பக்கங்கள்

செவ்வாய், 3 ஜூலை, 2018

பார்ப்பனர்களின் ஆதிக்க ஆணவத்துக்கான அடித்தளம் இராமாயணமே! தமிழர் தலைவர் ஆய்வுரையால் ஆட்டம் கண்டது பார்ப்பனியத்தின் ஆணிவேர்!!

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி அதிகாரங்களின் ஆணவத்துடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் இந்துத்துவா திணிப்பு போக்கு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இந்துத்துவாவைத் திணிக்கின்ற தீவிரத்துடன் ‘இரா மராஜ்ய யாத்திரை’ என்கிற பெயரில் ஆட்சி அதிகாரங் களின் துணையுடன் மக்களிடையே வலம் வர முயன்று தமிழ்நாட்டில் மாபெரும் தோல்வியைத் தழுவின சங் பரிவாரங்கள்.

பல மொழி, பல இனம், பல கலாச்சாரம், பண் பாடுகள் என பன்முகத்தன்மையுள்ள இந்த நாட்டில் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும்வகையில், ஜாதி ஆணவ வன்முறை வெறியாட்டங்கள், கொலைகள், மதச்சிறுபான்மை மக்கள்மீது வன்முறைகள், கொலை வெறித் தாக்குதல்கள், கொலைகள், மதசார்பற்ற கருத்துகளை முன்வைத்து மதவாதங்களுக்கு எதிரான பகுத்தறிவாளர்கள், சிந்தனையாளர்களை சுட்டுக் கொல்லுவது என்று வகுப்புவாத வெறியாட்டம் போட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ்.- அமைப்புகளின் அடித் தளம் இராமன், இராமாயணம் அவற்றைக்கொண்டு இராமராஜ்யம். அதளை அடையாளம் காட்டியுள்ளார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் இராம ராஜ்ய யாத்திரை பிப்ரவரியில் அயோத்தியில் தொடங்கி மார்ச்சில் தமிழகத்துக்கு வந்தது. பெரியார் மண் தமிழகத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. பொது மக்கள் எவருமே அந்த யாத்திரைக்கு ஆதரவளிக்க வில்லை. தமிழக அரசு ஊரடங்கு உத்தரவைப்போட்டு, எதிர்ப்பவர்களைக் கைது செய்து, யாத்திரையைக்குத் துணை போனது.

இந்த நிலையில்தான் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆய்வு சொற் பொழிவு அறிவிப்பு வெளியானது.

தமிழர் தலைவர் அவர்களின் ஆய்வுரை மார்ச் 23இல் தொடங்கியது. தோண்ட தோண்ட புதையல் போல் அரிய கருத்துகள் சுரந்துகொண்டே இருந்தன. நிச்சயம் இந்த பொழிவு தொடரவே செய்யும் என்பதை பார்வையாளர்கள் எளிதில் உணர்ந்துகொண்டு, சொற் பொழிவு தொடரும் என்று ஆசிரியர் அறிவித்தபோது பெரிதும் வரவேற்றனர்.

பார்ப்பன ஆதிக்கத்துக்கு காரணமான இராமாய ணத்தையும், இராமனையும் அக்குவேறு ஆணிவேறாக பதம்பார்த்தார் தமிழர் தலைவர்.

அடுக்கடுக்கான ஆதாரங்களைக் கொண்டு ஆய் வுரை தொடர்ந்தார்.

வடக்கில் வால்மீகியின் இராமாயணம், வால்மீகி யின் இராமன், வால்மீகியின் இராமாயண கதாபாத்தி ரங்கள் வேறாகவும், கம்பனின் இராமாயண கதாபாத் திரங்கள் வேறாகவும் இருப்பதை தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

வால்மீகி இராமன் மனிதனாக சராசரி மனிதனின் பண்புநலன்களுடனே இருந்தான். வால்மீகி இராமா யணத்தில் இராமன் ஊன் உணவை விரும்பி உண்ப வனாகவும், அந்தப்புரத்தில் உல்லாசமாகவும் இருந் தான். அரசுரிமை வாய்ப்பு கிட்டாமல், காடேகும் இராமன் வேதனைப்பட்டான். ஆனால், கம்பனின் இராமனை மரக்கறி உண்பவனாகவும், கடவுளாகவும் கம்பனால் சித்தரிக்காப்பட்டான். வால்மீகி இராமா யணத்தை தழுவிய கதை என்றாலும், கம்பன் மாற்றங் களை செய்து, ஆரிய ஆதிக்கத்துக்கு வழிவகுத்தான் என்பதை ஆதாரபூர்வமாக ஆய்வுரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.

இராமன், இராமாயண, இராமராஜ்ய சமாச்சாரங்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் நலனுக்காக அளக்கப் பட்ட கதைகளே என்பதையும், பார்ப்பனர்களின் புராணங்கள், புரட்டுகள் அனைத்தும்   இருவேறு பண்பாடுகளிடையே நடைபெற்று வருகின்ற  போராட்டத்தை உணர்த்துபவையே என்பதையும் ஏழு முறைகள் நடைபெற்ற சொற்பொழிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கிக் கூறியுள்ளார்.

பல்வேறு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், இரா மாயணம்குறித்த பலரின் விமர்சனக்கருத்துகளை ஆதா ரமாகக் கொண்டு ஆய்வுரை நிகழ்த்தினார் தமிழர் தலைவர்.

அறிஞர்களும், புலவர்களும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு தேவையான கருத்துகளை தேனீ போல் தேடிக்கொணர்ந்து, உண்மைகளையும், பொய் மைகளையும் வேறுபடுத்திக் காட்டி ஆய்வுரையை நிகழ்த்தினார் தமிழர் தலைவர்.

ராமராஜ்ய ரத யாத்திரை எனும் பெயரில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறீ ராமதாசா மிஷன் பன்னாட்டு சங்கம் 13.2.2018 அன்று அயோத்தியில் தொடங்கி வைத்தது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா வழியாக 20.3.2018 அன்று தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகளுக் கிடையே நுழைந்தது.

ஆட்சி அதிகார ஆணவத்துடன் பவனி வந்த யாத்திரை தமிழகத்தில் முடங்கிப்போனது

இராமராஜ்ய இரத யாத்திரை தமிழ்நாட்டின்  திரு நெல்வேலி மாவட்டம், புளியரை பகுதிக்கு வந்ததுமே பதற்றம் பற்றிக் கொண்டது.  ஏனைய 5 மாநிலங்களில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் பயணித்த ராமராஜ்ய ரத யாத்திரைக்கு தமிழ்நாட்டில் பாஜக.வுக்கு எதிரான அத்தனைக் கட்சிகளும் ஒருமித்து எதிர்ப்புக் குரல் கொடுத்தன. ஊரடங்குச்சட்டமான 144 தடையுத்தரவை அரசு விதித்தது. ராமராஜ்ய ரத யாத்திரையை எதிர்த்த 300க்கும் மேற்பட்டோர்மீது வழக்கு பதிவுசெய்தது. ஆனால், ராமராஜ்ய ரத யாத்திரையை தொடர அனு மதித்தது. ராமராஜ்ய ரத யாத்திரையை தடுத்து நிறுத் தக் கோரி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

பிப்ரவரி 13ஆ-ம் நாளில் அயோத்தியில் தொடங்கிய இராமராஜ்ய இரத யாத்திரை, மார்ச் 25ஆ-ம் நாளில் இராமேசுவரத்தில் முடிவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்டதைவிட முன்கூட்டியே 21.3.2018 மாலையே இரத யாத்திரை இராமேசுவரத்தை அடைந் தது. மார்ச் 22இல் நிறைவு விழா என்கிற பெயரில் முடித்துக்கொள்ளப்பட்டது. அரசுகளின் அதிகாரங்க ளின் துணையுடன் வலம் வந்த இராமராஜ்ய இரத யாத்திரை தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கின்றி முடங்கிப்போனது.

வம்பை விலைகொடுத்து வாங்கி

மூக்கறுபட்ட பார்ப்பனர்கள்

இராம ராஜ்ய யாத்திரை நடத்துகின்ற இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். கும்பல் தந்தை பெரியாரை சமூக ஊட கங்களில் கொச்சைப்படுத்தத் தொடங்கி, பெரியார் சிலைகள் உடைப்பு என்று வம்பை விலைகொடுத்து வாங்கியது. ஆட்சி, அதிகார, பார்ப்பன ஆணவத்தில் திளைத்தவர்களுக்கு சரியான மூக்குடைப்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆய்வுரை அமைந்தது.

- விடுதலை நாளேடு, 24.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக