பக்கங்கள்

வியாழன், 22 மார்ச், 2018

இராமன் ஏகப்பட்ட பத்தினி விரதன்! 


''இராமன் பட்டமகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர் களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்துகொண்டான்.''

(வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், சருக்கம்-8, பக்கம்-28- சி.ஆர். சீனிவாச அய்யங்கார் & மன்மதநாத் தத்தர் மொழி பெயர்ப்பு)

இராமாயணத்தில் பல இடங்களில், இராமனின் மனைவிமார்கள் என்றே வருகிறது. நூல்: 'இராமாயணப் பாத்திரங்கள்'- தந்தை பெரியார்

இராமன் சரச சல்லாபி (பெண் பித்தன்)!  ''அந்தப்புரத்தில் இயல், இசை நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா மற்றும் அப்ரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப் புரத்திற்கு கொண்டுவரப்பட்டனர். இப் படிப்பட்ட அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். இவையெல்லாம் இராமனின் அன்றாட நிகழ்ச்சிகள்.'' (வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சருக்கம் -42 சுலோகம்- 8 & சருக்கம் -43, சுலோகம்- 1)

நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர்

- செ.ர.பார்த்தசாரதி

2 கருத்துகள்:

  1. //''அந்தப்புரத்தில் இயல், இசை நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா மற்றும் அப்ரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப்புரத்திற்குகொண்டுவரப்பட்டனர். இப் படிப்பட்ட அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். இவையெல்லாம் இராமனின் அன்றாட நிகழ்ச்சிகள்.'' (வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சருக்கம் -42 சுலோகம்- 8 & சருக்கம் -43, சுலோகம்- 1)''/////////



    இதோ நீங்கள் கொடுத்த 7-42-வசனம்-8 கூறுவது..

    'குயில்கள், பிரிங்காராஜம் முதலிய பலவண்ணமுடைய நூற்றுக்கணக்கான பறவைகள் மாமரங்களின் கிளை நிலையில் உட்கார்ந்து கொண்டும், அற்புதமான ஒலிகளை எழுப்பி கொண்டிருப்பதுமான (பூப்பொழிவிற்குள் பிரெவேசித்தார், ரகுநந்தன்)' - என்கிறது ..

    இதில் எங்கே நீங்கள் கூறியது உள்ளது ?


    அடுத்து, சர்க்கம்-43, சுலோகம்-1 மொழிபெயர்ப்பு.

    'நிகழ்வுகளை பலவிதமாக புனைந்து நகைச்சுவையுடன் கூறுவதில் வல்லவர்களாக விஜயன், மதுமத்தான்,காசியப்பன்,பிங்கள, குலன், சுராஜி, காலியான, பத்ரன், தந்தவத்ரன், சுமாசுதான் முதலியவர்கள் ஆசனத்தில் அமர்ந்திருந்த ராமனை சுற்றிலும் அமர்ந்து கொண்டார்கள்"

    இதை நீங்கள் கூறியபடி எதுவுமே கூறப்படவில்லையே ?

    எல்லாமே பித்தலாட்ட வசனங்களை போட்டுவிட்டு ...

    இதோ அதன் புத்தக காபி ....

    பதிலளிநீக்கு
  2. ///''இராமன் பட்டமகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர் களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்துகொண்டான்.''

    (வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், சருக்கம்-8, பக்கம்-28- சி.ஆர். சீனிவாச அய்யங்கார் & மன்மதநாத் தத்தர் மொழி பெயர்ப்பு)///

    இது எந்த வசனத்தில் சொல்கிறது ? அதை கூறவில்லை ?
    சும்மா எவனோ எழுதிய பக்கத்தை சொல்றீங்க ?

    இப்படி எங்கேயும் இல்லை !
    எனவே சரியான வசன எங்களை கூறுங்கள் !

    இதோ அந்த சர்க்கம்-8 முழுவதும் கொடுத்துளேன் இந்த மொழிபெயர்ப்பு நீங்கள் கூறியது எங்கே ?

    பதிலளிநீக்கு