பக்கங்கள்

திங்கள், 16 மே, 2016

வால்மீகியின் வாய்மையும்-கம்பனின் புளுகும்!!


அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.
இதுபற்றி பண்டித மன்மத நாததத்தர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.
Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.
இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.
இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார். ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான்.
உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார். ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை?
-விடுதலை ஞா.ம.,10.1.15

ஞாயிறு, 13 மார்ச், 2016

சிறீராமனும் கவுதமப் புத்தரும்


ப.கோவிந்தராசன்
BE,MBA,MA(History) MA(Linguistics)
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தல் சாதி மத பேதமின்றி எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சம உரிமை உணர்வுக் கொள்கைக்கு உலகில் முதன் முதலாக வித்தட்டவர் கௌதமப் புத்தர் ஆவார். இதனை விளக்கப் புத்தரைப் பற்றி சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இங்கே தரப்படுகன்றது.
1.அவரது (புத்தரது) மிகச் சிறந்த போதனைகளில் ஒன்றாக விளங்குவது---- எல்லா மனிதர்களும் சமம் என்பது ஆகும். எந்த ஒரு தனி மனிதனுக்கும் உயர்வு தரும் சிறப்பு சலுகைக் கொடுக் கப்படவில்லை -_- புத்தர் பிராமணர் களுக்கும் (அர்ச்சகர்கள்) மற்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஒழித்தார். (பக்கம் -10 முதல் 30-- நூல்- புத்தா அன்ட் ஹிஸ் மெஸ்ஸேஜ்-_--வெளியிடு- _ -அத்வைத ஆசிரமம் -கல்கத்தா.)
2. மேலும் புத்தர் போதித்தது பற்றி “கடவுள் வழிபாடு கடவுளை வணங்கு தல் எல்லாம் (நான்சென்ஸ்) முட்டாள் தனம். நான் ‘கடவுளுக்கு நன்றி கூறு கிறேன். ஆனால் கடவுள் எங்கே வாழ்கிறார்?’
3. “எல்லா மனிதர்களும் இந்த உலகில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆனால் இறந்த பின்னர்கூட கடவுள் தண்ட னைகள் தரும் இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றான்.’’
பிராமணர்கள் (அர்ச்சகர்கள்) கடவுள் இருக்கிறார் என்று நம்பு கிறார்கள். ஆனால் அந்த கடவுளை அணுகுவதற்கு அர்ச்சகர்களின் அனுமதி வேண்டும். அர்ச்சகர்களுக்கு (பிராமணர் களுக்கு) தானம் கொடுத்து வணங்கி எல்லா அதிகாரங்களையும் அவர்களி டம் ஒப்படைக்க வேண்டும். இத்தகைய  நிலையில் புத்த மதம் அசோகரது ஆட்சிக்குப் பிறகு கிமு185இ-ல் பிராமண மதத்தின் வளர்ச்சியால், நலிவடைந்தது இந்த நலிவுக்கான காரணங்களில் ஒன்று ராமனின் புகழ் பாடும் இராமாயணம் ஆகும். இராமாயணத்தில் காணப்படும் சிறீராமனையும் புத்த மதத்தை நிறுவிய கவுதமப் புத்தரையும் ஒப்பீடு செய்வ தற்குப் பல்வேறு நூல்களின் அடிப் படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
1. ராமாயணப் பாடல்கள்
தோன்றியது எப்போது?
விவேகானந்தரால் சிறப்பிக்கப்பட்ட கொள்கைகளை கொண்ட புத்தமதம் நலிவடையத் தொடங்கியதற்குக் காரணம் பிராமணர்கள் பெருமளவில் புத்த மதத்தில் சேர்ந்ததும் பாலி மொழிக்குப் பதிலாக சமற்கிருதம் புத்த மதத்தில் உபயோகக்கப்பட்டதும் ஆகும். இவ்வாறு சமற்கிருத்தில் மொழி பெயர்க் கப்பட்ட நூல்களில் தசரத ஜாதகக் கதையும் ஒன்று எனக் கருதலாம். அதில் காணப் பட்ட ராமன் கதை வைணவ மதத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது என்றும் சொல்லலாம். ஏனென்றால் தசரதர் ஜாதகக் கதை பாலியில் அசோ கர் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட பின்னர் தான் சம்ஸ்கிருதத்தில் அதே பிராமி எழுத்துக்களில் வால்மீகி இராமாயணம் எழுதப்பட்டது.
சிறீராமன் சிறீமத் பாகவதம் சிறீகிருஷ்னன் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் கவுதமப் புத்தரை யாரும் சிறீகவுதமப் புத்தர் என்று ஒருபோதும் (மகாயானப் பிரிவினர்கூட) அழைத்ததில்லை. சைவக் கடவுளான சிவனைக்கூட சிறீசிவன் என்று வணங்குவதில்லை.  இந்த சிறீ என்ற சொல்லின் பயன்பாடு அசோகர் காலத்திற்குப் பின்னர் நடைமுறைக்கு வந்தது என அறியலாம்.
2. சிறீராமனும் வேதமும்
வேத காலத்தில் வணங்கப்பட்ட கடவுள்களின் எண்ணிக்கை 33 ஆகும். அவை 12 ஆதித்யர்கள், 11 ருத்ரன்கள் 8 வசுக்கள், அசுவின்கள் மற்றும் மருத்து ஆகும். இந்த கடவுள்கள் வரிசையில் விஷ்ணுவும் அடங்குவார் லட்சுமி மற்றும் சிறீ என்ற பெண் கடவுள்கள் பெயர்கள் ரிக்வேதத்தில் காணப்படு கின்றன. இந்த இருவருக்கும் கணவன், இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பரம் பொருளான (1000 தலைகள், 1000 கண்கள், 1000 கால்கள்- கொண்ட) புருசன் என்ற கடவுள் ஆகும். மேலும் இவர்கள் இருவரும் முறையே -இரவில் காணப்படும் நட்சத்திரங்கள், நிலவு ஆகியவற்றின் ஒளியாகவும் பகலில் சூரியனின் ஒளியாகவும் விளங்குவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகவே  சிறீ-யும் மற்றும் லட்சுமியும் பிரபஞ்சத்திற்கு ஒளியாக விளங்குகிறார்கள். (ஆதாரம்- பக்கம்- 13-21 நுல்-ரிக்வேதா-ஆசிரியர் --டாக்டர். ஜெ.கே. டிரிஹா வெளியீடு பாரதிய வித்யா பவன்) இந்த இருவரும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்  சிறீ லட்சுமி என்ற ஒரே பெண் தெய்வமாக வும் செல்வத்தை அளிக்கும் கடவுளாக வும் விஷ்ணுவுக்கு மனைவியாகவும் மாறுவதை காணலாம். எனவே தற்கால   கடவுள்களுக்கும் வேத காலக் கடவுள் களுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.
விஷ்ணு லட்சுமி ஆகியோருககு என்று ரிக்வேதத்தில் தனியாக யாகம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எந் தெந்த கடவுள்களுக்கு யாகச்சடங்குகள் குறிப்பிடப்படவில்லையோ அந்தக் கடவுள்கள் எல்லாம் சிறு தெய்வங் களாக கருதப்படுகின்றது. ரிக்வேத்தில் சிறீ என்ற பெயர் காணப்பட்டாலும் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை
சிறீராமன் என்ற பெயர் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. எனவே வேதகாலத் (கி.மு.1500 முதல் 500 வரை)திற்குப் பின்தான் ராமாயணம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். (ஆதாரம்-- பக்கம் 19 முதல் 26 வரை -நூல் -பரதகண்ட புராதனம்- ஆசிரியர் டாக்டர் கால்டுவெல்)
3. புத்த மதமும் சமஸ்கிருதமும்:-
வேத காலத்தை அடுத்து தோன்றிய மதமான புத்த மதத்தைச் சேர்ந்தவர் களும் சிறீ என்ற சொல்லை புத்தர் பெய ருடன் இணைத்துக் கொள்ளவில்லை. இந்த நிலை அசோகர் காலம் வரை நீடித்தது.
கிபி 300- வரை பிராகிருத மொழி யான பாலி மொழி தான் எல்லா நிலை களிலும் பயன்பாட்டில் இருந்தது. அதற்குப் பின் பாலி மொழி செல்வாக்கு இழந்தது. அதே நேரத்தில் சமற்கிருதம் வளர்ந்தது (ஆதாரம்---: பக்கம்-5. நூல் வாகடகாஸ் அண்ட் குப்தா ஏஜ் கி.பி. 200 முதல் 550 _ -ஆசிரியர் ஆர்.சி. மஜூம் தார் அல்டேகர்) அப்போது புத்த மதத் தில் நிறைய பிராமணர்கள் சேர்ந் தார்கள். இதனால் சமற்கிருத மொழி புத்த மதத்தில் முதன்மை மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் பாலி மொழியில் எழுதப்பட்ட பல புத்தமத நுல்கள் சமற்கிருத மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இந்த மாற்றங்களின் விளைவாக புத்த மதம் மூன்றாம் கனிஷ்கர் காலத்தில் மகாயானம், ஹீனயானம் என இரு பிரிவுகளாக உடைந்தது. மகாயானப் பிரிவைச் சார்ந்தவர்கள் புத்த மதத்தை இந்தியா வில் சமற்கிருத மயமாக்கினார்கள். (யுவான் சுவாங்-ன் பயண நூல்) பிரா மணர்கள் ஆதிக்கத்தில் இருந்த மகா யானாப் பிரிவினர்கூட புத்தரை சிறீபுத்தர் என்று அழைக்கவில்லை.
அதே சமயத்தில் இலங்கையில் ஹீனயானமும் பாலி மொழியும் அரசர்கள் ஆதரவினால் வளர்ந்தது. இதனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் மொழியின் அடிப்படையிலும் மத அடிப்படையிலும் வேறுபாடுகள் தோன்றின.  இத்தகைய வேறுபாட்டின் அடிப்படையில் தான் இராமாயணம் எழுதப்பட்டது.
4. இராமாயணமும் புத்தமதமும்
கைகேயியின் கட்டளைப் படி ராமன் பட்டம் சூடக் கூடாது என்றும் மரவுரி அணிந்து ஜடாமுடியுடன் 14 ஆண்டுகள்  தண்டகாரண்யத்தில் வனவாசம் செய்ய வேண்டும். வனவாச காலத்தில் ராமன் எந்த மனிதர்களின் உதவியும் பெறக் கூடாது என்றும் நகரப் பகுதியிலோ கிராமங்களிலோ வசிக்கக் கூடாது என்றும்நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், இராமயணக் கதையில் ராமன், ஹீனயானம் என்னும் புத்தமதப் பிரிவினர் வாழும் இலங்கை மன்னனை இராவணனைக் கொல்ல, அயோத்தியில் பிறந்து வளர்ந்து பின்னர் தண்ட காரண்யம் சென்று பிறகு அங்கிருந்து இலங்கை சென்றான். கைகேயி கட்டளையிட்ட காலத்திலிருந்து பஞ்ச வடி காலம் வரை அதாவது சுமார் 13 ஆண்டுகள் ராமனின்  வனவாசம் அமை தியாக சென்றது. ஆனால், கடைசி 6 மாதங்களில் ராமனின் வாழ்வில் பல விசித்திர கற்பனையை கொண்ட பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவை பின்வருமாறு
4.1. கோசல நாட்டின் எல்லையை அடுத்த பகுதியில் தண்டகாரண்ய வனப்பகுதி அமைந்திருப்பது என்று சொல்வதும் அந்தப் பகுதி இலங்கை மன்னன் இராவணனின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் விசித்திரமானது. ஏனென்றால் 60000 ஆண்டுகள் வாழ்ந்த தசரதனுக்கும், கைகேயிக்கும் அண்டை நாட்டு மன்னான ராவணனைப் பற்றி எதுவும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் இராவணனை அயோத்தியில் நடத்தப் பட்ட எல்லா விழாக்களுக்கும் அழைத் ததாக தெரியவில்லை. மேலும் வேதம் பயின்ற ராமனுக்கும் தெரியவில்லை. கைகேயிக்கும் தெரியவில்லை. தெரிந் திருந்தால் ராமனும் தண்டகாரண்யத் துக்குள் நுழைவதற்கு முன்பு அங்கு 15000 வீரர்களுடன் தங்கி ஆளுகின்ற ராவணனின் சகோதரன் கரனிடம் அனுமதி கேட்டிருப்பான். இராமனைத் தேடி படையுடன் சென்ற பரதனும் வசிஷ்டரும் அனுமதி கேட்டிருப்பார்கள்.
4.2. ராமன் ஜடாயு என்ற பறவை யுடன் பேசுவது மற்றும் ஜடாயுக்கு ராமன் இறுதி சடங்குகள் செய்வது.
4.3. வானரங்கள் இராமனுடன் பேசுவது.
4.4 ராமனும் லட்சுமணனும் மரவுரி அணிந்து கொண்டு யுத்தம் செய்வது.
4.5. சுக்ரீவன் மனைவி தாரா ஒரு வானரம். அவளை ராமனின் கட்ட ளைப்படி   லட்சுமணன் சந்தித்து தங் களின் வனவாசம் முடிய இன்னும் 4 மாதங்களே உள்ளதால் சீதையைத் தேடும் பணியை மேலும் தாமதிக்காமல் சுக்ரீவன் தொடங்குமாறு வேண்டிக் கொண்டான். அப்போது தாரா தன்னுடைய படுக்கை அறையிலிருந்து நேராக லட்சுமனைச் சந்திக்க வந்ததால் அவளது ஆடை அணிகலன்கள் அலங் கோலமானதால் அவளது உடல் அழகு லட்சுமணனை பிரமிக்க வைத்தது. இவ்வாறு ஒரு வானரத்தை நாகரீக ஆடை அணிகலன் அணிந்த அழகியப் பெண், தாரா என்ற பெயருடன்அதுவும் படுக்கை அறையிலிருந்து வருவதாக சித்தரிப்பது விசித்திரமானது. ஒரு வானரத்தை அரண்மனையில் வாழும் அழகிய ராணியாக உண்மைக்கு புறம்பாக சொல்லும் வால்மீகி ராமனை புகழ்வதையும் ராவணன் மற்றும் அரக்கர்களை கோரமானவர்களாகவும் கொடியவர்களாக சித்தரிப் பதிலும் சிறிதும் உண்மை இல்லை என்று கருத வாய்ப்புள்ளது.
4.6. அனுமன் தன்னுடைய உரு வத்தை தானே மாற்றிக் கொள்ளவும் பறவை போல் பறக்கவும் மலையை தூக்கிக் கொண்டு பறந்து செல்லவும் சக்தி படைத்தவனாக கூறுவது விசித்திரமாக உள்ளது.
4.7. ராமனால் கொல்லப்பட்ட வாலியின் (வானரம்) உடல் சாஸ்திர முறைப்படி மகன் அங்கதனால் எரியூட் டப்பட்டது. சாதாரண வானரங்களுக்கு என்று சாஸ்திரங்கள் எதுவும் இருப்ப தாகத் தெரியவல்லை. (பக்கம் _ -823 நூல் சி.ஆர். சீனிவாச அய்யங்கார் எழுதிய ராமாயணம்)  வானரங்களுக்கென சாஸ் திரங்கள் இருப்பது மிகவும் விசித்திர மானது.
4.8. சீதையை இழந்த ராமன் தாங்கொணா துயரத்தில் மூழ்க “இந்த உலகத்தையே அழிப்பேன்’’ என்று பலவாறு சபித்தான் புலம்பினான். தன் உயிரை மாய்த்து கொள்ளவும் நினைத் தான். கலங்கும் ராமனை லட்சுமணன் அவ்வப்போது தேற்றிக்கொண்டே வந்தான். பல நாட்கள் நடந்த பின் பம்பா நதியைக் கடந்து வானரங்களின் ராஜ்ஜியத்துக்குள் நுழைந்தார்கள். அங்கு அவர்களை சந்திக்க வானரத் தலைவன் சுக்ரிவன் அனுப்பிய தூதனாக அனுமன் வந்தான். அந்த சந்திப்பின்போது லட்சு மணன் அனுமனிடம் பின்வருமாறு கூறினான். நானும் ராமனும் சுக்ரீ வனிடம் அடைக்கலம் (ரெஃப்யுஜ்) ஆகி றோம். என் அண்ணன் அளவற்ற செல்வங்களை தன் மக்களுக்கும் பிராமணர்களுக்கும் தானம் செய்து அதனால் பெரும் புகழைப் பெற்றவன். ராமன் உலகத்தால் கடவுளாகப் பாவிக்கப்பட்டாலும் அவன் தற்போது சுக்ரீவனிடம் தனக்குப் பாதுகாப்பு கேட்கிறான். ராமன் இந்த உலகத்தையே ஆளுகின்ற பலம் உடையவனானாலும் அவன் தற்போது சுக்ரீவனிடம் சரண் (ரெஃப்யுஜ்) அடைகிறான். இன்று வரை இலட்சக்கணக்கான மக்கள் ராமனின் அருளைப் பெறுவதற்காக வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கிறார்கள். ஆனால் ராமனோ சுக்ரீவனின் தயவுக்காகக்(ஃபேவர்) காத்திருக்கிறான். உலகத்து மன்னர்கள் எல்லாம் தசரதனைப் போற்றி வணங்கு கிறார்கள. ஆனால், தசரதனின் மகன் ஒரு குரங்கு (சுக்ரீவன்) இடம் தன் மேல் இரக்கம் காட்டுமாறு வேண்டுகிறான். ராமன் மிகுந்த வேதனையால் தன் நிலை மறந்து வாழ்கிறான். சுக்ரீவனிடம் அடைக்கலமான ராமனுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு லட்சுமணன் கரகரத்த குரலில் பணிவான குரலில். கண்கள் நீர்வழிய அழுத குரலில் கூறினான். பின்னர் லட்சுமணன், அனுமன் தோளில் ஏறியதும் இருவரும் பறந்து சென்று சுக்ரீவனை சந்தித்தார்கள். அனுமன் சுக்ரீவனிடம் பின்வருமாறு கூறினான்.
(தொடரும்)
விடுதலை ஞாயிறு மலர், 19.12.15
சிறீராமனும் கவுதமப் புத்தரும் (2)

பொறியாளர்
ப.கோவிந்தராசன்
BE,MBA,MA(History) MA(Linguistics) 
“....---அயோத்தியின் பேரரசனான தசரதன் எண்ணற்ற பல்வகை யாகங்களைச் (ராஜசூயம்அசுவமேதம் உள்பட) செய்தார். அப்போது பலருக்கு தன்னுடைய செல்வங் களைத்தானமாக வழங்கினார்.----- ----அவருடைய மகன் ராமன் தன் மனைவியுடன் த-ண்டகாரண்யத்தில் வாழும் போது இராவணன் ராமனின் மனைவி சீதையைத் தூக்கிச் சென்றான். தற்போது ராமன் தங்களிடம் சரண் அடைந்துள்ளான். இவை எல் லாம் ஒரு பெண்ணுக்காக’’
13 ஆண்டுகள் வனவாசம் முடியும் வரை மாவீரனாகவும் உலக மக்களை நேசிப்பவராகவும் சித்தரிக்கப்பட்ட ராமன் தன் மனைவிராவணனால் தூக்கிச் சென்ற சோகத்தில் தன் நிலையை மறந்து உலகையே அழிப்பேன் என்றும் சுக்ரீவன் என்ற குரங்கிடம் சரணடைந்து பாதுகாப்பு கேட்பதும் விசித்திரமானது. (பக்கம் 761-_763 வால்மீகி ராமாயணம் ஆசிரியர் சி.ஆர். சீனிவாச அய்யங்கார்)
மேற்கண்ட விசித்திரங்களை கருத் தில் கொண்டால் ராமன்  லங்கா என்ற நகரத்துக்குத்தான் சென்றான் என்ப தையும் இலங்கை என்ற நாட்டிற்குக் கடல் கடந்து செல்லவில்லை என் பதையும் அறியலாம்.
4.9. இராமர் பாலம் வானரம் கட்டியது உண்மை தானா? இராமாயண காவியத்தில் நளன் என்ற வானரம், 80 மைல் அகலமும் 800 மைல் நீளமும் கொண்ட ஒரு பாலத்தை கடலின் குறுக்கே ராமனின் வானரப்படைகள் நடந்து லங்கா நகரம் செல்வதற்கு கட்டியது.
(ஆதாரம் கிரிஃபித் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்பு ராமாயண-ம்) 600 கிமீ என்றால் ஏறத்தாழ சென் னைக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே உள்ள தூரத்திற்குச் சமம். எனவே 800 மைல் (1280) கி.மீ) நீளமுள்ள பாலத்தை 5 நாட்களில் ஒரு குரங்கால் கட்ட முடிந்தது என்பது ஒரு விசித்திரமான கற்பனை என்று கூற வாய்ப்புள்ளது. நளன் என்ற குரங்கு ஏதேனும் பாலம் கட்டியதாக, முன் அனுபவம் இருப்பதாக  சொல்லப்படவல்லை.
மேலும் இலங்கைக்கும், தனுஸ்கோடிக் கும் உள்ள உண்மையான தூரம் சுமார் 40 கி.மீ. தான். இது ராமன் இலங்கைகுப் போகவில்லை என்று தெரிவிப்பதாகக் கூறலா-ம். அவன் லங்கா என்ற நகரத் திற்குப் போயிருக்கலாம். ஏனென்றால்
4.9.1. கிஷ்கிந்தா பம்பா ஏரி, பஞ்சவடி ஆகிய இடங்கள் விந்திய மலைக்கும் லங்கா நகரத்திற்கும் இடையே உள்ளதாக வால்மீகி கூறுகிறார். அவர் அந்த இடங்களைத் தற்கால இந்தி யாவில் எங்கே உள்ளது என்று தெரிந்து கொள்ள எந்த அடையாளமும் தரவில்லை.
4.9.2. மேலும் கோசலநாடு என்றது போல் இலங்கை நாடு என்று சொல்லாமல் லங்கா நகரம் என்று தான் குறிப்படுகிறார்
4.9.3 சிறீலங்கா என்ற பெயர் 1972-இல் வைக்கப்பட்டது. அதற்குமுன்னர் சிலோன், தாமிரபரணி, சேரன் தீவு, சிங்களத் தீவு என்று அழைக்கப்பட்டது. எனவே லங்கா ஸ்ரீலங்கா என்ற பெயர் கள் இரண்டு வெவ்வேறு தீவுகளைக் குறிக்கின்றன. மௌரிய மன்னன் “அசோகனின் கல்வெட்டுகள்’’ என்ற நுலில் தற்போதுள்ள சிறீலங்கா என்பதற்குப் பதிலாக தாமிரபரணி என்று குறிப்படப்படுகிறது. இதன் நூலாசிரியர் -டி.சி.சர்க்கார். இது மய்ய அரசின் வெளியீடு ஆகும்
4.9.4. லங்கா என்பதற்கு தீவு என்று பொருள். உ-_ம் லங்கா எள்ற பெயரில் பல ஊர்கள் ஆந்திராவில் கடலும் கோதாவரியும் கலக்கும் பகுதியில் அமைந்துள்ளன.
4.9.5. மேலும் விந்திய மலையை அடுத்து தெற்கே தற்போதைய ஒரிசா எல்லையிலிருந்து உற்பத்தியாகி அரபிக் கடலில் கலக்கும் வரை உள்ள நீளமான நர்மதா நதியை ராமன் கடந்ததாக இரா மாயணத்தில் சொல்லப்படவில்லை. எனவே வால்மீகி குறிப்பிடும் லங்கா நகரம் இந்தியப் பகுதியில் அமைந் திருக்கலாம் என அறியலாம்.
4.9.6. குப்தர்கள் காலத்தில் தான்  இலங்கை நாடு பற்றிய பகுதிகள் சேர்க்கப்பட்டு இராமாயணம் இறுதி வடிவம் பெற்றது எனக் கூறலாம். பின்னர் சமஸ்கிருதத்தில் “அசோகன் பிராமி’’ எழுத்துக்களில் எழுதப்பட்டது. எனவே 800 மைல் நீளத்தில் ராமர் பாலம் கட்டப்பட்டது என்பது. உண்மையல்ல என்று கூறலாம்.
5. ராமனின் வானர சேனைகள் நளன் கட்டிய தரைப் பாலத்தில் 800 மைல் (1280 கி.மீ) தூரத்திற்கு நடந்து சென்றனர். அந்த வானர சேனையின் ஒரு பகுதி நளன் என்ற குரங்கின் தலைமையில் சந்தனக் காட்டில் இருந்து ஒரு சேனை திரட்டப்பட்டது அந்த சேனையில் மட்டும் 1000 கோடிகள் மற்றும் 8 லட்சம் வானரங்கள் இருந் தன. (பக்கம் 1277)
மேலும் பல லட்சக்கணக்கான குரங்குகள் திரட்டப்பட்டன அவை அனைத்தும் விந்தியமலை, சங்கோசனா மலை, கிருஷ்ணகிரி மலை, சாக்யா மலை, சுதர்சன மலை, சயல்வேயா மலை, பரியாத்ரா மலை, பர்ணத ஆற்றுக்கரைப் பகுதி, கங்கை ஆற்றுக் கரைப் பகுதிகள் மற்றும் பல இடங் களிலிருந்து வானரங்கள் கிஷ்கிந்தா-_வுக்கு வந்தனர்.
பின்னர் சுக்ரீவன் தலைமையில் லங்கா சென்றனர். இந்த மிகைப்படுத்தப்பட்ட சேனை அளவு ஒரு விசித்திரக் கற்பனையே ஆகும். ஏனென்றால் தற்போதுள்ள மொத்த உலக மக்கள் தொகை சுமார் 600 கோடி மட்டும் தான் மேலும் 1000 கோடி குரங்குகள் இருப்பதற்கு லங்கா நகரத்தில் இடம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. (பக்கம் 1276 முதல் 1285. சி.ஆர் சீனிவாச அய்யங்கார் எழுதிய வால்மீக இராமாயணம்)
5. சிறீராமனும் புத்தரும்:-
இந்த உலகில் தோன்றிய முதல் புரட்சியாளர் புத்தர் தான் எனக் கூறலாம். ஏனென்றால் லும்பினி (நேபாளம்) நாட்டின் இளவரசனாக இருந்த இவர் சுகமான அரண்மனை வாழ்க்கையையும் மனைவி மகனுடன் வாழ்ந்த குடும்ப வாழ்க்கையையும் துறந்தார். கடுமையான தவத்திற்குப்பின் அவருக்கு மக்களின் துயர் போக்கும் கொள்கைகளை உருவாக்கி மக்களி டையே பரப்பினார்.
மதச் சடங்குகளை யும், மூடநம்பிக்கைகளையும், ஜாதி வேற்றுமைகளையும் கடுமையாக எதிர்த்தார். அவர் அன்பு அறம் சார்ந்த அமைதியான வழிகளைக் கடைப் பிடித்து மக்களிடம் பிரச்சாரம் செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். அதன் விளைவாக யாகங்களில் மனிதர்கள் மற்றும் இதர உயிர்கள் (கால்நடைகள் உள்பட) பலியிட்டு கடவுள்கள் தேவர்கள் பிராமணர்கள் மற்றும் பலருக்கும் பங்கிட்டு அவிர் பாகமாக வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதனால் புத்தரின் போதனைகள் உலகெங்கும் பரவியது. ஆரிய வர்த்தத்தில் வேத மதமும் வேத மொழியும் அழிந்தன.
இதனால் பிராமணர்கள் ஆதிக்கம் மீண்டும் ஏற்பட புராணங்களையும் மற்றும் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களையும் மனுசாஸ்திரம் போன்ற தர்ம சாஸ்திரங்களையும் எழுதினார்கள். இவற்றை எழுதுவதற்கு வேத மொழியில் உள்ள வேதங்களி லிருந்து சுமார் 60 முதல் 70 சதவீத அளவு சொற்களை அர்த்தம் தெரியாத காரணத்தாலும் வழக்கு ஒழிந்த காரணத்தாலும் யாஸ்கா (கிமு 500 முதல் 300) என்பவர் நீக்கினார் (நுல்:- நிருக்தா) அந்த சொற்களுக்குப் பதிலாக அசுத்தமான பல  இந்திய மொழிகளி லிருந்து புதிய சொற்களைச் சேர்த்தார்.
பின்னர் பாணினி (கிமு 300 முதல் 250) என்பவர் எழுதிய இலக்கண நூலின் அடிப்படையில் வேதங்களில் உள்ள வாக்கியங்கள் திருத்தப்பட்டன. இவ்வாறு திருத்தப்பட்ட வேத மொழியே சமஸ்கிருதம் என்று கி.மு 100 முதல் கி.பி. 150 வரை உள்ள காலத்தில பெயர் பெற்றது. இத்தகைய சமஸ் கிருதத்தில் ராமாயணம் முதன் முதலில் எழுதப்பட்டது. இந்த நூல் அசோகன் பிராமி எழுத்துக்களில் குப்தர்கள் காலத்தில் எழுதப்பட்டது.
இந்த ராமா யணத்தில் உள்ள ராமரின் குணங்கள் தோற்றம் வாழ்க்கை வரலாறு ஆகியவை ராமனை, (நாரதரின் வேண்டுகோள்படி உத்தம புருசனாக காட்டுவதற்கு வால்மீகி புத்தரையே தனக்கு முன்னு தாரணமாக எடுத்துக்கொண்டு எழு தினார்)  ஆதாரம்_---1- எஸ்.என். சதாசிவம் தனது நூலில் (பக்கம் 153 முதல் 160 வரை _ -நூல்- எ சோசியல் ஹிஸ்டரி ஆப் இந்தியா) 2. கால்டுவெல் எழுதிய பரதகண்ட புராதனம் என்ற நூல் -பக்29)
-இத்தகைய ராமாயணத்தில் காணப் படும் சிறீராமனுக்கும் கவுதமப் புத்தருக்கும் உள்ள வேறுபாடுகளை அவர்களின் வாழ்க்கைகளை ஒப்பிட் டால் பின்வருமாறு அறியலாம்.
5.1. ராமன் யாகத்தைத் தடுப்பவர் களை அழித்தான் ஆனால் புத்தர் யாகம் செய்வதை எதிர்த்தார்.
5.2. ராமன் தன் மனைவியுடனும் பணிவிடை செய்ய தம்பி லட்சுமண னுடனும் வனவாசம் சென்றார் மற்றும் 13 ஆண்டுகள் துணைவியுடன் வாழ்ந் தார் ஆனால் புத்தர், தன் மனைவி மகன், தாய், தந்தை ஆகியோரைத் துறந்து தன்னந்தனியே காட்டிற்குச் சென்று தவம் செய்தார்.
53. ராமன் தன் தந்தையின் கட்ட ளையின்படி தான் வனவாசம் சென் றான். ஆனால் புத்தர் தானே சிந்தித்து தானே முடிவெடுத்து காட்டிற்குச் சென்றார்.
5.4. ராமன் மரவுரி தரித்து ராவ ணனுடன் யுத்தம்  செய்தான். ஆனால்  புத்தர் துறவறம் பூண்டு யுத்தங்களை எதிர்த்தார்.
5.5 வர்ணாசிரமத் தர்மத்திற்கு எதிராக சம்பூகன்  என்ற சூத்திரன், பிராமணர்கள் மட்டும் செய்யக் கூடிய தவத்தை செய்ததனால் பிராமணர்கள் கேட்டுக் கொண்டதன்படி ராமன் அந்த சூத்திரன் தலையை வாளால் வெட் டினான். ஆனால் புத்தர் ஜாதி பேதத்தை எதிர்த்தார்.
எனவே இராமாயணத்தை பிராமண மதத்தின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் வால்மீகி அமைத்துள்ளார் என அறியலாம்.
6. இராமாயணம் குறித்த ஆய்வுகள்
எஸ்.என். சதாசிவம் தனது நூலில் (பக்கம் 153 முதல் 160 வரை- நூல்-: எ சோசியல் ஹிஸ்டரி ஆப் இந்தியா) இராமாயணத்திற்கும் புத்த மதத்திற்கும் உள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வுகளை பின்வருமாறு விவரிக்கிறார்.
6.1. வேதகால கடவுள்களான இந்திரன் வருணன் அக்னி போன்ற வர்கள் பிராமணர்களுக்கு செய்த நன்மைகள் முற்றிலும் புத்த மதத்தால் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த பிராமணர்கள் வேறு வழி யல்லாமல் ரிக் வேதத்தில் காணப்பட்ட விஷ்ணு என்ற முக்கியமில்லாத சிறு கடவுளை புத்த மதத்தை அழிப்பதற்காக உலகின் (வைணவ மதம்) முதன்மைக் கடவுளாக உருவாக்கினார்கள்.
6.2. இராமாயணத்தில் வெள்ளிமுத்து இரும்பு, ஒயின், ஒட்டகங்கள், யானைகள் மற்றும் சில்க் ராமன் பெயர் பொறித்த மோதிரம் போன்றவை குறிப்பிடப்பட் டுள்ளன. இதனால் வரலாற்று அறிஞர் ஹெ.டி. சங்காலியா இராமாயணம் உருவான காலத்தை கி.மு. 3ஆம் நுற்றாண்டிலிருந்து கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வரை நிர்ணயித்துள்ளார். மேலும் இராமாயணத்தில் மிகவும் நவீன கட்டுமானங்களைக் குறிக்கும் பகுதிகள் கி.பி. 7-ஆம் நுறறாண்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
6.3. இராமாயணம் இயற்றப்பட்ட காலம் பற்றி பல்வேறு கருத்துக்களை  வரலாற்று அறிஞர்கள் கொண்டிருந் தாலும் புத்தர் காலத்துக்குப் பின்னர் தான் இராமாயணம் இயற்றப்பட்டது. ஏனென்றால் இராமாயணத்தின் பல முக்கியப் பகுதிகள் பாலி மொழியில் இயற்றப்பட்ட பவுத்த மதத்தைச் சார்ந்த தசரத ஜாதகக் கதை, மற்றும் ஜனகர் ஜாதகக்கதை ஆகியவற்றிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளன.
இராமாயணத்தில் பிராமணர்களின் தேவைக்கு ஏற்பப் பல புதியப் பகுதிகள் அவ்வப்போது சேர்க் கப்பட்டு வளர்ந்தது. தீவிரப் பிரச்சாரத் திற்குப் பின்னரும் தென்னிந்தியாவில் பெருமளவில் இராமாயணம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.இராமாயணத்தை ஆய்வு செய்ததில் தென்னிந்தியாவின் புவியியல் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை.
6.4. மகாபாரதத்தில் ராமனைப் பற்றி ஒரே ஒரு இடத்தில் மட்டும் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் இராமாயணம் பற்றி சொல்லவில்லை. இது வால்மீகி இராமாயணம் உருவாகுவதற்கு முன்பே ராமரின் கதை மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என அறியலாம் (பேராசிரியர் ஏவெபர்)
6.5. வைஷ்ணவ மதம் 11-ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மிகவும் வளர்ச்சியடைந்து உச்ச நிலையை அடைந்தது. அப்போது உலகில் முதலில் உயிர்கள் தோன்றி படிநிலை உயிர்களாக வளர்வதை பற்றிய புத்தரின் கொள்கை களின்படி வைணவ மதத்தில் தசாவதார கொள்கை உருவாக்கப்பட்டது. பொது மக்கள் புத்தர் மேல் மிகுதியான பற்று வைத்திருந்ததை அறிந்த பிராமணர்கள் ஏற்கனவே உள்ள 10 அவதாரங்களில் ஒன்றை நீக்கிவிட்டு புத்தரை விஷ்ணு வின் அவதாரமாக மாற்றி தங்கள் சுலோகத்தைத் திருத்தினார்கள்.
6.6. பால மொழியில் எழுதப்பட்ட தசரத ஜாதகக் கதையில் தசரதன் வாரணாசியில் ஆட்சி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.
6.7. வால்மீகி இராமாயணம் விஷ்ணு பக்தியை வளர்க்க பயன்படுத்தப்பட்டது. மேலும்
6.8. இராமாயணத்தை வால்மீகி மட்டும் உருவாக்கியிருக்க முடியாது. அவரைத் தொடர்ந்து மற்றும் பலர் உருவாக்கி தற்போதைய இராமாய ணத்தை உருவாக்கியுள்ளனர்.- ---பொதுவாக எல்லா பிராமண மதம் தொடர்புடைய நுல்களும் மிகுந்த இடைச் செருகலுடன் பெரிதாக ஆக் கப்பட்டவை ஆகும் (ஏர்னஸ்ட் குன்)
7. முடிவுரை:-
7.1. இராமன் என்ற சத்திரிய குல 15 வயது இளவரசனை விசுவாமித்திரர் தன்யாகத்தற்கு ஒரு அரசன் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்பதில் ஆரம்பித்து பல ஆயிரம் கோடி குரங்குகளுடன் இராவணனுடன் யுத்தம் செய்யும் போது மூர்ச்சையான ராமன் லட்சுமனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்து செல்லும் காட்சி வரை  பார்த்தால் இராமயணம் ஒரு கற்பனை காவியம் என்று நினைக்க வாய்ப்புள்ளது.
இதை விளக்க டாக்டர் கால்டுவெல் எழுதய பரத கண்ட புராதனம் என்ற நூலில் பக்கம் 40-_43_-ல் உள்ள சில பகுதிகள் பின்வருமாறு தரப்படுகின்றது
பல சாஸ்தர நூல்களை வாசித்து ஆராய்ந்த வித்துவான்கள் இராமா யணத்தை வாசித்தவுடனே அது வீண் கதைககளால் நிறைந்திருக்கிறது என்றும் அதில் அடங்கியிருக்கும் உண்மையான சரித்திரங்களை அந்த வீண் கதைகள் கெடுக்கின்றது.---------- கதைகளை கேட்கிறது.
இந்த கால (கி.பி.1857) இந்துக்களுக்குப் பிரியமாயிருக்கிறது போல பூர்வகால இந்துக்களுக்கும் பிரியமாய் இருந்தது. வருணித்து சொல்லும் திறமை அவர் களுக்கு அதிகம் இருந்தது. பகுத்தறியும் விவேகம் அவர்களுக்கு குறைவு. இராட் சதரையும் புதங்களையும் (ஜாக் த ஜெயன்ட் கில்லர் போல) அவைகளை கொல்லும் வீரர்களையும் குறித்து சொல்லிய கதைகள் யூரோப் கண்டத் தில் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கே பிரியம்.
சிறுபிள்ளை அந்தக் கதைகளை நம்பும் சற்றே பெரிய பிள்ளைகளாகிற போது நம்பாது. ஆனாலும் அவ்வகைக் கதைகளுக்கொத்த வீணான கதைகளை இத்தேசத்தில் (கி.பி.1857) உள்ள  சகலரும் பிரியமாய்ச் சொல்லியும் கேட்டும் வருகின்றனர்.
2. இராமாயணத்தின் ஆரம்பத்தில் சொல்லிய கதையைப் பார்த்தால் ராமன் ஒரு வீரனேயல்லாமல் வேறல்ல.
3. (இராமனைப் பற்றிய) தெய்வ அவதாரப் பாட்டுகள் பிற்காலத்து கவி ராயர்களால் இராமாயணத்தோடு கூட் டப்பட்டிருக்க வேண்டும். (பக்கம் 42)
4. சீதையையும் ராமனையுங் குறித்து சொல்லிய மேற்கண்ட அபிப்பிராயங்கள் ருசுவாயிருக்கிறது என்று இதுவரைக்கும் சொல்லக் கூடாது. ஆயினும் அவைகள் விவேகமுள்ள அபிப்பிராயங்கள் என்பதில் சந்தேகமில்லை (டாக்டர் கால்டுவெல் எழுதிய பரதகண்ட புராதனம் (பக்கம் 40-_43). தற்போதுள்ள இந்தியச் சட்டங்களின்படி புத்தமதம், சைவ மதம், வைணவ மதம், சமண மதம், சீக்கியமதம் ஆகிய மதத்தினர்களை இந் துக்களாக கருதப்படுகின்றது. இதன்படி ராமரும் புத்தரும் ஒரே மதம்.
பாகம்  -2
புத்தகம்- அனாடமி ஆப் கன்ஃப் ரன்டேசன்- _ ஆசிரியர் _ --சர்வபள்ளி கோபால் பக்கம்-_147-_1. தசரத ஜாதகக் கதைகள் எழுதிய காலம் கி.மு. 400_-200-
2. பாடல்கள் வடிவத்தில் கதைகள் எழுதப்பட்ட காலத்தைச் சேர்ந்தது ராம கதா. ஆனால் வால்மீக ராமாய ணத்திற்கு முந்தியது.
பக்கம் _ --286  குமாரலீலா பட்டர் ----சமஸ்கிருதம்---சோசியல் ஹிஸ்டரி ஆப் இந்தியா ----என். சதாசிவன்
பக்---_282 அய்யப்பன்------- சாஸ்தா ---புத்தா
--பக்- _276 அஸ்ட்ராலஜர்
பக்-_275 1860ல் மெக்காலே பீனல்கோடு தந்தார்
பக்-_274 ---மனு மந்திரம-காது --ஈயம்- காய்ச்சு
பக்-_273- மனு-காலம்- கி.மு.500.
பக் _259--- விவேக்- சூத்ரா -வேதம்  மெட்ரர்ஸ் பிராமின்- கல்கத்தா ஏடு _ கடல்
பக் _243 ---குஷானா மவுரியா -பல்ல வாஸ்- சாளுக்யாஸ்
பக் _ 227- அதர்வண வேதம் .புத்தருக்குப் பின் தோன்றியது.
ருக் வேதம் 10 மண்டலம் மற்றும் அதர்வண வேதம் 19 மண்டலம்
-விடுதலை ஞாயிறு மலர், 26.12.15

சனி, 14 நவம்பர், 2015

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணம்தான் எல்லா இராமாயணத்துக்கும் மூல நூல். அதில் இராமனைப்பற்றி என்ன கூறியிருக்கிறது என்பதுதான் முக்கியம்.
தந்தை சொன்னவுடன் ராமன் அப்படியே கட்டுப்பட்டு காடேகிடவில்லை.
எந்த மடையனாவது தன் இஷ்டப்படி யெல்லாம் நடந்து வரும் மகனை காட்டுக்கு அனுப்ப சம்மதிப்பானா? என்று இலட்சு மணனிடம் தன் தகப்பனைக் குறை சொல் லித் துக்கப்படுகிறான் ராமன் (அயோத்தியா காண்டம் 53ஆவது சருக்கம்)
இந்த ஒரு சோறு போதுமே!
சீதையின் யோக்கியதை தான் என்ன?
மாரீசன் மானாக வந்த போது, அதனைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று சீதை சொன்னபோது, மானைத் துரத்திக் கொண்டு ஓடிய ராமன் வெகு நேரம் வராமல் இருந்த நிலையில் லட்சுமணா என்ற குரல் மட்டும் கேட்ட நேரத்தில், தன் அருகில் இருந்த லட்சுமணனை நோக்கி ராமனுக்கு ஏதோ ஆபத்து - விரைந்து செல் என்று சொன்ன நேரத்தில், இலட்சுமணன் அகலாது இருந்த நிலையில் சீதை என்ன சொல்லுகிறார்?
அடபாவி! என்னைக் கைப்பற்றக் கருதி, இராமன் சாகட்டும் என்று போகாமல் இருக்கிறாயா? இதற்குத்தான் எங்கள்கூட யோக்கியன் போல வந்தாயா? அட சண் டாளா! நீ என் மீது ஆசை வைத்து இரா மனைக் கொல்ல நினைக்கின்றாய்; பரதன் உன்னை எங்களோடு இதற்காகவே அனுப் பினானா? நீயாவது, பரதனாவது என்னை அனுபவிக்க  நான் ஒப்ப மாட்டேன் என்றாளே சீதை.
இலட்சுமணன் தாயே இப்படியெல்லாம் பேசக் கூடாது! என்று வணக்கமாகச் சொன்னபோது சீதை ஏ வஞ்சகா! இப்படி யாவது பேசிக் கொண்டு இன்னும் சற்று நேரம் என்னைப் பார்த்துக் கொண்டு இருக் கலாம் என்று பார்க்கிறாயா? என்றாள் சீதை (ஆரண்ய காண்டம், 45ஆவது சருக்கம்)

இலட்சுமணனின் யோக்கியதைதான் என்ன?
சூர்ப்பனகையிடம், சீதை கெட்ட நடத்தையுள்ளவள், கொங்கை சரிந்தவள் என்கிறானே! (ஆரண்யகாண்டம் 18ஆவது சருக்கம்) தாடகை, சூர்ப்பனகை, அயோமுகி ஆகிய பெண்களை காது, மூக்கு முலை ஆகியவைகளைக் கொய்து கொடுமை செய்தவன் ஆயிற்றே!

செவ்வாய், 10 நவம்பர், 2015

இராமர் பாலம் இராமேஸ்வரத்தில் இல்லை

(கட்டுரையாளர் - திராவிடர் இயக்கத்தவர் அல்லர் - அவர் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துள்ளார்).
சிறீராமனுடைய சரித்திரத்தை நாரத முனிவர் வால்மீகிக்குச் சொல்லி அதை அவர் காவியமாக எழுதினார் என்பதுதான் நாம் அறிந்தது. வால்மீகி எழுதிய இராமாயணம் மிகப் பெரிய புகழ் பெற்ற பிறகே பிற மொழிகளில் கம்பர் முதற்கொண்ட பலரால் இராமாயணம் எழுதப் பெற்றது.
இராமர் பாலம் பற்றிய எந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் வான்மீகத்தில் இருப்பதை ஆதாரமாகக் கொள் வதுதான் நியாயம். கம்பரோ, எழுத் தச்சனோ, துளசிதாசரோ யாராயினும் இவர்கள் எழுதியவை வான்மீகத்தை அடியொற்றி மாற்றியும், மிகைப் படுத்தியும் எழுதப்பட்டவைதான் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை. இந்த காவியங்களிலெல்லாம் ஏராளமான இடைச்செருகல்கள் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.
மதரீதியாக இராமர் பாலத்தின்மீது நம்பிக்கை வைத்து அது இன்றளவும் இருக்கிறது என்று ஒருவர் நம்பினால் அவரது நம்பிக்கை யார் எழுதிய இராமாயணத்தை அடிப்படையாக வைத்து அமைய வேண்டும்?
இராமாயணத்தை எழுதிய ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டு இருப்பதையும், இவர்களது காவி யங்களில் ஏராளமான கற்பனைகள் இருப்பதையும், இவற்றில் பல இடைச்செருகல்கள் இருப்பதையும் ஒப்புக் கொள்ளும்போது, இராமர் பாலத்தை புனிதம் என்று நம்பு கிறவர்கள் யார் எழுதியதை ஆதார மாகக் காட்டுவார்கள்?
உதாரணமாக, இராமர் தான் கட்டிய பாலத்தைத் தானே உடைத் தார் என்ற செய்தி கம்பராமா யணத்தில் வருகிறது. இதை மிகைப்பாடல் என்றும், இடைச் செருகல் என்றும் ஆகவே இது உண்மையல்லவென்றும் சிலர் (துக்ளக் சோ) சொல்கிறார்கள்.
இதே அளவுகோலைப் பயன் படுத்தினால் இராமர், இராமேஸ் வரத்தில் சிவனை வழி பட்டார் என்பதும் கம்பராமாயணத்தில் மட்டுமே. அதுவும் மிகைப்பாடல் பகுதியில், இடைச்செருகலாகத்தான் வருகிறது.
இதை நம்பி இன்றுள்ள இராமேஸ்வரம் கோவிலை ஆரம்பத் தில் ஸ்தாபித்தவர் இராமனே என்றும் நம்புகிறவர்களின் நம்பிக்கை என்னாவது? இப்படி இராமன் இரா மேஸ்வரத்தில் சிவனை வழிபட்டார் என்பது வான்மீகத்தில் இல்லவே இல்லை.
முதல் நூலில் இல்லாத ஒன்று தழுவல் நூலில் இருக்குமானால் நாம் முதல் நூலைத்தானே ஆதார மாக ஏற்க முடியும். மேலும், வான் மீகத்தில் இராமேஸ்வரம் என்ற ஊரின் பெயர் எங்குமே பயன்படுத் தப்படவில்லை. அதுபோல தனுஷ் கோடி என்ற ஊரின் பெயரும் வான்மீகத்தில் இல்லை.
மாறாக அனுமன் லங்காவுக்குச் சென்றபோதும், இராமன் லங்காவை பார்வை இட்டபோதும் மகேந்திர கிரி மலையில் ஏறி நின்று பார்த் தார்கள் என்று வான்மீகத்திலும், கம்பரிலும் ஒரே மாதிரி வருகிறது.
இந்த மகேந்திரமலை இராமேஸ் வரத்திலோ, தனுஷ்கோடியிலோ இல்லை. ஒரு சிறிய மணல் பொத் தையை மகேந்திரமலை என்று இராமேஸ்வரத்தில் வழிகாட்டிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அனுமனும், இராமனும் ஏறி நின்ற மகேந்திர மலை இன்றும், உண் மையிலேயே இந்திய வரைப்படத்தில் ஒரி சாவை ஒட்டிய ஆந் திர மாநிலத்தின் கடற்கரையில் தான் உள்ளது. இந்த மலை யில் நின்று பார்த்தால் கடலும், கடற்கரையில் உள்ள லங்காவும் (சிறிய தீவு) அவர் களுக்குத் தெரிந்தது.
லங்கா என்ற சமஸ் கிருத வார்த்தைக்கு சிறிய தீவு என்று அர்த்தம். வான்மீகத் திலும், கம்பரிலும் சொல்லப்படுகின்ற கிட்கிந்தை, தண்டகாரண்யம், விந்திய மலை, கோதாவரி நதி, நர்மதை நதி, விந்தியத்தின் மலைக்குகைகள் அனைத்துமே இன்றும் இந்திய வரைபடத்தில் ஆந்திராவின் வடக்கு எல்லையிலும், ஒரிசா சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம், உத்திர பிரதேசம் மாநிலங்களிலும் உள்ளன.
வான்மீகத்திலும் கம்பரிலும் வரும் பஞ்சவடியும், அயோத்தியும் சித்திரக்கூடமும் கூட இன்றைய உத்திரபிரதேச மாநிலத்திலேயே உள்ளன. அயோத்தியில் புறப்பட்டு காட்டில் கால்நடையாக வனவாசம் வந்த இராமன் முதலியோர் முதல் 10 ஆண்டுகள் சித்திரக்கூடத்தில் முனிவர்களின் விருந்தினர்களாகவே தங்கியிருந்தார்கள் என்கிறது வான்மீகம்.
சீதையை இராவணன் கடத்திய தாகச் சொல்லப்படும் பஞ்சவடி ஆஸ்ரமம் கோதாவரி ஆற்றின் ஒரு கிளையின் அருகில் இருந்தது என்று இரண்டு இராமாயணங்களும் சொல்கின்றன.
இந்த பஞ்சவடியும், கோதாவரியும், கிட்கிந்தையும் சட்டீஸ்கர் மற்றும் ஆந்திராவின் வடக்கு எல்லையில் இன்றும் உள்ளன. இராவணனின் தங்கை சூர்ப்பனகை தண்டகாரண் யப் பகுதியில் வசித்தாள் என்கிறது வான்மீகம்.
ஆகாயத்தில் பறக்கும் குதிரை, தேர், புஷ்பக விமானம், பேசும் குரங்கு, பேசும் கழுகு, பேசும் கரடி, பறந்து செல்லும் அரக்கர்கள் போன்ற இயற்கைக்கு புறம்பான கற்பனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இராவணனது லங்கா இன்றுள்ள ஒரிசா கடற்பகுதியில் உள்ளது என்பது புரியும்.
எப்படி?
கிட்கிந்தையில் இருந்து படைகளுடன் மகேந்திரமலையை கால்நடையாக சென்றடைய இராமன் எடுத்துக் கொண்ட காலம் வெறும் நான்கே நாட்கள் ஆறுகள், மலைகள், ஏரிகள், அடர்ந்த காடுகளையெல் லாம் சுற்றியோ, நடுவில் சென்றோ வீரர்கள் இந்த தூரத்தைக் கடந் தார்கள் என்று வான்மீகத்தில் வருகிறது.
கிட்கிந்தையில் இருந்து காட்டு வழியாக நான்கு நாட்களுக்குள் ஒரு சேனை கடந்து செல்லும் தூரத்தில் இருப்பது தான் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையும் கடற்கரையும்.
மாறாக கிட்கிந்தையில் இருந்து குறுக்காக நடந்தாலும் 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இராமேஸ் வரத்தை இராமனின் சேனை வந்தடைய நான்கு நாளல்ல. ஆறு மாதங்கள் ஆனாலும் முடியாது.
பாலம் கட்ட 5 நாட்களும், போர் செய்து இராவணனைக் கொல்ல 8 நாட்களும் எடுத்துக் கொண்ட இராமன் சித்திரை மாதம் சுக்ல ஷஷ்டியன்று வனவாசம் முடிந்து  திரும்பி நந்திகிராமம் வந்துவிடுகிறார்.
கிட்கிந்தை மகேந்திரகிரி -4 நாட்கள்
பாலம் கட்ட    -5 நாட்கள்
போர்    -8 நாட்கள்
பங்குனி மாதம் உத்தரத்தில் கிட்கிந்தையிலிருந்து புறப்பட்ட இராமன் சித்திரை மாதம் கிருஷ்ண சதுர்த்தியுடன் கூடிய அமாவாசையில் இராவண வதம்  முடிந்து மீண்டும் நந்திகிராமம் வந்து சேர எடுத்துக் கொண்டது இவ்வளவு குறுகிய நாட்கள் மட்டுமே. (ஸ்ரீ மத்வால்மீகி இராமாயணம் ஸாரம். ஸ்ரீ ராம கிருஷ்ணமடம் மைலாப்பூர் வெளி யீடு).
இதனால், இராமன் இராமேஸ் வரம் வரவே இல்லை என்பதும், இராமன் கட்டிய மிதவைப் பாலம் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையின் பக்கமுள்ள கடலிலேயே கட்டப் பட்டது என்பதும். அன்றிருந்த சிறிய லங்கா (தீவு) இன்று கடலில் மூழ்கி இருக்கலாம் என்பதும் தான் உண்மையாக இருக்க முடியும்.
இராமபிரான் புருஷோத்தமனாக வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிய மனிதன் என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஸ்தாபகரான பரமபூஜ்ய டாக்டர் கேசவ பலிகாரம் ஹெட் கேவார்.
மக்களை மடையர்களாக்கி தீண் டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கு வதற்கு காரணமாக இருந்தவர்கள் கள்ள பண்டிதர்களான உயர் ஜாதி பூஜாரிகள் என்றும், சடங்காசாரங்கள் போன்றவற்றினால் பாமர இந்துக்களை ஏமாற்றியவர்கள் என்றும், இன்றும் பொய்யான கட்டுக் கதைகளைச் சொல்லி அறியாதவர்களை ஏமாற்றி வேதாந்தத்திற்கு தப்பான பொருள் சொல்லி விடுகிறார்கள் என்றும், இன்றுள்ள பூஜை முறைகளினால் இந்துக்களை ஆண்மையற்றவர் களாகவும், பிச்சை எடுக்கும் புத்தியுடையவர்களாகவும், ஆக்கி விட்டார்கள் என்றும் உயர்ஜாதி பூஜாரிகளை சாடுகிறார். சுவாமி சின்மயானந்தர் அவர்கள்.
இந்த சின்மயானந்தர் சுவாமி. ஆர்.எஸ்.எஸ். கிளை ஸ்தாபனங் களில் ஒன்றான விஸ்வஹிந்து பரிஷத்தின் ஸ்தாபனத் தலைவர் களில் ஒருவர் என்பதை மறந்து விடக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.ன் பெரும் தலைவர்களில் ஒருவரும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் ஸ்தாபகருமான ஏக்னாத் ரானடேயும் கூட இரா மனை அற்புதங்கள் செய்யாத மக் களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த மாபெரும் மனிதர் என்றுதான் சொல்கிறார்:
ஆனால், இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று சொல்லிக் கொள் கிறவர்கள் அதன் ஸ்தாபகத் தலை வரின் கொள்கையையே சத்த மில்லாமல் சாப்பிட்டு விட்டு இராமனை கற்பனை கதாபாத்திரம் ஆக்குவதிலேயே குறியாக இருக் கிறார்கள்.
ராமன் கட்டிய பாலம் மரங் களையும் கற்களையும் போட்டு, காட்டுச் செடிகளால் பிணைத்து கட்டப்பட்ட மிதவைப் பாலம் என்பது வான்மீகத்தில் விளக்கப் பட்டுள்ளது.
மிதவைப்பாலம் அசையாமல் இருக்க கற்கள் கீழே கட்டி தொங்க விடப்பட்டிருக்கலாம். அந்த கடற்கரையில் உள்ள ஒருவரிடம் கேட்டறிந்து (இதை சமுத்திர ராஜன் என்கிறார்கள்) அலை அதிகம் இல்லாத இடத்தில் இராமன் பாலம் அமைத்தான் என்றும் வான்மீகத்தில் வருகிறது.
மரத்தினாலும், கொடிகளினாலும் ஒரிசா கடற்கரையின் அருகில் உள்ள லங்காவுக்கு செல்ல அமைக்கப்பட்ட மிதவைப் பாலம் எத்தனை நாட் களுக்கு இருந்திருக்க முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். வான்மீகத்தின்படி தமிழகத்திற்கு வராத இராமன், இராமேஸ்வரத்தில் 100 யோஜனை (200 மைல்) நீளத்தில் 20 மைல் அகலத்தில், பாலம் கட்டினார் என்று நம்பச் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
இயற்கையில் நடக்காத, கற் பனையான கதைகளைச் சொல்லி பாமர இந்துக்களை கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பல ஆயிரம் ஆண்டுகள் ஏமாற்றி சுகபோகமாக வாழ்ந்த உயர்ஜாதி பூஜாரிகளின் சரித்திரத்தை நன்கு அறிந்தவர்களுக்கு, இன்று. இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் செய்து வரும் ஏமாற்று வேலைகள் புரிந்து வரும்.
புருஷோத்தமன் ஸ்ரீராமனை வழிகாட்டியாக மதித்து, வீரனாக வாழ்ந்து அதர்மத்தையும், அறியாமை யையும் எதிர்த்து போராடும் நம்பிக்கையில் உள்ள என் போன் றவர்களின் மனம் புண்படும்படி, ராமனை வெறும் கற்பனைக் கதாநாயகனாக ஆக்க முயலும் ஜாதி பூஜாரிகளின் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.
ஒருவரது மத நம்பிக்கை இன்னொருவரது அறிவுபூர்வமான நம்பிக்கைக்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கோ இடையூறு செய்யாத வரையிலும் யாரும் பெரி தாகக் கவலைப்பட போவதில்லை.
ஆனால் உண்மைக்குப் புறம்பான வெறும் கற்பனைகளை நம்பச் சொல்லி பாமர இந்துக்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தும் இவர்கள் இந்து மதத்திற்கும், ஸ்ரீராமனுக்கும் தீராத களங்கத்தையே உண்டு பண்ணுகிறார்கள் என்பது தான் உண்மை.
- கேப்டன் எஸ்.பி. குட்டி பி.இ.,
(நூல் அறிவுக்கு எட்டிய கடவுள்)
-விடுதலை ஞா.ம.,2.3.13

இராமன் என்பதே புரட்டு- பரமத்தி சண்முகம்,



மாநில தி.மு.க.கொள்கை பரப்பு இணைச் செயலாளர்
2001-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ள கருத்து பல்வேறு நிபுணர்கள் நீரி என்ற ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட எல்லாமே கப்பல் செல்லத் தேர்வு செய்யப்பட்ட ஆறு பாதைகளில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் ஆகிய வற்றை அகற்றி ஆழப்படுத்தி சேதுக் கால்வாய் அமைப்பதைத் தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்ற தெளிவாக விளக்கம் அளித்துவிட்டு மேலும் கூறுகிறார்
மூதாட்டி ஜெயலலிதா
இத்திட்டம் காலங்காலமாக ஏறத்தாழ நூறு ஆண்டு காலமாகப் பேசப்பட்டு பல்வேறு நிபுணர் குழுக்கள் அறிக்கையும் பின் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதோடு அவரது ஆட்சி முடிந்துவிட்டது.
ரூ. 2,500 கோடி செலவிலான திட்டம் தி.மு.க. அரசு அமைந்தவுடன் நமது முதல்வர் கலைஞர் அவர்கள் இத்திட்டம் விரைவில் நிறைவேறிட வேண்டும் என்பதற்காகவே, பிரத மரிடம் வலியுறுத்தி திரு.டி.ஆர்.பாலு அவர்களை இத்துறைக்கான அமைச்ச ராக்கி திட்டம் தொடங்கி மளமள வெனச் செயல்பட்டு 2,500 கோடி ரூபாய் செலவிலான திட்டம் முக்கால்வாசி நிறைவேறி இன்னும் 12 கிலோமீட்டர் தொலைவுதான் பாக்கி.
இப்ப வந்து குறுக்கே படுத்துக்கிட்டான் ராமன்
ஜெயலலிதா தனது இரண்டு தேர்தல் அறிக்கையிலும் தேர்தல் வாக்குறுதியாக மக்களிடம் தந்துவிட்டு இப்போது சுப்ரமணியசாமி என்ற ஒற்றைப் பார்ப் பனரைத் துணைக்கழைத்துக்கொண்டு உச்சநீதிமன்றத்திலே இருவரும் சேர்ந்து சேதுக்கால்வாய் திட்டமே கூடாது என்று இராமர் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய ராமசேது பாதிக்கும் இராமர் வருத்தப்படுவார், இராம குற்றம் வந்துவிடும் என்று உச்ச மன்றத்திலே வழக்குத் தொடுத்துள்ளார் என்றால் ஜெயலலிதாவின் நாணயத்தை என்னவென்று சொல்வது? சரி, இராமர் ஒரு பாலம் கட்டினாரா? இராமன், சத்திரியனா, கடவுள் அவதாரமா?
இராமன் கடவுள் என்று ஒப்புக் கொண்டால், இராமாயணமே கிடை யாதே! இராமாயணமே ஒரு கற்பனைக் காவியம்தான், இராம இராவண யுத்தமே இராமாயணம் என்று கூறப்படுகிறது மூதாட்டி ஜெயலலிதா அவர்கள் என்ன சொல்கிறார்?
இதோ பிரபல ஆராய்ச்சியாளர் திரு. கே.முத்தையா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் மாநில செயலாளராக இருந்தவர் கூறுகிறார். தன் வாரிசுக்காக தனக்குப் பின் ராஜ்யத்தை ஆளுவ தற்காக அக்காலத்திய அரசர்களும், நில உடைமை எஜமானர்களும் ஒருவித ஏற்பாடு செய்து கொள்வது வழக்கம் தன் மனைவிமார்களை பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பது அக்காலத்திய வழக்கம் அடிமைச் சமுதாயத்தில் பெண்கள் இரட்டை அடிமைகள், அவர்களை அடிக்கலாம் கொல்லலாம் மற்றவர்களிடத்தில் விற்கலாம். எனவே தம் மனைவி மார்கள், சக்தியில்லாத தனக்காகப் பிள்ளை பெற்றுத்தரும்படி கோரப் பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அடிமை எஜமானர்களின் சமுதாயம் அது.
அசுவமேத யாகம் என்று யாகம் செய்வார்கள். குதிரையொன்றை பவனி வரச்செய்வார்கள். பிறகு அதை யாகம் செய்யுமிடத்தில் வெட்டி அதன் மாமிசத்தை அனைவரும் உண்டு அசுவமேத யாகம் செய்யும் களத்தில் உள்ள குடில்களில் பாகுபாடின்றி உறங்குவார்கள். அது போன்றதே புத்திர காமேட்டி யாகம். யார் புத்திர பாக்யம் வேண்டுமென்று விரும்புகிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிமார்களை யும் அழைத்து வருவார்கள் யாகம் செய்யும் புரோகிதர்களிடம் தங்கள் மனைவிமார்களுக்கு; புத்திர பாக்யம் உண்டாக்கும்படி கேட்டுக் கொள் வார்கள். யாகக் களத்திலே அந்த மனைவிமார்கள் தங்குவார்கள்.
இரவு பகலாகத் தங்குவார்கள் அதன்பிறகு அவர்களுக்கு புத்திரர்கள் பிறப்பார்கள் புத்திர காமேட்டி யாகத்தின் அர்த்தம் இதுதான்.
தன்னால், தன் மனைவிக்கு குழந்தை பிறக்க வைக்க முடியவில்லை என்றால் பிறரால் குழந்தை பிறக்க ஏற்பாடு செய்வதற்கு அக்காலத்தியவர்கள் ஏற்படுத்திக் கொண்ட சடங்கு இது.
இதை வால்மீகி தன்னுடைய இராமாயணத்தில் பாலகாண்டத்தின் 14-ஆவது சர்க்கத்தில் தெளிவாக எத்தகைய சந்தேகத்திற்கும் இடமின்றி விளக்குகிறார்.
தன்னுடைய மனைவிமார்கள் மூவரும் புத்திரர்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யும்படி தசரதன் தன் னுடைய அரசவைப் புரோகிதர்களிடம் வேண்டிக் கொள்கிறான். அவர்களது ஆலோசனைப்படியே அந்த யாகம் நடத்துகிறான்.
இதற்கென களம் தயாராகிறது. தங்குவதற்குப் பல குடில்கள் தயாரிக் கப்படுகின்றன. குதிரை ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டு திரும்பவும் யாகத்திற்குக் கொண்டு வரப்பட்டுப் பலியிடப்படுகிறது. அதன் மாமிசத்தைப் புத்திரபாக்யம் கோரும் பெண்கள் உள்பட அனைவரும் தீயில் பொசுக்கிச் சாப்பிடுகிறார்கள். இது போல் மொத்தம் 300 மிருகங்கள் (ஆடு மாடுகள்) உட்பட பலியிடப்படுகின்றன அத்தனையும் உண்ணுகிறார்கள்.
16 பிரதம புரோகிதர்களின் தலைமையில் இந்த யாகம் நடைபெறுகிறது. அவர்களிடம், தன் மனைவிமார்களுக்கு புத்திர பாக்யம் கிடைக்கும்படி வேண்டுகிறான் தசரதன் மனைவிமார்கள் மூவரும், நான்கு பிள்ளைகளுக்குத் தாய்மார்களா னார்கள். இதுவே பாலகாண்டத்தின் 14ஆவது சர்க்கத்திலிருந்து கூறப்படும் விபரங்கள்.
இந்தக் கருத்து மார்க்சீயக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செய லாளராக இருந்த தோழர் கே.கே .முத்தையா அவர்கள் எழுதிய இராமாயணம் உண்மையும் புரட்டும் என்ற ஆராய்ச்சி நூலிலிருந்து தரப்படுகிறது. டி.பரமசிவ அய்யர் டி.அமிர்தலிங்க அய்யர் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் வழியில் திரு. கே.முத்தையா அவர்கள் இராமாயணம் உண்மையும் புரட்டும் என்ற தலைப்பில் எழுதிய நூலிலிருந்து இராமன் பிறப்பின் ஆபாசம், அசிங்கம், இராமனின் தாய் தந்தையர் யோக்யதை அனைத்தையும் வெளியிட்டுள்ளார்.
இராமாயணம் ஓர் கற்பனைக் காவியம் அந்த நாட்களில் புத்தகமும் சமணமும் ஓங்கிப் புகழுடன் சிறந்து பரவியிருந்தது. பார்ப்பனீயமும் இந்து மதமும் காப்பற்றப்பட வேண்டுமே என்பதற்காகப் பார்ப்பனர்கள் ஒன்றுகூடி வால்மீகி முனிவரிடம் வேண்டி புத்தருக்குப் பதிலாக இராமனைக் கதாநாயகனாகப் படைத்த ஒரு காவியமெழுத வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்கிணங்க வால்மீகி முனிவர் சமஸ்கிருதத்தில் இராமனைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்டதே வால்மீகி இராமா யணம் வால்மீகி தனது காவியத்தின் நாயகனாக இராமனைப்படைத்தார். ஒரு சத்திரியனாக சிறந்த வீரனாகப் படைத்தார். எந்த இடத்திலும் இரா மனைக் கடவுளாகவோ விஷ்ணு அவதாரம் என்று காட்டவில்லை.
வால்மீகியின் அழகுமிக்க சமஸ் கிருதத்தை போலவே தமிழிலும் படைக்க வேண்டும் என்று தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஒன்று கூடிச்சிறந்த கவிஞனான கம்பனை அணுகி வேண்டினர். கம்பனுக்குச் சகல சவுகரியங்களும் அய்ஸ்வரியங்களும் அந்தப்புறத்தில் உள்ள எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க இருந்தார்களே சோழப்பேரரசர்கள் அவர்கள் தந்த உற்சாகத்தில் தான் கம்பன் ஒரு துளியும் இன உணர்வோ, மொழி உணர்வோ இன்றி இராமனுக்கு கடவுள் தன்மையைப் படைத்து எழுதி விட்டான்.
இந்த இராமாயணத்தை சோழ அரசர்கள் தூக்கி வைத்து கொண்டு ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்தனர். அதன் விளைவே ராமன் கடவுளாகப் பரப்பப்பட்டான்.
இராவணனை, அரக்கன் கொடியோனென்று கம்பன் எழுதியது இராமனைக் கடவுளாக்குவதற்காகவே என்று அறிஞர் அண்ணா அவர்கள் புலவர் குழந்தை எழுதிய இராவண காவியம் நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் அவர்கள் இராமனைத் தமது ஆராய்ச்சியால் அக்குவேறு ஆணி வேறாகப்பிய்த்து காட்டி இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென்று முழங்கினார். அறிஞர் அண்ணா அவர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இராமா யணத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எழுதினார்.
இராமாயணம் பெரிய புராணம் இரண்டும் புனித நூல் என்று வாதிட வந்த மாபெரும் தமிழ் அறிஞர்கள் இராமாயண, மகாபாரத ஆராய்ச்சியார்களை நேரடி வாதத்தில் அறிஞர் அண்ணா வென்றார்.
தந்தை பெரியார் அவர்களின் பெரிய புராண ஆராய்ச்சி நூல்  தமிழ் மக் களிடையே பெரிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது.
அறிஞர் அண்ணாவின் வாதப்போர் வெற்றி தீ பரவட்டும் என்ற நூலாக வெளிவந்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணா உயர்த்திப் பிடித்த அறிவுத் தீப்பந்தம் மூட நம்பிக்கையிலும்,  சக்தியிலும் மூழ்கிக் கிடந்த இளை ஞர்கள், மாணவர்கள், வியாபாரிகள் மத்தியிலும் பகுத்தறிவுச் சுடர் ஏற்றியது இதனையொட்டியே பட்டிமன்றங்கள், சுழலும் சொற்பொழிவு மன்றங்கள் என அறிவொளி பரப்பியது.
இந்த நிலையில் தான் ஜெயலலிதா, சு.சாமி என்ற ஒற்றைப் பார்ப்பனரைக் கூட்டிக் கொண்டு உச்சநீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்திருக்கிறார்.
புத்த மதத்தை அழித்து புத்தனுக்குப் பதிலாக ராம வழிபாட்டை உருவாக் கவும், புத்த மதம் இருந்த இடத்தில் இந்து மதத்தை நிலை நாட்டவும் செய்த நீண்ட நெடும் முயற்சியின் ஒருபகுதியே இது.
இந்த இடைச்செருகல்களுக்குக் காரணமும் உண்டு புத்த மதத்தினரும், புத்த பிக்குகளும் பொது மக்களால் வெகுவாக மதிக்கப்பட்டனர் ஒடுக்கப் பட்ட ஏழை எளியவர்களிடையே புத்த பிக்குகள் மிகுந்த செல்வாக்குப் பெற்றி ருந்தனர் அவர்கள் பேசிய சமத்துவ போதனைகள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தன.
(கே.முத்தையா இராமாயணம் உண்மையும் புரட்டும்)
ஆக வால்மீகி இராமாயணத்தில் எந்த இடத்திலும் ராமன் கடவுள் அவதாரமென்று குறிப்பிடவே இல்லை.
ராமன் பிறப்பே ஆபாசம்! தெரிந்தே பரதன் அடைய வேண்டிய ஆட்சியைத் தானே அடைய முடிசூட்டு விழாவைப் பரதனுக்குத் தெரியாமல் நடத்திக் கொண்டான். ஆனால் கைகேயி விழிப்பாக இருந்து தடுத்துவிட்டாள்.
இராமனுக்கு அவனது தந்தையார் என்றே தெரியாது
யாகத்தில் நியமிக்கப்பட்ட பிள்ளை களைப் பெற்றுத்தர வந்த முரட்டுக் காளைகள் போன்றவர் களைத்தான் தசரதன் வணங்கி எனது மூன்று மனைவியருக்கும் பிள்ளை பெற்றுத் தாருங்கள் என்று வேண்டிக் கொள்ள குழந்தை உண்டாக்கித் தரவே நியமிக்கப்பட்ட பொலிகாளைகளான ஹோதா அதர்வயூ உக்தாதா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தசரதனின் பட்ட மகிஷிகளான யசோதா, கைகேயி, சுமத்திரை ஆகியோருடன் சேர்ந்து நான்கு ஆண் குழந்தைகளைக் கொடுக்கிறார்கள்.
இவர்கள் பெரிதாக வளர்ந்தவுடன் அயோத்தி முடி சூட்டு விழாவிலும் இராமன், பதவிக்கு ஆசைப்பட்டு தனது சிற்றன்னை கைகேயிக்குத் துரோகம் இழைக்கிறான். தசரதனின் அயோத்தி அரண்மனை இதைப்புரிந்தும், பரதன் சூடிக்கொள்ள வேண்டிய முடியையும் அயோத்தியின் ராஜ்ய பாரத்தையும், தானே அடைய உடன்படுகிறான் இராமன் ஆனால் கைகேயி விட்டுக் கொடுக்காமல் தன் மகன் பரதனுக்கே முடிசூட்டு விழா நடத்தி விடுகிறாள். அது மட்டுமல்லாமல் தன் கிழக் கணவன் தசரதன் கொடுத்திருந்த இன்னொரு வரத்தின்படி இராமனை பதினான்கு வருடம் காடேக வைக்கிறாள்.
ஆழி சூழ் உலகமெல்லாம்
பரதனே ஆள, நீ போய்
தாழ் இருஞ்சடைகள் தாங்கி
அருந்தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணிப்
புண்ணிய துறைகளாடி
ஏழிரண்டாண்டில் வா    (கம்பராமாயணம்)
என இயம்பினார் அரசன்.
நீ, ஒன்றும் ஆட்சி செய்ய வேண் டாம் நீண்ட ஜடாமுடி தரித்து அரி தான தவக்கோலத்தோடு நீர் நிறைந்த துறைகளை நாடி, நீராடி கடும் புழுதிபடர்ந்த காடுகளில் அலைந்து தவம் மேற்கொண்டு காடு வனாந் தரங்களில் உன் மனைவியோடு திரிந்து பதினான்காண்டுகள் கழித்து நாடு திரும்பி வா! என்று கூறிவிட்டான்.
ஆக ராமன் ஒரு சராசரி மனிதன் ஆசா பாசங்களும் விருப்பு, வெறுப்பு களுக்கும் உட்பட்டவன்தான்.
பதினான்காண்டு காலம் வனவாசம் சென்றவன் காடுமேடு சுற்றி தவமே சீலமாகக் கொண்டு திரிய வேண்டி யவன் அப்படி நடக்க வில்லையே!
இராமனுக்கு தன் தந்தையார் என்றே தெரிய வாய்ப்பில்லையே. மற்றவர் சொல்லித்தான் தன் தந்தை தசரதன் என்று அறிந்து கொண்டான்.
இராமன் அப்பன் பேர் தெரியாத வன்.
பெற்றோர் சொல் கேளாதவன்
காட்டில் திரியும் போது, தமிழ் பெண்களை அவர்களுடைய உறுப்பு களை அறுத்தெறிந்தவன்
தன் மனைவி சீதையையே நம்பாமல் கர்ப்பத்தோடு காட்டுக்குத் துரத்தியவன்
அண்ணன் தம்பிகளுக்குள் சண் டையை மூட்டித் தம்பியை தனியாக்கி அண்ணனை மறைந்திருந்து கொன் றவன்.
சம்பூகன் என்ற திராவிடனை வதம் செய்தவன் இன்னும் எத்தனையோ குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவன் அவன் சாதாரண மனிதனாகக்கூட மதிக்கக் தக்கவன் அல்லன்.
-விடுதலை ஞா.ம.15.6.13

திங்கள், 9 நவம்பர், 2015

இராவணன் - ஒரு மகாத்மா - ஜலந்தரில் வழிபாடு


எல்லோரும் எளிதாக சொல்லி விடுவோம், நல்லவன் என்றால் ராமன் என்றும், கெட்டவன் என்றால் ராவணன் என்றும்! பொதுப்புத்தியி லிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவை. எங்களைப் பொறுத்தவரை ராவணன், மகாத்மா
-இப்படிச் சொல்கிறார்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினர்.
தசரா விழாவில் ராமலீலா கொண்டாடி, ராவணன்- அவன் தம்பி கும்பகர்ணண்-மகன் இந்திரஜித் போன்றவர்களின் நெட்டுருவங்கள் மீது தீ அம்பு பாய்ச்சி எரிப்பது என்பது வடமாநிலத்து வழக்கம். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, நாளைய பிரதமர் கனவு காணும் ராகுல்காந்தி எல்லோ ருமே இந்த தசராவில் இப்படி தீ அம்பு விட்டார்கள். ஆனால், ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினரோ, இனி இதுபோல செய்து எங்கள் மனதை நோகடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். ஏன்?    நாளேட்டில் இது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. அவரது பெயரிலேயே ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆதிதர்மி என்கிற தலித் இனத்திற்கு அடுத்த பெரிய தலித் இனம் இந்த வால்மீகி சமுதாயம்தான். (திருக்குறளை எழுதிய வள்ளுவர் பெயரில் தமிழகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருப்பதும் கவனிக்கத்தக்கது). வால்மீகி சமுதாயத்தினர் ராவணனை கடவுளாக வணங்குகிறார்கள்.
நீங்கள் சித்திரிப்பது போல ராவணன் அரக்கனல்ல. அவர் மகாத்மா. வால்மீகி தன்னுடைய ராமாயணத்தில் ராவணனை வலிமையான-நேர்மைமிகுந்த அரசனாகத்தான் காட்டியிருக்கிறார். அதனால்தான் நாங்கள் அவரை வழிபடுகிறோம் என்று ஆதி தர்ம சமாஜின் நிறுவனத் தலைவரான தர்ஷன் ரத்தன் ராவணா கூறுகிறார். நாட்டின் பல பகுதிகளில் ராமனை வணங்கும் வேளை யில் இவர்கள், ராவண பூஜை நடத் துகிறார்கள். தசரா வில் தீ அம்புகள் பாயும் பொழுதில், வால்மீகி கோவிலில் நடைபெறும் இவர் களின் பூஜையில் 4 நிமிட நேரத்திற்கு மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு, ராவணனைப் புகழும் பாடல்கள் பாடப்படு கின்றன. ஆண்கள் பெண்களென சுமார் 300 பேர் இந்த பூஜையில் பங்கேற்கின் றனர்.
ராவண சேனா என்ற அமைப்பின் தலைவர் சரன்ஜித் ஹன்ஸ், மகாத்மா ராவணன் இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் ரவிபாலி ஆகியோரும் ஜலந் தரில் ராவண பூஜைகளை முன்னின்று நடத்தி வருகின்றனர். நாங்கள் வழிபடும் ராவணனை விஜயதசமி நாளில் கொடும் பாவியாக கொளுத்துவதை ஏற்க முடியாது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட் சவுர் என்ற இடத்திலும் ராவணனை அந்த ஊர் மக்கள் கொண் டாடுகிறார்கள். காரணம், ராவண னின் மனைவி மண்டோதரி தங்கள் ஊரில் பிறந்தவர் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால், தங்கள் ஊர் மருமகனான ராவணனை, ராமன் கொன்றதை அவர்கள் ஏற்பதில்லை. ராவணனின் நினைவில் பூஜைகள் நடத்துகிறார்கள். இதுபோலவே உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரிலும் விஜயதசமி நாளில் ராவண வழிபாடு நடக்கிறது.
முதன்முதலில், ராவணன் எங்கள் பாட்டன் என்ற குரல் பொதுவெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான். ராவணனை திராவிட மன்னன் என்று பெரியார்-அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சொன் னார்கள். இதுகுறித்து, கம்பராமா யணத்தைப் போற்றும் தமிழறிஞர் களுடன் நேருக்கு நேர் வாதம் செய்தனர். ராமாயண எரிப்பு என் றளவில் போராட்டம் நீண்டது. ராம லீலாவுக்கு எதிராக ராவணலீலாவை நடத்தி, ராமர் படத்துக்கு தீ வைத்தவர் மணியம்மையார்.
ராவணன் திராவிட மன்னன் என்ற குரல் தென்னகத்திலிருந்து ஒலித்தது. அவன் எங்களுக்கு கடவுள்- மகாத்மா என்று கொண்டாடுகிறார்கள் வடக்கே உள்ள ஆதிதிராவிடர்கள்.- தீ பரவட்டும்.
-விடுதலை,20.10.12

வெள்ளி, 6 நவம்பர், 2015

இராமாயணத்தில் மாமிசம் உண்ணும் காட்சிகள்


பொறியாளர்
ப. கோவிந்தராசன்
BE,MBA,MA (HISTORY) MA (LINGUISTICS) 


இராமாயண காலத்தில் ஆரியர்கள் செய்த யாகங்களில்  நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டன.  யாகங்கள் செய்வது மிருகங்களை வேட்டை ஆடு வதற்கு சமம். ஏனென்றால் யாகங்கள் செய்தாலும் வேட்டையாடினாலும் கிடைக்கும் முதல் பலன் சாப்பிட மாமிசந்தான்.
இவ்வாறு யாகங்கள் செய்து மாமிசம் சாப்பிட்ட ஆரியர்கள் மிகவும் போற் றிப் புகழ்வது வால்மீகி சொல்ல பிள் ளையார் அதை பனை ஓலையில் எழுதிய இராமாயணம் ஆகும்.
அந்த இராமாயணத்தில் பல உயிர்களைப் பலியிட்டு தசரதன் செய்த அசுவமேத யாகத் தீயில் பிரம்மா ஒரு தேவ தூதனைத் தோன்றச் செய்தார். அவன் தந்த தேவப் பாயசத்தை உண்ட கௌசல்யா பெற்ற குழந்தை தான் விஷ்ணுவின் ராம அவதாரம்.
அந்த யாகத்தில் பலியிடப்பட்ட உயிர்கள் பின்வருமாறு குதிரை பாம்புகள் மற்றும் 300 உயிர்கள் (தரை, நீர், ஆகாயம்  ஆகியவற்றில் வாழும் விலங்கினங்கள்). யாகம் எந்த விதக் குறையும் இல்லாமல் முறைப்படி செய்யப்பட்டு இந்திரன் முதலான தெய்வங்களுக்கு அவிர்ப் பாகம் அளிக்கப்பட்டது. இவ்வாறு மாமிசம் ராமனுடைய வாழ்க்கையில் துவக் கம் முதல்  இறுதி வரை தொடர்கிறது.
அந்த இராமாயணத்தில் காணப் படும் மாமிசம் பற்றிய காட்சிகள் பின்வருமாறு.
1.இராமன் வனவாசம் போகும் வழியில் சீதா கங்கையை வணங்கி, அவர்கள் மூவரையும் பாதுகாப்பாக நதியைக் கடக்க உதவுமாறும் அவ்வாறு உதவினால் திரும்பி வருகையில் கங்கை நதிக்குப் பல வகையான மாமிசத்தையும் ஆயரக்கணக்கான தேன் குடங்களையும் பலியாகத் தருவதாகவும் வேண்டினாள். (பக்கம் 388)
2.இராமன் மத்சய இராச்சியத்தை சேர்ந்த காட்டுப் பகுதியை  அடைந் ததும் ராமனும் சீதையும் பலவகை மான்கள். கரடிகள் போன்ற பலவகை மிருகங்களை வேட்டையாடி சமைத்து உண்டனர். (388).
3. அயோத்தியில் இருந்து  இரா மனைச் சந்திக்க சென்ற பரதன் தன்  சேனை வீரர்களுக்கான உணவு சேமிப் புகளில் மாமிசம் உலர்ந்த மாமிசம், கிழங்கு கனிகள் மற்றும் மரவுரி ஆடைகள் இருந்தன. (பக்கம் 476)
4. இராமனைத் தேடி பரதன் தன்னுடைய மந்திரிகள் அதிகாரிகள்  மற்றும் படையுடன் பரத்வாஜ் முனி வரின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான். அவர்கள் அனைவருக்கும் இரவு விருந்தும் ஓய்வெடுக்க இடமும் முனிவர் ஏற்பாடு செய்தார். அந்த விருந்தின் சிறப்புக்கள் பின்வருமாறு:
4.1. மது, பழச்சாறு முதலான உற் சாகப் பானங்கள் தனித்தனி ஆறுகளாக ஓடின. அந்த ஆறுகளின் இரு கரை களிலும் விருந்தினர்கள் தங்குவதற்காக மாளிகைகள் உருவாக்கப்பட்டன.
4.3. மலை போல் குவிக்கப்பட்ட சாதம் மற்றும் இதர உணவு வகைகள் மற்றும் குளம் போல் மைத்ரேயா என்ற மது. அதைச் சுற்றி மலை போல் சமைக்கப்பட்ட பல்வகை உயிர்களின் மாமிசம். அந்த உயிர்கள் மான், மயில் வாத்து மற்றும் பல்வேறு எண்ணற்ற விலங்குகள் ஆகும்.
4.4. தேவலோகத்தில் இருந்து இறங்கிய ரம்பா, மேனகா, ஊர்வசி ஆகி யோரின் நடனம் இந்த ஏற்பாட்டை செய்தவர்கள்- -இந்திரன் பிரம்மா, எமன், வருணன், குபேரன், விசுவகர்மன் மற்றும் அவனது மனைவி மாயா போன்ற பல தேவர்கள் ஆவர். இவை அனைத்து முனிவரின் தவ வலிமையால் செய்ய முடிந்தது. (பக்கம் 491)
5. மந்தாகினி நதிக்கரையில் ராமன் சுவையாக சமைக்கப்பட்ட மாமிசத்தை சீதையை உண்ணச் சொல்வது (பக்கம் ----505)
6. லங்கா தேசத்தில் அசோகவனத் தில் இராவணனால் சிறை வைக்கப் பட்ட சீதையை ஹனுமன் சந்தித்தான். அப்போது அவன் சீதையிடம் அவள் பிரிவால் வாடும் ராமனின் துயரத்தை  விவரித்தான். அப்போது இராமன் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்றும் மாமிசம் சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டான் என்றும தெரி வித்தான் (பக்கம் 1080)
மேற்கண்ட காட்சிகள் வெளிப்படுத் தும் செய்திகள் பின்வருமாறு
1. மாமிசம் இல்லையேல் யாகம் இல்லை.
2. யாகம் இல்லையேல் வேதம் இல்லை.
3. வேதம் இல்லையேல் இராமன் இல்லை.
மாமிசம் சாப்பட்ட  ஆரியர்கள் தான் வேதங்களை உருவாக்கினார்கள். வேதம் என்றால் அறிவு என்று பொருள்.
4. மாமிசம் இல்லையேல் வேதம் இல்லை, அறிவு இல்லை, வளர்ச்சி இல்லை. எனவே மாமிசம்  சாப்பிடுவ தற்கும், அறிவுக்கும் மற்றும் மதத்திற்கும் தொடர்பு இல்லை என இராமாயண காலத்தில் இருந்த  வசிஷ்டர் மற்றும் விசுவாமித்திரர் போன்ற மகரிஷிகள் நன்கு அறிந்து  இருந்தார்கள்.
ஆனால் திரேதாயுகத்தில் நடந்ததாகச் சொல் லப்படும் இராமாயணத்தை பெரிதும் நம்பும் இன்றைய இந்துத்துவாக்களுக்குத் தெரியாமல் போனது வியப்பைத் தரு கின்றது. (லிப்கோ வெளியிட்ட ஆங்கி லத்தில் எழுதப்பட்ட “தி இராமாயணம் ஆப் வால்மீகி’’ என்ற நூல். ஆசிரியர் சி.ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார். இந்த நூலில் காணப்படும் செய்திகள்படி கட்டுரை எழுதப்பட்டுள்ளது)
விடுதலை ஞா.ம.,24.10.15