13.03.1948 - குடிஅரசிலிருந்து...
காட்சி : 25
கோசலை வீடு :- (கோசலை, இராமன் பட்டாபிஷேகத்திற்கு எவ்விதத் தடையும் ஏற்பட்டு விடக் கூடாதென்று பிரார்த் தித்துக் கொண்டிருக்கிறாள். இலட்சுமணன் பக்கத்தில் நின்று கொண்டிருக்கின்றான்.
இராமன் கோசலை வீட்டுக்கு வருகின்றான். வருகிற வழியில் இராமன், ஆ கடவுளே! என் தலைவிதி இப்படியா நேர்ந்தது என்று நினைத்துத் துக்கம் பொறுக்க மாட்டாமல் தலையிலடித்துக் கொண்டு வேதனைப்படு கின்றான். வீட்டுக்குள் நுழையும் போது, தானே திடுக்கிட்டு நாமே இப்படித் துக்கப்பட் டால், இனி தாயாரும் நண்பர்களும், எவ்வளவு துக்கப் படுவார்கள்.
நமது துக்கத்தை வெளியிடக் கூடாது என்று துக்கத்தை அடக்கிக் கொண்டு உள்ளே புகுந்து தாயை வணங்குகிறான்.
இராமன் :- தாயே! வணக்கம். (துக்கத் தோடு நின்று கைகூப்பிச் சொல்லுதல்)
கோசலை :- இராமா! மங்களம் உண்டாகட்டும்! உன் முகம் என்ன இப்போது ஏதோ ஒரு பெரும் துக்கத்தில் ஆழ்ந்த மனதுடைய முகம் போல் காணப்படுகிறதே. பட்டாபிஷேகத் துக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டதா? ஒரு நாளும் வாக்குத்தவற மாட்டார் உன் தந்தை. எப்படியும் எடுத்த காரியத்தை முடித்துவிடுவார். இன்றைய
தினமே நீ அரசனாகப் போகிறாய். கவலை ஏன்? இந்த ஆசனத்தில் அமரு! சாப்பிடலாம் வா!
இராமன் :- அம்மா! ஆசனம் ஒரு கேடா! எனக்கும், உனக்கும், சீதைக்கும், இலட்சுமணனுக்கும் துக்கத்தையும், பெரும் கேட்டையும் கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
கோசலை :- (திடுக்கிட்டு) ஆ! அய்யோ! மகனே! அப்படிப்பட்ட கெட்ட சங்கதி என்ன? துக்கப்படாமல் சொல்லு!
இராமன் :- அம்மா! எனக்கு இராஜ்ய பட்டாபிஷேகம் இல்லை; பரதனுக்கு ஆகப்போகிறது. என் கைக்கு எட்டிய இராஜ்யமும் போய், நான் 14 ஆண்டு காட்டுக்குப் போகவேண்டும். இது தந்தை கட்டளை. மாமிசத்தை விலக்கி இனி நான் காய், கிழங்கு தான் சாப்பிட வேண்டும்! போய் வருகிறேன்!
கோசலை :- (வயிற்றிலடித்துக் கொண்டு) அய்யோ! தெய்வமே! என் எண்ணமெல்லாம் இப்படியா ஆக வேண்டும். என்னிடம் காசு பணமும் இல்லையே! நகையும் இல்லையே! என் அழகும் போய்விட்டதே! அரசர் கண் ணுக்கும் பிடித்தமில்லாத கிழவியாக இருக்கிறேனே! இந்த நிலையில் நீயும் போய்விட்டால், என்னை இனி - யார் சட்டை செய்வார்கள்? இந்த நிலையில் நான் உன்னை விட்டு உயிர்வாழ மாட்டேன். நீ என்னை விட்டுப் போகக் கூடாது. நீ போக அனுமதிக்க மாட்டேன் நான்.
இலட்சுமணன் :- அம்மா! அப்படிச் சொல்லுங்கள்! இராமன் காட்டிற்குப் போவது எனக்குச் சம்மதமில்லை. ஒரு பெண் பிள்ளை சொன்னால், அதைக் கேட்டுக் கொண்டு காட்டுக் போவதா? முடியாது. இராமா! இதோ நிமிட நேரத்தில் அயோத்தி ராஜ்யத்தை உன் கைவசப்படுத்திவிடுகிறேன். குடிகள் ஒப்புக் கொள்ளாவிட்டால், மனிதப் பூண்டே இந்த நாட்டில் இல்லாமல் செய்துவிடுகிறேன். பரதனுடைய கட்சியார் எல்லோரையும், அவன் தாயாரையும், பரதனையும், யாவரையும் அழித்து விடுகிறேன்.
நமது தந்தையாரையும் கொன்று விடுகிறேன். அல்லது சிறையில் வைத்து விடுகிறேன். அவர் யோக்கியரல்ல. அவர் உம்மை ஏமாற்ற இச்சதி செய்திருக்கிறார். அவர் கைகேயிடம் பேசி முன்னேற்பாடாக அதாவது, நான் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதாய் நடிப்பு ஏற்பாடு செய்கிறேன். நீ அதைத் தடுத்துவிடு என்று சொல்லி இப்படிச் செய்திருக்கின்றார். அவ ரையும் கொன்றுவிடுகிறேன். அம்மா என்ன சொல்கிறீர்?
கோசலை :- இராமா! உன் தம்பி சொல்வதைக் கேள். என் சக்களத்திப் பேச்சைக் கேட்டுக் கொண்டு நீ காட்டுக்கு போகாதே!
இராமன் :- அம்மா! அவனுக்கு ராஜ்யம் போய்விட்டதென்ற ஆத்திரம் இருக்கிறது; அவனுக்கு இராஜ்யத்தை அடைய நல்லவழி எது என்பது தெரியவில்லை. நான் இப்போது காட்டிற்குப் போவதுதான் ராஜ்யத்தை அடைய நல்லவழி! நீ கவலைப்படாமல் அரசரைக் கவனித்துக் கொண்டிரு! நான் திரும்பி வந்து இராஜ்யத்தை அடைந்து உன் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன்! இப்போது நாம் இந்த நிலைமையில் இராஜ்யத்திற்கு ஆசைப் பட்டால் குடி ஜனங்கள் எதிர்ப்பு ஏற்பட்டுவிடும். ஏனென்றால், குடி ஜனங்களுக்கு உண்மை தெரிந்து விட்டது. தந்திரமாய்க் காரியம் செய்ய வேண்டும்! கவலைப்படாதே! இதை நம்பு!
கோசலை :- சரி! அப்படியானால் போய்விட்டுவா! மன தைரியத்தோடும், உறுதியோடும் போய்விட்டு வா! அவசியம் வந்தாக வேண்டும்; நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். நீ திரும்பி வந்து உன்னை அரசனாகக் கண்ட பிறகுதான், என் மனம் நிம் மதியடையும்! வாக்குத் தவறிவிடாதே! திரும்பி வந்து இந்த அயோத்திக்கு அரசனாக அமர்ந்து எனக்குக் காட்சி தரப்போகும் ராமா! சுகமாகப் போய்விட்டுச் சீக்கிரம் வந்து சேர்.
(இராமனுக்கு முத்தம் கொடுத்துக் குஷாலாய் உத்தரவு கொடுக்க, இராமன் அவ்விடத்தை விட்டுச் செல்கிறான். காட்சி முடிகிறது)
- விடுதலை நாளேடு 31 .5 .2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக