பக்கங்கள்

புதன், 7 ஆகஸ்ட், 2024

மாமிசம் விரும்பிச் சாப்பிட்ட இராமன்!

 டிபரமேசுவர அய்யர் எனும் ஆய்வாளர் ``ராமாயணமும் லங்கையும் என்றொரு ஆங்கில நூலை 1940 -இல் எழுதியுள்ளார்பெங்களூரில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட அந்நூலில்ராமனின் ``கல்யாண குணங்களைப்பற்றி சவிஸ்தாரமாகவே வெளுத்துக் கட்டியிருக்கிறார்.

``ராமன் தெய்வீகமானவன் என்ற கருத்து வால்மீகியின் கண்களுக்குத் திரையிடவில்லைஅவனுடைய மானுடத் தன்மையை மறைக்கவில்லைவில் வித்தையை ராமன் மிகவும் விரும்பினான்வேறெவரையும் விடச் சிறந்த வில்லாளியாக விளங்கினான்அவன் மனம்அவன் தசைத் திரட்சிமிக்க உடல்கட்டு எல்லாமே இறைச்சிக்காக வேட்டியாடியதால் அமைந்தவையேவில் வித்தைவேட்டையில் வேட்கைமாமிசம் தேவை என்பதற்காகச் செய்த வேட்டைகள்சீதையின் மேல் காதல் இவைய னைத்தும் அவனது எலும்புகளில் ஊறித் திளைத்திருந்தன (பக்கம் 129).

``கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டிய போது திரும்பிஅயோத்தியிருக்கும் திசை நோக்கி ராமன்தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்பொழுது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டை ஆடப் போகிறேன்இந்த வேட்டை ராஜரிஷிகள் சம்மதித்த தல்லவா? (அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27) இறைச்சி உண்பதற்கான ஆசையின் அடிப்படையில்தான் வேட்டையை விரும்பினான் ராமன்.

``விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான் - காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன்தேன்பழங்கள்கிழங்குகள் முதலியவற்றை மட்டும் புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் என்று கூறுகிறான் (அயோத்யா காண்டம்சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29), (நூலின் பக்கம் 130).

குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது ராமனின் தர்மபத்தினி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் (ஒயின்மதுவும்இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம்சர்க்கம் 52, பாடல் 89)

காட்டிற்குள்நுழைந்த அன்றுராமன்லட்சுமணன்சீதை ஆகியோர் இரவுப் பட்டினிவிடிந்ததும் விடியாததுமாக ராமனும்லட்சுமணனும் வில்அம்பை எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப் பன்றிஒரு சாம்பார் மான்ஒரு புள்ளிமான், , ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றுகொண்டு வந்து ஒரு மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டனர். (அயோத்யா காண்டம்சர்க்கம் 52, பாடல் 102) சீதையும் சேர்ந்துதான் சாப்பிட்டாள்சுவையான இறைச்சியை அவளுக்குத் தந்து அவளை ராமன் திருப்திப்படுத்தினான் (அயோத்யா காண்டம்சர்க்கம் 96, பாடல் 1).

அதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம்நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம்ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம்கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் - தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றனஅவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள்ராமனுக்கு ரொம்ப ஆசையான உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).

இத்துடன் முடியவில்லை.

 ``இறைச்சிப் படலம்விருந்தினர்களுக்குஅவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும்இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள்தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான்அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள்என் கணவர் விரைவில் வந்து விடுவார்காட்டுப் பொருள்கள் (புஷ்கலம்வன்யாகொண்டு வருவார்மான்கறி கொண்டு வருவார்இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்குகாட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம்சர்க்கம் 47, பாடல்கள் 22,23).

யமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம்சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141). இராமன் கறி தின்றதைஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார் வால்மீகி எனும்போது (வால்மீகியும் வேடர்தான்இறைச்சிப் பிரியர்தான்ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் என்பது வலியுறுத்தப் படுகிறது. இந்த லட்சணத்தில் `ராமன எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள்இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால்இவர்களை என்ன பெயரிட்டழைப்பது?

 -சார்வாகன்  
20-12-2007, விடுதலை நாளேடு

மான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்

 


நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று. அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் கறி சாப்பிடக் கூடாதுன்னு தடை இருக்கே, அப்போது எங்கே போனார்கள் இவர்கள் வீரமணி போன்றவர்கள் மான்கறி விருந்து நடத்துவார்களா? என்று கேட்டிருக்கிறார் ஒரு அக்கிரகாரத்து அரை வேக்காடு.

இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான ஏழை, எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை, மத வெறியின் அடிப்படையில் தடைசெய்யும் போக்கை யும், அறிய உயிரினங்களைப் பாதுரக்கும் நோக்கத் துடன் மான்கறி தடைசெய்யப்பட்டிருப்பதையும் ஒன்று போல காட்டும் புரட்டு இது என்பது சற்றேனும் சிந்திப்போருக்குத் தெரியும்.

எளிய மக்களின் சத்தான உணவு தடுக்கப்படுகிறதே என்ற சுவலை நமக்கு! அதனால் மாட்டுக்கறியை தடை
செய்யக் கூடாது என்கிறோம். எதிர்த்துக் குரம் கொடுக்கிறோம். போராடுகிறோம்!

ஆனால், அப்படி என்ன மான் கறியில் இவர் களுக்குப் பற்று என்று சிந்தித்தால், அப்போது வெளிப்படுகிறது குட்டு!

இந்துத்துவா கும்பலின் இஷ்ட தெய்வங்களான ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் விரும்பிப் புசித்தார்கள் என்பதை விவரிக்கிறது. வால்மீகி ராமாயணம். மாரீசன் என்னும் மாய மானை விரும்பிக் கேட்டாரே வைதேகி எதற்கென்று நினைக்கிறீர்கள்? தமிழ்ப்பட கதாநாயகிகள் போல கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கவா? அல்ல அல்ல அள்ளி எடுத்து அதன் கறியைச் சுவைப்பதற்காக!

கங்கைக் கரையிலும், யமுனைக் கரையிலும் ஏராளமாக மது உண்டும் புலால் புசித்தும் வாழ்ந்த சீதை விரும்பிய மான் கறியைக் கொண்டு வருவதற்காகத் (அதனால் பின் விளைவுகள் வரும் என்று தெரிந்தும்) தான் மானைத் தேடிச் சென்றான் ராமன் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து (3.4221) ஆதாரம் காட்டுகிறார் The Righteous Rama நூலின் ஆசிரியர் ப்ராக்கிண்டன்.

அது மட்டுமா, ராமனும் லட்சுமணனும் எந்தெந்த வகை மான்களைப் புசித்தனர் என்று வால்மீகி காட்டுகிறார் தெரியுமா? முதன்மையான நான்கு மான் இனங்களிலிருந்து ஒவ்வொன்றையும் வேட்டையாடிப் புசித்தனர். (அயோத்தியா காண்டம் 2-52-102)

ती त हवा चतुरः (காற்றைப் போல் துள்ளி ஓடும் ) महा मृगान् | (மான்)

बराहम ऋयम (पृषतम महाम சுவைத்து சாப்பிட்டனர் | भादाय मेयम वरतम விரட்டிச் சென்று) बुभुतौ ।

बासाय (களைப்புற- काले ययतुर् वनः पितम (உண்டு மகிழ்ந்தனர்) |॥ २-५२-१०२


Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.

Alternative translation: Being famished, Rama, Lakshmana hunted and killed a boar, a Rishya ani- mal (a white footed male antelope), a spotted deer and a great deer with black stripes and quickly par taking the pure meat reached atree by the evening to spend the night.

யமுனை நதிக்கரையில் ராமனும் லட்சுமணனும் மான் கறி சுவைத்ததைச் சொல்லுகிறது அயோத்தியா காண்டம் (2 - 55-32/33)

शमाम ततो गवा तरी (கரையில்) रामलमनौ (ராம லட்சுமண) || २-५५-३३ बहूमेयान मृगान (மான் ) हवा चेरतुय (மாமிசம் உண்ட)

Translation: Thereafter having travelled only a couple of miles the two brothers Rama and Lakshmana killed many consecrated deer and ate in the river-forest of Yamuna.

Alternative translation: After travelling a distance of two miles further in the forest on the bank of Yamuna, those two brothers slew deers worthy for sacrifice for food and ate them. Ayodhya Kanda 2-55-32/33

நாம் காட்டியிருப்பது ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே! அவர்கள் குடித்துக் களித்த மது வகைகள் பற்றியும், உண்டு மகிழ்ந்த கறி வகைகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.

இப்படி காவிக்கூட்டம் போற்றும் கடவுளர் சாப் பிட்ட மான் கறியைத் தடை செய்தால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கை தானே!

மான் கறி தடை செய்யப்பட்டிருப்பதில் மாற்றுக் கருத்து அக்கிரகாரத்தில் இருக்குமாயின் அவர்கள் தானே அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். கடவுளின் உணவு தடுக்கப்படுமானால் அதற்காகக் கொந்தளித்து அவர் தானே மான் கறி விருந்து நடத்த வேண்டும்? எதிர்பார்க்கிறோம்..... ஹெச்.ராஜா நடத்தும் மான் கறி விருந்து அறிவிப்பை!

-கோவி.லெனின்
- விடுதலை நாளேடு, 09.04.2015, உண்மை இதழ்;16-30.04.2015

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

இராமாயணதர்மம்- தந்தை பெரியார்

 


இராமாயணதர்மம்- தந்தை பெரியார்
2024 பெரியார் பேசுகிறார்

இராமாயணம் மக்களுக்கு முட்டாள் தனத்தையும் மூடநம்பிக்கையையும் சூழ்ச்சித் தன்மையையும்தான் கற்பிக்கக் கூடுமே தவிர அதில் மனிதப் பண்பு, நேர்மை, நீதி, ஒழுக்கம் ஆகியவைகள் கற்க முடியாது.

இராமாயண காவியம் என்பது ஆரியப் புரட்டு என்னும் மாலையில் ஒரு மணியாகும். அதுவும் மிகச் சமீப காலத்தில் கற்பனை செய்த நூலாகும். இந்த இராமாயாணம் என்பது ஒன்றல்ல, பலவாகும். அவற்றுள் ஒன்றுக்கொன்று பல முக்கியமான முரண்பாடுகளும் விரிவும் சுருக்கமும் உடையவையாகும்.

இவை ஜெயின இராமாயணம், பவுத்த இராமாயணம், ஆனந்த இராமாயணம், நித்யாத்மீக இராமாயணம், ஆந்திர இராமாயணம், துளசிதாஸ் இராமாயணம், வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம் முதலிய பல இராமாயணங்கள் இருக்கின்றன. இவற்றுள் தென்னாட்டில் பிரபல ஆதார நூலாய் இருப்பது வால்மீகி இராமாயணம். இதுவும் வால்மீகி இராமாயணம் என்னும் ஒரு பதிப்பிலேயே முன்னுக்குப் பின் முரணாகப் பல இடங்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் எப்படியோ இருந்தாலும்;

புத்தருக்குப் பிந்தியதே இராமாயணம்

இந்த இராமாயண காவிய உற்பத்தியானது சமீப காலத்தில் அதாவது, ஒரு இரண்டாயிரத்து அய்ந்நூறு ஆண்டுக்குள் அதுவும் பாரத காவியத்திற்குப் பின் ஏற்பட்டதாகத்தான் கொள்ளவேண்டி இருக்கிறது. பாரத காவியம் மக்களால் வெறுக்கப்படத் தொடங்கிய பின், அதிலுள்ள ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தன்மைகளையும் மறைக்கும் தன்மையில், சிறிது நாகரிக முறையில் திருத்தப்பாடுகளுடன் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவியமாக்கப்பட்டதென்றே சொல்லலாம்.
மற்றும், இந்த வால்மீகி இராமாயணம் என்பது பவுத்தன், பவுத்த தர்மம் தோன்றிய பின்பே எழுதப்பட்டது என்று இராமாயண ஆதாரப்படியே கூறலாம். இராமாயணத்தில் பல இடங்களில் பவுத்தன், பவுத்த தர்மம், பவுத்த சன்யாசி, பவுத்த மடம் என்பவையான சொற்கள் பல வலியுறுத்தப்பட்டு காணப்படுகின்றன. இராமாயணம் அயோத்தியா காண்டம், 109ஆவது சருக்கத்தில் சி.ஆர். சீனிவாசய்யங்கார் அவர்கள் பதிப்பித்த முதல் பதிப்பு, 412ஆம் பக்கம், 4ஆம் வரி முதல் பவுத்த தர்மம் பலமான கண்டன வசவு வாக்கியங்களால் கண்டிக்கப்பட்டு இருக்கிறது. பிறகு, கிஷ்கிந்தா காண்டத்தில் பவுத்த சன்யாசி தர்மம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுந்தர காண்டத்தில், 5ஆம் சருக்கம் பக்கம் 72இல், 2ஆம் வாக்கியத் தொடர் முதல் வரியில், “புத்தர் ஆலயம் போன்ற, “கட்டட உப்பரிகையில்” சீதையை அனுமான் கண்டான் என்பதான வாக்கியம் இருக்கிறது. இராவணனது குணம், நாடு, மக்கள் நிலை ஆகியவற்றைப் பற்றிய தன்மைகளும், மதுரை, கோசலம், அயோத்தி, இலங்கை முதலிய நாடுகளும் அவற்றின் வருணனைகளும் நவநாகரிகத்தை ஒத்தே காணப்படுகிறபடியால், பொதுவில் வேத சாஸ்திர காலமே 3000-4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்று முடிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த இதிகாசங்கள் மிக மிகச் சமீப காலத்து அதாவது, புத்தருக்குப் பிந்தியது என்று உறுதியாகக் கூறலாம்.

ஆரியத்தை காப்பாற்ற எழுதப்பட்டவை

மற்றும், இந்த சாஸ்திர, புராண, இதிகாசக் காவியங்கள் எல்லாமுமே ஆரியக் கோட்பாடுகளை வகுக்கவும், அவைகளுக்கு வந்த எதிர்ப்புகளைச் சமாளிக்கவே செய்யப்பட்டனவே ஒழிய, மற்றபடி அதற்கு நாட்டில் மனித சமுதாயத்திற்குத் தேவை என்ன இருந்தது? என்ன ஏற்பட்டது? என்று பார்த்தோமேயானால் இதன் தத்துவம் நமக்கு நன்றாய் விளங்கும். இராமாயணத் தோற்றத்திற்குக் காரணம் என்ன என்று பார்க்க முயன்றால், அதில் இராமன் பிறப்பதற்கு முன்பே விஷ்ணுவாக இருந்துகொண்டே தேவர்களுக்கு வாக்குறுதி தருகின்றான்.

“நான் இராவணனை புத்திரமித்திர பந்து பரிவாரங்களுடன் கொன்று உங்களை இரட்சிக்கவே- இராவண சம்மாரத்திற்கு என்றே இராமனாகப் பிறக்கப்போகிறேன். நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்று சொல்லுகிறார்.

இந்தக் கருத்துள்ள வாக்கியம் அதே இராமாயணம் சீனிவாசய்யங்கார் மொழிபெயர்ப்பு பாலகாண்டம் 15ஆவது சருக்கம் 51ஆம் பக்கத்தில் இருக்கிறது. இராவணன் யாகத்திற்கு விரோதமாகவும், மனுதர்மத்திற்கு விரோதமாகவும் ஆட்சி புரிந்தவன் என்கின்ற காரணத்தினால்தான் தேவர்களுக்கு- ஆரியர்களுக்கு விரோதியானான்.

இதுபோலவேதான், இதே காரணத்திற்குத்தான் கந்தபுராண சூரபத்மனும் ஆரியர்களுக்கு விரோதி
யானான். இவை மாத்திரமல்ல; “கடவுள்களின் அவதாரங்கள்” முழுவதும் வேதம், சாஸ்திரம், தேவர்கள் ஆகியவற்றிற்கு விரோதமான கருத்துடன் ஆட்சி செய்யும் அரசர்களை ஒழிக்கவும் அழிக்கவும் என்பதற்கல்லாமல் வேறு எதற்குத் தோற்றுவிக்கப்பட்டனவாகும்?

கந்தபுராணத்தைக் காப்பி அடித்த கதை

ஆரியர்கள் சிந்து நதிக்கு இப்புறம் கடந்து ஆதிக்கம் பெற்ற காலமே சுமார் கி.மு. 1000 அதாவது, இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்புதான். உலக சரித்திராசிரியர்கள் எல்லோருமே அதிலும் தென்னாட்டு சரித்திர ஆசிரியர்கள் பார்ப்பனர்கள் உட்பட எல்லோருமே கூறிவிட்டார்கள். இவர்களது கூற்றே இன்று பள்ளிப் பாடமாகவும் சரித்திர ஆதாரமாகவும் விளங்குகின்றன.
மற்றும், இராமாயணம் மிக மிகப் பிந்திய இதிகாசம் என்பதற்கு ஆதாரம் அது கந்த புராணக் கதை தத்துவத்தை- செய்கையை- நடப்பை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து பாத்திரங்களுக்கும் செய்கைகளுக்கும் வேறு பெயர் கொடுத்து சித்தரிக்கப்பட்டு இருக்கிறது என்பதுடன், அதில் வரும் பெயர்கள் பலவற்றைப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.
இரண்டிற்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால் கந்தனும் வள்ளியும் சாகவில்லை; கந்தபுராணம் எழுதியவன் இவர்களை (கந்தனை- வள்ளியை) சாகடிக்கவில்லை. இராமாயணம் எழுதினவன் இராமனையும் இலட்சுமணனையும் சீதையையும் கொன்றுவிட்டான். ஆற்றிலும் குழியிலும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்றே எழுதி சாகடித்துவிட்டான். அதாவது டிராஜிடி (TRAGEDYயில் முடித்தான்.

மற்றும் கந்தபுராணத்தில் கந்தனுக்கோ வள்ளிக்கோ ஒழுக்கக்கேடு – இழிவு சுமத்தவில்லை. ஆனால் இராமாயணத்தில் இராமனுக்கும், சீதைக்கும் பெரும் ஒழுக்கக் கேடுகளையும், இழி தன்மைகளையும் வண்டி

வண்டியாய்ச் சுமத்திவிட்டான். இராமாயண ஆசிரியன் சுமத்தினதோடு அல்லாமல், அதை நீதி என்றும் யோக்கியமென்றும் ஆக்கிவிட்டார்கள் பார்ப்பனர்கள்.

நீதியும் ஒழுக்கமுமற்ற சாத்திரங்கள்

இதன் கருத்து என்னவென்றால், கந்த புராண காலத்து ஆரியர்களைவிட இராமாயண காலத்து ஆரியரின்
ஒழுக்கம் அவ்வளவு கீழ் நிலைக்குப் போய்விட்டது.

அதாவது இன்றைய நிலைக்கு – அதாவது ஒரு ஆரியன் தனது வாழ்வில் எப்படி நடந்தாவது என்ன காரியம் செய்தாவது தங்கள் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டதே காரணமாகும். அதோடு கூடவே ஆரியரல்லாத மக்கள் அவர்களை படிப்படியாய் அந்த நிலைக்குக் கொண்டு வந்து வைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
அதோடு மாத்திரமல்லாமல் மற்ற மக்களும் அதைப் பின்பற்ற வேண்டிய நிலைக்கு வரவேண்டியவர்
களாகிவிட்டார்கள்.

ஆரியர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கடவுளிடமாவது சாத்திரங்களிலாவது, நீதி ஒழுக்கம் நாணயம், ஜீவகாருண்யம், தயவு, கருணை, தாட்சண்யம் ஆகிய மனிதக் குணங்கள் இருக்கவே இருக்காது; கண்டிப்பாக இருக்கவே இருக்காது.

அவர்களால் உண்டாக்கப்பட்ட வேத சாத்திர நீதிகளில் ஒரு கடுகளவாவது நீதி, நேர்மை, சமத்துவம்,
ஒழுக்கம், நாணயம், தயவு, தாட்சண்யம் இருக்குமா என்று தேடினால் கண்டிப்பாக இருக்கவே முடியாது. ஏன் எனில், நமக்கு அறிவும் மனித உணர்ச்சியும் ஏற்பட ஏற்பட அவர்கள் – ஆரியர்கள் அயோக்கிய சீலர்களாக ஆகவேண்டியதாக ஆகிவிட்டது. அவர்கள் எழுதி வைத்துக்கொண்ட வேதசாத்திர புராணப்படியும் நடந்துவருகிற நடவடிக்கைப்படியும், அதைப் பின்பற்றுகிற பழகுகிற அவர்கள் சாத்திரப்படியும் அதுபோலவே ஆகித்தீரவேண்டியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

(நூல் ஆதாரம்: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடான ‘நவமணிகள்’ எனும் நூல்)

ஞாயிறு, 16 ஜூன், 2024

இராமனைக் கொண்டாடும் மாநிலங்களிலேயே இராமாயண எதிர்ப்பு! பெரியாரின் பேரலை!

முகப்புக் கட்டுரை: 

2023 பிப்ரவரி 1-15, 2023 முகப்பு கட்டுரை

 மஞ்சை வசந்தன்

இராமாயணம் பற்றியும், இராமன் பற்றியும் தந்தை பெரியார் அவர்கள் நிறைய ஆய்வுகளைச் செய்து, இராமாயணம் மக்களுக்கு உகந்த நூல் அல்ல, நீதிநூலும் அல்ல. இராமன் ஒழுக்கம் உடையவன் அல்ல; நீதிநெறியில் நின்றவனும் அல்ல என்று ஏராளமான ஆதாரங்களோடு நூறாண்டுகளுக்கு முன்பே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்.
அதனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இராமன், இராமாயணம் இரண்டும் செல்லுபடியாகாத சரக்குகள் ஆயின. ஆனால், வடமாநிலங்களில் இராமன் கடவுளாக வணங்கப்பட்டான். தொலைகாட்சியில் இராமாயணம் ஒளிபரப்பப்பட்டபின் இராம பக்தி வட மாநிலங்களில் பன்மடங்கு பெருகியது. இராமனுக்குக் கோயில் கட்ட ஆர்வம் காட்டினர். இராமனை முதலீடாக வைத்து பி.ஜே.பி. ஆட்சியையே பிடித்தது.
ஆனால், தற்போது அந்த வடமாநிலங்களில் பெரியார் பேரலை வீசத் தொடங்கிவிட்டது. அன்றைக்குப் பெரியார் எழுப்பிய கேள்விகளை இன்று வடமாநில அமைச்சர்களே எழுப்பி மக்கள் மத்தியில், விழிப்பை, எழுச்சியை உருவாக்கியுள்ளனர்.

பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகரின் ராமாயணம்குறித்த பேச்சு:

சில நாள்களுக்கு முன்னர், பீகார் மாநிலக் கல்வி அமைச்சரான சந்திரசேகர், ‘ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ராம்சரித்மானஸ் சமுதாயத்தில் வெறுப்புணர்வைப் பரப்புகிறது’’ என்று பேசியிருந்தார். அவர் தொடர்ந்து “16-ஆம் நூற்றாண்டில் ராமாயணத்தைத் தழுவி அவதி மொழியில் துளசிதாசர் எழுதிய இந்நூல் மக்களிடையே வெறுப்பையும் பிரிவினையுணர்வையும் விதைப்பதாக உள்ளது’’ என்றும் கூறினார்.

அமைச்சர் சந்திரசேகரின் கருத்து, மாநில பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சந்திரசேகரை எதிர்த்து பாஜகவினர் கோஷங்கள் எழுப்பி, கொடும்பாவி எரிப்பு நடத்தி, சந்திரசேகர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அவர், “இந்து மதப் புனித நூல்கள் அனைத்தும் அபத்தங்கள்தாம். வெறுப்பையும் பிரிவினையையும் உண்டாக்குகிற கூற்றுகளையுடைய இந்த நூலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டியது பாஜகதான், நான் அல்ல’’ என்று அவர்களுக்குப் பதில் கூறியுள்ளார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியைத் தொடர்ந்து,

‘ராம்சரித்மானஸ்’ நூலைக் தடை செய்ய சமாஜ்வாதி கட்சித் தலைவர் கோரிக்கை
சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) சுவாமி பிரசாத் மவுர்யா, “மத நூலான ‘ராம்சரித்மானஸ்’ அர்த்தமில்லாத அபத்தங்கள் நிறைந்ததாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் ராம்சரித்-மானஸைப் படிப்பது இல்லை. அது முழுவதும் குப்பை தான்’’ என்று கூறியுள்ளது உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்,“ஆட்சேபணைக்குரிய பகுதிகளை ராம்சரித்மானஸ் நூலில் இருந்து அரசு நீக்க வேண்டும் அல்லது அந்த நூலையே தடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட மத நூலானது சூத்திரர்களை கீழ்ஜாதி என்கின்றது. துளசிதாசர் அந்த நூலை தற்புகழ்ச்சிக்காகவும் உல்லாசத்திற்காகவும் தான் எழுதினார் என்றும்,மதம் எதுவானாலும் அதை நாம் மதிக்கிறோம். ஆனால் (ராம்சரித்மானசில்) ஒரு மதத்தின் பெயரால் ஒரு குறிப்பிட்ட ஜாதி மற்றும் வகுப்பினரை அவமதிப்பது நடந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஜாதியைக் குறிப்பிட்டு அவதூறு செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் அதை ஆட்சேபிக்கிறோம். துளசிதாசரின் ராம்சரித்மானசில் ஆட்சேபிக்கப்படுகிற சில பகுதிகள் உள்ளன. எந்த மதத்தைச் சேர்ந்த எவரையும் அவதூறு செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. துளசி பாபாவின் ராமாயணத்தில் சூத்திரர்கள் கீழ்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாடுகள் சான்றளிக்கின்றன’’ என்றும் கூறினார்.இவர்கள் இருவரும் கூறியவை மிகக் குறைவு. இராமனின் இழிவுகள் ஏராளம் ஏராளம். சான்றாகச் சில:

வாலியை மறைந்து நின்று கொன்ற இராமன்

அரசனாகிய வாலி செய்த குற்றங்கள் என்று சிலவற்றை அனுமன் சொன்னதைக் கேட்டவுடன் இராமன் என்ன செய்திருக்க வேண்டும்? “நன்று அனும! வாலியைப் பற்றி நீ சொன்ன குற்றச் செயல்கள் குறித்து நானே வாலியை நேரில் கண்டு பேசுவேன்; அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்டு அறிந்தபின் குற்றம் எவர் பக்கம் என்பதை முடிவு செய்து அறத்தை நிலை நாட்டுவேன்’’ என்று இராமன் கூறியிருக்க வேண்டுமல்லவா? அல்லது “வாலியிடம் தம்பி இலக்குவனைத் தூதாக அனுப்பி வாலியின் பதில் அறிந்து வரச் செய்வேன்’’ என்றாவது சொல்லியிருக்க வேண்டும்? அவ்வாறு செய்திருந்தால் இராமனை அறத்தின் நாயகன் என்று கூறுவதில் பொருளுண்டு.

தன் மனைவியைக் கள்ளமாகக் கவர்ந்து சென்று சிறை வைத்த இராவணனிடமே அங்கதனைத் தூதாக அனுப்பி அந்த இராவணன் கருத்தை அறிந்து வருமாறு ஏவிய இராமனுக்குக் கிட்கிந்தை மன்னன் வாலிக்கும் தூது அனுப்பி அவன் கருத்தையும் அறிந்த பின்னரே ஒரு முடிவுக்கு வராமல் போனது சரியா? ஒரு தரப்பு செய்தியைக் கேட்டு செயல்பட்டதுதான் அறமா?

குற்றங்களின் கொள்கலம் இராமன்

அயோத்தியில் தம்பி பரதனுக்குரிய அரசை அவன் அறியாமல் தந்தை தசரதன் துணையுடன் கைப்பற்றிக் கொள்ளத் திட்டமிட்டவன் தான் இந்த இராமன். துணையின்றித் தனியே தன் எதிரில் வந்த தாடகை என்ற பெண்ணரசியை நாணேற்றிக் கொன்றவன் இந்த இராமன். தனித்து நின்ற இராவணன் தங்கை சூர்ப்பநகையிடம் முறை கேடாக நடந்து கொண்டதுடன் தம்பி இலக்குவனை ஏவி அந்தப் பெண்ணின் உறுப்புகளை அறுக்கச் செய்தவன் இந்த இராமன்.

இராமனின் சுயநலம்

வாலியைக் கொன்று சுக்ரீவனைக் கிட்கிந்தை அரசனாக்கினால் மட்டுமே வானரப் படையின் துணை கிடைக்கும்; அந்தப் படையின் துணையுடன் இராவணனை எதிர்த்துப் போரிட்டுச் சீதையை மீட்க முடியும் என்று தன்னலத்துடன் திட்டமிட்டுச் செயல்பட்ட இராமன் நேர்மையும், ஆன்றோர் போற்றும் அறப் பண்பும் இல்லாதவன்.வாலி, சுக்ரீவன் ஆகிய இருவருள் குற்றம் யார் பக்கம் இருந்தால் என்ன? எனக்கு என் மனைவி சீதை வேண்டும்; அவளை மீட்பதற்காக எவனையும் கொல்லத் தயார்… நியாயமாவது… அநியாயமாவது! என்று செயல்பட்ட இராமன் நீதிமானா?
ஈரேழு பதினான்கு உலகங்களும் வாலிக்கு உதவியாக வந்தாலும் என்னுடைய வில்லில் நாணேற்றி அவனை வீழ்த்துவேன் என்று கூறிய இராமன், களத்தில் வாலியின் எதிரே செல்லாமல் மரத்தின் பின்னே மறைந்து நின்று அம்பு தொடுத்து மாவீரன் வாலியை வீழ்த்தியது ஏன்? அது வீரமா? தர்மமா? மோசடியல்லவா?
‘‘காரணம் ஏதும் இல்லாமல் என்னைக் கொல்ல நீ முயன்றது சரி என்றால், இலங்கை வேந்தன் சீதையைக் கவர்ந்து சென்றது தவறு என்று நீ எப்படிச் சொல்ல முடியும்?

இருவர் போர் செய்யும் போது, அந்த இருவரில் ஒருவனுக்காக இள்னொருவன்மீது அம்பு தொடுத்தல் அறமோ?
நீ வாலியை வீழ்த்தவில்லை; மன்னவர்கள் போற்ற வேண்டிய அறம் ஆகிய வேலியை வீழ்த்திவிட்டாய்.
நேராக வராமல் மறைந்து நின்று நிராயுதபாணியாக நின்ற என்மீது அன்பு எய்தனையே! அது நீதியோ?’’
இவ்வாறெல்லாம் இராமனைப் பார்த்து வாலி கேட்டான். எல்லாம் கேட்டு முடித்தபின்னர், இராமன் வாலிக்குச் சொன்ன பதில் என்ன?
“நீ உன் தம்பியைக் கொல்ல முயன்றாய்; தம்பி மனைவி உருமையைக் கவர்ந்து கொண்டாய்; அது மட்டுமல்ல; சுக்ரீவன் எனக்கு ஆருயிர் நண்பன்; அதனால் உன்னைக் கொல்லத் துணிந்தேன்’’ என்றான் இராமன்.

இராமனின் பித்தலாட்டம்!

இராமன் வாலியின்மீது அம்பு தொடுப்பதற்கு ஆயத்தமாக நின்றபோது இலக்குவன் சொன்னான்: “அண்ணனைக் கொல்வதற்காகத் தம்பி உன்னை அழைத்து வந்திருக்கிறான்; அந்தத் தம்பியின் அழைப்பை ஏற்று அண்ணன் மேல் அம்பு தொடுப்பது அறமோ?’’ என்று கேட்ட இலக்குவனுக்கு இராமன் சொன்னபதில் என்ன?
‘‘வாலியும் சுக்ரீவனும் அறிவில்லாத விலங்குகள் _ குரங்குகள்! அவர்களுக்குள் அண்ணனாவது தம்பியாவது _ அறமாவது! இவ்வாறு, வாலியை விலங்கு _ மிருகம் _ குரங்கு என்று பேசிய இராமன், வாலியிடம் தம்பியின் மனைவியைத் தாரமாக்கிக் கொள்ளலாமா?’’ என்று கேட்டான்.
இப்படிக் கேட்டபோது, வாலியைக் குரங்கு என்று ஏன் ராமன் நினைக்கவில்லை! நினைக்காதது மட்டுமல்ல, வாலியே, ‘குரங்காகிய என்னிடம் மனித ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாமா?’ என்று இராமனைக் கேட்ட போது, நல்ல நெறிகளையெல்லாம் அறிந்தவனாக நீ இருத்தலால் நீ விலங்கு அல்ல என்று அறிந்தேன். அதனால் உன்மீது அம்பு தொடுத்தேன் என்றான் இராமன்! இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசிய முரண்பாட்டின் மொத்த வடிவம்தான் இராமன்.
கடைசியாக வாலி இராமனை நோக்கி ஒரு கேள்வி கேட்டான்: “மறைந்து நின்று ஏன் அம்பு தொடுத்தாய்?’’ என்பது அக்கேள்வி. பதில் சொல்ல வேண்டிய இராமன் பதில் சொல்லாமல் நின்றதால் அருகில் நின்ற இலக்குவன் சொன்னான்:

“உனக்கு முன்பாக உன் தம்பி வந்து சரண் புகுந்தான். உன்னைக் கொல்வதாக அவனுக்கு அண்ணன் வாக்களித்துவிட்டான். அதன் பிறகு, உன்னைக் கொல்வதற்காக அண்ணன் இராமன் நேரில் வந்தால், நீயும் உயிருக்குப் பயந்து அண்ணனிடம் அடைக்கலம் கேட்டால், உன் தம்பி சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாதே என்பதற்காகவே அண்ணன் இராமன் மறைந்து நின்று அம்பு தொடுத்தான்’’ என்று இலக்குவன் சொன்னான்.
‘அண்ணன் செய்தது அறம் அல்ல’ என்பதை இலக்குவன் அறிந்திருந்தாலும் அண்ணனை விட்டுக்கொடுக்க முடியாமல் இலக்குவன் முட்டுக் கொடுத்தான். இது ஏற்புடைய காரணம் அல்ல.
சம்பூகனைக் கொன்றது ஏன்?

அவன் சூத்திரன்; சூத்திரன் வேதம் ஓதக் கூடாது  வேள்வி இயற்றக் கூடாது; தவம் செய்யக்கூடாது என்ற சாத்திர விதிகளை மீறி அவன் தவம் செய்தான். அந்தச் சம்பூகனைக் கொல்ல அதுவே காரணம் எனச் சொல்லப்படுகிறது.
5000 வயதுள்ள இறந்துபோன தன் குழந்தையுடன் பார்ப்பனன் ஒருவன்; இராமன் அவனுடைய கடமையில் தவறியிருக்க வேண்டும்; இராமன் அல்லது ஏதோ பாவம் செய்திருக்கவேண்டும். அதனால்தான் 100,000 ஆண்டுகள் வாழவேண்டிய தன்னுடைய குழந்தை இளம் வயதிலேயே_ 5000 வயதிலேயே இறந்துவிட்டது என்று அந்தப் பார்ப்பனன் இராமனைக் குற்றம்சாட்டுகிறான்.

அதனைக் கேட்டு மனம் குழம்பிய இராமன், அருகிலிருந்த ரிஷிகளிடம் அதுபற்றிக் கேட்கிறான். பொய்யைச் சொல்வதிலும், பரப்புவதிலும் முதலிடம் பெற்றவர்களான தேவரிஷி நாரதரும், பிரம்மரிஷி அகஸ்தியரும் இராமனிடம் சொன்னார்கள்:
“விந்திய மலைச்சாரலில் சம்பூகன் என்ற ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருக்கிறான். அது, மன்னிக்க முடியாததும், மரண தண்டனைக்கு உரியதும் ஆகிய பாவச் செயல் ஆகும்.’’ இவ்வாறு ரிஷிகள் சொன்னதைக் கேட்ட இராமன், அறிவில்லாதவனாக, ரிஷிகள் சொன்னதை அப்படியே நம்பினான். புஷ்பக விமானத்தை வரவழைத்து சம்பூகன் இருக்குமிடம் சென்றான்; சம்பூகன் தலையைத் துண்டித்தான்; பார்ப்பனரைப் பாதுகாப்பதாகிய தர்மத்தை வெற்றிகரமாக முடித்தான்! செத்துப்போன பார்ப்பனப் பிள்ளை பிழைத்துக்கொண்டது.’’

இந்தக் கதை வால்மீகி இராமாயணம், உத்தரகாண்டத்தின் 73ஆவது சருக்கத்தில் சொல்லப்படுகிறது.
சூத்திரன் தவம் செய்யக்கூடாது; அது மாபெரும் குற்றம்; மரண தண்டனைக்குரிய குற்றம். சூத்திரன் ஒருவன் தவம் செய்ததால் பார்ப்பனச் சிறுவன் ஒருவன் செத்தான்; சூத்திரன் தலை துண்டிக்கப்பட்டவுடன் செத்துப்போன பார்ப்பனச் சிறுவன் பிழைத்துக் கொண்டானாம்! பார்ப்பனர் நலனைப் பேணுவதற்காக இராமன் சூத்திரர்களைக் கொலை செய்யத் தயங்கமாட்டான் என்பதை இக்கதை தெளிவாகக் காட்டுகிறது.
“திருமால், சிவன், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளை விடவும், அய்ம்பெரும் பூதங்களை விடவும், சத்தியத்தை விடவும் பார்ப்பனர் பெரியவர்கள்; அதனால் மனதார அவர்களைப் பேண வேண்டும்’’ -இராமன் எண்ணினான்.
இராமன் மட்டுமல்ல; அவனது குலமே பார்ப்பன தர்மத்தைப் பாதுகாப்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. இட்சுவாகு வமிசத்தில் வந்தவன் இராமன்; ரகு என்பவன் இராமனது குலத்தின் முன்னோர்களில் ஒருவன். பார்ப்பனன் ஒருவன் குபேரனால் தனக்குத் துன்பம் நேர்ந்ததாக ரகுவிடம் முறையிட்டானாம். அந்தப் பார்ப்பனனது குறையைப் போக்குவதற்காக ‘ரகு’ _ குபேரனிடம் போரிட்டானாம். அவனைப் போலவே இராமனும் பார்ப்பான் ஒருவனுக்காகச் சூத்திரன் சம்பூகன் தலையை அநியாயமாகத் துண்டித்துவிட்டான். ரகுவின் வழியில் வந்தவனல்லவா? அதனால் இராமனும் அதே அநியாயத்தைச் செய்கிறான்.

கைகேயிக்குச் செய்த துரோகம்

இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சமாக இருந்து வந்திருக்கிறான்.
கைகேயியிடம் வெகு யோக்கியன் போலும், மிக அன்புடன் நடப்பதுபோலும், பாசாங்கு செய்துவந்து, பிறகு “கைகேயி தீய குணமுடையவள்’’ என்கிறான்! (அயோத்தியா காண்டம், 31, 33 ஆவது சருக்கம்).
சீதையைச் சந்தேகித்த இராமன்
மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருந்து, அவளை நெருப்பில் குளித்துவிட்டு வரச்செய்து, அப்படி வந்தபிறகும் பாமர மக்கள் மீது சாக்குப்போட்டு, அவள் கர்ப்பமானதைக் கண்டுபிடித்ததும். அதற்கு ஆக அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் செய்கிறான். இச்செய்தி உத்தரகாண்டத்தில் இடம்பெற்றுள்ளது.

பரதனுக்குத் துரோகம் செய்த இராமன்

அயோத்தி நாட்டரசு பரதனுக்குச் சேர்ந்தது என்பதும், இராமனுக்குக் கிடைக்க நியாயமில்லை என்பதும், இராமன் நன்றாக அறிந்தவனே ஆவான்.
எப்படி எனில், இராமனின் தகப்பனாகிய தசரதன், பரதனின் தாய் கைகேயியை மணம் செய்துகொள்கிற காலத்தில், “அயோத்தி நாட்டு அரசு அக்கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே உரியதாகுக’’ என்று கைகேயின் தந்தைக்கு வாக்களித்து, அந்த ஒப்புதல் மீதே மணம் செய்து கொண்டிருக்கிறான்.
இந்த உண்மை இராமனுக்குத் தெரியும். இதை இராமனே தனக்குத் தெரியும் என்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறான்.
ஆகவே, பரதனுக்குத் துரோகம் செய்து, இராமனுக்கு அயோத்தியை முடி சூட்டும் முயற்சியில் தசரதன் மாத்திரமல்லாமல், இராமன் முதல் அவன் தாய், ரிஷி, குரு, அமைச்சர் முதலிய பலரும் உடன்பட்டு ஒன்று சேர்ந்தே இம்மாபெரும் துரோகச் சதிக்கு உடந்தையாயிருந்து காரியம் துவக்கி இருக்கிறார்கள். அதை இராமனும் ஏற்று பரதனுக்குத் துரோகம் செய்தான்.

மனைவிமீது அன்பில்லாத இராமன்
“நான் அயோத்தியில் இருக்கும்போது இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றிருந்தால் அக்கறை இல்லை. நானும் சும்மா இருந்திருப்பேன். ஆனால் இங்கு சரியான இடத்தில் அதாவது எப்பொழுதும் கூடி இன்பம் அனுபவிக்கத் தகுந்த யாரும் இல்லாத இந்த இடத்தில். நான் சீதையுடன் எப்பொழுதும் சுகம் அனுபவிக்க ஆசை கொண்டிருந்த சமயம் பார்த்துக் கவர்ந்து கொண்டு போய்விட்டானே’’ என்ற கருத்தில் துக்கப்படுகிறான். ஆகவே, இராவணன் சீதையை அயோத்தியிலேயே தூக்கிச் சென்றிருந்தால் இராமன் சும்மா இருந்திருப்பான் என்றும் தெரிகிறது!
“இராவணன் உன்னைத் தொட்டு மடியில் வைத்துக்கொண்டு போனான்: ஆசை பொழியும் நேத்திரங்களால் உன்னைப் பார்த்தான்.’’
உன்னை ஏற்றால், பார்ப்போர் சீ! சீ! என்று நிந்திப்பார்!
“களங்கமற்ற இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனென்று பெயர் வைத்துக்கொண்டு உன்னை இப்போது சேர்த்துக்கொண்டால், ஒவ்வொரு பிராணியும் சீ! சீ! என்று நிந்திக்காதா?’’
உன் மீது பிரியமில்லை, எங்காவது போய்விடு!
“என் குலதர்மத்தையும், கவுரவத்தையும் காப்பாற்ற உன்னைச் சத்துருவிடத்திலிருந்து மீட்டேன்: விசேஷ கீர்த்தியைச் சம்பாதித்தேன்: உன்னிடத்தில் எள்ளளவும் எனக்கு ஆசை இல்லை: நீ இஷ்டமான இடத்திற்குப் போகலாம்.’’

இது ஆலோசித்து செய்த முடிவு!
“நான் கோபத்தால் பதறிச் சொல்லவில்லை; இது சாந்தமாய் நெடுநேரம் ஆலோசித்தும் செய்த முடிவு.’’ என்று சீதையை வெறுத்தவன் இராமன். இறுதியில் இராமன் சரயு ஆற்றில் வீழ்ந்து உயிர்விட்டான் என்று உத்தரகாண்டம் நிறை-வு பெறுகிறது.
இப்படிப்பட்ட இராமனை அறத்தின் நாயகன், கடவுள் அவதாரம் என்று கொண்டாடுவது ஏற்புடையதா என்று இந்தியர்கள் அனைவரும் சிந்திக்கவேண்டும். இராமனைக் காட்டி வாக்குகளைப் பெற்று இந்துராஷ்டிரம் அமைக்கத் துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் சதியை முறியடிக்க, இராமனின் அற்பத்தனங்களை மக்கள் மத்தியில் விளக்கவேண்டும். ஆம். பெரியார் ஒளி இந்தியா முழுவதும் பரவவேண்டும். பாசிசம் வீழ்த்தப்படவும், மக்களாட்சி காப்பாற்றபடவும் அதுவொன்றே வழி!


சனி, 15 ஜூன், 2024

பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துகள் கொண்டதே இராமாயணம் – தந்தை பெரியார்


பெரியார் பேசுகிறார்! 

நானும் என்னுடைய கழகமும் கடந்த முப்பது ஆண்டுகளாக திராவிட மக்களின் நன்மைக்கெனவே பாடு
பட்டு வருகிறோம். நான் எதையும் எடுத்துக் கூறுகிறபொழுது பிறருடைய சலுகையை எதிர்பார்த்தோ, புகழை எதிர்பார்த்தோ கூறுவதில்லை. என்னுடைய மனதிற்கு நன்மை என்று தோன்றுகிற உண்மைகள் வேறு யாருக்கும் துன்பத்தை உண்டாக்குவதாகவோ, மனத்துயரை விளைவிக்கக் கூடியதாகவோ இருந்தாலும் நான் அவற்றை எல்லாம் லட்சியம் செய்வதில்லை. ஏனெனில், நான் அவர்களுடைய தயவை எதிர்பார்ப்பவனல்ல. அவர்களிடம் நான் நல்லவன் என்றோ அவர்களுக்கு நல்ல பிள்ளை என்றோ பெயரெடுத்து அதனால் எந்தப் பதவிக்கும், உத்தியோகத்திற்கும் போக வேண்டிய எண்ணம் எனக்குக் கிடையாது. இன்னமும் கூற வேண்டுமானால், நான் மற்றவர்களிடமிருந்து புகழ் வார்த்தைகள் கூட விரும்பவில்லை. ஆனால், இவ்வித முறையில் மற்ற கட்சிக்காரர்கள் இல்லாததால்தான் அவர்கள் உண்மையை எடுத்துக் கூற முடியாத நிலையில் உள்ளனர். அப்படி என்னைப் போல் அவர்களும் எந்த உண்மையையும் எடுத்துக் கூறினால், அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது. பார்ப்பனரை ஒழிக்க வேண்டும். சாஸ்திர புராணத்தை எரிக்க வேண்டுமென்று கூறிக் கொண்டு மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்டால் ஒருவராவது ஓட்டுப் போட மாட்டார்கள்.

ஆகவே, அவர்களிடம் ஓட்டுக் கேட்க வேண்டியதற்காகவாவது பார்ப்பனரை ஆதரித்தும், நான் செய்யும் கிளர்ச்சிக்கும், போராட்டங்களுக்கும் எதிராக சிலர் வேலைகள் செய்து வருகிறார்கள். இவற்றை எல்லாம் உணர்ந்துதான் என்னுடைய கழகத்தின் பெயரைக் கூறிக் கொண்டு தேர்தலில் கலந்து கொள்வதில்லை என்றும், ஓட்டுப் பெற்று பாராளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் செல்வதில்லை என்றும் தீர்மானித்துள்ளோம். அப்படி இதுவரை சென்ற எந்தக் கட்சிக்காரர்களாவது நல்ல காரியத்தைச் சாதித்துள்ளனரா? என்பதைப் பார்க்கும் பொழுது, சென்றவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் முன்னேற்றத்திற்கென்று பணத்தையும், புகழையும், பெருமையையும் சம்பாதித்தார்களே தவிர, வேறு பொது மக்களுக்கென்று நன்மை ஒன்றும் செய்ததாகக் கூற முடியாது. தன்னுடைய வியாபாரத்துக்கும், கான்ட்ராக்ட் தொழிலுக்கும் லைசென்ஸ்_- பர்மிட் இவை வாங்கவும் மற்றும் பிறருக்கு வேண்டியவைகளைச் செய்கிறேன் என்று கூட அவர்களிடம் லஞ்சம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள சட்டசபைகளிலும், பாராளுமன்றத்திலும் வழிகள் இருக்கின்றதே தவிர, வேறு இவர்களால் எதையும் சாதிக்க முடியாத அளவில் அமைந்துள்ளது. அப்படி ஏதாவது ஓரிருவர் பெரிய காரியத்தைச் சாதித்தார்கள் என்றால் தங்கள் தங்கள் ஜாதிக்கு மட்டும் வேண்டிய ஓரிரு சலுகைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான்.

இப்படி இவர்கள் தங்கள் நலனுக்கென்று மக்களிடம் எதையும் மனம் கூசாது அன்பு வார்த்தைகளால் ஆசையைப் புகட்டி அவர்களின் ஆதரவைப் பெற வேண்டியிருக்கிறது. அவர்கள் கூறுவதுதான் உண்மை, அதை அப்படியே நம்பினால் உடனே பலன் கிட்டும் என்றெல்லாம் கூறுகின்றனர்.
இதைப் போன்றுதான் ஆதி முதற்கொண்டே தாங்கள் கூறியவைகளையே நம்ப வேண்டும், ஆராய்ந்து அறியக் கூடாது என்று கூறி, இதுவரை மூட நம்பிக்கையிலேயே ஆழ்த்தி விட்டனர். இன்னமும் ரிஷிகளும், தேவர்களும் கூறியதுதான் சாஸ்திரம், அவர்கள் எழுதியதுதான் புராணங்கள், அவர்களால் உண்டாக்கப்பட்டதுதான் மதம், இதை நம்பினால் தான் மோட்சம் கிடைக்கும், அறிவைக் கொண்டு ஆராய்ந்து எதிர்த்துக் கேட்டால் நரகம் சம்பவிக்கும்” என்று கூறி வந்துள்ளனர்.

ஆனால், நாங்கள் கூறுவதோ எதையும் கூறியவுடன் நம்பிவிடக் கூடாது. ஒவ்வொன்றையும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பதுதான் மனிதப் பண்புக்கு ஏற்றது. அதன்படி அறிவுக்கு ஏற்றவைகளின் படி நடக்கக் கோருகிறோம். இவ்விதமான நோக்கங்களைக் கொண்டதால்தான் மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த மூட நம்பிக்கைகள் இன்று வெளியாகின்றன. பார்ப்பனர்களின் மதம், சாஸ்திரம், புராணம் இவற்றின் அர்த்தமற்ற கொள்கையும் அநாகரிகப் பழக்க வழக்கங்களும் அம்பலமாகின்றன.

பொதுவாக இராமாயணத்தைப் பற்றி எடுத்துக் கொண்டால் இதுவரை மக்கள் உண்மையாகவே அதை நடந்த கதை யென்றும், கடவுள் அவதாரம் எடுத்த சரித்திரம் என்றும் நம்பி வந்துள்ளனர். ஆனால், அது எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் – அதில் குறித்துள்ளவற்றைக் கொண்டே பார்த்தால் – முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ளது.

இராமாயணம் சுமார் 13 லட்ச ஆண்டுகள் கொண்ட திரேதாயுகத்தில் நடந்த கதை என்று கூறப்படுகிறது. ஆனால், 13 லட்சம் ஆண்டுகள் கொண்ட அந்த யுகத்தில் 50 லட்சம் ஆண்டுகள் ஆயுளாகக் கொண்ட இராவணன் வசித்தான் என்று கூறப்படுகிறது. நான்கு யுகங்களையும் சேர்த்தால் கூட 50 லட்சம் ஆண்டுகள் கிடைக்காது. அப்படி இருக்க திரேதா யுகத்திற்கு மட்டும் 50 லட்சம் ஆண்டுகள் எங்கிருந்து வந்தது?

அடுத்து இராமாயணம் எழுதப்பட்டது திரேதாயுகத்தில். அதாவது, 25 லட்சம் ஆண்டு-களுக்கு முன் என்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த இராமாயணத்திலேயே 2,500 ஆண்டுகளுக்கு உட்பட்டு வசித்த புத்தரைப் பற்றிய விஷயங்கள் வருகின்றன. புத்த பிட்சுகளைப் பற்றியும், புத்த ஆலயம் என்ற சொல்லும் வருகின்றன. பாண்டிய அரசர்களைப் பற்றியும், சோழ நாட்டினைப் பற்றியும் வருகின்றன. இப்படி 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலில் 2,500 ஆண்டுக்குட்பட்ட விஷயங்கள் வருவதற்கு என்ன பொருத்தமுள்ளது? ஆகவே, இந்நூல் பார்ப்பனர்கள் இந்நாட்டிற்கு வந்த பிறகுதான் இதை எழுதியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதன்றியும், இக்கதையை ஒருவன் தன் சொந்த மூளையைக் கொண்டு கற்பனை செய்து எழுதப்பட்டதுமல்ல, இப்பொழுது ஒருவர் சினிமாக் கதையை மற்றவர் காப்பியடித்து எழுதி விட்டனர் என்று சண்டை போட்டுக் கொள்வதைப் போல் அப்பொழுதும் வைஷ்ணவர் கதையை சைவர் காப்பி யடிப்பதும் சைவர்கள் கதையை வைஷ்ணவர்கள் காப்பியடித்து எழுதும் தொழிலில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். ஆகவே, கந்தபுராணம் என்ற சைவர்கள் கதையை வைஷ்ணவர்கள் காப்பியடித்து அதைத் தழுவியே இராமாயணத்தை எழுதி இருக்கின்றனர். கந்தபுராணம் முந்திய நூல் என்பதற்கும் இராமாயணம் பிந்திய நூல் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. கந்தபுராணத்தின் குறிப்புகள் இராமாயணத்தில் உள்ளன. இராமாயணத்தைப் பற்றி கந்தபுராணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
இவை, இரண்டிலும் ஒன்றுக்கொன்று பொருத்தமானதாக 50க்கு மேற்பட்ட விஷயங்கள் தென்படுகின்றன.

ஆரம்பம் முதற்கொண்டு கடைசி வரை, பிறப்பு முதற்கொண்டு கடைசி வரை, பிறப்பு முதற்கொண்டு இறப்பு
வரையிலும், அவற்றில் கூறப்பட்ட ஒப்பாரி முதற்கொண்டு ஒன்றுக்கொன்று பொருத்தமானதாக இருக்கிறது. இதை நன்றாக உணர வேண்டுமானால் ஆர்.பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘வேலும் வில்லும்’ என்ற ஆராய்ச்சி நூலில் தெளிவுறக் காணலாம்.
இப்படியாக ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால் இதுபோன்ற அர்த்தமற்ற செய்திகளும், பொருத்தமற்ற விஷயங்களும் தென்படுவது மல்லாமல், இராமன் கடவுள் அல்ல; சீதை பத்தினி அல்ல; தசரதன் யோக்கியன் அல்ல; ரிஷிகள் காமப் பித்தர்கள், யாகங்கள் என்பன ஆரியரின் ஆபாச நாகரிகங்களை விளக்கும் சம்பவங்கள் என்பன போன்ற உண்மைகள் விளங்கும்.

(4.3.1955 அன்று விருதுநகர் பொதுக்கூட்டத்தில்
தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)
‘விடுதலை’ 21.3.1955