பக்கங்கள்

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

அவாளே கூறுகிறார்கள் பகுத்தறிவு

இராமாயணமும், பாரதமும் கற்பனைக் காப்பியங்கள் என்றால் நம்மீது சினம் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட போர் நடந்தது என்று காட்ட எந்த வரலாற்றுத் துறை அறிஞரா லும் இயலாது என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். நாம் கொடுக்கும் ஆதாரங்களை வேண்டு மானால் மறுத்துப்பேசட்டும். ஆரியத்தின் ஏடு ‘ஆனந்த விகடன்’ ‘ஆங்கில ஏடு ‘மெயிலிலிருந்து எடுத்து வெளியிட்டுள்ள செய்தியின் சுருக்கத்தினை இங்கு தருகி றோம் - இதன் பின்பாவது குழப்பவாதிகள் தெளிந்தால் சரி.


எவ்வளவு நாட்கள் தான் ஏமாற்றி னாலும் எதிரிகள் கூட நம் கருத்துக்குத் தான் வந்து தீர வேண்டியிருக் கிறது. இதோ படியுங்கள்:

‘’பாண்டவர்களுக்கும்  கவுரவர்களுக் கும் இடையே குருக்ஷேத்திரத் தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியத் தொல் பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சரித்திர சம்பவமாகக் கருதமுடியாது.’’

அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை ‘’

“கி. மு. 1100-க்கு முன்பு இரும்பு என்றால் என்ன வென்று தெரியாத நிலை. போர்க் கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன.

“இராமாயணம் மகாபாரதம் இரண் டிலும் அவ்வப்போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கைவரிசையைக் காட் டிப் பலவற்றைப் ‘புகுத்தியிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி. பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே.”

உண்மையினைச் சொன் னால் நம்மீது பாய்ந்து சீறும் ‘சீலர்கள்’ அக்கரகார ஆனந்தவிகடனே ஆமாம் போட்ட பிறகு பாவம் என்ன சொல்லப் போகிறார்கள் ?

ஆதாரம் : 12-10-75 நாளிட்ட

“ஆனந்த விகடன்”

தகவல்: அரசிளங்கோவன் திருக்கோகர்ணம்

- விடுதலை ஞாயிறு மலர், 7.7.18

மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் வாழவே இல்லை கி.மு.2000இல் அயோத்தியில் ராமனும் கிடையாது!

புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா முடிவு




மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என 90 வயது கடந்தவரும், பல வரலாற்று நூல் எழுதியவருமான பேராசிரியர் ராம் சரண் சர்மா எழுதியுள்ளார்.

இதிகாச காலம் உண்மையா?

11ஆவது வகுப்புக்கான என்.சி.ஆர்.டி. வெளியிட்டுள்ள 'தொன்மை இந்திய வரலாறு' (ஏன்சியன்ட் இண்டியன் ஹிஸ்டரி) எனும் நூலை எழுதியவர் ராம் சரண் சர்மா (ஆர்.எஸ். சர்மா) அந்த நூலில், "கிருஷ்ணன் மகாபாரதத்தில் முக்கியப் பங்கு ஆற்றியதாக இருந்தாலும், மதுரா நகரில் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை கிடைக்கப் பெறும் சிற்பத் துண்டுகள், கிருஷ்ணன் பற்றிய தகவலைத் தரவில்லை. இதன் காரணமாக, ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில், இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றி பேசுவதைக் கைவிடவேண்டும்'' என எழுதப்பட்டிருக்கிறது.

அயோத்தி ராமன்

அயோத்தியாவைப் பற்றியும், ஆர்.எஸ். சர்மாவின் நூல் ஓர் ஆய்வு முடிவைத் தருகிறது. புராணங்களில், மிக நீண்ட குடும்பக் கால் வழி கூறப்படுகிறது. ஆனால், அவை கூறும் குடும்பக் கால்வழியை விட அகழ்வு ஆய்வு வெளிப்படுத்தும் தடயங்களையே ஏற்றுக் கொள்ள வேண்டும். புராண மரபுப்படி அயோத்தியில் ராமன் கி.மு. 2000-இல் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அயோத்தியில் விரிவான அளவில் தோண்டிப் பார்த்து, ஆய்வு நடத்திய பின்பு, அந்தக் காலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்ததாகவே தெரிய வில்லை'' என்று ஆர்.எஸ். சர்மாவின் தொன்மை வரலாறு'' எனும் நூல் கூறுகிறது.

- விடுதலை ஞாயிறு மலர், 7.7.18