பக்கங்கள்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இராமாயண கால மது வகைகள்



டில்லியிலிருந்து வெளியாகும் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் 15.8.1954-ஆம் தேதிய இதழில் இராமாயணத்தில் மதுக்குடி என்ற தலைப்பில் டாக்டர் எஸ்.என். வியாஸ் என்பவர் எழுதியுள்ள கட் டுரையில் காணப்படுவதாவது:
1. கிதைசுரா: இது காய்ச்சி இறக் கப் படும் சாராயத்துக்குப் பெயர்.
2. மைரேயா: வாசனையூட்டப் பட்ட பானம்: சர்க்கார் மதுவென் றும் கூறுவர்.
3. மத்யா: போதை தரும் பானகம்.
4. மந்தா: இது சாதாரண சாராயத் திலுள்ள அமித போதை தணிக்கப்பட்டது. இதற்குப் பிதாமந்தா என்றும் பெயர். போதை இருக்காது; எனவே இதனை யாரும் குடிக்க விரும்பார்.
5. சுராபானம்: கிதை சுராவுக்கு மாறானது. கிதை சுராபானம் செயற் கையால் செய்யப்படுவது. சுரா என்பது இயற்கைச் சாராயம் இயற்கை முறையில் வடித்தெடுக் கப்படுவது. இது சாதாரண மக் களின் பானம். இதைப் பற்றித் தான் புராணங்களில் அதிகமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.
6. சிந்து: கழிவு வெல்லப் பாகி லிருந்து வடித்தெடுக்கும் பானம்.
7. சௌவீரகா: மட்டரகப் பானம்.
bv8. வாருணி: அக்காலத்தில் உப யோகிக்கப்பட்ட மது வகைகளில் மிகவும் காட்டமானது (போதை அதிகமானது) இந்த பானம், இதனைக் குடித்த அதே நொடியில் போதையுண்டாகித் தள்ளாடி விழச் செய்து விடுமாம்.
-விடுதலை,1.3.14

இராமன் ஏன் சீதையை நாடு கடத்தினான்? - மு.வி.சோமசுந்தரம்


இராமாயணக்கதை ஒரு கலாச்சாரத் தாக்கத்தின் குறியீடு, ஆரியப் பற்றாளர்கள் நெஞ்சோடு ஒட்ட வைத்துள்ள ஒரு துருப்பு சீட்டு. இந்த சீட்டு ஆன்மீக சூதாட்டத்தில் முக்கிய பங்கையும், அரசியல் அரங்கில் ஆதிக்க சக்தியான ஒரு பங்கையும் அளித்து வருகிறது. இராமாயணக் கதை ஒரு சல்லடை போன்றது. சல்லடையில் உள்ள பல ஓட்டைகள் போல், பல கோணங்களில் கதை அளக்கப்படுகிறது. இந்த பல் வகை யான கதைகளில் உள்ள ஓட்டைகளைத் தன் ஆழமான ஆராய்ச்சி உரை மூலமும், கட்டுரைகள் மூலமும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தவர் தந்தை பெரியார். அதன் ஆங்கில வழி நூல் The Ramayana - A true Reading, வேறு மொழிகள் வாயிலாகவும் மக்களை சேர்ந்தடைந்துள்ளது.
அண்மையில் (24.12.2013) சென்னை அண்ணா சாலையில் உள்ள ரெயின் டிரி (Rain Tree) நட்சத்திர உணவு விடுதி அரங்கில் தேவிதட் பட்நாய்க் என்னும் எழுத்தாளர் தாம் எழுதிய சீதா - மறுவகையில் கூறப்படும் இராமாயணம் என்ற நூலை அறிமுகப்படுத்தி உரையாற் றினார். அவரின் விளக்க உரையையும், இராமாயணக் கதைப்பற்றி அவரின் நூலில் காணப்படும் அவரின் கருத்துக் களையும் தி இந்து அதன் 24.12.2013 இதழில் வெளியிட்டுள்ளது.
நாடோடி போல, ஒரு நிலையில் காணப்படாத இராமாயணக் கதையை, தெய்வீக மெருகுபூசி, இராமர் பாலம் என்று சு.சாமியும், தமிழக அரசும் நீதிமன்றத்தில் விலையாக்கப்பார்ப்பது வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. அதற்கு மேலாக மாயாஜால காட்சி வழங் கும் சர்க்கார் போல நாளுக்கு நாள் நாக்கு மாயாஜாலம் வழங்கி வரும் நரேந்திர மோடி வாயினால் நெருப்பு கக்கும் வேடிக்கைக் காட்சி தான் அவர் கூறும் ராமராஜ்யம் அந்த ராமர் யார்? அவர் ராஜ்யம் எப்படி பட்டது? இவற்றிற்கு ஓரளவு விடை கூறும் வகையில் சீதா புத்தகம் எழுதப்பட்டுள்ளது, கூறப்படும் செய்தியைக் காண்போம்.
சீதா புத்தகம், இராமாயணக் கதை பற்றி காணப்படும் பல வகையான செய்திகளின் தொகுப்புடன் நூலாசிரியரின் கற்பனையும் கலந்து உருவாக்கப்பட்ட நூல் (இதில் தோஷ காரியம் ஏதுமில்லை) இதிகாசங்களில் வழக்கமாக கற்பனைக் கதைகளை சேர்க்கும் நடைமுறை உண்டு. பழக்கத்தில் இருந்து வரும் கிராமியப் பாடல்களில் வரும் இராமர் கதைகள் பற்றிய செய்திகள் தூண்டு கோலாகவும், துன்பம் அளிப்பனவாகவும் இருந்தன. இராமகாவியம், கோபத்தையும், வெறுப் பையும் தூண்டும் வகையில் கூறப்பட்டு வருவதை உணர்ந்ததும், சீதா புத்தகம் எழுதக் காரணமாக அமைந்தது.
நூலாசிரியர் எழுப்பும் ஒரு வினா: இராமகாதையில் விவரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், குறைபாடுகளுடையவர் களாக இருந்தும், 2000 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறப்பித்துக் கூறப்படு வது ஏன்? கடவுளாக வழிபடுவது ஏன்?
இந்த புத்தகத்தின் மூலம், இந்த வினா வுக்கு விடை காண முயற்சித்துள்ளார், நூலாசிரியர். இராமகாதை எழுதிய பல ஆசிரியர்கள் கதையின் பல பகுதிகளை, அவரவர்கள் வாழ்ந்த காலத்திற்கேற்ப மாற்றினார்கள் என்பதை நூலாசிரியர் விரிவாக விளக்கினார்.
சில காலத்தில், கதையின் அமைப்பு மாற்றப்பட்டது, சில காலத்தில் புதிய கதை சேர்க்கப்பட்டது, என்று கூறினார்.
நூலாசிரியர் கூறுகிறார்
தற்காலத்தில், எந்த ஒரு கதையிலும் ஒரு தலைவன்(Hero) ஒரு பாதிக்கப் பட்டவன் அல்லது தியாகி, ஒரு கெடுமதி யான் (Villain) இருப்பது வழக்கம். இது கிரேக்க நூல்களின் அமைப்பு முறை. இந்திய கதைகளில் இந்த அமைப்பு முறை இல்லை, இந்திய கதைகளில் ஆதிக்கம் செலுத்துவோரும், நசுக்கப்படுவோரும் கிடையாது.
மனித உறுப்பினர்களாகவே இருப்பர். அவர்கள் ஆக்கபூர்வமானவர் களாகவோ, எதிர்மறையானவர்களாகவோ கருதாமல், அறிவாளிகள், அறிவில் குறைந்தவர்களாகக் கருத வேண்டும்
பலவகை கிராமக்காதைகளில் காணப் படும் பல புதிய செய்திகளாக நூலாசிரியர் கூறுபவை:
1) இலங்கையில் களைத்துப்போய் உள்ள போர் வீரர்களுக்குத் தயாரிக்கப் படும் உணவுக்கான பாகமுறையை சீதை சொல்லி கொடுக்கிறாள்
2) 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பப்டட கதையில், சீதையின் தந்தை இராவணன் என்று கூறப்பட்டுள்ளது. சீதை கற்புடன் இருந்தாள் என்பதைக் காட்ட அமைத்த துணைக் கதையாக இருக்கலாம்.
3) கம்பராமாயணத்தில் இராவணன் சீதையைத் தீண்டவில்லை. அவளை கவர்ந்து செல்லும்பொழுது, சீதையை அவள் இருந்த நிலத்தோடு பெயர்த்து எடுத்து சென்றான் ஆனால் வால்மீகி இராமாயணத்தில் இராவணன் சீதையை தன் உடலோடு சேர்த்து எடுத்து சென்றான் என்று கூறப்படுகிறது.
4) வேறு சில கதைகளில், இராவணன் உண்மையான சீதையை கவர்ந்து செல்ல வில்லை. மாய சீதாவைத்தான் கவர்ந்து சென்றான் என்று கூறப்படுகிறது. உட லைத் தொட்டு தூக்கி செல்வது கற்பு களங்கமாக கருதப்பட்ட காலத்தில் இப் படி எழுத நேரிட்டிருக்கலாம். நூலாசிரியர் அடுத்து ஒரு சங்கடமான ஒரு வினாவை எழுப்புகிறார். ராமன் ஏன் சீதையை நாடு கடத்தினான்? சட்ட விதிமுறையை ஏன் அவ் வளவு கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்?
இராமனை ஒரு முன் மாதிரியான புருஷோத்தமன் என்று மக்கள் தவறாக கருதுகின்றனர். ஆனால் ராமன் சட்டத்தை துல்லியமாக கடைபிடிப்பவன். ராமனை அறிய இதனை அறிந்திருக்க வேண்டும்.
சீதை அப்படி தடம் பெயர்ந்திருந்தால், அதில் என்ன தவறு? நூலில் காணப்படும் கேள்வி இது. சீதை கபடமற்றவள். அவள் அப்படி இல்லாமல் போனால் என்ன?
அதற்காக அவளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நியாப்படுத்த முடியுமா?
நூலாசிரியர் தொடர்ந்து கூறும் கருத் துகள்: மக்களின் உணர்வை ஏற்றுக் கொள் ளாமல் விதிமுறைகள் மூலமே ஆளப் படும் உலகை ஒரு மாதிரி உலகாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தை இராமா யணக்கதை கூறுவதாகக் கருத வேண்டி யுள்ளது. இராமன் சீதையை மணந்த ஏகபத்தினி விரதன் ஆனாலும் சீதையை நாடு கடத்துகிறான். அவன் நியாயப்படி நடக்காமல் சட்டப்படி நடந்துள்ளான். ஆனால் கிருஷ்ணன் லீலை புருஷோத்த மன். சட்ட விதிகளை மீறி வாழ்க்கையை இன்பமாக கழித்தவன். ஆனால் அவன் ஒரு அரசன் அல்ல. அவன் வாழ்வில் வந்த அனைத்து பெண்களும் மனமுடைந்து போனார்கள். ஆனால் இராமனும், கிருஷ் ணனும் ஒன்றே. அவதாரம் எடுத்தவர்கள் ராமன் அரசனாக இருந்ததால் சரி, தவறு என்பதை அறியாமல் சட்டப்படி நடந்து கொண்டான். அதனால் உணர்வை பறி கொடுத்து, துக்கமுடிவை உண்டாக்கினான்.
இராமாயணக்கதை எப்படியெல்லாம், ஊட்டி மலையில் பயணிக்கும் மகிழுந்து போல் வளைந்து வளைந்து செல்கிறது என்பதற்கு இந்த சீதா புத்தகம் ஒரு எடுத் துக்காட்டு. இந்த கருத்தை வலியுறுத்தும் வகையில், அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் கூறும் கருத்தை எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.
இராமாயணம், முரண்பாடு நிறைந்த பார்ப்பன சிந்தனைகளையும், போர்குணத் தன்மையையும் உள்ளடக்கிய ஒரு புதுமையான நூல் (George Hart interprets Ramayana as a ‘Strange work’ filled with contradictions between ‘Brahminical thought’ and ‘Martial Vabour)
இத்துடன், இராமாயணம், ஆசிரியர் திராவிடர் இடையே ஏற்பட்ட போர் என்று ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறிய கருத்தையும் சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது.
-விடுதலை

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

மான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்


நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் கறி சாப்பிடக் கூடாதுன்னு தடை இருக்கே, அப்போது எங்கே போனார்கள் இவர்கள். வீரமணி போன்றவர்கள் மான்கறி விருந்து நடத்துவார்களா? என்று கேட்டிருக்கிறார் ஒரு அக்கிரகாரத்து அரை வேக்காடு.
இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான ஏழை, எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை, மத வெறியின் அடிப்படையில் தடைசெய்யும் போக்கை யும், அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத் துடன் மான்கறி தடைசெய்யப்பட்டிருப்பதையும் ஒன்று போல காட்டும் புரட்டு இது என்பது சற்றேனும் சிந்திப்போருக்குத் தெரியும்.
எளிய மக்களின் சத்தான உணவு தடுக்கப்படுகிறதே என்ற கவலை நமக்கு! அதனால் மாட்டுக்கறியை தடை செய்யக் கூடாது என்கிறோம். எதிர்த்துக் குரல் கொடுக்கிறோம்.. போராடுகிறோம்!
ஆனால், அப்படி என்ன மான் கறியில் இவர் களுக்குப் பற்று என்று சிந்தித்தால், அப்போது வெளிப்படுகிறது குட்டு!
இந்துத்துவா கும்பலின் இஷ்ட தெய்வங்களான ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் விரும்பிப் புசித்தார்கள் என்பதை விவரிக்கிறது வால்மீகி ராமாயணம். மாரீசன் என்னும் மாய மானை விரும்பிக் கேட்டாரே வைதேகி. எதற்கென்று நினைக்கிறீர்கள்? தமிழ்ப்பட கதாநாயகிகள் போல கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கவா? அல்ல... அல்ல... அள்ளி எடுத்து அதன் கறியைச் சுவைப்பதற்காக!
கங்கைக் கரையிலும், யமுனைக் கரையிலும் ஏராளமாக மது உண்டும், புலால் புசித்தும் வாழ்ந்த சீதை விரும்பிய மான் கறியைக் கொண்டு வருவ தற்காகத் (அதனால் பின் விளைவுகள் வரும் என்று தெரிந்தும்) தான் மானைத் தேடிச் சென்றான் ராமன் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து (3.42.21) ஆதாரம் காட்டுகிறார் The Righteous Rama
நூலின் ஆசிரியர் ப்ராக்கிண்டன்.
அது மட்டுமா, ராமனும் லட்சுமணனும் எந்தெந்த வகை மான்களைப் புசித்தனர் என்று வால்மீகி காட்டுகிறார் தெரியுமா? முதன்மையான நான்கு மான் இனங்களிலிருந்து ஒவ்வொன்றையும் வேட்டையாடிப் புசித்தனர். (அயோத்தியா காண்டம் 2 - 52 - 102).

ती त हवा चतुरः (காற்றைப் போல் துள்ளி ஓடும் ) महा मृगान् | (மான்)

बराहम ऋयम (पृषतम महाम சுவைத்து சாப்பிட்டனர் | भादाय मेयम वरतम விரட்டிச் சென்று) बुभुतौ ।

बासाय (களைப்புற- काले ययतुर् वनः पितम (உண்டு மகிழ்ந்தனர்) |॥ २-५२-१०२
Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.
Alternative translation: Being famished, Rama, Lakshmana hunted and killed a boar, a Rishya animal (a white footed male antelope), a spotted deer and a great deer with black stripes and quickly partaking the pure meat reached atree by the evening to spend the night.
யமுனை நதிக்கரையில் ராமனும் லட்சுமணனும் மான் கறி சுவைத்ததைச் சொல்லுகிறது அயோத்தியா காண்டம் (2 - 55 -32/33)
शमाम ततो गवा तरी (கரையில்) रामलमनौ (ராம லட்சுமண) || २-५५-३३ बहूमेयान मृगान (மான் ) हवा चेरतुय (மாமிசம் உண்ட)
Translation: Thereafter having travelled only a couple of miles the two brothers Rama and Lakshmana killed many consecrated deer and ate in the river-forest of Yamuna.
Alternative translation: After travelling a distance of two miles further in the forest on the bank of Yamuna, those two brothers slew deers worthy for sacrifice for food and ate them. Ayodhya Kanda 2-55-32/33
நாம் காட்டியிருப்பது ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே! அவர்கள் குடித்துக் களித்த மது வகைகள் பற்றியும், உண்டு மகிழ்ந்த கறி வகைகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.
இப்படி காவிக்கூட்டம் போற்றும் கடவுளர் சாப் பிட்ட மான் கறியைத் தடை செய்தால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கை தானே!
மான் கறி தடை செய்யப்பட்டிருப்பதில் மாற்றுக் கருத்து அக்கிரகாரத்தில் இருக்குமாயின் அவர்கள் தானே அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். கடவுளின் உணவு தடுக்கப்படுமானால் அதற்காகக் கொந்தளித்து அவர் தானே மான் கறி விருந்து நடத்த வேண்டும்? எதிர்பார்க்கிறோம்.... ஹெச்.ராஜா நடத்தும் மான் கறி விருந்து அறிவிப்பை!
- கோவி.லெனின்
-விடுதலை, 09.04.2015< உண்மை இதழ்;16-30.04.2015