்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஒழித்தார். (பக்கம் -10 முதல் 30-- நூல்- புத்தா அன்ட் ஹிஸ் மெஸ்ஸேஜ்-_--வெளியிடு- _ -அத்வைத ஆசிரமம் -கல்கத்தா.)
2. மேலும் புத்தர் போதித்தது பற்றி “கடவுள் வழிபாடு கடவுளை வணங்கு தல் எல்லாம் (நான்சென்ஸ்) முட்டாள் தனம். நான் ‘கடவுளுக்கு நன்றி கூறு கிறேன். ஆனால் கடவுள் எங்கே வாழ்கிறார்?’
3. “எல்லா மனிதர்களும் இந்த உலகில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆனால் இறந்த பின்னர்கூட கடவுள் தண்ட னைகள் தரும் இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றான்.’’
பிராமணர்கள் (அர்ச்சகர்கள்) கடவுள் இருக்கிறார் என்று நம்பு கிறார்கள். ஆனால் அந்த கடவுளை அணுகுவதற்கு அர்ச்சகர்களின் அனுமதி வேண்டும். அர்ச்சகர்களுக்கு (பிராமணர் களுக்கு) தானம் கொடுத்து வணங்கி எல்லா அதிகாரங்களையும் அவர்களி டம் ஒப்படைக்க வேண்டும். இத்தகைய  நிலையில் புத்த மதம் அசோகரது ஆட்சிக்குப் பிறகு கிமு185இ-ல் பிராமண மதத்தின் வளர்ச்சியால், நலிவடைந்தது இந்த நலிவுக்கான காரணங்களில் ஒன்று ராமனின் புகழ் பாடும் இராமாயணம் ஆகும். இராமாயணத்தில் காணப்படும் சிறீராமனையும் புத்த மதத்தை நிறுவிய கவுதமப் புத்தரையும் ஒப்பீடு செய்வ தற்குப் பல்வேறு நூல்களின் அடிப் படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
1. ராமாயணப் பாடல்கள்
தோன்றியது எப்போது?
விவேகானந்தரால் சிறப்பிக்கப்பட்ட கொள்கைகளை கொண்ட புத்தமதம் நலிவடையத் தொடங்கியதற்குக் காரணம் பிராமணர்கள் பெருமளவில் புத்த மதத்தில் சேர்ந்ததும் பாலி மொழிக்குப் பதிலாக சமற்கிருதம் புத்த மதத்தில் உபயோகக்கப்பட்டதும் ஆகும். இவ்வாறு சமற்கிருத்தில் மொழி பெயர்க் கப்பட்ட நூல்களில் தசரத ஜாதகக் கதையும் ஒன்று எனக் கருதலாம். அதில் காணப் பட்ட ராமன் கதை வைணவ மதத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது என்றும் சொல்லலாம். ஏனென்றால் தசரதர் ஜாதகக் கதை பாலியில் அசோ கர் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட பின்னர் தான் சம்ஸ்கிருதத்தில் அதே பிராமி எழுத்துக்களில் வால்மீகி இராமாயணம் எழுதப்பட்டது.
சிறீராமன் சிறீமத் பாகவதம் சிறீகிருஷ்னன் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் கவுதமப் புத்தரை யாரும் சிறீகவுதமப் புத்தர் என்று ஒருபோதும் (மகாயானப் பிரிவினர்கூட) அழைத்ததில்லை. சைவக் கடவுளான சிவனைக்கூட சிறீசிவன் என்று வணங்குவதில்லை.  இந்த சிறீ என்ற சொல்லின் பயன்பாடு அசோகர் காலத்திற்குப் பின்னர் நடைமுறைக்கு வந்தது என அறியலாம்.
2. சிறீராமனும் வேதமும்
வேத காலத்தில் வணங்கப்பட்ட கடவுள்களின் எண்ணிக்கை 33 ஆகும். அவை 12 ஆதித்யர்கள், 11 ருத்ரன்கள் 8 வசுக்கள், அசுவின்கள் மற்றும் மருத்து ஆகும். இந்த கடவுள்கள் வரிசையில் விஷ்ணுவும் அடங்குவார் லட்சுமி மற்றும் சிறீ என்ற பெண் கடவுள்கள் பெயர்கள் ரிக்வேதத்தில் காணப்படு கின்றன. இந்த இருவருக்கும் கணவன், இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பரம் பொருளான (1000 தலைகள், 1000 கண்கள், 1000 கால்கள்- கொண்ட) புருசன் என்ற கடவுள் ஆகும். மேலும் இவர்கள் இருவரும் முறையே -இரவில் காணப்படும் நட்சத்திரங்கள், நிலவு ஆகியவற்றின் ஒளியாகவும் பகலில் சூரியனின் ஒளியாகவும் விளங்குவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகவே  சிறீ-யும் மற்றும் லட்சுமியும் பிரபஞ்சத்திற்கு ஒளியாக விளங்குகிறார்கள். (ஆதாரம்- பக்கம்- 13-21 நுல்-ரிக்வேதா-ஆசிரியர் --டாக்டர். ஜெ.கே. டிரிஹா வெளியீடு பாரதிய வித்யா பவன்) இந்த இருவரும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்  சிறீ லட்சுமி என்ற ஒரே பெண் தெய்வமாக வும் செல்வத்தை அளிக்கும் கடவுளாக வும் விஷ்ணுவுக்கு மனைவியாகவும் மாறுவதை காணலாம். எனவே தற்கால   கடவுள்களுக்கும் வேத காலக் கடவுள் களுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.
விஷ்ணு லட்சுமி ஆகியோருககு என்று ரிக்வேதத்தில் தனியாக யாகம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எந் தெந்த கடவுள்களுக்கு யாகச்சடங்குகள் குறிப்பிடப்படவில்லையோ அந்தக் கடவுள்கள் எல்லாம் சிறு தெய்வங் களாக கருதப்படுகின்றது. ரிக்வேத்தில் சிறீ என்ற பெயர் காணப்பட்டாலும் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை
சிறீராமன் என்ற பெயர் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. எனவே வேதகாலத் (கி.மு.1500 முதல் 500 வரை)திற்குப் பின்தான் ராமாயணம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். (ஆதாரம்-- பக்கம் 19 முதல் 26 வரை -நூல் -பரதகண்ட புராதனம்- ஆசிரியர் டாக்டர் கால்டுவெல்)
3. புத்த மதமும் சமஸ்கிருதமும்:-
வேத காலத்தை அடுத்து தோன்றிய மதமான புத்த மதத்தைச் சேர்ந்தவர் களும் சிறீ என்ற சொல்லை புத்தர் பெய ருடன் இணைத்துக் கொள்ளவில்லை. இந்த நிலை அசோகர் காலம் வரை நீடித்தது.
கிபி 300- வரை பிராகிருத மொழி யான பாலி மொழி தான் எல்லா நிலை களிலும் பயன்பாட்டில் இருந்தது. அதற்குப் பின் பாலி மொழி செல்வாக்கு இழந்தது. அதே நேரத்தில் சமற்கிருதம் வளர்ந்தது (ஆதாரம்---: பக்கம்-5. நூல் வாகடகாஸ் அண்ட் குப்தா ஏஜ் கி.பி. 200 முதல் 550 _ -ஆசிரியர் ஆர்.சி. மஜூம் தார் அல்டேகர்) அப்போது புத்த மதத் தில் நிறைய பிராமணர்கள் சேர்ந் தார்கள். இதனால் சமற்கிருத மொழி புத்த மதத்தில் முதன்மை மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் பாலி மொழியில் எழுதப்பட்ட பல புத்தமத நுல்கள் சமற்கிருத மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இந்த மாற்றங்களின் விளைவாக புத்த மதம் மூன்றாம் கனிஷ்கர் காலத்தில் மகாயானம், ஹீனயானம் என இரு பிரிவுகளாக உடைந்தது. மகாயானப் பிரிவைச் சார்ந்தவர்கள் புத்த மதத்தை இந்தியா வில் சமற்கிருத மயமாக்கினார்கள். (யுவான் சுவாங்-ன் பயண நூல்) பிரா மணர்கள் ஆதிக்கத்தில் இருந்த மகா யானாப் பிரிவினர்கூட புத்தரை சிறீபுத்தர் என்று அழைக்கவில்லை.
அதே சமயத்தில் இலங்கையில் ஹீனயானமும் பாலி மொழியும் அரசர்கள் ஆதரவினால் வளர்ந்தது. இதனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் மொழியின் அடிப்படையிலும் மத அடிப்படையிலும் வேறுபாடுகள் தோன்றின.  இத்தகைய வேறுபாட்டின் அடிப்படையில் தான் இராமாயணம் எழுதப்பட்டது.
4. இராமாயணமும் புத்தமதமும்
கைகேயியின் கட்டளைப் படி ராமன் பட்டம் சூடக் கூடாது என்றும் மரவுரி அணிந்து ஜடாமுடியுடன் 14 ஆண்டுகள்  தண்டகாரண்யத்தில் வனவாசம் செய்ய வேண்டும். வனவாச காலத்தில் ராமன் எந்த மனிதர்களின் உதவியும் பெறக் கூடாது என்றும் நகரப் பகுதியிலோ கிராமங்களிலோ வசிக்கக் கூடாது என்றும்நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், இராமயணக் கதையில் ராமன், ஹீனயானம் என்னும் புத்தமதப் பிரிவினர் வாழும் இலங்கை மன்னனை இராவணனைக் கொல்ல, அயோத்தியில் பிறந்து வளர்ந்து பின்னர் தண்ட காரண்யம் சென்று பிறகு அங்கிருந்து இலங்கை சென்றான். கைகேயி கட்டளையிட்ட காலத்திலிருந்து பஞ்ச வடி காலம் வரை அதாவது சுமார் 13 ஆண்டுகள் ராமனின்  வனவாசம் அமை தியாக சென்றது. ஆனால், கடைசி 6 மாதங்களில் ராமனின் வாழ்வில் பல விசித்திர கற்பனையை கொண்ட பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவை பின்வருமாறு
4.1. கோசல நாட்டின் எல்லையை அடுத்த பகுதியில் தண்டகாரண்ய வனப்பகுதி அமைந்திருப்பது என்று சொல்வதும் அந்தப் பகுதி இலங்கை மன்னன் இராவணனின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் விசித்திரமானது. ஏனென்றால் 60000 ஆண்டுகள் வாழ்ந்த தசரதனுக்கும், கைகேயிக்கும் அண்டை நாட்டு மன்னான ராவணனைப் பற்றி எதுவும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் இராவணனை அயோத்தியில் நடத்தப் பட்ட எல்லா விழாக்களுக்கும் அழைத் ததாக தெரியவில்லை. மேலும் வேதம் பயின்ற ராமனுக்கும் தெரியவில்லை. கைகேயிக்கும் தெரியவில்லை. தெரிந் திருந்தால் ராமனும் தண்டகாரண்யத் துக்குள் நுழைவதற்கு முன்பு அங்கு 15000 வீரர்களுடன் தங்கி ஆளுகின்ற ராவணனின் சகோதரன் கரனிடம் அனுமதி கேட்டிருப்பான். இராமனைத் தேடி படையுடன் சென்ற பரதனும் வசிஷ்டரும் அனுமதி கேட்டிருப்பார்கள்.
4.2. ராமன் ஜடாயு என்ற பறவை யுடன் பேசுவது மற்றும் ஜடாயுக்கு ராமன் இறுதி சடங்குகள் செய்வது.
4.3. வானரங்கள் இராமனுடன் பேசுவது.
4.4 ராமனும் லட்சுமணனும் மரவுரி அணிந்து கொண்டு யுத்தம் செய்வது.
4.5. சுக்ரீவன் மனைவி தாரா ஒரு வானரம். அவளை ராமனின் கட்ட ளைப்படி   லட்சுமணன் சந்தித்து தங் களின் வனவாசம் முடிய இன்னும் 4 மாதங்களே உள்ளதால் சீதையைத் தேடும் பணியை மேலும் தாமதிக்காமல் சுக்ரீவன் தொடங்குமாறு வேண்டிக் கொண்டான். அப்போது தாரா தன்னுடைய படுக்கை அறையிலிருந்து நேராக லட்சுமனைச் சந்திக்க வந்ததால் அவளது ஆடை அணிகலன்கள் அலங் கோலமானதால் அவளது உடல் அழகு லட்சுமணனை பிரமிக்க வைத்தது. இவ்வாறு ஒரு வானரத்தை நாகரீக ஆடை அணிகலன் அணிந்த அழகியப் பெண், தாரா என்ற பெயருடன்அதுவும் படுக்கை அறையிலிருந்து வருவதாக சித்தரிப்பது விசித்திரமானது. ஒரு வானரத்தை அரண்மனையில் வாழும் அழகிய ராணியாக உண்மைக்கு புறம்பாக சொல்லும் வால்மீகி ராமனை புகழ்வதையும் ராவணன் மற்றும் அரக்கர்களை கோரமானவர்களாகவும் கொடியவர்களாக சித்தரிப் பதிலும் சிறிதும் உண்மை இல்லை என்று கருத வாய்ப்புள்ளது.
4.6. அனுமன் தன்னுடைய உரு வத்தை தானே மாற்றிக் கொள்ளவும் பறவை போல் பறக்கவும் மலையை தூக்கிக் கொண்டு பறந்து செல்லவும் சக்தி படைத்தவனாக கூறுவது விசித்திரமாக உள்ளது.
4.7. ராமனால் கொல்லப்பட்ட வாலியின் (வானரம்) உடல் சாஸ்திர முறைப்படி மகன் அங்கதனால் எரியூட் டப்பட்டது. சாதாரண வானரங்களுக்கு என்று சாஸ்திரங்கள் எதுவும் இருப்ப தாகத் தெரியவல்லை. (பக்கம் _ -823 நூல் சி.ஆர். சீனிவாச அய்யங்கார் எழுதிய ராமாயணம்)  வானரங்களுக்கென சாஸ் திரங்கள் இருப்பது மிகவும் விசித்திர மானது.
4.8. சீதையை இழந்த ராமன் தாங்கொணா துயரத்தில் மூழ்க “இந்த உலகத்தையே அழிப்பேன்’’ என்று பலவாறு சபித்தான் புலம்பினான். தன் உயிரை மாய்த்து கொள்ளவும் நினைத் தான். கலங்கும் ராமனை லட்சுமணன் அவ்வப்போது தேற்றிக்கொண்டே வந்தான். பல நாட்கள் நடந்த பின் பம்பா நதியைக் கடந்து வானரங்களின் ராஜ்ஜியத்துக்குள் நுழைந்தார்கள். அங்கு அவர்களை சந்திக்க வானரத் தலைவன் சுக்ரிவன் அனுப்பிய தூதனாக அனுமன் வந்தான். அந்த சந்திப்பின்போது லட்சு மணன் அனுமனிடம் பின்வருமாறு கூறினான். நானும் ராமனும் சுக்ரீ வனிடம் அடைக்கலம் (ரெஃப்யுஜ்) ஆகி றோம். என் அண்ணன் அளவற்ற செல்வங்களை தன் மக்களுக்கும் பிராமணர்களுக்கும் தானம் செய்து அதனால் பெரும் புகழைப் பெற்றவன். ராமன் உலகத்தால் கடவுளாகப் பாவிக்கப்பட்டாலும் அவன் தற்போது சுக்ரீவனிடம் தனக்குப் பாதுகாப்பு கேட்கிறான். ராமன் இந்த உலகத்தையே ஆளுகின்ற பலம் உடையவனானாலும் அவன் தற்போது சுக்ரீவனிடம் சரண் (ரெஃப்யுஜ்) அடைகிறான். இன்று வரை இலட்சக்கணக்கான மக்கள் ராமனின் அருளைப் பெறுவதற்காக வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கிறார்கள். ஆனால் ராமனோ சுக்ரீவனின் தயவுக்காகக்(ஃபேவர்) காத்திருக்கிறான். உலகத்து மன்னர்கள் எல்லாம் தசரதனைப் போற்றி வணங்கு கிறார்கள. ஆனால், தசரதனின் மகன் ஒரு குரங்கு (சுக்ரீவன்) இடம் தன் மேல் இரக்கம் காட்டுமாறு வேண்டுகிறான். ராமன் மிகுந்த வேதனையால் தன் நிலை மறந்து வாழ்கிறான். சுக்ரீவனிடம் அடைக்கலமான ராமனுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு லட்சுமணன் கரகரத்த குரலில் பணிவான குரலில். கண்கள் நீர்வழிய அழுத குரலில் கூறினான். பின்னர் லட்சுமணன், அனுமன் தோளில் ஏறியதும் இருவரும் பறந்து சென்று சுக்ரீவனை சந்தித்தார்கள். அனுமன் சுக்ரீவனிடம் பின்வருமாறு கூறினான்.
(தொடரும்)
விடுதலை ஞாயிறு மலர், 19.12.15
சிறீராமனும் கவுதமப் புத்தரும் (2)

பொறியாளர்
ப.கோவிந்தராசன்
BE,MBA,MA(History) MA(Linguistics) 
“....---அயோத்தியின் பேரரசனான தசரதன் எண்ணற்ற பல்வகை யாகங்களைச் (ராஜசூயம்அசுவமேதம் உள்பட) செய்தார். அப்போது பலருக்கு தன்னுடைய செல்வங் களைத்தானமாக வழங்கினார்.----- ----அவருடைய மகன் ராமன் தன் மனைவியுடன் த-ண்டகாரண்யத்தில் வாழும் போது இராவணன் ராமனின் மனைவி சீதையைத் தூக்கிச் சென்றான். தற்போது ராமன் தங்களிடம் சரண் அடைந்துள்ளான். இவை எல் லாம் ஒரு பெண்ணுக்காக’’
13 ஆண்டுகள் வனவாசம் முடியும் வரை மாவீரனாகவும் உலக மக்களை நேசிப்பவராகவும் சித்தரிக்கப்பட்ட ராமன் தன் மனைவிராவணனால் தூக்கிச் சென்ற சோகத்தில் தன் நிலையை மறந்து உலகையே அழிப்பேன் என்றும் சுக்ரீவன் என்ற குரங்கிடம் சரணடைந்து பாதுகாப்பு கேட்பதும் விசித்திரமானது. (பக்கம் 761-_763 வால்மீகி ராமாயணம் ஆசிரியர் சி.ஆர். சீனிவாச அய்யங்கார்)
மேற்கண்ட விசித்திரங்களை கருத் தில் கொண்டால் ராமன்  லங்கா என்ற நகரத்துக்குத்தான் சென்றான் என்ப தையும் இலங்கை என்ற நாட்டிற்குக் கடல் கடந்து செல்லவில்லை என் பதையும் அறியலாம்.
4.9. இராமர் பாலம் வானரம் கட்டியது உண்மை தானா? இராமாயண காவியத்தில் நளன் என்ற வானரம், 80 மைல் அகலமும் 800 மைல் நீளமும் கொண்ட ஒரு பாலத்தை கடலின் குறுக்கே ராமனின் வானரப்படைகள் நடந்து லங்கா நகரம் செல்வதற்கு கட்டியது.
(ஆதாரம் கிரிஃபித் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்பு ராமாயண-ம்) 600 கிமீ என்றால் ஏறத்தாழ சென் னைக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே உள்ள தூரத்திற்குச் சமம். எனவே 800 மைல் (1280) கி.மீ) நீளமுள்ள பாலத்தை 5 நாட்களில் ஒரு குரங்கால் கட்ட முடிந்தது என்பது ஒரு விசித்திரமான கற்பனை என்று கூற வாய்ப்புள்ளது. நளன் என்ற குரங்கு ஏதேனும் பாலம் கட்டியதாக, முன் அனுபவம் இருப்பதாக  சொல்லப்படவல்லை.
மேலும் இலங்கைக்கும், தனுஸ்கோடிக் கும் உள்ள உண்மையான தூரம் சுமார் 40 கி.மீ. தான். இது ராமன் இலங்கைகுப் போகவில்லை என்று தெரிவிப்பதாகக் கூறலா-ம். அவன் லங்கா என்ற நகரத் திற்குப் போயிருக்கலாம். ஏனென்றால்
4.9.1. கிஷ்கிந்தா பம்பா ஏரி, பஞ்சவடி ஆகிய இடங்கள் விந்திய மலைக்கும் லங்கா நகரத்திற்கும் இடையே உள்ளதாக வால்மீகி கூறுகிறார். அவர் அந்த இடங்களைத் தற்கால இந்தி யாவில் எங்கே உள்ளது என்று தெரிந்து கொள்ள எந்த அடையாளமும் தரவில்லை.
4.9.2. மேலும் கோசலநாடு என்றது போல் இலங்கை நாடு என்று சொல்லாமல் லங்கா நகரம் என்று தான் குறிப்படுகிறார்
4.9.3 சிறீலங்கா என்ற பெயர் 1972-இல் வைக்கப்பட்டது. அதற்குமுன்னர் சிலோன், தாமிரபரணி, சேரன் தீவு, சிங்களத் தீவு என்று அழைக்கப்பட்டது. எனவே லங்கா ஸ்ரீலங்கா என்ற பெயர் கள் இரண்டு வெவ்வேறு தீவுகளைக் குறிக்கின்றன. மௌரிய மன்னன் “அசோகனின் கல்வெட்டுகள்’’ என்ற நுலில் தற்போதுள்ள சிறீலங்கா என்பதற்குப் பதிலாக தாமிரபரணி என்று குறிப்படப்படுகிறது. இதன் நூலாசிரியர் -டி.சி.சர்க்கார். இது மய்ய அரசின் வெளியீடு ஆகும்
4.9.4. லங்கா என்பதற்கு தீவு என்று பொருள். உ-_ம் லங்கா எள்ற பெயரில் பல ஊர்கள் ஆந்திராவில் கடலும் கோதாவரியும் கலக்கும் பகுதியில் அமைந்துள்ளன.
4.9.5. மேலும் விந்திய மலையை அடுத்து தெற்கே தற்போதைய ஒரிசா எல்லையிலிருந்து உற்பத்தியாகி அரபிக் கடலில் கலக்கும் வரை உள்ள நீளமான நர்மதா நதியை ராமன் கடந்ததாக இரா மாயணத்தில் சொல்லப்படவில்லை. எனவே வால்மீகி குறிப்பிடும் லங்கா நகரம் இந்தியப் பகுதியில் அமைந் திருக்கலாம் என அறியலாம்.
4.9.6. குப்தர்கள் காலத்தில் தான்  இலங்கை நாடு பற்றிய பகுதிகள் சேர்க்கப்பட்டு இராமாயணம் இறுதி வடிவம் பெற்றது எனக் கூறலாம். பின்னர் சமஸ்கிருதத்தில் “அசோகன் பிராமி’’ எழுத்துக்களில் எழுதப்பட்டது. எனவே 800 மைல் நீளத்தில் ராமர் பாலம் கட்டப்பட்டது என்பது. உண்மையல்ல என்று கூறலாம்.
5. ராமனின் வானர சேனைகள் நளன் கட்டிய தரைப் பாலத்தில் 800 மைல் (1280 கி.மீ) தூரத்திற்கு நடந்து சென்றனர். அந்த வானர சேனையின் ஒரு பகுதி நளன் என்ற குரங்கின் தலைமையில் சந்தனக் காட்டில் இருந்து ஒரு சேனை திரட்டப்பட்டது அந்த சேனையில் மட்டும் 1000 கோடிகள் மற்றும் 8 லட்சம் வானரங்கள் இருந் தன. (பக்கம் 1277)
மேலும் பல லட்சக்கணக்கான குரங்குகள் திரட்டப்பட்டன அவை அனைத்தும் விந்தியமலை, சங்கோசனா மலை, கிருஷ்ணகிரி மலை, சாக்யா மலை, சுதர்சன மலை, சயல்வேயா மலை, பரியாத்ரா மலை, பர்ணத ஆற்றுக்கரைப் பகுதி, கங்கை ஆற்றுக் கரைப் பகுதிகள் மற்றும் பல இடங் களிலிருந்து வானரங்கள் கிஷ்கிந்தா-_வுக்கு வந்தனர்.
பின்னர் சுக்ரீவன் தலைமையில் லங்கா சென்றனர். இந்த மிகைப்படுத்தப்பட்ட சேனை அளவு ஒரு விசித்திரக் கற்பனையே ஆகும். ஏனென்றால் தற்போதுள்ள மொத்த உலக மக்கள் தொகை சுமார் 600 கோடி மட்டும் தான் மேலும் 1000 கோடி குரங்குகள் இருப்பதற்கு லங்கா நகரத்தில் இடம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. (பக்கம் 1276 முதல் 1285. சி.ஆர் சீனிவாச அய்யங்கார் எழுதிய வால்மீக இராமாயணம்)
5. சிறீராமனும் புத்தரும்:-
இந்த உலகில் தோன்றிய முதல் புரட்சியாளர் புத்தர் தான் எனக் கூறலாம். ஏனென்றால் லும்பினி (நேபாளம்) நாட்டின் இளவரசனாக இருந்த இவர் சுகமான அரண்மனை வாழ்க்கையையும் மனைவி மகனுடன் வாழ்ந்த குடும்ப வாழ்க்கையையும் துறந்தார். கடுமையான தவத்திற்குப்பின் அவருக்கு மக்களின் துயர் போக்கும் கொள்கைகளை உருவாக்கி மக்களி டையே பரப்பினார்.
மதச் சடங்குகளை யும், மூடநம்பிக்கைகளையும், ஜாதி வேற்றுமைகளையும் கடுமையாக எதிர்த்தார். அவர் அன்பு அறம் சார்ந்த அமைதியான வழிகளைக் கடைப் பிடித்து மக்களிடம் பிரச்சாரம் செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். அதன் விளைவாக யாகங்களில் மனிதர்கள் மற்றும் இதர உயிர்கள் (கால்நடைகள் உள்பட) பலியிட்டு கடவுள்கள் தேவர்கள் பிராமணர்கள் மற்றும் பலருக்கும் பங்கிட்டு அவிர் பாகமாக வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதனால் புத்தரின் போதனைகள் உலகெங்கும் பரவியது. ஆரிய வர்த்தத்தில் வேத மதமும் வேத மொழியும் அழிந்தன.
இதனால் பிராமணர்கள் ஆதிக்கம் மீண்டும் ஏற்பட புராணங்களையும் மற்றும் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களையும் மனுசாஸ்திரம் போன்ற தர்ம சாஸ்திரங்களையும் எழுதினார்கள். இவற்றை எழுதுவதற்கு வேத மொழியில் உள்ள வேதங்களி லிருந்து சுமார் 60 முதல் 70 சதவீத அளவு சொற்களை அர்த்தம் தெரியாத காரணத்தாலும் வழக்கு ஒழிந்த காரணத்தாலும் யாஸ்கா (கிமு 500 முதல் 300) என்பவர் நீக்கினார் (நுல்:- நிருக்தா) அந்த சொற்களுக்குப் பதிலாக அசுத்தமான பல  இந்திய மொழிகளி லிருந்து புதிய சொற்களைச் சேர்த்தார்.
பின்னர் பாணினி (கிமு 300 முதல் 250) என்பவர் எழுதிய இலக்கண நூலின் அடிப்படையில் வேதங்களில் உள்ள வாக்கியங்கள் திருத்தப்பட்டன. இவ்வாறு திருத்தப்பட்ட வேத மொழியே சமஸ்கிருதம் என்று கி.மு 100 முதல் கி.பி. 150 வரை உள்ள காலத்தில பெயர் பெற்றது. இத்தகைய சமஸ் கிருதத்தில் ராமாயணம் முதன் முதலில் எழுதப்பட்டது. இந்த நூல் அசோகன் பிராமி எழுத்துக்களில் குப்தர்கள் காலத்தில் எழுதப்பட்டது.
இந்த ராமா யணத்தில் உள்ள ராமரின் குணங்கள் தோற்றம் வாழ்க்கை வரலாறு ஆகியவை ராமனை, (நாரதரின் வேண்டுகோள்படி உத்தம புருசனாக காட்டுவதற்கு வால்மீகி புத்தரையே தனக்கு முன்னு தாரணமாக எடுத்துக்கொண்டு எழு தினார்)  ஆதாரம்_---1- எஸ்.என். சதாசிவம் தனது நூலில் (பக்கம் 153 முதல் 160 வரை _ -நூல்- எ சோசியல் ஹிஸ்டரி ஆப் இந்தியா) 2. கால்டுவெல் எழுதிய பரதகண்ட புராதனம் என்ற நூல் -பக்29)
-இத்தகைய ராமாயணத்தில் காணப் படும் சிறீராமனுக்கும் கவுதமப் புத்தருக்கும் உள்ள வேறுபாடுகளை அவர்களின் வாழ்க்கைகளை ஒப்பிட் டால் பின்வருமாறு அறியலாம்.
5.1. ராமன் யாகத்தைத் தடுப்பவர் களை அழித்தான் ஆனால் புத்தர் யாகம் செய்வதை எதிர்த்தார்.
5.2. ராமன் தன் மனைவியுடனும் பணிவிடை செய்ய தம்பி லட்சுமண னுடனும் வனவாசம் சென்றார் மற்றும் 13 ஆண்டுகள் துணைவியுடன் வாழ்ந் தார் ஆனால் புத்தர், தன் மனைவி மகன், தாய், தந்தை ஆகியோரைத் துறந்து தன்னந்தனியே காட்டிற்குச் சென்று தவம் செய்தார்.
53. ராமன் தன் தந்தையின் கட்ட ளையின்படி தான் வனவாசம் சென் றான். ஆனால் புத்தர் தானே சிந்தித்து தானே முடிவெடுத்து காட்டிற்குச் சென்றார்.
5.4. ராமன் மரவுரி தரித்து ராவ ணனுடன் யுத்தம்  செய்தான். ஆனால்  புத்தர் துறவறம் பூண்டு யுத்தங்களை எதிர்த்தார்.
5.5 வர்ணாசிரமத் தர்மத்திற்கு எதிராக சம்பூகன்  என்ற சூத்திரன், பிராமணர்கள் மட்டும் செய்யக் கூடிய தவத்தை செய்ததனால் பிராமணர்கள் கேட்டுக் கொண்டதன்படி ராமன் அந்த சூத்திரன் தலையை வாளால் வெட் டினான். ஆனால் புத்தர் ஜாதி பேதத்தை எதிர்த்தார்.
எனவே இராமாயணத்தை பிராமண மதத்தின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் வால்மீகி அமைத்துள்ளார் என அறியலாம்.
6. இராமாயணம் குறித்த ஆய்வுகள்
எஸ்.என். சதாசிவம் தனது நூலில் (பக்கம் 153 முதல் 160 வரை- நூல்-: எ சோசியல் ஹிஸ்டரி ஆப் இந்தியா) இராமாயணத்திற்கும் புத்த மதத்திற்கும் உள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வுகளை பின்வருமாறு விவரிக்கிறார்.
6.1. வேதகால கடவுள்களான இந்திரன் வருணன் அக்னி போன்ற வர்கள் பிராமணர்களுக்கு செய்த நன்மைகள் முற்றிலும் புத்த மதத்தால் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த பிராமணர்கள் வேறு வழி யல்லாமல் ரிக் வேதத்தில் காணப்பட்ட விஷ்ணு என்ற முக்கியமில்லாத சிறு கடவுளை புத்த மதத்தை அழிப்பதற்காக உலகின் (வைணவ மதம்) முதன்மைக் கடவுளாக உருவாக்கினார்கள்.
6.2. இராமாயணத்தில் வெள்ளிமுத்து இரும்பு, ஒயின், ஒட்டகங்கள், யானைகள் மற்றும் சில்க் ராமன் பெயர் பொறித்த மோதிரம் போன்றவை குறிப்பிடப்பட் டுள்ளன. இதனால் வரலாற்று அறிஞர் ஹெ.டி. சங்காலியா இராமாயணம் உருவான காலத்தை கி.மு. 3ஆம் நுற்றாண்டிலிருந்து கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வரை நிர்ணயித்துள்ளார். மேலும் இராமாயணத்தில் மிகவும் நவீன கட்டுமானங்களைக் குறிக்கும் பகுதிகள் கி.பி. 7-ஆம் நுறறாண்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
6.3. இராமாயணம் இயற்றப்பட்ட காலம் பற்றி பல்வேறு கருத்துக்களை  வரலாற்று அறிஞர்கள் கொண்டிருந் தாலும் புத்தர் காலத்துக்குப் பின்னர் தான் இராமாயணம் இயற்றப்பட்டது. ஏனென்றால் இராமாயணத்தின் பல முக்கியப் பகுதிகள் பாலி மொழியில் இயற்றப்பட்ட பவுத்த மதத்தைச் சார்ந்த தசரத ஜாதகக் கதை, மற்றும் ஜனகர் ஜாதகக்கதை ஆகியவற்றிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளன.
இராமாயணத்தில் பிராமணர்களின் தேவைக்கு ஏற்பப் பல புதியப் பகுதிகள் அவ்வப்போது சேர்க் கப்பட்டு வளர்ந்தது. தீவிரப் பிரச்சாரத் திற்குப் பின்னரும் தென்னிந்தியாவில் பெருமளவில் இராமாயணம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.இராமாயணத்தை ஆய்வு செய்ததில் தென்னிந்தியாவின் புவியியல் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை.
6.4. மகாபாரதத்தில் ராமனைப் பற்றி ஒரே ஒரு இடத்தில் மட்டும் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் இராமாயணம் பற்றி சொல்லவில்லை. இது வால்மீகி இராமாயணம் உருவாகுவதற்கு முன்பே ராமரின் கதை மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என அறியலாம் (பேராசிரியர் ஏவெபர்)
6.5. வைஷ்ணவ மதம் 11-ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மிகவும் வளர்ச்சியடைந்து உச்ச நிலையை அடைந்தது. அப்போது உலகில் முதலில் உயிர்கள் தோன்றி படிநிலை உயிர்களாக வளர்வதை பற்றிய புத்தரின் கொள்கை களின்படி வைணவ மதத்தில் தசாவதார கொள்கை உருவாக்கப்பட்டது. பொது மக்கள் புத்தர் மேல் மிகுதியான பற்று வைத்திருந்ததை அறிந்த பிராமணர்கள் ஏற்கனவே உள்ள 10 அவதாரங்களில் ஒன்றை நீக்கிவிட்டு புத்தரை விஷ்ணு வின் அவதாரமாக மாற்றி தங்கள் சுலோகத்தைத் திருத்தினார்கள்.
6.6. பால மொழியில் எழுதப்பட்ட தசரத ஜாதகக் கதையில் தசரதன் வாரணாசியில் ஆட்சி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.
6.7. வால்மீகி இராமாயணம் விஷ்ணு பக்தியை வளர்க்க பயன்படுத்தப்பட்டது. மேலும்
6.8. இராமாயணத்தை வால்மீகி மட்டும் உருவாக்கியிருக்க முடியாது. அவரைத் தொடர்ந்து மற்றும் பலர் உருவாக்கி தற்போதைய இராமாய ணத்தை உருவாக்கியுள்ளனர்.- ---பொதுவாக எல்லா பிராமண மதம் தொடர்புடைய நுல்களும் மிகுந்த இடைச் செருகலுடன் பெரிதாக ஆக் கப்பட்டவை ஆகும் (ஏர்னஸ்ட் குன்)
7. முடிவுரை:-
7.1. இராமன் என்ற சத்திரிய குல 15 வயது இளவரசனை விசுவாமித்திரர் தன்யாகத்தற்கு ஒரு அரசன் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்பதில் ஆரம்பித்து பல ஆயிரம் கோடி குரங்குகளுடன் இராவணனுடன் யுத்தம் செய்யும் போது மூர்ச்சையான ராமன் லட்சுமனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்து செல்லும் காட்சி வரை  பார்த்தால் இராமயணம் ஒரு கற்பனை காவியம் என்று நினைக்க வாய்ப்புள்ளது.
இதை விளக்க டாக்டர் கால்டுவெல் எழுதய பரத கண்ட புராதனம் என்ற நூலில் பக்கம் 40-_43_-ல் உள்ள சில பகுதிகள் பின்வருமாறு தரப்படுகின்றது
பல சாஸ்தர நூல்களை வாசித்து ஆராய்ந்த வித்துவான்கள் இராமா யணத்தை வாசித்தவுடனே அது வீண் கதைககளால் நிறைந்திருக்கிறது என்றும் அதில் அடங்கியிருக்கும் உண்மையான சரித்திரங்களை அந்த வீண் கதைகள் கெடுக்கின்றது.---------- கதைகளை கேட்கிறது.
இந்த கால (கி.பி.1857) இந்துக்களுக்குப் பிரியமாயிருக்கிறது போல பூர்வகால இந்துக்களுக்கும் பிரியமாய் இருந்தது. வருணித்து சொல்லும் திறமை அவர் களுக்கு அதிகம் இருந்தது. பகுத்தறியும் விவேகம் அவர்களுக்கு குறைவு. இராட் சதரையும் புதங்களையும் (ஜாக் த ஜெயன்ட் கில்லர் போல) அவைகளை கொல்லும் வீரர்களையும் குறித்து சொல்லிய கதைகள் யூரோப் கண்டத் தில் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கே பிரியம்.
சிறுபிள்ளை அந்தக் கதைகளை நம்பும் சற்றே பெரிய பிள்ளைகளாகிற போது நம்பாது. ஆனாலும் அவ்வகைக் கதைகளுக்கொத்த வீணான கதைகளை இத்தேசத்தில் (கி.பி.1857) உள்ள  சகலரும் பிரியமாய்ச் சொல்லியும் கேட்டும் வருகின்றனர்.
2. இராமாயணத்தின் ஆரம்பத்தில் சொல்லிய கதையைப் பார்த்தால் ராமன் ஒரு வீரனேயல்லாமல் வேறல்ல.
3. (இராமனைப் பற்றிய) தெய்வ அவதாரப் பாட்டுகள் பிற்காலத்து கவி ராயர்களால் இராமாயணத்தோடு கூட் டப்பட்டிருக்க வேண்டும். (பக்கம் 42)
4. சீதையையும் ராமனையுங் குறித்து சொல்லிய மேற்கண்ட அபிப்பிராயங்கள் ருசுவாயிருக்கிறது என்று இதுவரைக்கும் சொல்லக் கூடாது. ஆயினும் அவைகள் விவேகமுள்ள அபிப்பிராயங்கள் என்பதில் சந்தேகமில்லை (டாக்டர் கால்டுவெல் எழுதிய பரதகண்ட புராதனம் (பக்கம் 40-_43). தற்போதுள்ள இந்தியச் சட்டங்களின்படி புத்தமதம், சைவ மதம், வைணவ மதம், சமண மதம், சீக்கியமதம் ஆகிய மதத்தினர்களை இந் துக்களாக கருதப்படுகின்றது. இதன்படி ராமரும் புத்தரும் ஒரே மதம்.
பாகம்  -2
புத்தகம்- அனாடமி ஆப் கன்ஃப் ரன்டேசன்- _ ஆசிரியர் _ --சர்வபள்ளி கோபால் பக்கம்-_147-_1. தசரத ஜாதகக் கதைகள் எழுதிய காலம் கி.மு. 400_-200-
2. பாடல்கள் வடிவத்தில் கதைகள் எழுதப்பட்ட காலத்தைச் சேர்ந்தது ராம கதா. ஆனால் வால்மீக ராமாய ணத்திற்கு முந்தியது.
பக்கம் _ --286  குமாரலீலா பட்டர் ----சமஸ்கிருதம்---சோசியல் ஹிஸ்டரி ஆப் இந்தியா ----என். சதாசிவன்
பக்---_282 அய்யப்பன்------- சாஸ்தா ---புத்தா
--பக்- _276 அஸ்ட்ராலஜர்
பக்-_275 1860ல் மெக்காலே பீனல்கோடு தந்தார்
பக்-_274 ---மனு மந்திரம-காது --ஈயம்- காய்ச்சு
பக்-_273- மனு-காலம்- கி.மு.500.
பக் _259--- விவேக்- சூத்ரா -வேதம்  மெட்ரர்ஸ் பிராமின்- கல்கத்தா ஏடு _ கடல்
பக் _243 ---குஷானா மவுரியா -பல்ல வாஸ்- சாளுக்யாஸ்
பக் _ 227- அதர்வண வேதம் .புத்தருக்குப் பின் தோன்றியது.
ருக் வேதம் 10 மண்டலம் மற்றும் அதர்வண வேதம் 19 மண்டலம்
-விடுதலை ஞாயிறு மலர், 26.12.15