பக்கங்கள்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இராமாயண கால மது வகைகள்டில்லியிலிருந்து வெளியாகும் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் 15.8.1954-ஆம் தேதிய இதழில் இராமாயணத்தில் மதுக்குடி என்ற தலைப்பில் டாக்டர் எஸ்.என். வியாஸ் என்பவர் எழுதியுள்ள கட் டுரையில் காணப்படுவதாவது:
1. கிதைசுரா: இது காய்ச்சி இறக் கப் படும் சாராயத்துக்குப் பெயர்.
2. மைரேயா: வாசனையூட்டப் பட்ட பானம்: சர்க்கார் மதுவென் றும் கூறுவர்.
3. மத்யா: போதை தரும் பானகம்.
4. மந்தா: இது சாதாரண சாராயத் திலுள்ள அமித போதை தணிக்கப்பட்டது. இதற்குப் பிதாமந்தா என்றும் பெயர். போதை இருக்காது; எனவே இதனை யாரும் குடிக்க விரும்பார்.
5. சுராபானம்: கிதை சுராவுக்கு மாறானது. கிதை சுராபானம் செயற் கையால் செய்யப்படுவது. சுரா என்பது இயற்கைச் சாராயம் இயற்கை முறையில் வடித்தெடுக் கப்படுவது. இது சாதாரண மக் களின் பானம். இதைப் பற்றித் தான் புராணங்களில் அதிகமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.
6. சிந்து: கழிவு வெல்லப் பாகி லிருந்து வடித்தெடுக்கும் பானம்.
7. சௌவீரகா: மட்டரகப் பானம்.
bv8. வாருணி: அக்காலத்தில் உப யோகிக்கப்பட்ட மது வகைகளில் மிகவும் காட்டமானது (போதை அதிகமானது) இந்த பானம், இதனைக் குடித்த அதே நொடியில் போதையுண்டாகித் தள்ளாடி விழச் செய்து விடுமாம்.
-விடுதலை,1.3.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக