பக்கங்கள்

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஒருதோப்பில்பலகனிகள்.....

ஒருதோப்பில்பலகனிகள்.....


குரங்கு பாலம் கட்டுமா?
இராமன் இட்ட கட்டளைப்படி குரங்குகள் (வானரங்கள்) பாறை களையும் சால் மரக்கட்டைகளையும் கடலில் போட்டு இலங்கைக்கு பாலத்தை கட்டினவாம்.
பாறைகளின் மேல் 'ராம்! ராம்!' என எழுதிப் போட்டதனால் பாறைக ளெல்லாம் கடலில் மிதந்து பாலம் போல் ஆனதாம்!
எழுதத் தெரிந்த குரங்குகள்! பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் குரங்குகளுக்கு எழுதவும் பாலங்கட்டவும் தெரிந்திருக்கிறது! சிரிப்பு தான் வருகிறது! அடக்கத் தான் முடியவில்லை!
(கி.மு. 2650ஆ-ம் ஆண்டில் தான் எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் குறுக்கே மெனிஸ் மன்னரால் உலகிலேயே முதன் முதலாக பாலம் என்ற ஒன்றே கட்டப்பட்டது.)
அப்போது மிதந்த பாலம் இப்பொ ழுது மிதக்காமல் கடலுக்கடியில் போனது ஏனோ தெரியவில்லை ?
இராமன் சக்தி அவ்வளவு தானோ?
அணில் முதுகில் கோடு போட்டது யார்?  இராமன் இட்ட கட்டளைப்படி குரங்குகள் பாலம் கட்டிக் கொண்டி ருந்த போது அணிலும் பாலம் கட்ட உதவியதாம்!
அணில் கடலில் குதித்து உடலை நனைத்துக் கொண்டு வந்து மணலில் புரளுமாம்! இதனால் உடலில் ஒட்டிக் கொண்ட மணலை பாலத்தின் அருகில் சென்று உதிர்க்குமாம்! இப்படியே செய்து கொண்டிருந்த அணிலைப் பார்த்த இராமன் அன்போடு அணிலின் முதுகில் தனது முன்று விரல்களால் தடவிக்கொடுத் தானாம்! உடனே அணிலின் முதுகில் மூன்று கோடுகள் பதிந்து விட்டனவாம்! இத னால் அனைத்து அணில்களின் முது கிலும் மூன்று கோடுகள் வந்துவிட் டனவாம்!
இந்தக் கதை எந்த இராமாயணத் திலும் கிடையாது எனபது பலருக்குத் தெரியாது. இதே போல் இராமாய ணங்களில் இல்லாத பல கதைகள் இராமாயணத்தில் இருப்ப தாகச் சொல்லப்படுகின்றன.
அமெரிக்கா, மெக்சிகோ, இங்கி லாந்து போன்ற பகுதிகளில் உள்ள அணில்களின் முதுகில் கோடுகளே கிடையாது. அங்குள்ள அணில்களின் மேல் இராமன் சக்தி பலிக்கவில்லையா?
இராமன் (அ)யோக்கியனா?
தமிழ்நாடு முதல்வராக டாக்டர் கலைஞர் அவர்கள் இருந்தபோது, இராமாயணப்படி இராமன் குடிகாரன், மாமிசம் சாப்பிட்டவன் என்று சொன்னவுடன் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.யான இராம்விலாஷ் வேதாந்தி என்கிற பார்ப்பன பண்டார பரதேசி ''கலைஞரின் தலையையோ, நாக்கையோ வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 'பரிசுத் தொகை' வழங்கப்படும்'' என அறிவித்தான்.
உண்மையை சொன்னால் மதவெறி தலைக்கேறி ஆட்டம் போடுகின்றனர் என்று தான் சொல்லவேண்டும்.
யோக்கியனை அயோக்கியன் என்று சொன்னால் தான் தப்பு! அயோக்கியனை அயோக்கியன் என்று தானே சொல்ல முடியும்! யோக்கிய சிகாமணி என்றா சொல்ல முடியும்?
இராமாயணத்தில் வரும் இராமன் குடிகாரனாகவும், பல மனைவிகள் உள்ளவனாகவும், பல பெண்களுடன் கூத்தடித்தவனாகவும் (சரச சல்லாபி), கொலைகாரனாகவும், பேடியாகவும் மற்றும் வேட்டையாடி விலங்குகளை கொன்று தின்றவனாகவும் தான் இருக்கிறான். இவ்வளவு அயோக்கியத் தனங்களையும் செய்தவனை மாறாக யோக்கிய சிகாமணியாக பிரச்சாரம் செய்தால் சும்மாவா இருக்கமுடியும்?
இராமன் குடிகாரன்! 
''இராமன் சாப்பிடும் பொருள்களில் மது, மாமிசமும் அடங்கியிருக்கும். அள வுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக் கத்தை கொண்டிருந்தான். அப்படி குடித்துவிட்டு அவன் போடும் கூத் தாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான்.''
(வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சர்க்கம்- 43, சுலோகம்-1 )
நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர் 
இராமன் ஏகப்பட்ட பத்தினி விரதன்! 
''இராமன் பட்டமகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர் களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்துகொண்டான்.''
(வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், சருக்கம்-8, பக்கம்-28- சி.ஆர். சீனிவாச அய்யங்கார் & மன்மதநாத் தத்தர் மொழி பெயர்ப்பு)
இராமாயணத்தில் பல இடங்களில், இராமனின் மனைவிமார்கள் என்றே வருகிறது. நூல்: 'இராமாயணப் பாத்திரங்கள்'- தந்தை பெரியார்
இராமன் சரச சல்லாபி (பெண் பித்தன்)!  ''அந்தப்புரத்தில் இயல், இசை நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா மற்றும் அப்ரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப் புரத்திற்கு கொண்டுவரப்பட்டனர். இப் படிப்பட்ட அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். இவையெல்லாம் இராமனின் அன்றாட நிகழ்ச்சிகள்.'' (வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சருக்கம் -42 சுலோகம்- 8 & சருக்கம் -43, சுலோகம்- 1)
நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர்
இராமன் பேடி! - கொலைகாரன்! 
மரங்களுக்கு பின்னால் மறைந் திருந்து திடீர் என அம்பெய்தி வாலியைக் கொல்கிறான்!
தவமிருந்த சம்பூகனை துடிக்கத் துடிக்க வாளால் வெட்டிக்கொன்றான்!
குடியையும், உயிர்க்கொலை புரியும் யாகத்தையும் எதிர்த்த பெண்களையும் அசுரர்களையும் (சுராபானம் குடிக் காதவர்கள்-திராவிடர்கள்) கொன்றான்.
இராமன் இன வெறியன்! '
'சம்பூகன்' என்கிற சூத்திரன் (திரா விடன்) காட்டில் உள்ள ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு ஆண்டவனை நோக்கி தவமிருந்தான், இதை அறிந்த இராமன் (ஆரியன்) காட்டிற்கு சென்று 'சம்பூக'னைக் கண்டு 'சூத்திரன் ஆண்டவனை நோக்கி தவ மிருக்க எனது இராஜ்ஜியத்தில் இட மில்லை' என்று கூறி வாளை உருவி 'சம்பூக'னின் தலையை வெட்டிக் கொன்றான்.'' (வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம், பிரிவு-64, பக்கம்-208 -ஆ.க.கணேசன், இக்கிம்பாதம்ஸ் வெளியீடு)
இராமன் விலங்குகளை கொன்று தின்றவன்!
  ''இராமன் சாப்பிடும் பொருள்களில் மது, மாமிசமும் அடங்கியிருக்கும்.''
(வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சருக்கம் -43, சுலோகம் -1)
நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர்
''ராகவன் (இராமன்) தங்களை (சீதையை) காணாமல் துக்கத்தால் தவிக் கிறார். இராமன் மது மாம்ஸங்களை விட் டார்.'' (அதாவது தற்காலிகமாக மது, மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விட் டார்) (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம், சுந்தரகாண்டம், பக்கம்- 148 ஸ்ரீ உ.வே. சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு- தி லிட்டில் பிளவர் வெளியீடு)
''இராமனும் இலட்சுமணனும் அம்பெய்தி ஒரு காட்டுப்பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், ஒரு பெரிய குரு ஆகிய நான்கு விலங்கு களை வேட்டையாடிக் கொன்று, கொண்டு வந்து ஒரு மரத்தடியில் சமைத்து சீதையுடன் உண்டனர்.''
(வால்மீகி ராமாயணம், அயோத் தியா காண்டம், சர்க்கம்-52 பாடல் 102 ) நூல்: ''ராமாயணமும் லங்கையும்''- டி. பரமேசுவர அய்யர்
''இவ்விடத்திலும் இன்னும் பல விடங்களிலும் ராமலஷ்மணர்கள் வேட்டையாடி, பூஜைக்குத் தகுந்த வேட்டை யாகாரம் சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் பாடியிருக்கிறார். சந்தேகத்திற்கு இடமில்லாமல் வியத்த மாகப் பாடியிருக்கிறார். இதைப்பற்றி நாம் குழப்பமடைய வேண்டியதில்லை. க்ஷத்திரியர்களின் ஆசாரப்படி மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை.'' ('இராமாயணம்' (சக்ரவர்த்தி திருமகன்), பக்கம் - 134 ) -இராஜாஜி எழுதியது.
இராமன் ''அயோக்கியன்'' என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களை எடுத்துக் காட்ட முடியும், இருந்தாலும் இதோடு முடிக்கிறோம். 
இராமன் பிறந்த இடம் எது? 
இராமன் பிறந்த இடம் 'அயோத்தி' என்றும், அங்குள்ள 'பாபர் மசூதியில் தான் இராமன் பிறந்தான்' என்றும் கூறி, அந்த மசூதியையே பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கும்பல் இடித்து தரைமட்டமாக்கியது. இந்த இழிச்செயலால் இந்தியா முழு வதும் கலவரங்கள் எற்பட்டு, {தமிழ் நாட்டை தவிர} பல மனித உயிர்கள் பலியாயின, உடமைகளும் பறிபோயின.
ஆனால் அயோத்தியில், சுமார் 40 இடங்களில் உள்ள இராமன் கோயில் களில்; 'இங்கு தான் இராமன் பிறந்தான்' என்று கூறுகின்றனர். உண்மையில் அயோத்தி எது? இராமாயணத்தில் அயோத்தியில் இராமன் பிறந்ததாக சொல்லப்பட் டுள்ளது. பழைய (முதன்மை) இராமா யணக் கதையான 'புத்த இராமாயணத் தில் 'வாரணாசி'யில் (காசி) இராமன் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. (காசி கங்கை ஆற்றங்கரையில் உள்ளது)
வால்மீகி இராமாயணத்திலோ 'அயோத்தி'யில் பிறந்த்தாகவும், 'அயோத்தி' கங்கை ஆற்றங்கரையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது உள்ள அயோத்தியோ 'சரயு' ஆற்றங்கரையில் உள்ளது.
'கங்கை' ஆற்றை தாண்டி, வடக்கு பக்கமாக 'சரயு' ஆறு உள்ளது; அதை யும் தாண்டி அடுத்த பகுதியில் தான் தற்போது உள்ள அயோத்தி உள்ளது.
அயோத்தியிலிருந்து சரயு ஆற்றை கடந்து வந்த பிறகு தான் 'கங்கை' ஆறு வரும். ஆனால் வால்மீகி இராமாயணத் திலும் மற்ற இராமாயணங்களிலும், அயோத்தியிலிருந்து சரயு ஆற்றை கடந்து இராமன் வந்ததாக சொல்லப் படவில்லை. அயோத்தியிலிருந்து நேரே கங்கை ஆற்றை கடந்து வந்ததாகத்தான் சொல்லப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 'வாரணாசி' (காசி) தான் பழைய 'அயோத்தி' என்று 'இராமனும் கிருஷ் ணனும் ஒரு புதிர்' என்ற தமது நூலில் கூறியுள்ளார்.
''மன்னர் ஜனகரின் தலைநகரம் 'விதேகம்'; அதே பெயரில் ஒரிடம் பீகாரில் உண்டு. முன்பு அயோத்தியாக சொல்லப்படுகிற இப்போதைய அவுத்திலிருந்து (அயோத்தி) வெகு தொலைவில் அமைந்துள்ளது அந்த இடம். இராமனும் அவனுடன் சென்றவர்களும் நடந்து நான்கு நாள்களில் சென்றடைந்ததாக சொல்லப் படுகின்ற அந்த இடத்திற்கு குதிரையின் மீது போனால் கூட அதைவிட இரண்டு மடங்கு நாள்கள் ஆகும்'' என்று _ 'ஜோசப் இடமருகு' அவர்கள் 'சபரிமலை அய்யப்பன் உண்மையும் கதைப்பும்' என்ற நூலில் கூறுகிறார். காசியிலிருந்து தான் 'பீகார்' அருகில் உள்ளது. அயோத்தியிருந்து பீகாரோ வெகு தொலைவில் தான் உள்ளது. ஆகையால் டாக்டர் அம்பேத் கர் அவர்கள் கூறுவது போல் 'பழைய அயோத்தி' 'வாரணாசி'(காசி) தான் என்பது தெளிவாகிறது.
இராமாயணக்கதைப்படி 'இராமன்' பிறந்தது வாரணாசியில் தஈன்! தற் போதைய அயோத்தி அல்ல!
தொகுப்பு: செ.ர. பார்த்தசாரதி,  செயலாளர்,  தென் சென்னை,  திராவிடர் கழகம்.
-விடுதலை ஞா.ம,14.9.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக