பக்கங்கள்

புதன், 30 மே, 2018

இராமாயணத்தைப் பெரியார் எதிர்த்தார்; இன்றைக்கு நாமும் எதிர்க்கிறோம்

இராமராஜ்ஜியம் என்றால் அது வருணாசிரம தர்ம இராஜ்ஜியம்தான்- பார்ப்பனர்களை உயர்த்திப் பிடிப்பதுதான் இராமராஜ்ஜியம்!


சென்னை சிறப்புக் கூட்டத்தில்  தமிழர் தலைவரின் ஆதாரப்பூர்வ  உரை




சென்னை, மே 19- இராமாயணத்தைப் பெரியார் அவர்கள் எதிர்த்தார்கள். இன்றைக்கும் நாம் எதிர்க்கிறோம். இராம ராஜ்ஜியம் என்று சொன்னால், அது வருணாசிரம தர்ம இராஜ்ஜியம் - பார்ப்பனர்களை உயர்த்திப் பிடிப்பதுதான் இராமராஜ்ஜியம் - பார்ப்பன உரிமைகளை மட்டும் காப்பாற்றி, மற்றவர்களை அழிப்பதுதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

'இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம்'


10.5.2018 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இராமாயணம் - இராமன் - இராமராஜ்ஜியம் என்ற தலைப்பில் நடைபெற்ற  ஆய்வு சொற்பொழிவு-3 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஜைன மதம், சைவ மதம் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு, மிக மோசமாக இந்து மதத்தைத் தாக்கியது யார் என்று சொன்னால், ஆதிசங்கரன்தான் என்று தயானந்த சரசுவதி சொல்கிறார்.

Hindutva: Exploring the Idea of 
Hindu Nationalism


Philosipically Dayananda had little sympathy with Shankara, but took a generous view of his philosophy. This was because he felt that Shankara might have uttered several untruths in order to defeat the Jains. Pragmatism could have impelled him to articulate reality differently, whether it was the nature of God, or of Atman and Brahman. In the context of Shankara's duel with the Jains, says Dayananda, it was understandable that he had to resort to distorting the truth; taken in itself, Shankara's philosophy was replete with falsehoods.

At this point, Dayananda undertakes a vitriolic and unsparing examination of all sects found in Aryavarta. Shaivism and the Vama Margis combined together and introduced the worship of male and female reproductive organs, the linga and the jaladhari. Dayananda calls them ‘unblushing wretches.' who were not ashamed of following such 'idiotic practices'. Skulls, stones and reproductive organs began being worshipped as a means to attain both material and spiritual ends. In his eyes, the Vaishnavites were no better. Their founder, Shathakopa, says Dayananda, was the son of a professional prostitute. His successor, Munivahana, was the son of a scavenger, who was succeeded by Yavanacharya, a man born in a Ramanuja, who was the fourth in the line of succession, was a Brahmin, and was the one who propagated the Vaishnava creed in a systematic fashion.
Jains, Buddhists, Shaivites and Vaishnavites completely perverted the Vedic idea of an abstract, omniscient, omnipotent and all-merciful God. Instead, they introduced diabolical practices in the name of Vedic religion.

Now if the wearing of the stones of a fruit and the besmearing of the body with ashes can lead to salvation, why then the donkeys and pigs and other animals who wallow in dust, and Bhils and other low-born men who wear strings of fruit-stones on their bodies (must be] already saved.
Only savages, argues Dayananda, would wear rudraksha, tulsi, lotus buds, blades of grass, sandal and cover their bodies with ashes.  And the savages are only a little better than beasts. To believe in the efficacy of marking the forehead with a sign, tilak, to wear a rosary, to worship idols, to blow conches, to ring bells, to offer flowers, burn incense, apply sandalwood paste - all these are a denial of the freedom of will and a denial of God. These practices and observances had no sanction, whatsoever, in the Vedas.

இதன் தமிழாக்கம் வருமாறு:


சமண முனிவரான தயானந்தாவின் தத்துவமும், ஆதிசங்கரர் சொல்லிய அத்வைதமும் கிட்டத்தட்ட ஒற்றுப்போகிறது. இரண்டுமே ஒன்று போல் தோன்றும். ஆனால், சமணர்கள் ஆதிசங்கரரின் அத்வைத தத்து வமும் தயானந்த முனியின் கொள்கையும் ஒன்று அல்ல என்று வாதிடுவார்கள். உண்மையில் இரண்டுமே கொள்கைகளைப் பரப்புவதில் அதிக வேறுபாடுகளைக் கொண்டதுதான். இயற்கையே கடவுள் என்பது சமண தத்துவம். ஆனால் பிரம்மா போன்றவர்களே தெய்வம் என்கிறது ஆதிசங்கரரின் தத்துவம். ஆதிசங்கரர் சமண தத்துவத்தில் கொள்கையை திரித்து உண்மையை மறைத்துவிட்டார். மேலும் சங்கரரின் கொள்கையில் பொய்வாதமே அதிகம் இருந்தது.  இதே நேரத்தில் தயானந்தா முனி பண்டைய தத்துவ நூல்களில் இருந்து பல உண்மைகளை வாழ்க்கைத் தத்துவமான மெய்யியலை வழங்கினார்.  சைவம் மற்றும் இதர சனாதன வழிமுறைகள் பல்வேறு சமூகத்தில் அரு வறுப்பான வழிமுறைகளை கடவுள் வழிபாடாக கொண்டிருந்தது, உதாரணமாக ஆண் பெண் பிறப்புறுப்புகளை வழிபடுதல், போன்றவைகளைக் கூறலாம். இதை தயானந்தா கடுமையாக எதிர்த்தார், இதைச்செய்பவர்கள் வெட்கமில்லாத, முட்டாள்கள் என்றும், இது ஒரு மகாமடத்தனமாக வழிபாட்டு முறை என்றும் சாடினார். மண்டையோடு, இழைக் கப்பட்ட கற்கள் (சிலைகள்) பாலியல் உறுப்புகள் போன்ற வைகளை வழிபடுவது அறிவார்ந்த வழிபாட்டு முறையல்ல என்று கூறினார்.

மேலும் சைவத்தோடு வைணவ வழிபாட்டு முறை களை கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். இதனால் வைணவர்களும் இவருக்கு எதிராக இருந்தனர். வைணவ வழிபாட்டு முறையை ஒழுங்குபடுத்தி வைணவ புரட்சிக்கு வித்திட்ட சடகோபர் தயானந்தரை பாலியல் தொழிலாளிக்கு பிறந்தவர் என்றும், இவர் அடிமைத் தந்தைக்கு பிறந்தவர் என்று பரப்புரை செய்துவந்தார்.

மேலும் வைணவ தர்மத்தை ஒழிக்க சபதமெடுத்து வந்த பாவி என்று கூறினார். அவருக்குப் பின் வந்த ராமானுஜரும், சமணமுனி தயானந்தாமீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறிவந்தார்.  வைணவ மதத் தலைவர்கள் தொடர்ந்து தயானந்த முனியைக் குறித்து மோசமான பிரச்சாரங்களைச் செய்வதிலேயே குறியாக இருந்தனர்.     சமண மற்றும் பவுத்த கொள்கைகள் அமைதியான வாழ்க்கை மார்க்கத்தையே தத்துவ மாக மக்களிடையே கொண்டு சென்றனர். ஆரம்ப காலத்தில் இதையே கைக்கொண்ட சைவ மற்றும் வைணவ மதங்கள் பிற்காலத்தில் தங்களில் இருப்பை வலுப்படுத்திக்கொள்ள வேத மதத்தின் பல மூடத்தனமாகக் கொள்கைகளை தாங்களும் கைக்கொண்டு அதை அப்படியே மக்களும் பின்பற்ற வைத்தனர்  தற்போது வேதமதத்தினர் சைவர்கள் வைணவர்கள் கைக்கொள்ளும் ஒரு பழக்கமாக மாலைகளை அணிதல், சாம்பலைப் பூசிக் கொள்வது போன்றவை அடிமை அடையாளம், கழுதைகள் சாம்பலிலும், தூசுகளிலும் புரள்வது மற்றும் பன்றிகள் சகதியில் புரள்வது போன்றதுதான் திருநீறு பூசிக்கொள்வது உடல் முழுவதும் பட்டைகளை அடித்துக்கொள்வது போன்றவை.

அதே போல் கற்களை கேர்த்து மாலையாக போட் டுக்கொள்வது, துளசிமாலை அணிவது போன்ற வைகளும் ஒரு அடிமை வழிமுறைதான்.  மேலும் ருத்துராட்ச கொட்டை மாலை அணிவது, தாமரை மொட்டுக்களை மாலையாக அணிந்துகொள்வது, புற்களை மாலையாக அணிவது, மற்றும் சந்தனம், சாம்பல் கொண்டு பட்டைகள் மற்றும் நாமம் அணிந்துகொள்வது, நெற்றியில் பட்டை தீட்டுவது, நாமம் போடுவது, அதேபோல்  தீமூட்டி யாகம் வளர்ப்பது, மணியடிப்பது, வாசனைக் குச்சிகளைக் கொளுத்துவது, சந்தனக்கட்டைகளை தீயில் போட்டு பொசுக்குவது போன்றவைகள் கடவுள் மீது உள்ள நம்பிக்கையினால்தானா? இது போன்ற நடைமுறைகள் கடவுள் ஏற்றுக்கொள்வாரா? வேதங்களில் இது போன்ற ஒரு செயல்பாடுகளை செய்ய எந்த இடத்திலும் ஊக்குவிக்கவில்லை.

பாமர மக்கள் வேதத்தைப் படிக்கக்கூடாது என்பதற்காகத் தான் புராணங்கள். அதற்காகத்தான் மகாபாரதம். அதற்காகத் தான் இராமாயணம். இராமன் என்ன சொன்னான், பார்ப்பனர்களை உயர்த்து.

கடவுளை கும்பிடுவது முக்கியமல்ல, பார்ப்பனர்களைத்தான் கும்பிடவேண்டும்


கம்ப இராமாயண பாட்டை எடுத்து உங்களுக்குச் சொன் னேன்.

கரிய மாலினும், கண்ணுத லானினும்,


உரிய தாமரை மேல் உரைவானினும்,


விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,


பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.


கடவுளைவிட மேலானவர்கள் பார்ப்பான். எனவே, கட வுளை கும்பிடுவது முக்கியமல்ல, பார்ப்பனர்களைத்தான் கும்பிடவேண்டும் என்கிற உணர்வை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

அதற்காகவே என்ன செய்கிறார்கள் என்றால், கடவுள் அவதாரம் எடுத்தார் என்று சொல்லிவிட்டு, ஒவ்வொரு கடவுளுக்கும் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இராம நவமி; கிருஷ்ணனுக்கு கோகுலாஷ்மி. கந்தனுக்கு கந்த சஷ்டி.

இந்த வார்த்தைகளைப் பார்த்தாலே, தமிழுக்கும், அந்த வார்த்தைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றால், தமிழ னுக்கும், திராவிடனுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என் பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

இராம நவமி என்கிறார்களே, ஒரு கேள்வி - இராமன் எப்பொழுது பிறந்தான் - இராமாயணம் நடந்ததினால்தான், இராமன் கதாநாயகன். இராமாயணம் நடந்தது என்று இவன் சொல்வது திரேதா யுகத்தில்.

கிருதயுகம் (அல்லது) சத்திய யுகம், திரேதா யுகம், துவா பரயுகம். இவற்றின் காலவரையாக கூறப்படுபவை: கிருதயுகம் - 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள், திரேதா யுகம் - 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள், துவாபர யுகம் - 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். கலியுகம் - 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள். இராமன் எந்தத் திதியில் பிறக்கிறான் - இராம நவமி. சிறீராம நவமி என்று கொண்டாடுகிறார்கள். இப்பொழுது பார்த்தீர்களேயானால், அந்த சிறீராம நவமியையொட்டி வங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும், குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், இங்கேயும் ராம நவமியைக் கொண்டாடினால், அந்த அளவிற்கு இங்கே எடுபடாது.

பெரியார் 1920 ஆம் ஆண்டிலேயே  அம்பலப்படுத்தினார்


அதற்கு என்ன காரணம்? பெரியார் அவர்கள், இராமன், சீதை, இராமாயணம், இராமராஜ்ஜிய யோக்கியதையை, 1920 ஆம் ஆண்டிலிருந்தே மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விட்டார். அதனால்தான், இராமனை வைத்து இங்கே அரசி யல் செய்ய முடியவில்லை அவர்களால். இராமனை வைத்து உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்க முடிகிறது; பீகாரில் ஆட்சியைப் பிடிக்க முடிகிறது. ஆனால், இங்கே அவர்களின் அந்த யுக்தி எடுபடவில்லை.

இராமன் எப்படி பிறந்தான் என்பதே கேள்விக்குறி


திரேதா யுகத்தில் அவர்கள் செய்திருக்கிற விஷயம் - இராமன் நவமியில் பிறந்தான் என்கிறார்கள். அதில் ஏறத்தாழ 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது திரேதா யுகம். 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக யாராவது ஜாதகம் எழுதியிருக்கிறானா? யார் ஜாதகம் எழுதியது? எந்த ஜாதகத்தைப் பார்த்தார்கள்? இராமன் எப்படி பிறந்தான் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

ஒருவன் பாயாசம் குடித்ததினால் இராமன் பிறந்தான் என் கிறான். இன்னொருவன் புத்திர காமேசு யாகம் செய்த தினால்தான் இராமன் பிறந்தான் என்கிறான். இன்னொரு பக்கம் அவதாரம் எடுத்தான் இராமன் என்கிறார்கள். இதில் என்ன பிறந்த தேதி?

பெரியார் செப்டம்பர் 17 ஆம் தேதி பிறந்தார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது; காமராஜர் ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால், இராமன் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. 20 லட்சம் ஆண்டுகளுக்குமுன் எந்த மொழி இருந்தது? அது மட்டுமல்ல, 20 லட்சம் ஆண்டுகளுக்குமுன் உள்ள அந்தக் குறிப்பை அழியாமல் பாதுகாத்தவன் யார்?

காற்றுக்குப் பிறந்தவன் அனுமானாம்!


திடீர் திடீரென்று கற்பனைகளை அள்ளி விடுவார்கள் அவர்கள். ஆர்.எஸ்.எஸ்.தான் இதற்கு கர்த்தா. அதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது. திடீரென்று குரங்குக்கு அனுமன் ஜெயந்தி என்று சொல்லி, அனுமார் சிலைக்கு ஆயிரம் வடைமலை சாத்த வேண்டும் என்று சொல்வார்கள். அனு மான் ஜெயந்தி கொண்டாடவேண்டும் என்கிறார்கள். அனு மானைப்பற்றி புராணத்தில் என்ன கதை எழுதியிருக்கிறார்கள் என்றால், வாயு புத்திரன் என்கிறார்கள். காற்றுக்குப் பிறந்தவன் அனுமான் என்கிறார்கள். காற்றுக்குப் பிறந்ததை எப்படி கணக்கெடுப்பீர்கள்?

திடீரென்று என்ன சொல்வார்கள் என்றால், வால்மீகி ஜெயந்தி என்பார்கள். இப்பொழுது நாரதர் ஜெயந்தி என்கிறார்கள். ஜெயந்தி, அஷ்டமி, நவமி போன்ற சொற்கள் எதுவுமே தமிழ்ச் சொற்கள் கிடையாது.

Economic and Political Weekly


இதனுடைய அடிப்படை என்னவென்றால், பார்ப்பனர் களை உயர்த்துவதுதான். இந்த வாரம் வெளிவந்துள்ள (ஏப்ரல் 7) Economic and Political Weekly பத்திரிகை. இந்தப் பத்திரிகையை ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் படிக்கக்கூடிய ஒரு பத்திரிகை. அந்தப் பத்திரிகையில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள் Ram Navami to Ram Mandir என்ற தலைப்பில். ராம் மந்திர் என்றால் என்ன? ராமனுக்குக் கோவில் கட்டுவது. ராமனுக்குக் கோவில் கட்டுகின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசியலில் ஓட்டு வாங்கவேண்டும். அதன்மூலமாக இந்துத்துவா என்கிற கருத்தை விசிறி விட்டு, வெறி உண்டாக்கவேண்டும் என்கிற அடிப்படையில் இதைச் செய்கிறார்கள்.

Ram Navami to Ram Mandir


‘‘Ram Navami celebrations this year have been marked by belligerent rallies of young men on motorbikes, waving swords, and saffron flags. Typically, these well-planned processions start from a Hindu neighbourhood accompanied by religious songs and slogans. They then proceed towards Muslim neighbourhoods, where the songs and sloganeering become blatantly communal and the aim is obvious. Several such rallies were led by local Sangh Parivar leaders/cadres and joined by their counterparts from neighbouring Uttar Pradesh and Jharkhand.


In March 2018, in Bihar, communal incidents began with the BJP's loss in the Araria bypolls to the Rashtriya Janata Dal (RJD). and continued up to the Ram Navami celebrations, affecting 10 districts, resulting in one death and injuries to around 65 people. In West Bengal, the clashes were concentrated around Ram Navami, leaving four dead in Asansol. The party's state and national leaders violated prohibitory orders in Bengal and toured the affected areas selectively, visiting only Hindu pockets, and a BJP union minister's son was arrested on rioting charges in Bihar. The prudence and responsibility expected of the political leadership was shown, however, by the victim's father, Imdadulla Rashidi, a Muslim priest. While addressing the media, Rashidi lamented the brutal death of his young son by rioters and appealed to his community for peace, not revenge.


இதன் தமிழாக்கம் வருமாறு:

இந்த ஆண்டு ராமநவமி கொண்டாட்டம் மிகவும் பயங்கரமாக இருந்தது. இந்துத்துவ அமைப்பினர், தலையில் காவிப் பட்டையைக் கட்டிக்கொண்டு, கைகளில் வாள்களை ஏந்திக்கொண்டு காற்றில் சுழற் றியபடி மோட்டார் வாகனத்தில் வலம் வந்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிளில் காவிக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன. ஊர்வலத்தில் சென்றவர்கள் திட்டமிட்டபடி இசுலாமியர்கள் வாழும் பகுதிக்குச் சென்ற போது, இசுலாமியர்கள் குறித்து அவதூறாக முழக்கங்களை எழுப்பிச் சென்று கொண்டிருந்தனர்.

இந்த ஊர்வலத்தில் உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வந்த பாஜக, காவி அமைப்புகளின் பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.   மார்ச் மாதம் நடந்த இந்த ஊர்வலத்தின் காரணமாக மக்கள் பாஜகவினரை சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் என்று புரிந்துகொண்டனர். இதனால் பீகார் அரரியா தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது. இவர்களது ராம் நவமி கொண்டாட்டம் பீகாரின் 10 மாவட்டங்களில் நடந்தது. அப்போது நடந்த கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார், 65 பேர் படுகாயமடைந்தனர்.

இதே போன்று அருகிலுள்ள மாநிலமான மேற்கு வங்கத்தில் ராம் நவமி அன்று காவி அமைப்புகள் நடத்திய ஆயுதம் தாங்கிய ஊர்வலம் தொடர்பாக மோதல்கள் ஏற்பட்டன. அங்கு கலவரம் உருவானது. அங்கு பாஜகவினரும், காவி அமைப்புகளும் அரசின் தடை உத்தரவை மீறி, ஊர்வலம் வந்து கலவரத்தில் ஈடுபட்டனர். பாஜகவின் மாநிலத் தலைவரே சட்டத்தை மதிக்காமல் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக முழக்கங் களை எழுப்பினார். பாஜக தலைவரின் மகனே கலவ ரத்தை முன்னின்று நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டார். பீகாரில் மத்திய அமைச்சர் ஒருவரின் மகனும் கல வரத்தை தூண்டிய காரணத்தால் கைது செய்யப்பட்டார்.

இது ஒருபுறமிருக்க, பீகாரில் இந்துத்துவா அமைப் பினர் கலவரத்தின் போது கொலை செய்யப்பட்ட ரஷீத் தந்தையும் இசுலாமிய மதகுருவான இம்ததுல்லா, தனது ஒரே மகனை இழந்த துயரமான நேரத்திலும், சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்; மத வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாக இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

எனவே, இராமன் எதற்குப் பயன்படுகிறான்? அமைதிக்கா? மக்களுடைய ஒற்றுமைக்காகவா? நல்லெண்ணத்திற்காகவா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஒன்றை நீங்கள் மிக முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இராமாயண ஆராய்ச்சி என்று சந்திரசேகர பாவலர் ஒவ்வொரு காண்டமாக எழுதியிருக்கிறார். அதில் கடைசி காண்டம், சம்பூகன் வதை படலம் வருகின்ற உத்தரகாண்டம்.

கம்பன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதற்கு உதாரணம், உத்தரகாண்டத்தையே பாடாமல் விட்டுவிட்டான். ஏனென்றால், உத்தரகாண்டத்தைப் பாடினால், சம்பூகனை சொல்லியாகவேண்டும். இராமன் பெரிய கதாநாயகன், யோக்கியன், நீதிமான் என்று சொல்ல முடியாது - ஏனென்றால், உத்தரகாண்டத்தில் இருக்கின்ற செய்தி அப்படி.

ஒன்பதாவது அத்தியாயம் - சருக்கங்கள் 5 முதல் 7 முடிய பகுதியில்.

இராமாயண ஆராய்ச்சியில் உத்தரகாண்டம். இராமராஜ் ஜியம் அதில்தான் நடக்கிறது.

இலக்குவணனுக்கு இராமன் சொன்ன கதை!


அந்தப் பகுதியைப் படிக்கிறேன் கேளுங்கள்.

இராமன் இலக்குவனை நோக்கி, தம்பி, நான்கு நாள்களாக நான் அரச காரியங்களைக் கவனிக்கவில்லை. அது கொடிய பாவம். நிருகன் குடிகளைக் கவனிக்காமையால் சாபம் பெற்றான் என்றார்.

இலக்குவன், அது எப்படி? என்று வினவினான்.

ராமன், நிருகன் என்ற அரசன் பிராமணரிடத்தில் பிரிய முள்ளவன்.  அவன் ஒரு பார்ப்பனருக்குச் சொந்தமான பசுவைத் தெரியாமல், மற்றொரு பார்ப்பனனுக்குத் தானம் செய்தான். அதை அறிந்து, சொந்தக்காரன், பசுவைப் பெற்ற வனை அழைத்து, அரசனைக் காண முடியாமல் போனதால், அவனை ஓணானாக சபித்தான். நிருகன் ஓணான் ஆனான். நிமி என்ற அரசன் வசிஷ்டனை யாகத் தலைவனாக இருக்க வேண்ட, அவர் தேவர் உலகம் சென்று வருகிறேன் என்று போக, நிமி கவுதமனை வைத்து வேள்வி நடத்தினான். வசிஷ்டன் அதை அறிந்து, அவனைக் காண வந்தபொழுது, அவன் தூங்கிக் கொண்டிருந்தமையால், உயிரில்லாமல் போக என சபித்தான். அதனால், நிமியும், வசிஷ்டவனை உயிர் அற்றவனாக சபித்தான். இருவரும் உயிரற்றவனாயினர்.

வசிஷ்டன், பிரம்மாவின் கட்டளையால், கடற்கரை யையுடைய - அங்கே வருணனின் உடைய ஆளுகையைக் கொண்டிருந்த மித்ரனும், வருணனும் இருப்பதைக் கண்டான். அவர்கள் அங்கே வந்த ஊர்வசியைக் கண்டு, காமுற்று, அவள் அனுமதிப்படி, தமது வீரியத்தை ஒரு குடத்தில் வைத்தனர். அதிலிருந்து அகத்தியன் தோன்ற, வசிஷ்டனும் உயிர் பெற்று எழுந்தான்.

இந்தக் கதை ராமன், லக்குமணனுக்குச் சொல்கிற கதை இது. ஒரு முட்டாள்தனத்திற்கு இன்னொரு முட்டாள்தனம் முட்டுக்கொடுப்பதா? அருவறுப்பு, ஆபாசம் நிறைந்த கதைகள்தான் இவை.

இன்னொரு இடத்தில்,

ஒரு நாய், தன்னை காரணமின்றி ஒரு பார்ப்பான் அடித்ததை இராமனிடம் தெரிவிக்க,

அமைச்சர், பார்ப்பனரை தண்டித்தலும், கொல்லுதலும் கூடாது. ஆனாலும், அரசனானவன் எவரையும் தண்டிக்க லாம் என கூற, இராமன் நாயின் வேண்டுதலின் பெயரில், பார்ப்பானை யானை மீது ஏற்றி, ஒரு குலத் தலைவனாக்கி அனுப்பினார்.

அதேபோல, கோட்டான் வீட்டில் குடிபுகுந்த பருந்தைக் கண்டிக்கத் தொடங்கும்பொழுது, எழுந்த அசிரீரிப் படி, பருந்தை அவன் தொட்டு, தேவனாக்கி அனுப்பினான்.

யமுனைக் கரையில் வசித்த முனிவர்கள், ராமனை அடைந்து, லவனாசுரனால் தனக்கு நேரும் துன்பங்களைக் கூறினர்.

இராமன், என் உயிரும், நாடும் பிராமணர்களுக்கே என்று கூறி உபசரித்து, சத்ருக்கனை லவனாசுர நாட்டிற்கு அரசனாய் முடிசூட்டி, லவணன் ஒரு சூலத்தை வைத்திருக்கிறான்; அதை அவன் வைத்திருக்கும்பொழுது அவனைக் கொல் லவே முடியாது. அதனால், அவன் உணவிற்காக வெளியில் செல்லும் சமயம் பார்த்து அவனை வளைத்துக் கொல் என்கிறான்.

அதேபோல இன்னொன்று,

இராமன் வாக்கால் நிருகன் என்ற அரசனிடம், பார்ப் பானிடம் பிரியமுள்ளவன் என்றும், அவர்களுக்கு நிரம்ப தானம் செய்தான் என்றும் செய்திகள் காணப்படுகின்றன. மேலும், இராமன் என் உயிரும், நாடும் பார்ப்பனர்களுக்காகவே என்ற செய்தியும் காணப்படுகிறது. பார்ப்பன மதத்தையும் நிலைநாட்ட வந்த இந்நூலில் வேறு எச்செய்திகள் காணப்படும். பார்ப்பனரை தண்டித்தலும் கூடாது. இராமனும், ஒரு பாவம் அறியாத நாயை, மண்டையை உடைத்து, பார்ப்பானை யானைமீது ஏற்றி, குலத்தலைவனாக ஆக்கி, வெகுமானித்த செய்தியும் எழுதப்பட்டுள்ளது.

எனவேதான், இவையெல்லாம் சம்பூகனுக்கு முன்பு நடைபெற்றவையாம்.

கிருதா யுகத்தில் பார்ப்பனர்கள் தவம் செய்தார்கள்; திரேதா யுகத்தில் சத்தியர்கள் தவம் செய்தனர். துவாபர யுகத்தில் வைசியர் தவம் செய்தனர். கலியுகத்தில் சூத்திரர் தவத்திற்குரியவர்.

சூத்திரர்களுக்கு சுக தர்மம்; பிராமணர்களுக்கு பயிரிடுதல் முதலியவை சமயமும் கிடையாது.

சம்பூகனின் தலையை வெட்டிய இராமன்!


இப்பொழுது உனது நாட்டில் ஒரு சூத்திரன் தவம் செய்கிறான். சூத்திரன் தவம் செய்வதினாலேயே, இந்தப் பையன் இறந்தான். நீ அவனைக் கண்டு கொன்றால், இந்தப் பையன் பிழைப்பான்.

இராமன் அதைக் கேட்டு மகிழ்ந்து, உடனே புறப்பட்டு, பல இடங்களிலும் தேடி, கடைசியாக தெற்குத் திக்கில், ஒரு மலையடிவாரத்தில் ஒருவன் தலைகீழாக தவம் செய்வதைக் கண்டான். இராமன், யார் நீ என்று வினவ, அந்தத் தவசி, நான் சூத்திரன். என் பெயர் சம்பூகன். நான் தேவ பதவியை அடைய இத்தவம் செய்கிறேன் என்றான்.

உடனே இராமன், தன் வாளால் அவனை வெட்டிக் கொன்றான்.

அப்பொழுது தேவர்கள், நீ நல்ல காரியம் செய்தாய்; இந்த சூத்திரன் தேவலோகம் அடையத் தகுந்தவனா? உனக்கு வேண்டிய வரம் கேள் என்கிறார்கள்.

இராமன், இறந்த பார்ப்பனப் பிள்ளை பிழைக்கவேண்டும் என்று வரம் கேட்டான்.

உடனே தேவர்கள், நீ சூத்திரனைக் கொன்றவுடனேயே அப்பிள்ளை பிழைத்து எழுந்தான் என்றனர்.

இராமனை அகத்தியனிடம் அழைத்துச் சென்றனர் - அகத்தியன் இராமனை வாழ்த்தி, நீயே ஆதிமூலம்; இன்றிரவு தங்கிப் போ என்று சொல்லி, ஒரு நகையைத் தந்தான். இராமன் அந்த நகையின் வரலாற்றை வினவினான்.

சம்பூகன் என்பவன் தவம் செய்ததினால், பார்ப்பனச் சிறுவன் இறந்து போனான் என்னும் கதை, எங்கேயோ அடிக்க, பல் உடைந்தது என்பது போலவும், தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெரி கட்டியது என்பது போலவும் இருக்கிறது.

இதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால், பார்ப்பனன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு வருணத்திற்குள், கிருதா யுகத்தில் பார்ப்பனர்கள் மட்டும் தவம் செய்ய அதிகாரிகளாக இருந்தார்களாம்.

திரேதா யுகத்தில் சத்திரியரும், துவாபர யுகத்தில் வைசி யரும் தவம் செய்யும் அதிகாரம் பெற்றார்களாம். கலியுகத்தில் சூத்திரர்கள் தவம் செய்ய அதிகாரம் பெற்றார்களாம்.

பஞ்சமா பாதகம் அன்றோ இக்கூற்றுகள் என்று இப்படி வரிசையாக இருக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

பார்ப்பன உரிமைகளை மட்டும் காப்பாற்றி, மற்றவர்களை அழிப்பதுதான்


எனவே, நண்பர்களே! இராமாயணத்தைப் பெரியார் அவர்கள் எதிர்த்தார்கள். இன்றைக்கும் நாம் எதிர்க்கிறோம். இராமராஜ்ஜியம் என்று சொன்னால், அது வருணாசிரம தர்ம இராஜ்ஜியம் - பார்ப்பனர்களை உயர்த்துகின்ற இராஜ்ஜியம் - பார்ப்பன உரிமைகளை மட்டும் காப்பாற்றி, மற்றவர்களை அழிப்பதுதான். அவன் வாழவேண்டும் என்று சொல்லவில்லை, இவனைக் கொல்லவேண்டும் என்கிறார்கள்.

சம்பூகன் என்ன குற்றம் செய்தான்? தவம் செய்தான்.  காரணம் என்னவென்றால், அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மனுதர்மத்தில் எழுதியிருக்கிறான்.

ஒரு சூத்திரன் ஞானியானாலும், மூடனானாலும் பிராம ணனே சூத்திரனுக்கு வணங்கத்தக்க தெய்வம்.

எனவே, சூத்திரன் யாரை தெய்வமாகக் கும்பிடவேண்டும்; பிராமணனை- பார்ப்பானை. அதைவிட்டுவிட்டு, நேரிடையாக நீ தலைகீழாக நின்று தவம் செய்தாலும், தேவலோகத்திற்குச் செல்ல முடியாது - பிராமணனாகவே ஆக முடியாது என்று சொல்வதின்மூலமாக,

காலங்காலமாக வருணாசிரம தர்மம் அங்கே ஆணி யடிக்கப்பட்டு விட்டது.

கம்பன் புளுகும் -வால்மீகி வாய்மையும்!


அடுத்து என்னுடைய சொற்பொழிவில்,

கம்பன் புளுகும் -வால்மீகி வாய்மையும்! எவ்வளவு பொருத்தமானது என்று சொல்லி, நான்காவது சொற்பொழிவில் உங்களைச் சந்திக்கிறேன் என்று சொல்லி, என் உரையை நிறைவு செய்கிறேன்.

இந்தச் சொற்பொழிவைக் கேட்ட நீங்கள், ஆழ்ந்து சிந்தியுங்கள், மற்றவர்களுக்கும் இந்தக் கருத்துகளைப் பரப் புங்கள், எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறி என்னுரையை முடிக்கிறேன்.

வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 19.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக