பக்கங்கள்

செவ்வாய், 21 நவம்பர், 2023

இராமாயணத்தில் கந்தன் பிறப்பு கதை

வால்மீகி ராமாயணத்தில் கந்தன் என்று சொல்லப்படும் முருகனின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் 'சிவனின் நழுவி விழுந்த வீரியத்திலிருந்து உண்டானவன் ஸ்கந்தன்' என்றும், ஆறு தலை உடன் பிறந்ததால் ஆறுமுகன் என்றும் கார்த்திகை பெண்களின் பாலை உண்டு வளர்ந்ததால் கார்த்திகேயன் என்றும் சொல்லப்பட்டான் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றி  வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்டவை வருமாறு:-
தேவர்கள் பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டார்கள். 'சிவனிடத்தில் ஸ்கந்தன் எனும் பெயரில் ஒரு புத்திரன் பிறப்பான் அவன் மூலம் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்' என்று பிரம்மா கூறினார்.
அவர் கூறியதற்கு இணங்க சிவனின் வீரியம் நழுவி விழுந்தது. அதை அக்னி பகவான் கையில் பிடித்து பத்திரமாக கங்கையிடம் கொடுக்க, கங்கையோ தன் கர்ப்பத்தில் வைத்து பாதுகாத்தால். அதன் அனல் தாங்க மாட்டாமல் கர்ப்பத்தை கீழே நழுவவிட்டால், அந்த கர்ப்பம் சரவணப் பொய்கை என்று சொல்லப்படுகிற மூங்கில் திட்டில் போய் சேர்ந்தது. அங்கு  அந்த கர்ப்பம் ஆறுமுகத்துடன் குழந்தையாக தோன்றியது. தேவர்களால் அனுப்பப்பட்ட கார்த்திகை நட்சத்திர பெண்களால் பாலூட்டப்பட்டு கார்த்திகேயன் என்ற பெயரால் வளர்க்கப்பட்டான்.
இவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் (பாலகாண்டம், கங்காவதாரண கதை, ஸர்க்கம்:37.1-
37.31) கூறப்பட்டுள்ளது.

புதன், 1 நவம்பர், 2023

இராமன் பாலம் எங்கே?

"மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!"
- கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
- செ.ர.பார்த்தசாரதி, 02.11.2012, முகநூல் பதிவு.(எனது)