புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா முடிவு
மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என 90 வயது கடந்தவரும், பல வரலாற்று நூல் எழுதியவருமான பேராசிரியர் ராம் சரண் சர்மா எழுதியுள்ளார்.
இதிகாச காலம் உண்மையா?
11ஆவது வகுப்புக்கான என்.சி.ஆர்.டி. வெளியிட்டுள்ள 'தொன்மை இந்திய வரலாறு' (ஏன்சியன்ட் இண்டியன் ஹிஸ்டரி) எனும் நூலை எழுதியவர் ராம் சரண் சர்மா (ஆர்.எஸ். சர்மா) அந்த நூலில், "கிருஷ்ணன் மகாபாரதத்தில் முக்கியப் பங்கு ஆற்றியதாக இருந்தாலும், மதுரா நகரில் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை கிடைக்கப் பெறும் சிற்பத் துண்டுகள், கிருஷ்ணன் பற்றிய தகவலைத் தரவில்லை. இதன் காரணமாக, ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில், இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றி பேசுவதைக் கைவிடவேண்டும்'' என எழுதப்பட்டிருக்கிறது.
அயோத்தி ராமன்
அயோத்தியாவைப் பற்றியும், ஆர்.எஸ். சர்மாவின் நூல் ஓர் ஆய்வு முடிவைத் தருகிறது. புராணங்களில், மிக நீண்ட குடும்பக் கால் வழி கூறப்படுகிறது. ஆனால், அவை கூறும் குடும்பக் கால்வழியை விட அகழ்வு ஆய்வு வெளிப்படுத்தும் தடயங்களையே ஏற்றுக் கொள்ள வேண்டும். புராண மரபுப்படி அயோத்தியில் ராமன் கி.மு. 2000-இல் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அயோத்தியில் விரிவான அளவில் தோண்டிப் பார்த்து, ஆய்வு நடத்திய பின்பு, அந்தக் காலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்ததாகவே தெரிய வில்லை'' என்று ஆர்.எஸ். சர்மாவின் தொன்மை வரலாறு'' எனும் நூல் கூறுகிறது.
- விடுதலை ஞாயிறு மலர், 7.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக