வால்மீகி இராமாயணம்தான் எல்லா
இராமாயணத்துக்கும் மூல நூல். அதில் இராமனைப்பற்றி என்ன கூறியிருக்கிறது என்பதுதான்
முக்கியம்.
தந்தை சொன்னவுடன் ராமன் அப்படியே கட்டுப்பட்டு காடேகிடவில்லை.
எந்த
மடையனாவது தன் இஷ்டப்படி யெல்லாம் நடந்து வரும் மகனை காட்டுக்கு அனுப்ப
சம்மதிப்பானா? என்று இலட்சு மணனிடம் தன் தகப்பனைக் குறை
சொல் லித் துக்கப்படுகிறான் ராமன் (அயோத்தியா காண்டம் 53ஆவது சருக்கம்)
இந்த ஒரு
சோறு போதுமே!
சீதையின்
யோக்கியதை தான் என்ன?
மாரீசன்
மானாக வந்த போது, அதனைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று
சீதை சொன்னபோது, மானைத் துரத்திக் கொண்டு ஓடிய ராமன் வெகு
நேரம் வராமல் இருந்த நிலையில் லட்சுமணா என்ற குரல் மட்டும் கேட்ட நேரத்தில், தன் அருகில் இருந்த லட்சுமணனை நோக்கி
ராமனுக்கு ஏதோ ஆபத்து - விரைந்து செல் என்று சொன்ன நேரத்தில், இலட்சுமணன் அகலாது இருந்த நிலையில் சீதை
என்ன சொல்லுகிறார்?
அடபாவி!
என்னைக் கைப்பற்றக் கருதி, இராமன் சாகட்டும் என்று போகாமல்
இருக்கிறாயா? இதற்குத்தான் எங்கள்கூட யோக்கியன் போல
வந்தாயா? அட சண் டாளா! நீ என் மீது ஆசை வைத்து இரா
மனைக் கொல்ல நினைக்கின்றாய்; பரதன் உன்னை
எங்களோடு இதற்காகவே அனுப் பினானா? நீயாவது, பரதனாவது என்னை அனுபவிக்க நான் ஒப்ப மாட்டேன் என்றாளே சீதை.
இலட்சுமணன்
தாயே இப்படியெல்லாம் பேசக் கூடாது! என்று வணக்கமாகச் சொன்னபோது சீதை ஏ வஞ்சகா!
இப்படி யாவது பேசிக் கொண்டு இன்னும் சற்று நேரம் என்னைப் பார்த்துக் கொண்டு இருக்
கலாம் என்று பார்க்கிறாயா? என்றாள் சீதை (ஆரண்ய காண்டம், 45ஆவது சருக்கம்)
இலட்சுமணனின் யோக்கியதைதான் என்ன?
சூர்ப்பனகையிடம், சீதை கெட்ட நடத்தையுள்ளவள், கொங்கை சரிந்தவள் என்கிறானே!
(ஆரண்யகாண்டம் 18ஆவது சருக்கம்) தாடகை, சூர்ப்பனகை, அயோமுகி ஆகிய பெண்களை காது, மூக்கு முலை ஆகியவைகளைக் கொய்து கொடுமை
செய்தவன் ஆயிற்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக