பக்கங்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2015

இராமாயணத்தில் மாமிசம் உண்ணும் காட்சிகள்


பொறியாளர்
ப. கோவிந்தராசன்
BE,MBA,MA (HISTORY) MA (LINGUISTICS) 


இராமாயண காலத்தில் ஆரியர்கள் செய்த யாகங்களில்  நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டன.  யாகங்கள் செய்வது மிருகங்களை வேட்டை ஆடு வதற்கு சமம். ஏனென்றால் யாகங்கள் செய்தாலும் வேட்டையாடினாலும் கிடைக்கும் முதல் பலன் சாப்பிட மாமிசந்தான்.
இவ்வாறு யாகங்கள் செய்து மாமிசம் சாப்பிட்ட ஆரியர்கள் மிகவும் போற் றிப் புகழ்வது வால்மீகி சொல்ல பிள் ளையார் அதை பனை ஓலையில் எழுதிய இராமாயணம் ஆகும்.
அந்த இராமாயணத்தில் பல உயிர்களைப் பலியிட்டு தசரதன் செய்த அசுவமேத யாகத் தீயில் பிரம்மா ஒரு தேவ தூதனைத் தோன்றச் செய்தார். அவன் தந்த தேவப் பாயசத்தை உண்ட கௌசல்யா பெற்ற குழந்தை தான் விஷ்ணுவின் ராம அவதாரம்.
அந்த யாகத்தில் பலியிடப்பட்ட உயிர்கள் பின்வருமாறு குதிரை பாம்புகள் மற்றும் 300 உயிர்கள் (தரை, நீர், ஆகாயம்  ஆகியவற்றில் வாழும் விலங்கினங்கள்). யாகம் எந்த விதக் குறையும் இல்லாமல் முறைப்படி செய்யப்பட்டு இந்திரன் முதலான தெய்வங்களுக்கு அவிர்ப் பாகம் அளிக்கப்பட்டது. இவ்வாறு மாமிசம் ராமனுடைய வாழ்க்கையில் துவக் கம் முதல்  இறுதி வரை தொடர்கிறது.
அந்த இராமாயணத்தில் காணப் படும் மாமிசம் பற்றிய காட்சிகள் பின்வருமாறு.
1.இராமன் வனவாசம் போகும் வழியில் சீதா கங்கையை வணங்கி, அவர்கள் மூவரையும் பாதுகாப்பாக நதியைக் கடக்க உதவுமாறும் அவ்வாறு உதவினால் திரும்பி வருகையில் கங்கை நதிக்குப் பல வகையான மாமிசத்தையும் ஆயரக்கணக்கான தேன் குடங்களையும் பலியாகத் தருவதாகவும் வேண்டினாள். (பக்கம் 388)
2.இராமன் மத்சய இராச்சியத்தை சேர்ந்த காட்டுப் பகுதியை  அடைந் ததும் ராமனும் சீதையும் பலவகை மான்கள். கரடிகள் போன்ற பலவகை மிருகங்களை வேட்டையாடி சமைத்து உண்டனர். (388).
3. அயோத்தியில் இருந்து  இரா மனைச் சந்திக்க சென்ற பரதன் தன்  சேனை வீரர்களுக்கான உணவு சேமிப் புகளில் மாமிசம் உலர்ந்த மாமிசம், கிழங்கு கனிகள் மற்றும் மரவுரி ஆடைகள் இருந்தன. (பக்கம் 476)
4. இராமனைத் தேடி பரதன் தன்னுடைய மந்திரிகள் அதிகாரிகள்  மற்றும் படையுடன் பரத்வாஜ் முனி வரின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான். அவர்கள் அனைவருக்கும் இரவு விருந்தும் ஓய்வெடுக்க இடமும் முனிவர் ஏற்பாடு செய்தார். அந்த விருந்தின் சிறப்புக்கள் பின்வருமாறு:
4.1. மது, பழச்சாறு முதலான உற் சாகப் பானங்கள் தனித்தனி ஆறுகளாக ஓடின. அந்த ஆறுகளின் இரு கரை களிலும் விருந்தினர்கள் தங்குவதற்காக மாளிகைகள் உருவாக்கப்பட்டன.
4.3. மலை போல் குவிக்கப்பட்ட சாதம் மற்றும் இதர உணவு வகைகள் மற்றும் குளம் போல் மைத்ரேயா என்ற மது. அதைச் சுற்றி மலை போல் சமைக்கப்பட்ட பல்வகை உயிர்களின் மாமிசம். அந்த உயிர்கள் மான், மயில் வாத்து மற்றும் பல்வேறு எண்ணற்ற விலங்குகள் ஆகும்.
4.4. தேவலோகத்தில் இருந்து இறங்கிய ரம்பா, மேனகா, ஊர்வசி ஆகி யோரின் நடனம் இந்த ஏற்பாட்டை செய்தவர்கள்- -இந்திரன் பிரம்மா, எமன், வருணன், குபேரன், விசுவகர்மன் மற்றும் அவனது மனைவி மாயா போன்ற பல தேவர்கள் ஆவர். இவை அனைத்து முனிவரின் தவ வலிமையால் செய்ய முடிந்தது. (பக்கம் 491)
5. மந்தாகினி நதிக்கரையில் ராமன் சுவையாக சமைக்கப்பட்ட மாமிசத்தை சீதையை உண்ணச் சொல்வது (பக்கம் ----505)
6. லங்கா தேசத்தில் அசோகவனத் தில் இராவணனால் சிறை வைக்கப் பட்ட சீதையை ஹனுமன் சந்தித்தான். அப்போது அவன் சீதையிடம் அவள் பிரிவால் வாடும் ராமனின் துயரத்தை  விவரித்தான். அப்போது இராமன் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்றும் மாமிசம் சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டான் என்றும தெரி வித்தான் (பக்கம் 1080)
மேற்கண்ட காட்சிகள் வெளிப்படுத் தும் செய்திகள் பின்வருமாறு
1. மாமிசம் இல்லையேல் யாகம் இல்லை.
2. யாகம் இல்லையேல் வேதம் இல்லை.
3. வேதம் இல்லையேல் இராமன் இல்லை.
மாமிசம் சாப்பட்ட  ஆரியர்கள் தான் வேதங்களை உருவாக்கினார்கள். வேதம் என்றால் அறிவு என்று பொருள்.
4. மாமிசம் இல்லையேல் வேதம் இல்லை, அறிவு இல்லை, வளர்ச்சி இல்லை. எனவே மாமிசம்  சாப்பிடுவ தற்கும், அறிவுக்கும் மற்றும் மதத்திற்கும் தொடர்பு இல்லை என இராமாயண காலத்தில் இருந்த  வசிஷ்டர் மற்றும் விசுவாமித்திரர் போன்ற மகரிஷிகள் நன்கு அறிந்து  இருந்தார்கள்.
ஆனால் திரேதாயுகத்தில் நடந்ததாகச் சொல் லப்படும் இராமாயணத்தை பெரிதும் நம்பும் இன்றைய இந்துத்துவாக்களுக்குத் தெரியாமல் போனது வியப்பைத் தரு கின்றது. (லிப்கோ வெளியிட்ட ஆங்கி லத்தில் எழுதப்பட்ட “தி இராமாயணம் ஆப் வால்மீகி’’ என்ற நூல். ஆசிரியர் சி.ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார். இந்த நூலில் காணப்படும் செய்திகள்படி கட்டுரை எழுதப்பட்டுள்ளது)
விடுதலை ஞா.ம.,24.10.15

2 கருத்துகள்:

  1. ராமர் மாமிசம் சாப்பிட்டாரா ?

    பல பெரியார்வாதிகளும், நாத்திகவாதிகளும் கூறும் ராமாயண பொய்களில் இதும் ஒன்று. அதாவது ராமரும், சீதையும் அந்தப்புரத்தில் போதையில் மது, மாமிசம் சாப்பிட்டதாக கூறுகிறார்கள். அது முழுக்க முழுக்க பொய். அதன் உண்மை இங்கே கொடுத்துளோம் .....

    வால்மீகி ராமாயணம் ... உத்தர காண்டம்- ஸர்கம்-42 வசனம், 18, 19 இல் உள்ள உண்மை மொழிபெயர்ப்பு ..

    'தேவேந்திரன், தன் கையால் இந்திராணிக்கு அமுதத்தை கொடுப்பதை போல் , ராமன் தன கையால் சீதைக்கு இனிய பானங்களை எடுத்து கொடுத்தார்' -18

    'மாம்ஸாநி ச ஸீம்ருஷ்டாநி பலாநி விவிதாநி ச
    ராமஸ்யாப் யவஹாரார்தம் கிங்கராஸ்தூர்ணமாஹரத்'

    'அப்போது, ராமன் உண்பதற்காக அரச போகத்திர்குரிய உயர்வகை உணவுகளையும், பல்வகை பழங்களும் (தோல் உரிக்கப்பட்டதும்) வெகு விரைவில் கொண்டு வந்தனர்' -19

    வசனம், 19 இல் உள்ள 'மாம்ஸ' என்கிற வார்த்தை மாமிசத்தை குறிக்கவில்லை. சமஸ்கிருதத்தில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்களை உடையது. இதில் கூறுவது 'தோலுரித்த பழங்களை' என்பதை கூறுகிறது. மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் பகவானுக்கு மாம்பழங்களை நைவேத்தியம் செய்யும் போது, பின்வரும் இதே 'மாம்ச' வார்த்தையுடைய ஸ்லோகத்தையே நைவேத்தியம் செய்யும் பொது சொல்கிறார்கள். அது

    'இதி மாம்ஸ கண்ட ஸமர்பயாமி'

    'பகவானே இந்த தோலுரித்த பழங்களை ஏற்று கொள்ளுங்கள் ' என்பதே இதன் அர்த்தம்

    அதாவது இதில் மாம்ஸ என்பதன் அர்த்தம் 'தோலுறித்த' என்பதே. ஆனால் இதற்க்கு விளக்கம் தெரியாத ராமாயண மொழிபெயர்ப்பாளர்கள் இப்படி சில ராமாயண மொழிபெயர்ப்பில் மாமிசம் சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு .

    மேலும், ராமர் காட்டில் இருந்த கஷ்டமான சூழ்நிலையிலும், காட்டில் வாழ்த்த 14 வருடங்களிலும் கூட தான் மாமிசம் உண்ணாமல் இருந்த விரதத்தை கடைபிடித்ததாக அயோத்யா காண்டம், ஸர்கம்-20 , வசனம்-29 இல் கூறுகிறார்.

    மேலும், இந்த அத்தியாயம் முழுவதுமே, ராமர் அரசன் ஆகையால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பல இசை, மற்றும் நடன வல்லுநர்களால் தினமும் நடந்ததாகவும், ராமர் அவர்களை கவுரவித்து பல பரிசுகளை வழங்கியதாகவும் வசனம் 20,21 கூறுகிறது .

    இதில் என்ன தவறு உள்ளது. அந்த கால அரசர்கள் இவ்வாறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் தானே. இதில் எங்கே ஆபாசம் உள்ளது ?

    மேலும், 'அறம் அறிந்தவராக ராமன் பகலின் முற்பகுதியில் அறக்கடமைகளை செய்துவிட்டு, பின்பாதியில் அந்தப்புரத்தில் கழித்தார்'- வசனம் 25

    'சீதையும் பகல்வேளையின் முற்பகுதியில் தெய்வ வழிபாடுகளை செய்துவிட்டு, மாமியார்கள் எல்லோருக்கும் சமமான முறையில் பணிவிடை செய்து போற்றினால்' - வசனம் 26

    பின்னர் அவள் கண்கவர் அணிகலன்களை அணிந்து கொண்டு, தேவலோகத்தில் வீற்றிருக்கும் இந்திரன் அருகே உள்ள இந்திராணிதேவி செல்வதை போல, இவள் ராமன் அருகே போய் உட்கார்ந்தாள்' - வசனம் 27

    இப்படி இந்த சரகம் 42 முழுவதும் இவர்களது அரசர், அரசியின் மகிச்சிகரமான வாழ்க்கையை தான் கூறுகிறது. இதில் எந்தவித ஆபாசமான நிகழ்ச்சிகளோ, மாமிசம் சாப்பிட்டதாகவோ, மதுபானம் அருந்தியதாகவோ எங்குமே இல்லை .

    பதிலளிநீக்கு
  2. Pre-sets are simply a bunch of pre-selected categories and tasks. Our Default pre-set focuses on roulettes 인터넷카지노 that capable of to} do} by your self, with out the more excessive fetishes. If that's still a bit too excessive for you, please choose our Beginner pre-set. Your filters have been disabled to forestall roulettes on this web page from probably being hidden as a result of} excluded categories.

    பதிலளிநீக்கு