வார்சா ஒப்பந்தநாடுகளில் இராமாயண
நாடகத்தை நடத்துவது இந்தியாவிற்கு நீண்டகாலமாக நற்பெயரை தரக்கூடிய வழிமுறையாக
இருந்ததாம்.
சில
ஆண்டுகளுக்கு முன்பு ஹங்கேரியர்கள் இராமாயண நாடகத்தை நடத்தினால் நல்ல வரவேற்பு
இருக்குமென்று கருதி, கிழக்கு
மத்திய தரைக்கடல் நாடுகளையே கவரும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய இராமாயண நாடகத்தை
தயாரித்தார்களாம்.
இந்த
நாடகத்தில் இராவணன் வில்லனல்ல. மாறாக இலட்சுமணன் தான் வில்லன். இவன் நம்பிக்கைத்
துரோகம் செய்து தன் அண்ணன் மனைவி சீதையை கூட்டிக் கொண்டு ஓடுவதாகக் கதை. இந்த
நாடகம் ஹங்கேரியிலுள்ள புடா பெஸ்ட் நகரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக
ஓடியிருக்கிறது.
மேலும்
புதிய டியூட் டானிக்கின் புராண மொழி பெயர்ப்பின்படியும் சமீபத்தில் ஜெர்மானிய
ஜனநாயக குடியரசு சார்பில் பெர்லினில் நடந்த நாடகத்திலும், இராவணன் சீதை மீது
விருப்பமில்லாதவனாகவும், சீதை வலிய
சென்று இராவணனை மயக்கக் கூடியவளாகவும் சித்தரித்திருக்கிறார்களாம்.
ஆதாரம்:
இந்துஸ்தான் டைம்ஸ் - 4.10.1981
-விடுதலை,30.1.15,பக்-7
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக