பக்கங்கள்

புதன், 22 ஆகஸ்ட், 2018

ராமனை வழிபடுபவர்கள் தாம்

ஏன் ராமனும், ராமனை வழிபடுபவர்களும் ஆபத்தானவர்கள்? காரணங்கள் இதோ...


வேதம் ஓதினான் என்பதற்காக சூத்திரனான சம்புகனை கொன்றவன் ராமன்.

நீதி வழுவா நிலையில் அரசாட்சி செய்துவந்த வாலியை மறைந்திருந்து கொன்றவன் ராமன்.

ராமராஜ்யத்தில் சூத்திரர்களுக்கு படிக்கவும், வேதங்களைக்  கேட்கவும் அனுமதியில்லை.

பெண்கள் வேதங்களைப் படிக்கவோ  சுதந்திரமாக செயல்படவோ ராமராஜ்யத்தில் அனுமதியில்லை.

பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருக்கும் தர்மம் செய்வது பாவம் என்பது ராமராஜ்யத்தில் சட்டமாகவே  இருந்தது.

ராமனின் ஆணையால் பார்ப்பனர்களும், உயர் ஜாதியினரும் சூத்திரர்களின் சொத்துக்களைச் சூறையாடினர்.

இன்றும் தொடர்கிறது

இன்றும் ராமனை வழிபடுபவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள், அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் அது தேவையற்ற ஒன்று என்கிறார்கள்.

சூத்திரர்கள் கோவிலில் நுழைவதை ராமனை வழிபடுபவர்கள் தடுக்கிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆட்சி காலங்களில் கட்டப்பட்ட சமூகநீதிக்காவலர்களின் சிலைகள், அவர்களது பெயர் உள்ள சாலைகள், பூங்காக்கள், நினைவுச் சின்னங்களை ராமனை வழிபடும்  பாஜக கட்சியினர் ஆட்சியில் அமர்ந்ததும் அழித்துக் கொண்டு வருகிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன் றோரின் சிலைகளை உடைப்பவர்கள், உடைக்கத்தூண் டுபவர்கள் யார்? ராமனை கும்பிடுபவர்கள்தான்.

அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகளை நிறுவ நினைத்தால் உடனடியாக நீதிமன்றம் சென்று தடையாணை பெறுபவர்களும், காவல்துறை யினரை மிரட்டி சிலைவைக்க அனுமதிதராதே என்று கூறுபவர்களும் யார்? ராமனை வழிபடுபவர்கள் தானே!

பவுத்த மார்க்கத்தை சிதைத்தது, அதை சனாதன நம்பிக்கைகளுக்கு உள்ளே கொண்டுவந்து பவுத் தத்தையே அழித்தது ராமனை வழிபடுபவர்கள்தாம்.

குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல பகுதி களில் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியல்லாதவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்துவதுயார்? ராமனை வழிபடு பவர்கள் தான்.

100 ஆண்டுகளாக அமைதியாக மகாராஷ்டிராவில் உள்ள பிமா-கோரேகான் போர் நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செலுத்தி வந்தவர்களை திடீரென்று தாக்கி தாழ்த்தப்பட்ட இளைஞர்களை கொலை செய்தவர்கள் ராமனை வழிபடுபவர்களே!

-  விடுதலை நாளேடு, 11.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக