பக்கங்கள்

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

வால்மீகி கற்பனையில் சீதையின் கற்பும் இராமர் பாலமும்


பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E,M.B.A,M.A.
முன்னுரை
இராம் ஜெத்மலானி ஒரு சட்ட மேதை. மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இவர் பிஜேபியில் இருந்தபோது இராமாயணத்தைப் படித்தார்.  அவர் சீதையை இராம பிரான் மிகவும் துன்புறுத்தியதாக ஒரு கருத்தரங்கத்தில் கூறினார். இராம ராஜ்யம் அமைக்கப் பாடுபடும் மதவாதிகளுக்கு  இராம் ஜெத்ம லானியின்  கருத்துக்கள் இராம பிரானை அவதூறு செய்யும் வகை யில் சொல்லப்பட்டதாகவும், இராம பக்தர்களின் மனதை புண்படுத் தியதாகவும் தோன்றியது. அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். இராமன் ஒரு அவதாரப் புருஷன் அவர்  செய்தது சரியே என்று வாதிட்டார்கள். சில நாட்களுக்குப் பின்னர் இராம் ஜெத்மலானியை பிஜேபியை விட்டு நிதின் கட்காரி வெளியேற்றினார். இவ்வாறு இராமரை அவமதித்த ஜெத்  மலானியைத் தண்டித்தனர்.
தற்போது  புதுதில்லியில் ஒரு பெண் இரவில் தனியார் பேருந்தில் பயணிக்கும்போது பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டபோது பிஜேபியினர் கொதித்து எழுந்தனர். நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம், சீதை இராமனால் துன்புறுத்தப்பட் டது சரி என்று வாதிட்ட மத வாதிகள், நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் துன்புறுத்தப்பட்ட போது கண்டன ஊர்வலம் நடத்தினர், குடியரசுத் தலைவரின் மாளிகையை முற்றுகையிட்டனர். இதற்கு முன் னாள் இராணுவ தளபதி, சாமியார், பாபா இராம்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கண்ட நிகழ்வுகள் யாவும் ஒரு சில வாரங்களுக்குள்தான் நடந்தேறின. மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பிஜேபியினரின் இரட்டை நிலையை புரிந்து கொண் டுள்ளார்கள். இந்த இந்துத்துவாக்கள் இராமர்பாலம் என்ற பெயரில் சேதுத் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதும் மதத்தின் அடிப்படையில் அல்ல; வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான்.
வால்மீகியின் கற்பனையில் உருவான இராமாயணத்தின் கருப் பொருள் சீதையின் கற்பினை நிரூ பித்தல் ஆகும். எனவே வால்மீகியின் கற்பனைக் காவியத்திற்கு கற்புக் காவியம் என்று தான் பெயரிட்டி ருந்தால் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.  இத்தகைய இராமா யணத்தைப் பற்றி கால்டுவெல் கூறியுள்ள கருத்துக்கள் கீழே தரப் பட்டுள்ளன. சீதையின் கற்பு
கற்பு என்றவுடன் இந்திய மக்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கற்புக்கரசி கண்ணகி ஆகும். ஏனென்றால் தனது கணவனைக் கொன்ற பாண்டிய மன்னனின் தலைநகரான மதுரையைத் தீயிட்டுக் கொளுத்தியது ஒரு காரணமாகும்.
சீதைக்கும் கண்ணகிக்கும் வேறுபாடு உள்ளது. சீதை கடைசி வரைக்கும்  இராமன் கற்பினை சோதித்த போதெல்லாம் இராமன் இட்ட கட்டளைக்கு அடிபணிந்தாள். ஆனால் கண்ணகி கணவனுக்கு அடிபணிந்தாலும் கோவலனைக் கொன்றது சரியல்ல என்று அரசனு டன் வாதிட்டாள், அறம் பிழைத்த மன்னனின் மதுரையை ஆவேசத்து டன்' தீயிட்டு, கொளுத்தினாள். பின்னர், கேரளம் (சேரநாடு) சென் றாள். அங்கு இன்றும் கொடுங்களூர் பகவதி என்று அழைக்கப்படும் தெய்வமாகக் கருதப்படுகிறாள். ஆனால் சீதையைக் கவர்ந்த இராவணனின் லங்கா (இலங்கை அல்ல) நகரைக் கொளுத்தியது அனுமான் என்ற வானரம்.
இது போல் லங்கா செல்ல பாலம் கட்டியது நளன் என்ற வானரம், இராமன் அல்ல) எனவே கற்பை சோதித்தபோது இராமன், சீதை கற்புடையவள் இராவணனால் கெடுக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. இவ்வாறு கற்புடைய சீதையால் இராவண னுக்கோ, அவன் ஆண்ட லங்கா நகரத்திற்கோ தீங்கு ஏற்படவில்லை. கற்புடைய சீதை வீறு கொண்டு எழவில்லை;  காரணம் இராமனின் வீரத்திற்கு இடம் அளித்தாள். இது வால்மீகியின் கற்பனை எதார்த்தமான பெண்ணின் செயல் அல்ல. பொதுவாக பெண்களின் கற்பின் சிறப்பினை தமிழ் காவியங்களில், சங்க காவியங்களில் சிறப்புக் கருத் தாக  மையக் கருத்தாக அமைப்பது வழக்கம். இதற்கு உதா ரணம், திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் மன்னர் அவையில், பாண்டிய மன்னனுடன், கற்புடைய பெண்கள் கூந்தலுக்கு / உமைய வளுக்கு மணம் உண்டு என்று வாதிட்டார். திருக்குறளில் பிறன் மனை விழையாமை, வாழ்க்கைத் துணைநலம் போன்ற அதிகாரங்கள். இதைக் காணும் போது உலகத்திலே முதன் முதலாக எழுதப்பட்ட காவியம் என்று போற்றிப் புகழப் படுகின்ற இராமாயணம் என்ற இதிகாசத்திற்கு கருப்பொருளை வால்மீகிக்கு  தந்தவை சங்கத் தமிழ் இலக்கியங்கள் தாம் என்று நினைக்காமல் இருக்க முடியாது. இது திருக் குறள் உள்பட சங்க இலக்கியங்களே உலக இலக்கியங்களுக்கு முன்னோடி என்று கூறலாம்.  மேலும் இராமா யணத்தைப் பற்றிய தகவல்களை சொன்ன முதல் இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள்தான் என்று ஆய்வா ளர்கள் தெரிவித்துள்ளனர்.  (ஆதா ரம் பாரதீய வித்யாபவன் வெளியீடு) இது சிந்து நதி முதல் சிந்து மாக்கடல் (இந்தியன் ஓசியன்) வரை தமிழர் நாகரிகம் பரவியிருந்ததை குறிக்கிறது.
இராமாயணம் பற்றி கால்டு வெல்லின் கருத்துகள்:
டாக்டர் கால்டுவெல் 1893ல் எழுதிய பரதகண்ட புராதனம் என்ற நூலில் இராமாயணம் பற்றிய பல செய்திகள் கிடைத்திருக்கின்றன. அதனை தொகுத்து கீழே தரப் பட்டுள்ளது.
1.    இராமாயண காலம்  புத்த சமயம் தோன்றிய பின்னும், இத் தேசத்து இராசாக்களிலும் ஜனங் களிலும்  மிகுதியான பேர் அந்த மதத்தை அனுசரிக்கிறதுக்கு முன்னும், வட இராச்சியத்து இந்துக்களுக்குள் சமஸ்கிருத பாஷை, நாடோடி பாஷையாக வருங்காலத்திலும், அது கட்டப்பட்டிருக்கும் என்று நிதானிக்கலாம். இப்படியானால் கிறிஸ்து பிறப்பிற்கு ஏறக்குறைய 400 வருஷத்துக்கு முன்பு இராமாயணம் கட்டப்பட்டு (Compose)  இருக்க வேண்டும் (இந்த காலம் கிமு 400 என்பது பாணினிகாலம். இந்தப் பாணினி வேதமொழிக்கு இலக்கண நூல் அஷ்டத்யாயி எழுதிய பின் வேதமொழிக்கு பாஷா'' என்று பெயரிட்டார். பின்னர் இந்த மொழி எப்போது சமஸ்கிருதம் என்று அழைக்கப்பட்டது என்பதற்கு தகவல் எதுவும் இல்லை).
 -விடுதலை ஞா.ம.19.1.13

வால்மீகி கற்பனையில் சீதையின் கற்பும் இராமர் பாலமும் (2)


- பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E,M.B.A,M.A.
2)    வேதகாலத்தில் பஞ்ச பூதங் களை ஆரியர்கள் வணங்கினார்கள். இராமாயண காலத்தில் வீரர்களை வணங்கினார்கள்.
3)    கோசலம் (அவுத்தேசம்) பகுதியில் அயோத்திபுரி ஆரிய வம்சத்திற்கு தலைநகராய் இருந்தது. இது தற்போதைய கோகரா நதியின் (சரயு நதியின்) கரையில் இருந்தது. சந்திரவம்சம்  கங்ககைக்கும் யமுனைக்கும் இடையில் தோஆப் பகுதியில் ஆண்டது.  தலைநகர் ஹஸ்தினாபுரம் ஆகும்.
4)    குசலவரை (இராமனின் மகன்கள்) இராமனின் மக்கள் என்று கருதக்கூடாது. குசலவர் என்பது ஒரே பதம் (சொல்) இரண்டு பதம் அல்ல. குசலவன் என்றால் சூதர்'' என்று அர்த்தம். சூதர் என்றால் அரண்மனை கவிராயர்கள்.
5)    இந்தியாவில் ஒவ்வொரு பாஷையிலும் இராமாயணம் உள்ளது. தமிழில், கவிராயன் கம்பன் கி.பி.1000க்குப் பின்பு எழுதப்பட்டது என்பதை கல்வெட்டுகளால் உணரலாம்.
6)    ஜனகன் அரண்மனையில், 8 சக்கரம் உள்ள தேரில் 800 புருஷர் கள் இழுத்து வரப்பட்ட சிவ தனுசை முறித்து சீதையை மணந்தான்.
7)    தசரதனுக்கு செய்ய வேண்டிய கருமாந்திர சடங்குகள் வெகு ஆடம்பரத்துடன் நடத்தப்பட்டன. தசரத மனைவிகள் யாரும் உடன் கட்டை ஏறவில்லை. விசேஷித்த யாகமும், பெரிய விருந்தும் நடந்தது. ஒரு பசுவையும் கன்றுக்குட்டியையும் பலியிட்டார்கள். நெய்யும், மாமிச  மும், கூடி வந்த விருந்தினரெல் லாருக்கும் பரிமாறப்பட்டது.
8)    இராமனின் பாதுகையைப் பெற இராமனிடம் சென்ற பரதன் பரத்வாச முனிவர் (பிரயாகை) ஆசிரமத்தில் தங்கினான். அப்போது அவனுக்கும் படைவீரருக்கும் பரத் வாசர் விருந்து பண்ணினார். விருந்  தில், மானும், மயிலும், பன்றியும், ஆடும், சாராயமும் பரிமாறப்பட்டது. தேவலோக ரம்பை, ஊர்வசி ஆகி யோர் நடன விருந்து அளித்தார்கள். இந்த மந்திர பலத்தால் பரத்வாசர் செய்தார்.
9)    இராமன் தென்கடற்கரையில் சேர்ந்து, இந்து தேசத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள சிறுகடலில் மலைகளும், குன்று களும் போட்டு ஒரு சேது உண் டாக்கி... யாவரும் கடலைத் தாண்டி இலங்கையில் சேர்ந்தார்கள்.
10)    சீதை அக்கினி பிரவேசம் செய்து, யாதொரு சேதமில்லாமல், அக்கினியை கடந்ததினாலும், பிரம்மா முதல் தசரத மகாராசா வரை யாவரும் சீதை கற்புள்ளவள் என்று கூறியதனால், சீதையை இராமன் சேர்த்துக் கொண்டான்.
11)    அயோத்தியாபுரியில் இராமன் அரசதிகாரத்தை ஒப்புக் கொண்டான். (இத்துடன் கால்டுவெல் இராமா யணத்தை முடிக்கிறார். இதில் பட்டாபிஷேகம் என்பது தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்த சொல்).
கால்டுவெல்லின் விமரிசனம்
அ)    பல தேச சரித்திரங்களையும், பல சாஸ்திரங்களையும் வாசித்து ஆராய்ந்த வித்துவான்கள் இராமா யணம் வீண்கதைகளால் நிறைந் திருக்கிறது'' என்று கூறினார்கள். அதில் உள்ள உண்மைகளை வீண் கதைகள் கெடுக்கின்றன.
ஆ)    புத்தியீன வர்ணனையினால் இராமாயணம் கெட்டுப்போயிருக் கிறது. இது கதை கேட்கும் இந்துக்களுக்கும் பிரியமாய் இருந்தது.
இ)    அந்த கால இந்துக்களுக்கு பகுத்தறிவும் விவேகமும் குறைந்து இருந்தது.
ஈ)    யுரோப்பில், சிறு பிள்ளை களுக்கு, பூதங்களை கொல்லும் வீரர்களைப் பற்றிய கதைகள் பிடிக்கும். அவர்களே பெரியவர்கள் ஆனதும் அந்தக் கதைகளை நம்பாது / பிடிக்காது.
உ)    வீணான கதைகளை பேர் பெற்ற கவிராயர் பாட்டுக்களாக எழுதுகிறார்கள். அந்த பாட்டுக் களைப் பாடுவதும், பாடிக் கேட்பதும் புண்ணிய கிரியை எனப் பேதை  சனங்கள் (இந்தியர்கள்) எண்ணு கிறார்கள்.
ஊ)    விவேகம் உள்ளவர்கள் இராமாயணத்தை கூர்ந்து சோதித் தால் பிற்காலத்தில் கட்டப்பட்ட (சேர்க்கப்பட்ட) சங்கதிகளை அறியலாம். ஆரம்பத்தில் சொல்லிய கதைகளைப் பார்த்தால் இராமன் ஒரு வீரனேயல்லாமல் வேறில்லை.
எ)    சீதையிருக்குமிடம் (வேதம் பயின்ற) இராமனுக்கு தெரியாதிருந் தும், அந்த இடத்தை குறித்து அவன் குரங்குகளிடமும் பட்சிகளிடம் விசாரித்து, அதைத் தேடினது தெய்வத்துக்கு ஏற்றவை அல்ல.
ஏ)    சில வித்துவான்கள் எண்ணு கிறபடி சீதை என்பதை வேளாண் மையைக் குறிக்கின்றது. இராவணன் முதலானவர் இராட்சதர் என்றால் ஆரியருடைய பருவப் பலன்களை (Crops) கொள்ளை  அடிப்பவர்; இராமன் என்றால் வேளாண் மையைக் காப்பவர்.
ஐ)    இருக்கு வேதத்தில் 10ஆம் மண்டலத்தில் 57ஆம் சூக்தத்தில் உழவு துவக்கும்போது வேளாண்மை ஆயுதங்களை மற்றும் சீதையை வணங்கினார்கள் என்று கூறப்பட் டுள்ளது.
ஒ)    பலராமன் என்ற மூன்றாவது இராமன், உழவுத்தொழிலை மற்ற ஜனங்களுக்குக் கற்றுக் கொடுத்தான். இதனால் கலப்பை ஆயுதன் என்று அழைக்கப்பட்டான் (அலாயுதன் என்றால் கலப்பை ஆயுதன் அல்லது ஏதடூ/ கலப்பை உடையவன்)
ஓ)    மேலே உள்ளவைகளால் ருசு செய்யப்பட்டது எனக் கூற இயலாது. ஆனால் விவேகம் உள்ளவர்களின் கருத்து எனக் கூறலாம்.
- -விடுதலை ஞா.ம.26.1.13

.

வால்மீகி கற்பனையில் சீதையின் கற்பும் இராமர் பாலமும் (3)


- பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E,M.B.A,M.A.
ஔ) இருக்கு வேதகாலத்தில் ரிஷிகள் பஞ்சநாதம் (ஐந்தாறு) ஆகிய பஞ்சாப் தேச அரசர்களுக்குப் புரோகிதர்களாக இருந்தனர். அவர்கள் ரிஷிகள் அரண்மனை வாசம் செய்தனர். அரசர்களுக்கு ரிஷிகள் ஊழியம் செய்தனர். மேலும் ரிஷிகள் பாட்டுக்கள் கட்டினார்கள். மேலும் பாட்டுக்கள் பாடி யாகம் செய்தார்கள். ஆனால் இராமாயணக் காலத்தில் ரிஷிகள் நாட்டை விட்டு தெற்கே சென்று காட்டில் தவம் செய்தனர்; சிலர் தியானம் செய்தனர். இது வேத காலம் மதம் முடிவ டைந்து இதிகாசம் தோன்றியதைக் குறிக்கிறது. பின்னர் புராணக் காலத் தில் புராண மதமாக உருவெடுத்தது. (ஆனால் இந்து மதமாக மாற்றம் அடைந்தது எப்போது என்பதைக் குறித்து தகவல் இல்லை). இந்த ரிஷிகள் விசேஷ காலங்களில் அரண் மனைக்கு வருவார்கள். கால்டுவெல் இறுதியாகச் சொல்வது இராமா யணத்தில் உண்மையும் அபத்தங் களும் கலந்துள்ளன என்பது ஆகும்.
இராமர் பாலம் ஒரு கற்பனைப் பாலம்
இராமாயணத்தில் கதை காலத் துக்கேற்றவாறு மாற்றம் அடைந்தது. மொழிக்கு ஏற்றவாறு மாற்றம் பெற்றது. தேசத்துக்கு தேசம் மாற்றம் பெற்றது. இதில் எது உண்மையான கதை என்பது தெரியாது. மக்களின் கலாரசனைக்கு ஏற்ப பாடல்களாக பாடப்பட்டது. மேலும் சமஸ்கிருதம் நாடோடி மொழியில்  இருந்தபோது ஏற்பட்ட கதையாகும். இந்த இராமாயணம் கற்பனையா? உண்மையா? மற்றும் இராமர் பாலம் கற்பனையா? அல்லது உண்மையா? என்பதைக் கண்டறிய கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பெறப்படும் விடைகள் மூலம் அறிந்து கொள்ள லாம்.
1)    இராவணன் மகன் இந்திர ஜித்திடமிருந்து இந்திரனைக் காப்பாற்ற விஷ்ணு பெருமான் மனிதனாக பிறந்தது உண்மையா?
2)    இராமன் குழந்தையாகப் பிறந்தபோது இந்திரஜித்துவின் தந்தை இராவணனுக்கு வயது 50 இருக்குமா?
3)    இராமன் வளர்ந்து, சீதை யுடன் 12 ஆண்டுகள் இல்லறம் நடத்தி 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து இராவணனைக் கொல் வதற்கு 41 ஆண்டுகள்ஆகியது தேவர்களை காப்பாற்ற ஏன் இந்த தாமதம்?
4)    இராமன் காட்டிற்கு சென் றது இராவணனைக் கொல்வதற் காகவா?
5)    இராமன் 14 ஆண்டுகள் காட்டில் வசித்தபோது சிங்கம், புலி, யானை, மலைப்பாம்பு போன்ற இந்திய மிருகங்களை ஏன் சந்திக்கவில்லை? போரிடவில்லை?
6)    சமஸ்கிருதம் பேசும் ஜடாயூ, ஆஞ்சநேயர், ஜாம்பவான், வாலி, நளன் போன்ற வளர்ப்பு மிருகங் களை மட்டும் சந்தித்து, வேதம் பயன்ற இராமன் இலங்கைக்கு வழி கேட்டது ஏன்? இராமன் சென்றது காடா அல்லது படப்பிடிப்பு அரங்க அமைப்பா?
7)    வால்மீகியின் கற்பனை பாலம், சாகரன் என்ற மன்னனால் வெட்டப்பட்ட கடல் பகுதியில் இலங்கை செல்லக் கட்டப்பட்டது. ஆனால் மேலே சொல்லப்பட்ட கடல் கங்கை நதி கடலுடன் கலக்கும் பகுதியில் உள்ளது.
8)    இலங்கை மன்னன் இரா வணனைக் கொல்ல இராமன் அயோத்தியில் பிறந்தது ஏன்?
9)    கி.பி.1600ல் இந்தியா (நாவலந் தீவுக்கு) வந்த கிழக்கு இந்தியா கம்பெனியினர் சிங்களத் தீவுக்கு வைத்த பெயர் சிலோன். சிலோனுக்கு அருகே கடலில் உள்ள மணல் திட்டுகளுக்கு வைத்த பெயர் Adam Bridge இந்த  பெயர்களை இந்திய மக்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண் டது ஏன்?
10)    லங்கா என்றால் ஆற்றுக்கு இடைப்பட்ட பகுதி கோதாவரி முகத்துவாரத்தில். தவளேசுவரத்தி லிருந்து கோபாலபுரம் வழியாக முக்காமலா வரை (தேசிய நெடுஞ் சாலை 5) பல லங்கா நகரங்கள் அமைந்துள்ளன. இவைகளில் ஒன்று இராமன் தேடிய இலங்கையாக ஏன் இருக்கக் கூடாது? (ஸ்ரீ) ரங்கம் மொழி மாற்றம் அடைந்து லங்கா என்றானது.
11)    கங்கா நதியில் பாலம் கட்ட முடியாமல் படகில் சென்ற இராமன் கடலில் 100 யோசனை தூரத்துக்கு பாலம் கட்டினார். இது உண்மையா?
12)    காசியில், அஸிகாட் அருகே, லங்கா ரோடு அருகே கங்கை நதியில் பல லங்காக்கள் (தீவு) உள்ளன என்று படகோட்டி முதல் ஐரோப்பியர் வரை கூறுகிறார்கள். இது உண்மையா?
13)    மத்திய பிரதேசத்தில் கட்னி அருகே, ஒரு மலையில் நின்று இராமனும் இலக்குமணனும் இலங்கையைப் பார்த்தார்கள். இந்த இடம் பந்தவகாட்'' (தம்பிக் கோட்டை) என்று அழைக்கப் படுகிறது. இந்த இடம் மத்திய அரசு தொல்லியல் துறை வசம் உள்ளது. இது மத்திய அரசு இலங்கை எங்கே உள்ளது என்று விளக்குமா?
14)    சிங்களத் தீவுக்கு சிறீலங்கா என்று அரசு பெயரிட்டது 1972ல் தான். எனவே இராமாயணக் காலத்தில் இலங்கை இருந்திருக்குமா? கி.மு.500க்கு முன் சமஸ்கிருதம் இருந்ததா?
15)    பூம்புகாரைக் கடல் கொண் டது. சிந்து சமவெளி தமிழர் நாகரிகம் புதையுண்டது. ஆனால் திரேதாயுகத்தில் 20 லட்சம் ஆண்டு களுக்கு முன் இருந்த அயோத்தியும், இலங்கையும் இன்றும் இருக்கிறதா?
இந்த வினாக்களுக்கு விடை கிடைத்தால் சேது சமுத்திரம் என்ற தமிழர் கனவுத் திட்டம் நிறைவேறும் என்பது திண்ணம்.
- -விடுதலை ஞா.ம.2.2.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக