பக்கங்கள்

திங்கள், 14 மே, 2018

இராமாயணம் -இராமன் - இராமராஜ்யம் ஆய்வின் மூன்றாவது சொற்பொழிவு தமிழர் தலைவர் ஆசிரியர் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து உரையாற்றினார்


சென்னை, மே11 இராமாயணம் - இராமன் - இராம ராஜ்யம் எனும் தலைப்பிலான ஆய்வின் மூன்றாவது சொற்பொழிவு சிறப்புக்கூட்டம் நேற்று (10.5.2018) இரவு சென்னை வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அனைவரையும் வரவேற்று தொடக்க உரையாற் றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடுத்த கூட்டத்தின் தலைப்பாக ‘கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்’ என்பதை பார்வையாளர்களின் பலத்த வரவேற்புக்கிடையே அறிவித்தார்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து ஆய்வுரையாற்றினார்.

இழந்துபோன பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்காகவே இராமாயணம். இன்று உலக மலேரியா நாள். மலேரியாவை ஒழிக்க வேண்டும் என்றால், கொசுவை ஒழித்தால் மட்டும் போதாது. கொசுவை மட்டும் ஒழிப்பதென்றால், கொசு வர்த்தித் தொழில் செய்பவனுக்குத்தான் லாபம். கொசு உற்பத்தியாவதற்கு காரணமான நீர்நிலைகளைச் சுத்தப் படுத்த வேண்டும்.

இன்னமும் சமஸ்கிருத மொழி திணிப்பது, கல்வித் திட்டத்தில் இந்துத்துவாவைப் புகுத்துவதுகுறித்து ஆர்.எஸ்.எ-ஸ். ஏடு ஆர்கனைசரில் வெளியாகியுள்ளது. ‘Later on they introduced ‘Payasa theory’’ என்று குறிப்பிட்டு, வேதங்கள், சமஸ்கிருதம், பழைய கலாச்சாரங்களை சிறு வயது முதல் பிள்ளைகளிடம் திணிக்கின்ற கல்வித் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக ஆபத்தான அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உஜ்ஜயினி யில் கூடி முடிவெடுத்துள்ளார்கள்.இதற்கெல்லாம் ஒரே முடிவு மீண்டும் மோடி ஆட்சி இந்தியாவில் வரக்கூடாது. இங்கே பாஜகவுக்கு காவடி தூக்குகின்ற, நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள வர்கள் வரக்கூடாது.

துரோகம், வஞ்சகத்துக்கு அடிப்படை இராமாயணம். நன்றி காட்டாமல் போனால்கூட கவலையில்லை. எதிரி களுக்குக்கூட மன்னிப்பு காட்டலாம், ஆனால், துரோகி களுக்கு மன்னிப்பே கிடையாது.

அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்று அண்ணாவால் பாராட்டப்பட்டவரும், தந்தை பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான வ.ரா எனும் வ.ராமசாமி அய்யங்கார் ‘கோதைத் தீவு’ எனும் புதினத்தை எழுதி யுள்ளார். துரோகம் என்பதே இராமாயணத்தில் விபீஷண னிடமிருந்துதான் தொடங்கியது என்கிறார்.

துளசிதாஸ் இராமாயணம் இந்தியில் எழுதப்பட்டது. அதன் வார்த்தைகளை மண்டல் தனது அறிக்கையில் அப்படியே பயன்படுத்தியுள்ளார். துளசிதாஸ் இராமாய ணத்தில் மேளம், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் அடிவாங்க வேண்டும் என்று எழுதப்பட்டது.

துளசிதாஸ் என்கிற பெயரில் கோசாமி அய்யர் என்பவர்தான் இந்தியில் இராமாயணத்தை எழுதினார். அவர் வடநாட்டுக்கம்பன், தென்னாட்டு கோசாமி கம்பன் ஆவான். கம்பனின் துரோகம் என்பதை மறை மலையடிகள் எழுதியிருக்கிறார்.

சந்திரசேகர பாவலர் இராமாயணம் குறித்து எழுதி யிருக்கிறார்.

அமிர்தலிங்க அய்யர் இராமாயண விமர்சா எனும் நூலை எழுதியுள்ளார்.

புத்திர காமேஷ்டி, அசுவமேத யாகங்கள் ஏன்? குதிரையுடன் தசரதன் பத்தினிகள் மூவர் இருந்தது ஏன்? பாயசம் என்ற புதுக்கதையைக் கொண்டு வந்தனர்.

லிணீtமீக்ஷீ ஷீஸீ tலீமீஹ் வீஸீtக்ஷீஷீபீuநீமீபீ ‘றிணீஹ்ணீsணீ tலீமீஷீக்ஷீஹ்’

என்று குறிப்பிடுகிறார். பாயாசம் குடித்தால் இரைப் பைக்குள் செல்லுமா? கருப்பைக்குள் செல்லுமா?

தந்தை பெரியார் எடுத்துச்சொன்னார், குடிஅரசு ஏட்டில் விளக்கப்பட்டதால், கலைவாணர் அந்த கருத்து களை எடுத்துக்கூறினார்.

வருணாசிரம ஜாதிமுறைகுறித்து அம்பேத்கர் கூறும்போது, ‘நிக்ஷீணீபீமீபீ மிஸீமீஹீuணீறீவீtஹ்’ என்றார். நான்கு ஜாதிக்கு கீழே அய்ந்தாம் ஜாதியாக பஞ்சமன், அதற்கும் கீழே பெண்கள் உள்ளனர்.

மேளம், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் அடிப்ப தற்காகவே உள்ளதாக இராமன் கூறினான்.
தந்தை பெரியார் காங்கிரசிலிருந்தபோதே 1922ஆம் ஆண்டில் திருப்பூரில் இராமாயணத்துக்கு எதிராக பேசி னார். சம்புகன் என்ன செய்தான்? ஏன் அவனை வெட்ட வேண்டும் என்று கேட்டார். ஜாதிக்கு எதிராக துப்பாக்கியை நீட்டியவர் பெரியார்.

ஆத்திகன் என்றால் அப்படியே நம்புபவன். நாத்திகன் என்றால் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பவன்.

எல்லாரும் படிக்க வேண்டும், ஜாதி ஒழிப்பு, பெண் ணடிமை ஒழிப்பு என்று புத்தர் விழி திறந்தார்.

அசோகர் ஆட்சியில் புத்தம் பரவியது. பார்ப்பன செல்வாக்கு சரிந்தது. அதனால் இராமாயணம் வந்தது.

இவ்வாறு பல்வேறு தகவல்களை சுவைபட ஆதாரங் களுடன் எடுத்துக்காட்டி ஆய்வுரைஆற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

‘கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்’ என் பதே அடுத்த கூட்டத்தின் தலைப்பு என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டபோது பார்வை யாளர்கள் பெரிதும் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள்.

கழகத் துணைத் தலைவர் உரை

கார்ப்பரேட், பார்ப்பனிய மயமாகிவருகிறது, நீதிமன் றமும் அதனுடன் சேர்ந்து கொண்டுள்ளது. உடம்பெல் லாம் மூளை என்று பார்ப்பனர்களால் சொல்லப்பட்டவர் ராஜாஜி. மூளை இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொல்வார். ராஜாஜி இரண்டு முறை தமிழகத்தில் ஆட்சியில் இருந்தார். 1937ஆம் ஆண்டில் ராஜாஜி 2,500 பள்ளிகளை மூட உத்தரவிட்டார். 1937ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கல்வி நிலை எவ்வளவு இருந்திருக்கும்? ஆனால், அப்போதே 2,500 பள்ளிகளை மூடியவர் ராஜாஜி. அதன் பின்னர் கொல்லைப்புறமாக 1952இல் ஆட்சிக்கு வந்த ராஜாஜி  ஆறாயிரம் பள்ளிகளை மூடினார். பாதி நேரம் கல்வி, பாதி நேரம் குலத் தொழில் என்று உத்தரவிட்டார். வருணாசிரம, மனு தர்மத்தின்படி சூத்திரன் படிக்கக் கூடாது என்பதால் ராஜாஜி பள்ளிகளை மூடினார். குலக்கல்வி என்று பெரியார் எதிர்த்ததால் ராஜாஜி வீழ்த் தப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக சமூகநீதிக்கான போராட்டக்களம் இருந்து வருகிறது. பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீடு பெறுவதில் ஆண்டு வருவாய் ரூ.9ஆயிரம் என வரம்பு விதித்த எம்.ஜி.ஆர். அரசைக் கண்டித்து, அந்த ஆணையை தீயிட்டு பொசுக்கிய போராட்டத்தை திராவிடர் கழகம் செய்தது.

கலைஞர் ஆட்சியில் தமிழகத்துக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று ஆணை போட்டதன் விளைவாக பொதுப்போட்டிக்கான பிரிவிலும் தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வந்தார்கள்.
நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து, திராவிடர் கழகத் தின் சார்பில் டில்லி நாடாளுமன்றமுன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கான்ஸ்டிடியூஷன் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நீட் தேர்வு நம்பிள்ளைகளின் கல்வி உரிமையைப் பறிக்கிறது. இராமாயணம் வருணாசிரமத்தைக் காப்பாற் றத்தான் இருக்கிறது.

அயோத்தியாக்காண்டம் நூறாவது சருக்கத்தில் பரதனிடம் ராமன் சொல்கிறான் பவுத்தன், சார்வாகர் களிடம் பழகக்கூடாது. அவர்கள் வேதங்களை, புராணங் களை ஏற்காமல் தருக்கத்தில் ஈடுபடுவார்கள். நான்கு வருணத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறான். நீட்டுக் கும், வருணத்துக்கும் தொடர்பிருக்கிறது.

கங்கையைக் கடக்கும்போது, சீதை வேண்டிக் கொண்டாளாம். கங்கையை பாதுகாப்பாக கடந்தால், லட்சம் பசுக்களை பிராமணர்களுக்கு கொடுப்பதாக வேண்டிக்கொண்டாளாம்.

இராமாயணம் என்பது ஜாதியை காப்பாற்றுவது.

இன்றும் இராமாயணம் குறித்து தமிழர் தலைவர்  பேசுகிறார் என்றால், நோக்கம் சமூக நீதி நிலைப்படுத்தப் பட வேண்டும் என்பதுதான்.

நூல் வெளியீடு

அம்பேத்கர் எழுதிய நூல் இராமன் இராமாயணம், கிருஷ்ணன் கீதை (ரூ.80), ந.சி.கந்தையாபிளை எழுதிய பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும் நூல் (ரூ.30), டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் எழுதிய நூல் சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம் (ரூ.10) ஆகிய மூன்று நூல்களின் மொத்த நன்கொடை மதிப்பு ரூ.120, சிறப்புக்கூட்டத்தில் ரூ.20 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.100க்கு வழங்கப்பட்டது.

நூல்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து உரிய தொகை கொடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து ஏராளமானவர்கள் வரிசையாக சென்று நூல்களைப் பெருமகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்கள்.

மேனாள் நீதிபதி பரஞ்சோதி, பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி,  சி.வெற்றிசெல்வி, தலைமைச்செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, பெரியார் களம் இறைவி,  பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன், பகுத்தறிவாளர் கழகம் ஆ.வெங்கடேசன், த.கு.திவாகரன், கு.சோமசுந்தரம், கொரட்டூர் பன்னீர்செல்வம், சேகர், மாணவர் கழகம் பெ.செ.தொண்டறம், க.கனிமொழி, ரோட்ட சங்கத் தலைவர் சுதாகர் சுப்பிரமணியம் உள்பட ஏராளமானவர்கள் நூல்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

கலந்து கொண்டவர்கள்

கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், காரைக்குடி தி.என்னரெசு பிராட்லா, மேனாள் நீதிபதி பரஞ்சோதி, தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் செயலாளர் மா.செல்வராசு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கோ.வீ.ராகவன், இராமச்சந்திரன், செங்குட்டுவன், மஞ்சநாதன், தாமோதரன், தமிழ்செல்வம், பெரியார் மாணாக்கன்,  சைதை வாசுதேவன், எத்திராஜ், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், கலையரசன்  உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

- விடுதலை நாளேடு, 11.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக