"இரா
மாயணமும் சேதுக்கால்வாயும்" என நான் எழுதிய விரிவான ஆய்வுக் கட்டுரை 12.10.2007 நாளிட்ட 'விடுதலை நாளிதழிலும், அக்டோபர் 2007 "வாய்ஸ் ஆப் ஓபிசி" திங்களிதழிலும் வெளிவந்துள்ளது. மேற்குறித்த கட்டுரையை சீரமைத்து, "சேதுக் கால்வாய் இராமனுக்கே உடன்பாடா னது" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஆகஸ்டு 2013 "வாய்ஸ் ஆப் ஓபிசி" திங்களி தழிலும் வெளிவந்துள்ளது.
கம்ப இராமாயணத்தின், பழைய பதிப்பு களில் (வை.மு.கோபாலகிருஷ்ணய்யர் உரை (1932) மீட்சிப்படலத்தில், 17ஆம் பாடல் "மரக் கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித் தருக்கிய விடத்து..." எனத் தொடர்கின் றது. அதாவது போர் முடிந்த பின்னர், இராமன் புஷ்பக விமானத்தில் திரும்பிச் செல்கையில், கடலில் அவ்விடத்து மரக்கலங் கள் இனிது செல்லுதற்பொருட்டு தனது வில்லின் நுனியாற் சேதுவை கீறி உடைத்து வழிவிட்டார்." என உரை தொடர்கின்றது. அதாவது, தனது படை வீரர்களின் படகுகள் செல்ல வசதியாக, சேதுவைக் கீறி உடைத்து வழி ஏற்படுத்திக் கொடுத்தவன் இராமனே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கரை அமைத் துக் கடலைக் கடந்து செல்ல யோசனை சொன்னவன் சமுத்திர ராஜன் என்றும், இக் கரையை அமைத்துக் கொடுத்தவன் விஸ்வ கர்மாவின் மகன் நளன் என்றும் சொல்லப் பட்டுள்ளது.
நானும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இராமேஸ்வரம் சென்றிருந்தபோது 'சேதுக் கரை" என்ற கைகாட்டி- மரத்தை கடற்கரை யில் பார்த்த நினைவு உள்ளது. இருப்பினும், இதற்கான ஆவணங்கள் வேண்டுமே எனத் தேடிய எனக்கு எதுவும் கிடைக்கவில்லை.
மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர் கள் 1999இல் எழுதி, 2003இல் வெளிவந்துள்ள "அக்னி சிறகுகள்" என்ற சுயசரிதையின் தமிழ் புத்தகத்தை தற்போது தான் படிக்க நேர்ந்தது. அவர் இராமேஸ்வரத்திலேயே பிறந்து வளர்ந்தவர். தனது இளமைக் கால நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் போது "எனக்கு அப்போது சுமார் ஆறு வயது, ஒரு படகு கட்டும் வேலையில் அப்பா ஈடுபட்டிருந்தார். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு (சேதுக்கரை என்பது இன்னொரு பெயர்) பக்தர்களை அழைத்துச் சென்று, திரும்பக் கூட்டி வருவதற்காக இந்தப் படகை உரு வாக்கினார். உள்ளூர் கார்பெண்டர் உதவி யோடு கடற்கரையில் படகு கட்டும் வேலையை ஆரம்பித்தார். என் கண்ணெதிரிலேயே ஒரு படகு உருவெடுப்பதை கவனித்துப் பார்த் தேன். படகுப் போக்குவரத்தில் அப்பாவுக்கு நல்ல வருமானம். பிறகு ஜலாலுதின் என் சகோதரி ஜொகராவின் கணவரானார்"
"ஒரு நாள்... மணிக்கு 100 மைல் வேகத்தில் அடித்த புயல் காற்றில், எங்கள் படகும் சேதுக் கரையின் நிலப்பரப்பும் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. பாம்பன் பாலம் தகர்ந்தது. பயணிகளோடு வந்த ரயில் கடலில் கவிழ்ந் தது...." (பக்கம் 27இல்)
ஆகவே கம்பராமாயணக் காலத்தில் இராமனால் கீறி உடைக்கப்பட்ட சேது, மதிப்பிற் குரிய திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் காலம் வரை, சேதுக்கரை யாகவே தொடர்ந் துள்ளது. இது எப்போது இராமர் பாலமானது, அதுவும் வழிபாட்டுத் தலமானது என்பதும் விளங்கவில்லை!
சேதுக்கால்வாய் இராமனுக்கே உடன்பாடானது!
கடவுள் நம்பிக்கையும், நாட்டுப் பற்றும் உடைய மகாகவி சுப்ரமணிய பாரதியார், கடலினைத் தாவும் குரங்கும்வெங்
கனலிற் பிறந்ததோர்
செவ்விதழ் பெண்ணும்
வடமலை தாழ்ந்த தனாலே தெற்கில்
வந்து சமன் செய்யும் குட்டை முனியும் நதியினுள்ளே முழுகிப் போய் அந்த நாகர் உலகிலோர் பாம்பின் மகளை விதியுற வேமணம் செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம்! ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் - ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்று பொய் யென்னும் நன்று புராணங்கள் செய்தார் கவிதை மிக நல்லதேனும் - அக்கதைகள்
பொய்யென்று தெளிவுறக் கண்டோம் என உண்மையை உரக்கச் சொன்ன பாரதி,
சேதுவை மேம்படுத்தி வீதி சமைப் போம் என்றும் சூளுரைத்துப் போய் விட்டார். ஆகவே, மகாகவி சுப்பிரமணி, பாரதியார் காலம் வரை இராமர் பாலம் என்று சொல்லப்பட இல்லை; சேதுக்கரை என்ற சொல்லாட்சி தான் பழக்கத்தில் இருந் தது என்பதுவும், அது வழிபாட்டுத்தலமாக விளங்கவில்லை என்பதுவும் தெளிவா கின்றது.
வால்மீகி இராமாயாணம், தமிழ் மொழி பெயர்ப்பில் (1963) சமுத்திரராஜன் தெரி வித்தபடி விஸ்வகர்மாவின் மகன் நளன், வானர சேனைகளினால் கொண்டுவரப் பட்ட மலைகள், மரங்களினால் அணையை அமைத்தான் என்று குறிப்பிடுகின்றது. சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என பாரதி பாடினான். அந்தச் சேதுவை, ஆழப் படுத்தி, கடல்வழிப்பாதை அமைத்தால் இரா மனுக்கு என்ன இழுக்கு வரும்? என்ற வினாவை எழுப்பி, கீழ்கண்ட விபரத்தை யும் எழுதியுள்ளேன்.
கம்பராமாணயத்தில் பழைய பதிப்பு களில் (வை.மு.கோபாலகிருஷ்ணய்யர் உரை 1932) மீட்சிப் படலத்தில் 171ஆம் பாடல் மரக்கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித் தருக்கிய விடத்து... எனத் தொடர்கின்றது. அதாவது, போர் முடிந்த பின்னர், இராமன் புஷ்பக விமானத்தில் திரும்பிச் செல்கையில், கடலில் அவ்வி டத்து மரக்கலங்கள் இனிது செல்லுதற் பொருட்டு, தனது வில்லின் நுனியாற் சேதுவை கீறி உடைத்து வழி விட்டார் என்ற உரையுடன் காணப்படுகிறது. என்ப தாகும். அதாவது, தனது படைவீரர்களின் படகுகள் செல்ல வசதியாக, சேதுவைக் கீறி உடைத்து, வழி ஏற்படுத்திக் கொடுத்தான் இராமன் என்று பொருள்பட எழுதப் பட்டுள்ளது. ஆகவே இன்றைய சூழ் நிலையில், படகுகள் செல்ல வசதியாக, ஏற்கெனவே இராமனால் உடைக்கப்பட்ட சேதுக்கரையை, கப்பல்கள் செல்லத்தக்க வகையில் ஆழப்படுத்தினால் என்ன? இராமனுக்கு உடன்பாடான கருத்துதானே என அறிவியலாளர்களுக்குத் தோன்றும்!
ஆனால் மறுபக்கம், கடவுள் நம்பிக் கையாளர்கள் அல்லது மதவாதிகளுக்கு ஏன் முன் கதைகள் தெரிய வில்லை என்ற வினாவும் எழும். 2007இல் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பல்லாயிரக் கணக்கான படித்த பக்தர் களைக் கூட்டி, வழிபாட்டுக் கூட்டம் நடத் திய நம்பிக்கையாளர் யோகி ஜக்கி வாசு தேவ் அவர்களிடம் செய்தியாளர்கள் இக் கேள்வியை எழுப்பிய போது, இதனை பொருளாதார சுற்றுப்புற மற்றும் பாரம்பரிய கலாச்சார வல்லுனர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்" என பதிலளித்த செய் தியை 29.09.07 'இந்து' நாளிதழ் மிக விரி வாக வெளியிட்டுள்ளது. அவர் இங்கே, மதவாதிகள் மற்றும் நம்பிக்கையாளர் களைச் சேர்த்துக் கொள்ளவில்லை.
எது எப்படி இருப்பினும், அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் இந்திய அரசி யலமைப்பு, அடிப்படை கடமைகளையும் வலியுறுத்துவதை நம்மில் பலரும் மறந்து விடுகின்றோம். அவை பின் வருமாறு:
பிரிவு 51(எ) ஒவ்வொரு இந்தியக் குடி மகனின் அடிப்படை கடமைகளாவன:
(எச்) அறிவியல் மனப்பான்மை. மனிதத் தன்மை, ஆராய்ந்து பார்க்கும் எண்ணம் மற்றும் சீர்த்திருத்தங்களை வளர்த்தல்.
(அய்) மிகச் சிறப்பான இடத்தை நோக்கி முன்னேறுதல்
வரலாற்றுத்துறை அறிஞர் ரோமிலா தாபர் எழுதிய ஆழமான கட்டுரையை 26.09.07 நாளிட்ட இந்து நாளிதழ் வெளி யிட்டுள்ளது. அதில், தொல்பொருள் மற் றும் வரலாற்று ஆய்வு நோக்கில், இது நாள் வரை இராமனின் வரலாற்றை முழுமை யாக நிலைநாட்ட தடயங்கள் எதுவும் இல்லை என இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை கூறியுள்ளது சரியே எனக் குறிப்பிட்டுள்ளார். இராமனைப் பற்றிய வரலாற்றுத் தடயங்கள் இந்தியாவில் தான் இல்லை, வெளிநாட்டில் அதுவும் தெற்கா சிய நாட்டில் கிடைத்துள்ளது என 20.07.1998 நாளிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளேடுகளில் வரலாற்று நாய கன்தான் இராமன் நிபுணர் கருத்துரை என கட்டுரைகள் வெளிவந்துள்ளன,
ஆதலால், ஆய்வாளர்கள் அரசியலமைப் புச் சட்ட பிரிவு 51இன் கீழ் விதிக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இப்பிரச்சினைகளை முழுமை யாக ஆராய்ந்து, குறிப்பாக வால்மீகி ராமா யணத்தின் மூல நூலையும் ஆராய்ந்து உரிய ஆதாரங்களை காய்தல் உவத்தல் இன்றி, வெளிக்கொணர வேண்டும். ஆனால், பழைய நாட்களில் பெரியார் ஈ.வெ.ரா சொன்னதுதான் என் நினைவு களில் இன்றளவும் ஓங்கி நிற்கின்றது. அதாவது பாமரர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று படிக்காத பாமரர்கள். பாவம் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இரண் டாவது வகை படித்த பாமரர்கள் என்ப தாகும். இன்றைய பிரச்சினையே படித்த பாமரர்கள் மிகுந்திருப்பதால் தான்!. புதைக் கப்பட்டுள்ள உண்மைகள் வெளிவந்தால் தானே நியாயங்கள் முழுமையாகப் பிறக்கும்!
ஆனால் உண்மைகளைப் புதைப்பதில் படித்த பாமரர்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர். தெற்காசியாவின் பல்வேறு வட்டாரங்களில் பழக்கத்தில் உள்ள முன் னூற்றுக்கும் மேற்பட்ட இராம காதைக ளைத் தொகுத்து, தனது விரிவான புத்த கத்தை, ஆய்வாளர் ஏ.கே. இராமனுஜன் வெளியிட்டு, அது டில்லி பல்கலைக்கழகப் பாடத்திலேயே சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் பல்கலைக்கழகத்தின் படித்த பாமரர்கள் இப்புத்தகத்தைப் பாடப் புத்த கத்திலிருந்தும் நீக்கிவிட்டனர். இதனைக் கண்டித்து, புகழ்பெற்ற வரலாற்று வல்லுனர் கே.ஏ.பணிக்கர் தெரிவித்த கருத்துக்களை, 23.11.11 நாளிட்ட இந்து நாளிதழ் விரிவான கட்டுரையாக வெளியிட்டிருந்தது, படித்த பாமரர்களின் நோக்கம், இளம் தலைமுறை யினருக்கு உண்மைகள் தெரிந்துவிடக் கூடாது என்பதாகும். - ஆகவே ஆய்வா ளர்களே விழித்தெழுங்கள்! அடிப்படைக் கடமையை நிறைவேற்றுங்கள்!!
இருட்டறையில் வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள்!!!
- ந.சேதுராமசாமி
- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக