பக்கங்கள்

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

இராமாயணம், பாரதம் நடந்தவையல்ல - கூறுவது ஆனந்தவிகடன்

இராமாயணமும், பாரதமும் கற்பனைக் காப்பியங்கள் என்றால் நம்மீது சினம் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட போர் நடந்தது என்று காட்ட எந்த வரலாற்றுத்துறை அறிஞராலும் இயலாது என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். நாம் கொடுக்கும் ஆதாரங்களை வேண்டுமானால் மறுத்துப் பேசட்டும்.


ஆரியத்தின் ஏடு ஆனந்த விகடன், ஆங்கில ஏடு மெயிலிலிருந்து எடுத்து வெளியிட் டுள்ள செய்தியின் சுருக்கத்தினை இங்கு தருகிறோம். இதன் பின்பாவது குழப்பவாதிகள் தெளிந்தால் சரி. எவ்வளவு நாட்கள்தான் ஏமாற்றினாலும் எதிரிகள் கூட நம் கருத்துக்குத்தான் வந்து தீர வேண்டியிருக்கிறது. இதோ படியுங்கள்:

பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே குருச்சேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி யின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சரித்திர சம்பவமாகக் கருதமுடியாது. அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை.

கி.மு. 1100க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை. போர்க்கருவிகள் பற்றிக் குறிப்புகள் வரு கின்றன.  இராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் அவ்வப் போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிப் பலவற்றைப் புகுத்தியிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டவையே.
ஆதாரம்: 12.10.1975 நாளிட்ட ஆனந்த விகடன்.

உண்மையினைச் சொன்னால் நம்மீது பாய்ந்து சீறும் ‘சீலர்கள்’ அக்ரகார ஆனந்த விகடனே ஆமாம் போட்ட பிறகு பாவம் என்ன சொல்லப் போகிறார்கள்?
- விடுதலை ஞாயிறு மலர், 14.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக