ஓடம் கங்கையில் போய்க் கொண்டிருக்கிறது. சீதை கை கூப்பிப் பிரார்த்திக்கிறாள்.
"என் நாதன் க்ஷேமமாகத் திரும்பி வந்து ராஜ்யத்தை அடைந்தால், அனேக லட்சம் பசுக்களை பிராமணர்களுக்குக் கொடுத்துத் தங்களை திருப்தி செய்கிறேன்"
(அயோத்தியா காண்டம் 56ஆவது சருக்கம்)
இராமாயணத்தில் அனுமானுக்குக் கிடைத்தது என்ன?
வால்மீகி இராமாயணம் (உத்தரகாண்டம்) சமஸ்கிரு தத்திலுள்ளதை பதத்துக்குப் பதம் தமிழ் வசன நடையில் காலஞ்சென்ற ராவ் சாஹேப் பி.ஸ்.கிருஷ்ணசாமி அய்ய ரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகத்தில் எழுதியுள்ளதை கீழே அப்படியே ஆதாரமாகத் தருகிறோம். இராமாயணப் பிரியர்கள் படித்துப் பார்ப்பார் களாக! மேற்கண்ட புத்தகம் பக்கம் 555 இல் ராம பட்டாபிஷேக காலத்தில் வெகுமானிக்கப்பட்டவர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளது. புருஷோத்தமர் (இராமர்) லட்சம் குதிரைகளையும், அப்படியே அப்போது ஈன்ற பசுக்களையும், நூறு காளை மாடுகளையும் முதலில் பிராமணர்களுக்குத் தானம் செய்தார்''. (பக்கம் 556) மீண்டும் (இராமர்) பிரா மணர்களுக்கு முப்பது கோடி பொன் நாணயங்களையும், மிகவும் விலையுயர்ந்த பொன் ஆபரணங்களையும், வஸ்திரங்களையும் தானம் செய்தார்''. தன்னுடன் இராவ ணன் மீது நடத்தப்பட்ட போரில் உதவிய சுக்ரீவனுக்குப் பொன் ஆரம் ஒன்றைக் கொடுத்தார். அங்கதனுக்குத் தான் வளையம் கொடுத்தார்; அனுமானுக்குசீதை இரண்டு வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் கொடுத்தார்; சீதைக்குஒரு முத்தாரத்தை ராமர் கொடுத் தார்.'' இலங்கைபக்கமேதலை எடுத்துவைத்துப்படுக்காத, போர்க்களத்தின்பக்கமே தலைகாட்டாத பார்ப்பனர் களுக்கு முப்பது கோடி பவு னாம், லட்சம் குதிரைகளாம், பசுக்களாம், கடைசிவரை எல்லாக் களத்திலும் துணை நின்ற அனுமானுக்கு இரண்டு வஸ்திரங்களாம். சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப் பானுக்கு ஒரு நீதி - இது தான் இராமாயணம்.
இராமாயணம் - அதன் அவதாரமான இராமன் இவை எல்லாம் யாருக்காக?
அனுமார் நிலையில் உள்ள தமிழர்கள் சிந்திப்பார்களா?
- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 26.3.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக