துளசிதாஸ் ராமாயணத்தில், பார்ப்பனர்களையே வணங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந் திரங்களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பிராமணர் களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமக்கு கடவுள் என்று கூறுவதுதான் ராமாயணத்தின் நோக்கம்.
புத்தம் வளர்ந்த காலத்தில் பார்ப்பனஆரியம் வீழ்ந்து போனது. அப்போது பார்ப்பனீயத்தை தூக்கி நிறுத்துவ தற்காக பார்ப்பனர்களால் முன்னிறுத்தப்பட்டவன் ராமன்.
பிராமணர்களுக்குத் தொண்டு செய்வதுதான் இராமராஜ்யம்.
‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.
‘கரிய நிறம் கொண்ட திருமாலைவிடவும், நெற்றிக் கண் கொண்ட சிவனை விடவும், தாமரை மலர் மேல் அமர்ந்த பிரம்மாவை விடவும், பஞ்சபூதங்களை விட வும், எல்லாவற்றையும் விட மேலான உண்மையைக் காட்டிலும், பெரியவர்கள் பிராமணர்கள் என்று கூறி, அவர்களை உள்ளத்தால் விரும்பி ஏற்றிட வேண்டும் என்று கம்பன் கூறுகிறான். இதைத் திட்டமிட்டு வடக் கில் துளசிதாஸ் செய்தான். தெற்கில் கம்பன் செய்தான்.
ராமனை பேசுகிறாரே என்று அப்போது பலர் நினைத் திருக்கலாம். பெரியார் தொலைநோக்கு இன்றைக்கும் அது தேவைப்படுகிறது. மொழியை வைத்து அல்ல. இதில் தத்துவம்தான் முக்கியம். ஆரியம் என்பது வருணாசிரமம். திராவிடம் என்றால் ஒன்றே குலம் என்பதுதான்.
-தமிழர் தலைவர் கி.வீரமணி
( இராமாயணம் - இராமன் - ராம ராஜ்யம் என்கிற தலைப்பில் ஆற்றிய ஆய்வுரையில்)
- விடுதலை நாளேடு, 28.3.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக