பக்கங்கள்

செவ்வாய், 21 நவம்பர், 2023

இராமாயணத்தில் கந்தன் பிறப்பு கதை

வால்மீகி ராமாயணத்தில் கந்தன் என்று சொல்லப்படும் முருகனின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் 'சிவனின் நழுவி விழுந்த வீரியத்திலிருந்து உண்டானவன் ஸ்கந்தன்' என்றும், ஆறு தலை உடன் பிறந்ததால் ஆறுமுகன் என்றும் கார்த்திகை பெண்களின் பாலை உண்டு வளர்ந்ததால் கார்த்திகேயன் என்றும் சொல்லப்பட்டான் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றி  வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்டவை வருமாறு:-
தேவர்கள் பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டார்கள். 'சிவனிடத்தில் ஸ்கந்தன் எனும் பெயரில் ஒரு புத்திரன் பிறப்பான் அவன் மூலம் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்' என்று பிரம்மா கூறினார்.
அவர் கூறியதற்கு இணங்க சிவனின் வீரியம் நழுவி விழுந்தது. அதை அக்னி பகவான் கையில் பிடித்து பத்திரமாக கங்கையிடம் கொடுக்க, கங்கையோ தன் கர்ப்பத்தில் வைத்து பாதுகாத்தால். அதன் அனல் தாங்க மாட்டாமல் கர்ப்பத்தை கீழே நழுவவிட்டால், அந்த கர்ப்பம் சரவணப் பொய்கை என்று சொல்லப்படுகிற மூங்கில் திட்டில் போய் சேர்ந்தது. அங்கு  அந்த கர்ப்பம் ஆறுமுகத்துடன் குழந்தையாக தோன்றியது. தேவர்களால் அனுப்பப்பட்ட கார்த்திகை நட்சத்திர பெண்களால் பாலூட்டப்பட்டு கார்த்திகேயன் என்ற பெயரால் வளர்க்கப்பட்டான்.
இவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் (பாலகாண்டம், கங்காவதாரண கதை, ஸர்க்கம்:37.1-
37.31) கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக