டில்லியிலிருந்து வெளியாகும் 'Caravan' என்ற ஆங்கிலப் பத்திரி கையின் 15.8.1954-ஆம் தேதிய இதழில் "இராமாய ணத்தில் மதுக்குடி" என்ற தலைப்பில் டாக்டர் எஸ்.என். வியாஸ் என்பவர் எழுதி யுள்ள கட்டுரையில் காணப் படுவதாவது:
1. கிதைசுரா: இது காய்ச்சி இறக்கப்படும் சாராயத்துக்குப் பெயர்.
2. மைரேயா: வாசனை யூட்டப்பட்ட பானம்; சர்க்கார் மதுவென்றும் கூறுவர்.
3. மத்யா: போதை தரும் பானகம்.
4. மந்தா: இது சாதாரண சாராயத்திலுள்ள அமித போதை தணிக்கப்பட்டது. இதற்குப் பிதாமந்தா என்றும் பெயர். போதை இருக்காது; எனவே இதனை யாரும் குடிக்க விரும்பார்.
5. சுராபானம்: கிதை சுராவுக்கு மாறானது. கிதை சுராபானம் செயற்கையால் செய்யப்படுவது. சுரா என்பது இயற்கைச் சாராயம்; இயற்கை முறையில் வடித்தெடுக் கப்படுவது. இது சாதாரண மக்களின் பானம். இதைப் பற்றித் தான் புராணங்களில் அதிகமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
6. சிந்து: கழிவு வெல்லப் பாகிலிருந்து வடித்தெடுக்கும் பானம்.
7. சௌவீரகா: மட்டரகப் பானம்.
8. வாருணி: அக்காலத்தில் உப யோகிக்கப்பட்ட மது வகைகளில் மிகவும் காட்ட மானது (போதை அதிகமானது) இந்த பானம். இதனைக் குடித்த அதே நொடியில் போதை யுண் டாகித் தள்ளாடி விழச் செய்து விடுமாம்.
- இராம ராஜ்ஜியம் என்றால் ஒழுக்கத்தின் ஊற்று, அறத்தின் அரும் பெட்டகம் இல்லாதான் இல்லை, பொல் லாதானும் இல்லை என்று 'பூம்பூம்' வாசிக்கும் பார்ப் பனர்களும் சரி, அவர்களின் பாதரட் சைகளாக இருக்கும் வீடணர்களும் சரி, இராம ராஜ்ஜியம் குடிகார ராஜ்ஜி யமாக இருந்திருக்கிறது என்பதைக் காலந் தாழ்ந் தாவது இப்பொழுதாவது உணரட்டும்! 'சுரன் - குடிகாரன் சுரா பானம் அருந்துபவன் - இவர் கள்தான் பூதேவர்களாகிய பார்ப்பனர்கள்; அசுரன் என்பவர் சுரனின் எதிர்ப்பதம் - அதாவது சுராபானம் குடிக்க மறுத்தவர்கள், குடிப் பழக்க மில்லாதவர்கள் திராவிடர்கள் என்பதையும் தெரிந்து கொள்வீர்!
சுரனை அதாவது குடிப்பவனை யோக்கியனாக வும், அசுரனை அதாவது குடிக்க மறுப்பவனை அயோக் கியனாகவும் சித்தரிக்கும் யோக்கியதையை எடை போட்டுப் புரிந்து கொள்வீர்!
- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 24.3.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக