பக்கங்கள்

சனி, 24 பிப்ரவரி, 2018

இராமாயணம் பற்றி மறைமலை அடிகள்

ஒரு குரங்கு கடலைத் தாண்டிற்றென்றாலும் அஃது ஒரு மலையைப் பெயர்த்துக் கொணர்ந்ததென்றாலும், ஒருவன் பத்துத் தலைகளும், இருபது கைகளும் உடையவனாயிருந்தானென்றாலும், மற்றொருவன் இரண்டாயிரம் கைகள் உடையவனாயிருந்தா னென்றாலும், ஒருத்தியை வேறொருவன் சிறையாக எடுத்துச் சென்றதால் அவன் இருந்த நிலத்தைப் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றாலும், ஒருவன் தன் கையிலிருந்த வட்டத்தைச் சுற்றி எறிந்து பகலவனை மறைத்தான் என்றாலும் இன்னும் இவை போல்வன... பிறவும் எல்லாம் உலக இயற்கையில் எவரும் எங்கும் காணாதவையாகும். ஆகையால் இன்னோரன்ன பொருந்தாப் புனைவுரைகளை ஒரு கதையிலாதல் ஒரு நாடகத்திலாதல் இயைந்துரைத்தல் நல்லிசைப் புலமைக்கு ஒரு சிறிதும் ஒவ்வாது. ஏனென்றால் இயற்கைக்கு மாறுபட்ட கட்டுக் கதைகளைக் கூறும் நூல்களைப் பகுத்தறிவுடையவர் கற்பாராயின் அவர்க்கு அவை இன்பம் பயவாவாய் வெறுப்பினையே விளைவிக்கும்.


- மறைமலையடிகளின், “கோகிலாம்பாள்... கடிதங்கள்”, ஆக. 1931

- விடுதலை ஞாயிறு மலர், 17.2.18

3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. சிலப்பதிகாரம் சங்க இலக்கியத்தில் இராமாயணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் சிலப்பதிகாரம் பொய்யா?
    இயற்கைக்கு மாறான கட்டுக்கதை எனில் சிலப்பதிகாரத்தில் கண்ணகி தனது மார்பை பிய்த்து எறிந்து மதுரை மாநகரை எரித்தாள் என்று சொல்லப்பட்டுள்ளதே அது போன்று நடக்குமா. இல்லை எனில் சிலப்பதிகாரமும் கற்பனை கதையே என்று ஒப்புக் கொள்கிறீர்களா?
    இனி கண்ணகியை பெருமையடித்துக் கொள்ளக்கூடாது.

    பதிலளிநீக்கு