தன் காளையை கானாமல் கலங்கிய கண்ணன், வேலனிடம் கூறுகிறான் ,
அதை கன்டுபிடித்துத் தரச்சொல்லி வேலன் இசைகிறான்.
என் காளை எப்படி இருக்கும் தெரியுமா? என்று கண்ணன் கேட்கிறான் , பிறகு வேலனுக்கு அந்த காளையின் அடையாளத்தைக் கூற ஆரம்பிக்கிறான் அவர்களின் உரையாடலை கேளுங்கள் :
காணாமற்போன என் காளை கருப்பு நிறம்!"
சரி!"
முன்பக்கம் வளைந்த கொம்புடையது,"
"ஒஹோ "
அதிக உயரமில்லை , அதிக மட்டமுமில்லை,
நடுத்தரமாக இருக்கும்,
"அப்படியா?
பரமசாது குழந்தை கூட பிடித்துவிடலாம் முட்ட வராது , கிட்ட சென்றாலும் எட்டி உதைக்காது, வண்டியில் பூட்டினால் வகையாக இழுத்து செல்லும் ,
வாய்ப்புறத்தில் கொஞ்சம் வெள்ளையாக இருக்கும்,
ஒஹோ "
.நாலே பல்
போதும் சார் அடையாம் சொன்னது தேடி பார்க்கிறேன் .எந்த கொல்லையில் மேயந்து கொன்டு இருக்கிறதோ,அலைந்து திரிந்தாகிலும் கண்டுபிடித்து விடுகிறேன் "
ஆமாப்பா அக்கரையாக தேடிப்பார் மற்றும் ஒர் அடையாளம் உண்டு ,சொல்ல மறந்து விட்டேன் , மூக்கு துவாரம் அகன்று இருக்கும் வால் மயிர் கத்தையாக இருக்கும் "
என்ன சார்! மூக்கு தூவாரத்தையும் வால் மயிரையும் கூடவா வர்ணித்துச்சொல்ல வேன்டும்? முன்னே சொன்ன அடையாளம் போதுமே ! கறுப்பு மாடு நடத்தரமாக இருக்கும்,சாது, வளைந்த கொம்பு இவ்வளவு அடையாம் போதும் ."
என்னமே தம்பி! எனக்கு அந்த காளையின் மீது இருக்கிற ஆசையும்,அதை எப்படியாவது தேடி பிடித்தாக வேண்டும் என்ற என்னமும் , இப்படிஒர் அடையாளங்கூட விடாதபடி சொல்லச் செய்கிறது .
மற்றும் ஒர் அடையாளம் கேள் .
ஒரு மைல் ஓடினால் நுரை தள்ளும் ,
காதுப்பக்கம் சவுக்கால் அடித்தால் மூளை வரும் ;
முதுகிலே இலேசாகத் தட்டினால் பெரு நடையாக போகும்
"சரியாக போச்சு .இதைக்கன்டுபிடிக்க நான் காளையை வண்டியிலே பூட்டி ஒரு மைல் ஓட்டி ;சவுக்காலடித்து பார்த்துப் பிறகுதானே,நீங்கள் சொல்லியிருக்கிற அடையாளம் சரியாக இருக்கிறதா என்று கண்டாக வேன்டும் .வழியிலே கிடக்கிற ஒவ்வொரு காளையையும் வண்டியிலே பூட்டியாகவேண்டும் .ஆடையாளம் சொல்ல வந்தீர்களே இப்படி.;
இப்படி மாட்டின் அடையாளத்தை சொன்னால் வேலன் கண்ணனை பற்றி என்ன நினைப்பான் ?
இவனுக்கு மாடு கெட்டதுடன் மதியும் கெட்டுவிட்டது என்றுதானே எண்னுவான்.!
இப்படி தொலைந்த தன் மணைவியை தேட அனுமானிடம் கூறுகிறார்,
மன்மதக் காவியங்களில் கூட நாயகன் நாயகியைக் குறித்து இத்தனை ஆபாசமாக நண்பனிடம் கூற மாட்டான். தொலைந்த தன் மனைவியாள் சீதையை பற்றி இங்கு தெய்வமாக போற்றப் படும் இராமன் தன் மனையாட்டி சீதாவை கண்டறிய அனுமனுக்கு அடையாளம் கூறுகிறான்.
"செப்பென்பன் கலசம் என்பன்
செவ்விள நீரும் தேர்வன்
துப்பொன்று திரள்சூ தென்பன்
சொல்லுவன் தும்பிக் கொம்பை
தப்பின்றிப் பகலின் வந்த
சக்கரவாகம் என்பன்
ஒப்பொன்றும் உலகின் காணேன்
பல நினைத்து உலைவன் இன்னும்."
அதாவது இராமன் கூறுகிறார் "என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கிறேன், ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலேயே ஒரு பொருளும் இல்லை அவைகட்கு இணை. என்ன செய்வேன்!" என சோகிக்கிறார். "செப்புக் கலசமோ!" "செவ்விளநீரோ!" என தன் மனைவியின் கொங்கைகளுக்கு உவமை தேடுகிறார் அந்த கடவுள்,
அதிலும் இந்த உவமைகளை அவர் சொல்லுவது கட்ட பிரம்மச்சாரியாகக் கருதப்படும் அவரின் நண்பன் அனுமனிடம். இது போன்ற உவமைகள் நண்பனிடம் சொல்லப்படுவதாக காமம் சொட்டும் காம காவியங்களில் கூடப் படித்திருக்க முடியாது. ஆனால் இந்த இராமாயணத்தில் படிக்கலாம்.
இது வெறும் சாம்பிள் மட்டும் தான். இதை விட கொடுமையான ஆபாச வர்ணனைகள் எல்லாம் நிரம்பி வழியும் காவியம் தான் இந்த "இராமாயணம்
இன்னொரு பாடலில்
வாராழி கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள்தான்
தாராழிக் கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தாங்கும் பாந்தழும் பணி வென்றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?
அனுமனுக்கு சீதையின் அங்க அடையாளத்தைச் சொல்லும் ராமன் கொங்கையையும் அல்குலையும் எதற்கு விவரிக்கிறான்? சரி கொங்கையையாவது ஒத்துக் கொள்ளலாம், அல்குல்? அனுமன் என்ன பார்க்கும் பெண்களின் ஆடையை விலக்கி அல்குலை வைத்தா அடையாளம் காணப் போகிறான்?
உலகில் எந்த ஒரு காம பித்தனும் கூட தன் மனைவியின் கொங்கைகளையும் , பெண் உறுப்பையும் தன் நண்பரிடம் கூற மாட்டான் ,
இந்த ராமாயண கதைகளையும்
,ராமணுக்கு ஜொன்ம பூமி அமைப்பதாய் கூறுபவர்களும் தான் ,
பதில் தர
வேன்டும்
... அண்ணாவின் கம்பரசம்
-பெரியசாமி பெருமாள் முகநூல் பக்கம் (பகத்தறிவாளர்கள்vsமதவாதிகள்)