பக்கங்கள்

திங்கள், 4 நவம்பர், 2019

ஜலந்தர்-பிருந்தா

வள்ளுவரின் வாலறிவனுக்குப் புது விளக்கம் கொடுத்துத் திருவள்ளுவருக்குக் காவி போர்த்தும் சங்களுக்கு இந்து மத வாலறிவர்களில் முதன்மையான இருவரைக் காட்டுவோமா?!

பக்தையை சூறையாடிய விஷ்ணு. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி. 100 – 2.

பக்தையை சூறையாடிய கடவுள்..

பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன்.

கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.

இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 100 – 2.

அதாவது தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு. இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் Jalandhar, Punjab ஜலந்தர் ஓர் இடம் கதையைப் படிக்கும் போதே அந்த ஊரின் பெயர்க்காரணம் உங்களுக்கு விளங்கும்.

அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்.

அப்படி என்ன கருத்து வேறுபாடு? பிருந்தா விஷ்ணுவை தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படையான் ஜலந்தருக்கோ சிவன் மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார். ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும் போது அவனை சந்தித்தார்.

என்ன ஜலந்தர்?... நீயோ சிவனை வழிபாடு செய்கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ?... என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

உடனே ஜலந்தரும்... ‘நான் பார்வதி தேவியை அடைய முடியுமா?’...எப்படி? என கேட்கிறான். அதற்கு நாரதரே யோசனையும் கொடுக்கிறார். “சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு... சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்.

அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு ” சிந்திக்கத் தெரியாத ஜடமாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலக யோசனையை காது கொடுத்து கேட்ட பின், அப்படியே... சாமகானம் பாட ஏற்பாடு பண்ணினான்.

இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க... அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான். அங்கே பார்வதி தேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர்,

பார்வதி... தன் மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள். கைலாயத்தில் இப்படி...

ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?... கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.

இதைப் பார்த்த விஷ்ணு... ‘நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து... கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

‘ஆஹா... என் கணவர் வந்துவிட்டார்’ என சந்தோஷம் பொங்கிய பிருந்தா... தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள் இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...‘நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்... சாமவேதத்தில் சிவனை மயக்கிய ஜலந்தர்... பார்வதியை கட்டிப் பிடிக்க இதனால் பார்வதி ஏழுகடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா?

வேதத்தின் மயக்கத்தை... பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?... என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.

அந்த ஜலந்தரின் தலைதான்... பிருந்தாவும் ஜலந்தர் போல் ரூபம் எடுத்து வந்த விஷ்ணுவும் இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.

பார்த்தாள் பிருந்தா... உடலோடு விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே...’ என அறிமுகம் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’அடப்பாவி... பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்துவிட்டாய். பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான். உனக்கு சாபமிடுகிறேன்.

கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக’ பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம்

அதாவது கடவுளே தர்மத்தை மீறி தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு என்பதுதான் இக்கதை சொல்லும் நீதி. -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

ஞலந்திரனின் மனைவியை விட்டுணு ஜலந்திரன் புனைவில் வந்து பாலியல் வன்முறைக்கு உடபடுத்திய உண்மை தெரிந்து, பிருந்தை விட்டுணுவுக்கு இட்ட சாவமே இராமாயணத்தின் மூலம் என்றும் வால்மீகி கூரியுள்ளார்.

[Like](https://www.facebook.com/muthu.selvan.5205/posts/3422493954458623#)

[Comment](https://www.facebook.com/muthu.selvan.5205/posts/3422493954458623#)

1 கருத்து: