பக்கங்கள்

வெள்ளி, 7 ஜூன், 2019

உண்மை இராமாயணம் (1)

20.3.1948  - குடிஅரசிலிருந்து
காட்சி - 26
(சீதையின் அந்தப்புரம். சீதை ஒருசிறு விக்கிரகம் வைத்து ராமனுக்குப் பட்டா பிஷேகம் ஆக வேண்டும்; அதற்கு எந்த விதத் தடையும் ஏற்படக் கூடாது என்று பிரார்த்தனையுடன் பூஜை செய்து கொண்டிருக்கிறாள். இராமன் துக்கத் தோடு தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு பிரவேசிக்கிறான். பிரவேசித்த ராமன் சீதை முன் துக்கத்தோடு பேச முடியாமல் நிற்கிறான்)
சீதை :- இராமனைப் பார்த்துத் திடுக் கிட்டெழுந்து, கவலைப்பட்ட முகத் துடன் கையைப் பிசைந்துகொண்டு, இரா மனைப் பார்த்த வண்ணம் நின்று யோசிக்கிறாள்.
இராமன் :- பெருமூச்சுடன் தலையைத் தூக்கிச் சீதையைப் பார்த்து கண்ணீர் விடுகின்றான்.
சீதை :- (மிகத் துக்கத்தோடு) நாதா! என்ன இது! உங்கள் பட்டாபிஷேக தினமல்லவா இது. இந்த நாளில் இப்படித் துக்கப்படுவது ஏன்? பட்டாபிஷேகத்துக்கு நிச்சயித்த இந்நாள் புஷ்ய நட்சத்திர நாளல்லவா? இன்று உலகமே மகிழும் படியான நாள் என்றல்லவா வசிடர் முதல், மகாசிரேஷ்டர்களான மகான்கள் எல்லாம் முகூர்த்தம் வைத்துக் கொடுத் தார்கள். இப்போது தாங்களும் நானும் நல்ல ஆடை ஆபரணாதிகளை அலங் கரித்துக் கொண்டு அபிஷேக மண்டபத் திற்குச் செல்ல வேண்டிய நேரம் ஆயிற்றே! தாங்கள் இந்தக் கோலத்தில் இருப்பது எனக்குப் புரியவில்லை! அபிஷேகத்துக்கு என்று ஜோசியர்கள் வைத்துக் கொடுத்த நேரம், எப்படித் துக்கப்படக் கூடிய நேரம் ஆகும் (என்று யோசிக்கிறாள்.)
ராமன் :- சீதே! இந்த நல்ல அருமையான முகூர்த்த நாளில்தான், என் தந்தை எனக்குப் பட்டாபிஷேகம் செய்யாமல் என்னை அழைத்து, ராமா உனக்குப் பட்டாபிஷேகம் இல்லை; இந்த நாடு பரதனுக்குச் சொந்தம், அவனுக்குத்தான் பட்டம் ஆகவேண்டும், நீ காட்டிற்குப் போ! பதினாலு வருஷ காலம் நீ அங்கு வசிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். என் தலைவிதி எனக்கு இப்படி நேர்ந்தது. நாடாளப் பட்டம் சூட்டிக்கொள்ள நாள் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்ட முகூர்த்த நேரமானது, என்னைக் காட்டிற்குப் போகச் செய்யும் நேரமாகி விட்டது. (என்று சொல்லித் தலையிலடித்துக் கொண்டு அடங்காத் துக்கப்படுகிறான்)
சீதை :- (துடிதுடித்து ஆச்சரியக் குறி யோடு பேயாவேசமாய்) நாதா! இது என்ன கனவுலகமா? நினைவுலகமா? நீங்கள் சொல்லுவது என்ன? என் உள் ளத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் உள்ளம் துடிக்கிறதே ஒழிய ஒன்றும் புரியவில்லையே! விஷயம் என்ன? ஏன் இப்படி ஏற்பட்டது?
இராமன் :- (ஒருவிதமாகத் தன்னைத் தேற்றிக் கொண்டு) என் உயிருக்குச் சமானமானவளும், அன்பிற்குப் பாத்திரமானவளும் ஆன சீதாய்! நான் சொல்லுவதைக் கவனமாய்க் கேள்! நான் சொல்லுகிறபடி நட! எல்லாக் காரியமும் நமக்குக் கைகூடும்!
சீதை :- (முகத்தெளிவு கொண்டவளாய்) சொல்லுங்கள் நாதா! தங்கள் கட்டளைப் படியே நடப்பேன்! தவறமாட்டேன்!
இராமன் :- ஓ! என் ஆருயிர்க்காதலியாகிய சீதையே! இன்று என் பட்டாபிஷேகம் நின்று போனதிலும், நான் காட்டுக்குப் போவதிலும் ஒன்றும் ஆச்சர்யமில்லை. நல்ல முகூர்த்த நேரம் என்பதும் ஒன்றும் தவறிவிடவில்லை. நாம் மாத்திரம் தந்திரமாக நடந்தால் ராஜ்யத்தை யடைந்து விடலாம்! சொல்லுகிறேன் கேட்பாயாக!
சீதையே! முதலாவதாக ஒன்று சொல் லுகிறேன். கவனமாய்க்கேள்! அதாவது பட்டாபிஷேகத்திற்காக நாள் பார்த்தது என்பது ஜோய சாதிரங்களைப் பார்த்து ரிஷிகள் நிபுணர்கள் பார்த்து வைத்ததல்ல. அது என் தகப்பனார் வைத்த நாள் ஆகும்.
சீதை:- அப்படியா? அவர் எப்படி நாள் பார்த்தார்? ஏன் பார்த்தார்?
இராமன்:- என் தகப்பனார் வசிஷ்ட மகரிஷியிடனும் மற்றும் சாஸ்திர நிபுணர் களுடனும் பட்டாபிஷேகத்தைப் பற்றிச் சொல்லும்போதே பரதன் இங்கு இல்லாத நாள்தான் பட்டாபிஷேகத்திற்கு ஏற்ற நாள். அவன் சீக்கிரம் வந்து விடுவான். ஆகையால் நாளையே நாள் வையுங்கள் என்று சொல்லிவிட்டார். அதன்படியே வசிஷ்ட மகரிஷியும் சம்மதித்து நாள் வைத்துவிட்டார்.
என் தந்தையார் என்னிடமும் அப்படியேதான் சொன் னார். எப்படி என்றால் ராமா! நாளைக்கே உனக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன். இனிக் காலதாமதம் செய் தால் பரதன் வந்துவிடுவான். அவன் வந்துவிட்டால் உனது பட்டாபிஷேகம் நடக்காமல் போய்விடும். நடந்த பிறகு அவன் வந்தால் நடந்து விட்ட காரியத்தை ஆட்சேபிக்கக் கூடாது என்று பொறுத்துக் கொள்ளக் கூடும். அவன் மிக நல்லவன். சூதுவாது அறியாதவன்.
நான் இதை மிக ரகசியமாக நடத்துகிறேன். அதனால்தான் இதை நாளையே வைத்துக் கொண்டேன். நீ பட்டாபிஷேகம் நடக்கும் வரையில் ஜாக்கிரதையாக இரு! உன் மாமனாராகிய ஜனக மகாராஜாவுக்கும் எனது மாமனா ராகிய கேகய மகாராஜாவுக்கும் கூட இச்சங்கதியை நான் தெரிவிக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்தால் இது நடை பெறாது. ஆதலால் இதை நீ அந்நியர் யாருக்கும் சொல்ல வேண்டாம். காரியம் நடக்கும் வரை உன்னை நீ ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள். உன் சினேகதர்களுக்கு மாத்திரம் தெரியட்டும்! அவர்களை உன்னைச் சுற்றிலும் உனக்குப் பாது காவலர்களாக இருக்கச் செய் என்று சொல்லித்தான் இதைத் துவக்கினார்.
சீதை:- (ஆச்சரியக் குறிப்புடன்) என்ன இது? இது ஒரு பெரிய மயக்கத்தை கொடுக்கக் கூடிய சேதியாக இருக்கிறதே! தங்களுக்குத் தங்கள் தகப்பனார் செய்யும் பட்டாபிஷேகத்திற்கு இத் தனை ஒளிவு மறைவு ரகசியம் ஏன்? பரதன் உங்கள் தம்பிதானே. அவனுக்காக இவ்வளவு பயப்படுவானேன்? நீங்கள் பட்ட மகிஷி மகன் என்பதோடு சிரேஷ் டபுத்திரனுமாவீர்!
 - விடுதலை நாளேடு, 7.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக