இவ்விடத்திலும் இன்னும் பல இடங்களிலும் இராம லட்சுமணர்கள் வேட்டையாடி, பூஜைக்குத் தகுந்த அதாவது வழக்கப்படி சாப்பிடத் தகுந்த வேட்டையாகாரம் சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் எழுதியிருக்கிறார்.
சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளக்கமாக எழுதியிருக்கிறார். இதைப் பற்றி நாம் குழப்பம் அடைய வேண்டியதில்லை.
க்ஷத்திரியர்களின் ஆசாரப்படி, மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை.
காலத்துக்கும் குல வழக்கத்துக்கும் ஏற்றபடி உடலைப் பாதுகாப்பதற்காக எந்த உணவும் தக்க வழியில் சம்பாதித்து, பூஜையில் வைத்து, அளவுக்கு மிஞ்சாமல் உண்பதில் யாதொரு தவறுமில்லை என்பது பாரத தேசத்துக்கு பொது தருமம்!
- சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்
“சக்கரவர்த்தி திருமகன்”
(முதற்பதிப்பு) பக்கம் 88
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக